மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 பிப்ரவரி, 2016

என்னைப் பறிச்சவளே..!

எதைச் சொல்வேன்...
எப்படிச் சொல்வேன்...
அப்படியே மனசுக்குள்
அடுக்கி வைக்கும்
எண்ணம் ஏதுமில்லை..!
எப்படியும் என் வழியே
வழிந்தோடும் உன் சாரல்..!

நீரெடுக்க நீ வருவேன்னு
காத்திருந்தேன் கரையோரம்...
குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..!

வைக்கோல் படப்போரம்
வைதேகி நீயும் நிற்க...
அஞ்சாறு முறை நானும்
கடந்து போனேனே..!

வழியை மறிச்சு நீ
வாகாய் நிற்கையிலே...
கன்னத்தில் நான் பேசி
கடந்து சென்றேனே..!
முத்த எச்சில் துடைக்காமல்...
கடுங்கோபம் கொள்ளாமல்...
பதிலேதும் பேசாமல்
பார்த்துக்கிட்டு நின்னாயே..!

கருப்பர் கோயிலுக்கு
விளக்குப் போட வருவாயென
விழியில் திரிபோட்டு
வீதியிலே காத்திருந்தேன்..!

காத்திருந்த என்னை நீ
கடந்துதான் போகையிலே
கால் கொலுசு சேதி சொல்லி
முன்னே நான் வந்தேனே..!

உயிர் வந்த சந்தோஷம்
உன் முகத்தில் தீபமேற்ற...
உறவுப் பயத்தால
விலகித்தான் ஓடினாயே..!

திரி நீ போட
எண்ணெய் நானூற்ற
வெட்கி எரிந்த தீபம்
உன் உதட்டுச் சிவப்பாட்டம்
ஓளியைத்தான் பரப்புதடி..!


மாமன் மகளேன்னு
மல்லுக்கு நிக்கலையே...
மனசைக் கொடுத்துட்டு
மறுதலிச்சும் போகலையே...

போகும் இடமெல்லாம்
புள்ள நீயும் வந்துபுட்டே...
காணும் இடமெல்லாம்
கள்ளி நீ சிரிக்கிறேடி...

ஆடிபோன பின்னே
ஆவணியும் வரும்போது
தாவணித் துணி மாற்றி
சேலைக்குள் சிரித்தபடி
தாலி நீ வாங்கும்
நன்நாளை நினைக்கையிலே....

வேப்பம்பூ விரிச்சதுபோல்
மனசு சொக்குதடி..!
இலுப்பை பூவாட்டம்
இதயம் பொங்குதடி..!

அருகம்புல் வேராட்டம்
ஆசை அரும்புதடி...
புளியம்பூ பூத்ததுபோல
புன்னகையும் அரும்புதடி...

அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...

உன்னைக் கரம்பிடிக்கும்
நாளை எண்ணி
வண்ணக் கனவோட
நானுறங்கிப் போனேனே...!

(படம் இணையத்தில் சுட்டது -  அழகாய் படம் வரைந்த ஓவியருக்கு நன்றி)

(மனசுல இது 100வது கவிதை... எனக்கே ஆச்சர்யமா இருக்கு...)
-'பரிவை' சே.குமார்.

29 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. ஒரு கிராமத்துச் சூழல் கண்முன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
அருமை நண்பரே
ரசித்தேன்

துரை செல்வராஜூ சொன்னது…

அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...

அழகு.. அழகு..

KILLERGEE Devakottai சொன்னது…

கவிதையை மிகவும் ரசித்தேன் நண்பரே
சின்ன சந்தேகம் கருப்பர் கோயில் அபுதாபியில் எந்த ஏரியாவில் இருக்கு ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை அருமை குமார்! கிராமீய மணம் வீசுது!!! ரசித்தோம் மிகவுமே!

S.P.SENTHIL KUMAR சொன்னது…

கிராமத்து சூழலை அப்படியே கவிதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
த ம 5

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அற்புதமான வரிகள் 3தடவை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரிகாலன் சொன்னது…

நல்லதொரு கவிதை .//குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..//
உங்களை மட்டும்தானா ?என்னையும் தான்

சிந்தையின் சிதறல்கள் சொன்னது…

மிக மிக அருமையான கவிதை
கவிதை படிக்கும் போதே கவிப் பேரரசு வைரமுத்து கவிதை படித்த உணர்வு பெற்றேன் தொடருங்கள் வாழ்த்துகள் அண்ணா

நிஷா சொன்னது…

காதலர் தினம் வருகின்றதாக்கும் !

கிராமத்து சூழலை, அழகாக தாவணி போட்ட பெண்ணை ஏங்கி தவிக்கும் காதல் வரிகள், அனுபவித்து எழுதியது போல உணர்வைக்கலந்து உயிர்ப்பாய் இருக்கும் வார்த்தைகள்!

அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...

அம்மாடியோவ்! வர்ணனைகள் அற்புதம்,இத்தனையும் வாய்க்கப்பெற்ற பெண் கொடுத்து வைச்சவள் தான்,

ஏம்பா இனிமேலாச்சும் இந்த இங்கிலூபீசை விட்டு இப்படி அழகான தமிழில் காதலை சொல்லுங்கப்பா!

நிஷா சொன்னது…

100 ஆவது கவிதைக்கு வாழ்த்துகள் சீக்கிரம் புத்தகம் போடும் வேலையை பாருங்கள்.

புத்தக வெளியீடுக்கு விமான டிக்கட்டும் அனுப்புங்கள்.

நிஷா சொன்னது…

பாருங்கள் வைரமுத்து எழுதினார் என நினைத்து படித்தால் அவர்தான் நினைவில் வ்ருவாராம், அதனால் யார் எழுதினார் என பார்க்காமல் எழுத்தை மட்டும் வைத்து பார்த்தால் எங்க குமாரும் வைரமுத்து தான்,

Inuvaijurmayuran சொன்னது…

இன்றுதான் நுழைந்தேன். அழகு கவிகளால் இதயம் நிறைந்தது,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கரிகாலன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹாசிம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம்யூரன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.