மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 25 மார்ச், 2016மனசின் பக்கம் : போட்டிகள் நிறைந்த பிறந்தநாள்

நமக்கு நாமே
வேலை அதிகம் என்பதால் வேலை நாட்களில் இரவில் எப்படியும் நண்பர்களின் அன்றைய பகிர்வுகளை வாசித்து விடுவேன் என்றாலும் கருத்து இடுவதில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் அனைவரும் அதிகாலையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பதினோரு மணிக்கு விளக்கு அணைக்கப்பட வேண்டும் என்ற எழுதாத சட்டம் அறையில் இருப்பதே. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அந்த வாரத்துக்கான பெரும்பாலான பதிவுகளுக்கு கருத்து அளித்து விடுவேன். இந்த நிலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரலாம்... எனவே பொறுத்துக் கொள்ளுங்கள் மக்களே..! 

வெற்றி நமதில்லை
பிரதிலிபி கொண்டாடப்படாத காதல்கள் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த முறையிலான தேர்வு சரியாக வருமா என்று தெரியவில்லை. கொடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தும் வாசித்தவர்களை வைத்தும் தேர்ந்தெடுக்கும் முறை சரிதானா தெரியவில்லை. நானெல்லாம் யாருக்குமே ஓட்டுப் போட முடியவில்லை... அவர்களிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் பண்ணிக் கேட்டபோது உங்களுக்கு நீங்களே வாக்களிக்க முடியாது. மற்றவர்களுக்கு அளிப்பதில் பிரச்சினை இல்லை என்றார்கள்... ஆனாலும் முடியவில்லை. அப்படித்தான் என் நண்பர்கள் சிலரும் எனக்கு வாக்களிக்க முடியவில்லை என்றார்கள். 20 மதிப்பெண்கள் வாங்கிய இந்து என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். எனக்கு கிடைத்தது 13 மதிப்பெண்கள் எனது கதை அதிக மதிப்பெண்கள் வரிசையில் நாலாவது இடம் என்று நினைக்கிறேன். நிறைய நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்கவில்லை என்பதும் சிலரின் எழுத்து வாசிக்கப்படக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை... இப்படிப்பட்ட முறையிலான போட்டித் தேர்வுகளில் நல்ல எழுத்துக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. அதற்கு மாறாக அதிக நண்பர்களை முகநூலில் வைத்திருப்பவர்களே வெல்ல முடியும்... பிரதிலிபி இனி வரும் போட்டிகளில் இந்த முறையிலான தேர்வை மாற்றி அமைத்தால் நல்லது. ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். நான் இங்கு சொல்ல விரும்புவது எனக்கு அங்கு கருத்திட்ட... மதிப்பெண்கள் அளித்த அனைத்து உறவுகளுக்கும்... மேலும் கதை ரொம்பப் பிடித்துப் போய் அதற்கென தனிப்பதிவு இட்ட அன்பின் ஐயா. துரை. செல்வராஜூ அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. அந்தக் கதையை விரைவில் இங்கு பகிர்கிறேன்.

போட்டிகள் சில
கோதரர் ரூபன் அவர்கள் உலகளாவிய கவிதைப் போட்டிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தொடர்ந்து போட்டிகள் நடத்தி ஊக்குவிக்கும் அவரையும் அவருடன் இணைந்து செயலாற்றும் கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டி குறித்து அறிய "கவிதைப் போட்டிசொடுக்குங்கள்.

பிரதிலிபியில் மீண்டும் ஒரு போட்டி அறிவித்திருக்கிறார்கள். இந்த முறை வேலை பளுவின் காரணமாகவும் சில சொந்த விஷயங்களாலும் எழுதும் எண்ணம் இல்லை. அது குறித்து அறிய "கதை/கவிதை/கட்டுரைசொடுக்குங்கள். 

ரூ 1,00,000 பரிசுத் தொகை அறிவித்திருக்கும் உலகளாவிய சிறுகதை மற்றும் ஒரு போட்டி குறித்து அறிய தேனம்மை அக்காவின் சும்மா தளத்திற்கு சும்மா ஒருமுறை போய் பாருங்கள். அங்கு செல்ல இங்கு  "சும்மா" கிளிக்குங்கள்.

இப்படியும் உறவு
மூன்றே மூன்று வருடம் தனக்கு ஆசிரியையாக இருந்தவரை தாயாக நினைத்த ஒரு தேவதை... ஆசிரியரை விட்டு வெகு தொலைவு சென்ற பின்னரும் அவரை மட்டும் நினைவில் இருந்து நீக்காமல் பேசி உறவை நீடித்த பாசமலர்... பத்தாம் வகுப்பு படித்து வந்த அந்த புல்லாங்குழல்... தனக்கு உடம்பு முடியாத சூழலில் அங்கிருந்து பயணப்பட்டு தமிழகம் வந்து ஆசியரைக் கண்டு அவரை கட்டிப் பிடித்து தோளில் சாய்ந்து உயிரை விட்டிருக்கிறது. இதைப் படிக்கும் போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து விரிவான கட்டுரை எழுத எண்ணம் பார்க்கலாம். அதற்கு முன்னர் எங்கள் மதுரையின் மைந்தர் கூட்டாஞ்சோறு  திரு. எஸ்.பி. செந்தில் குமார் சார் எழுதியிருக்கும் இந்தப் பதிவை வாசியுங்கள். அந்த மாணவி உங்கள் மனசுக்குள் சிரிப்பாள்... அதை நீங்கள் கண்களின் வழியாக கண்ணீராய் வெளியேற்றுவீர்கள். 


அண்ணிதான் தலைமை
தேர்தல் களம் சூடு பிடிக்கிறது... மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் விஜயகாந்த் பொதுக்கூட்டங்களில் அதிகம் பேசமாட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் பேசாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதையாவது பேசி வைப்பதற்கு இன்னொரு ஜெயலலிதாவாக உருவாகிவரும் அண்ணியார் (நான் சொல்லலைங்க... அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்) பேசட்டுமே. இன்று நண்பர் ஓருவருடன் பேசும் போது நான் சொன்னேன் ஐயாவை அரியாசணத்தில் அமர்த்தினோம்... அப்புறம் அம்மாவை அமர்த்தினோம்... நாம எல்லாருமே உறவுகளுக்காக உயிரைக் கொடுப்பவனுங்கதானே அண்ணியையும் அமர்த்திப் பார்ப்போமே என்று சொன்னதும் சிரித்தார். எல்லாக் கட்சிகளும் பண்ணும் அடாவடியில் அதிக இடங்கள்  கிடைக்காவிட்டாலும் ஜெயலலிதாதான் ஆட்சியைப் பிடிப்பார் போலத் தெரியுது.

ஏமாற்றுவதே வேலை
மிழகத்தின் தங்கக்குரலுக்கான தேடல்ன்னு சொல்லிட்டு ஒரு பாடகரைக் கொண்டு வந்து... அவர் நல்லா பாடலைன்னு சொல்லி வெளியேற்றி... மீண்டும் வாய்ல்கார்டு முறையில் உள்ளிழுத்து முதல் பரிசையும் கொடுத்திருக்கிறார்கள். விவரம் வெளியில் தெரிந்து ஆளாளுக்கு பேசியதும் எஸ்.பி.பியையும் பாட வைப்போம் என்று எகத்தாளமாகச் சொல்கிறார்கள். அப்புறம் எதுக்கு அதுக்கு தமிழகத்தின் தங்கக் குரலுக்கான தேடல்ன்னு வைக்கணும்... தமிழகத்தின் பிறமொழிப் பாடகர்களுக்காக தேடல்ன்னு வைக்கலாமே... எது எப்படியோ மற்ற பரிசுகளை வென்றவர்கள் முதலாமவரை விட நல்லாப் பாடத் தெரிந்தவர்கள் தமிழர்கள் என்பதாலேயே இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை... காரணம் நான் இந்த செல்லக்குரல்... தங்கக்குரல்... எல்லாம் பார்ப்பதில்லை.

சந்தோஷம்
ருக்கு வருவதற்கான நாளெல்லாம் பார்த்து ஆயிற்று... ஆனாலும் எங்க ஆளு 'ஓகே' அப்படின்னு ஒற்றை வார்த்தை சொல்லாமல் இன்னும் மௌனம் சாதிக்கிறான். எது எப்படியோ மே-12ஆம் தேதி இரவு நம்ம ஊரு மண்ணை மிதித்து விடுவேன் என்று நினைக்கிறேன். குழந்தைகள் வேறு டிக்கெட் போட்டாச்சா... டிக்கெட் போட்டாச்சா... என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். போட்டு விடலாம்... இந்த முறையாவது நட்புக்களை எல்லாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறேன்... முயற்சிக்கணும்... முயற்சி திருவினை ஆக்கும் அல்லவா..?

வாழ்த்துங்க
நாளை எங்க செல்ல மகள் ஸ்ருதியின் பிறந்தநாள்... உங்கள் ஆசிர்வாதத்தையும் அன்பையும் கொடுங்கள்.

(சென்ற வருடம் அபுதாபி வந்திருந்த போது 
 எடுத்த போட்டோ)


-'பரிவை' சே.குமார்.


17 கருத்துகள்:

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் ஸ்ருதிக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   வாழ்த்துக்கும் தங்களின் அன்பான ஆசிக்கும் நன்றி.

   நீக்கு
 2. எத்தனை முறை முயன்றேன் தெரியுமா ப்ரதிலிபி கதைக்கு ..பின்னூட்டமிடவும் வாக்களிக்கவும் ..இயலாமலே போனது ..மிக அருமையான கதை அது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் முன்பே சொல்லியிருந்தீர்கள்... பரவாயில்லை விடுங்கள்...
   அனைவரையும் கவர்ந்த கதையாய் அமைந்தது மிகப்பெரிய வெற்றி அல்லவா?

   நீக்கு
 3. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. என்னாலும் வாக்களிக்க இயலவில்லை. வாக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் புகைப்படப் போட்டிகளும் நிறைய உண்டு. நண்பர்களின் எண்ணிக்கையும் வெற்றிக்கு ஒரு காரணியாகிறது இது போன்ற போட்டிகளில்.

  ஸ்ருதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. ஸ்ருதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என் தங்கை மகள் பெயர் கூட ஸ்ருதிதான்!

  பதிலளிநீக்கு
 8. மனம் நிறைந்த வாழ்த்துகள் செல்லத்துக்கு...

  நல்ல தொகுப்பு..எல்லாம் நெஞ்சில் நின்றவை..

  முக்கியமாய் உங்கள் வருகையில் புதுகையையும் குறித்துக்கொள்ளுங்கள்..

  உங்கள் தாயகப்பயணத்தை நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

  குமார்..புதுகைக்கு வாருங்கள்..ஒரு ஞாயிறு எல்லாரும் சந்திக்கலாம்..நிலவன் அய்யாவுடன் கலந்துபேசி ஒரு சந்திப்புக்கு தயாராகிறோம்...
  மறுக்காமல் வாருங்கள் நாங்கள் மகிழ்வோம்...
  நன்றி..

  பதிலளிநீக்கு
 9. ஸ்ருதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
  குமார் நன்றாக கதை எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
  உங்க ஆளு 'ஓகே' சொல்ல வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் ஸ்ருதி எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ்க..
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 11. சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு

  தங்கள் செல்ல மகள் ஸ்ருதி அவர்களுக்கு
  எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  வாசகர் கணிப்பை விட
  நடுவர் தீ்ர்ப்பே சிறந்தது

  போட்டிகளைப் பகிர்ந்தமைக்கு
  மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. கதம்பம் அருமை ஸ்ருதிக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் நலமுடன் வாழ்க....
  த.ம. 3

  பதிலளிநீக்கு
 13. தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 14. வலைப்பக்கம் வர முடியாமல் இருந்த காரணத்தால் ஸ்ருதிக் குட்டிக்குத் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்! குழந்தை என்றென்றும் நலமுடனும், மகிழ்வுடனும் வாழ பிரார்த்திக்கின்றோம் வாழ்த்துகின்றோம்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...