மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

பிரதிலிபியின் 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது கதையும் இருக்கு. அதை நீங்களெல்லாம் கொண்டாடினால் பரிசை வெல்லும் படைப்புகளுடன் போட்டியாவது போட முடியும். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி பிரதிலிபியில் கதையை வாசித்து உங்கள் கருத்தையும் மறக்காமல் மதிப்பெண்ணையும் அளியுங்கள். கதை குறித்து உண்மையான கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.


படத்தைக் கிளிக்கியும் கருத்தைச் சொல்லலாம்


***
பிப்ரவரி - 16 அகல் மின்னிதழில் 'எங்கள் அமீரகம்' என்னும் தலைப்பின் கீழ் எனது கட்டுரையின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. அதன் இரண்டாம் பகுதி வரும் மார்ச் இதழில் வெளியாகும். அகலில் கட்டுரை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள். கட்டுரை குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரையை பிரதிலிபியிலும் படிக்கலாம்.

அகலில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

பிரதிலிபியில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

அகல் நண்பர்கள் வட்டம் முகநூல் பக்கம் பார்க்க படத்தை கிளிக்குங்கள்


***
வேலைப்பளு கூடுதல் மற்றும் சில பல காரணங்களால் வலைப்பக்கம் அதிகமாக வருவதில்லை. நண்பர்களின் எழுத்துக்களை விடுமுறை தினங்களில் வாசித்து விடுவேன். கருத்து இடுவதில் சிக்கல் இருக்கிறது. சிலரின் பதிவுகளுக்கு பிரச்சினை இல்லை. பலரின் பதிவுகளில் 'நீ ரோபோ இல்லை'ன்னு சொல்லு என்று கேட்கிறது. சொன்னால் ரைட்டு என கருத்து இட அனுமதிக்கிறது. அதிலும் ஒரு சிக்கல் என்னன்னா நாலு பேருக்கு அந்த மாதிரி உள்ள போயி கருத்து இட்டால் ஐந்தாவது நண்பரின் தளத்தில் ரோபோ இல்லைன்னா... படங்களைக் கொடுத்து மரங்களை தேர்ந்தெடு, ஆற்றை தேர்ந்தெடு, புல்வெளியை தேர்ந்தெடு, தெருவைத் தேர்ந்தெடு, டாக்ஸியை தேர்ந்தெடுன்னு கொடுத்து சரியாச் சொன்னாத்தான் உள்ளே போகுது. இதில் கடுப்பாகி வாசிப்பதுடன் வெளியில் வந்துவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை எல்லாருக்கும் இருக்கான்னு தெரியலை. தனபாலன் அண்ணா வேற ரொம்ப பிஸி போல, அவர் இப்போ அதிகம் வருவதில்லை இல்லேன்னா அவர்கிட்ட கேட்டுக்கலாம். தெரிந்த நண்பர்கள் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்.


***
பாக்யாவில் மக்கள் மனசு மற்றும் வாசகர் வாய்ஸ்-ல் தொடர்ந்து எனது கருத்துகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடும் பாக்யா ஆசிரியர் குழுவுக்கு நன்றி. மக்கள் மனசில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து ஒரு வருடமாக தொடர்ந்து எழுதியிருக்கிறேன் அதுவும் பிரசுரமாகியிருக்கிறது என்பதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.


*** 
ம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மிக தீவிரம் அடைந்து நாட்டுக்காக உயிரிழந்து, தேசியக்கொடியைப் போர்த்தி மரியாதை செய்யப்பட்ட ராணுவவீரனின் மீது ஸ்டிக்கரை வைத்த ஸ்டிக்கர் பாய்ஸின் செயல் வேதனைக்குரியது... கேவலமானது. நேற்று ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது... அதில் மரணமடைந்தவரின் வீட்டில் அழுது கொண்டு நிற்கும்பெண்ணிடம் அம்மாவின் அல்லக்கைகள் காவிரித்தாயின் போட்டோவைக் காட்டி... சை... இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது... இப்படிப்பட்ட கேவலமான செயலை இறந்தவர்களின் வீட்டிலும் செய்ய இவர்களால் எப்படி முடிகிறது. இந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம் அல்லக்கைஸ்... ஆணவம் பிடித்த தங்கத்தாரகை இதையெல்லாம் ரொம்ப விரும்பும் போல... புகழ் விரும்பி... மமதை பிடித்த மக்கள் தலைவி... யோசித்து வாக்களித்து வெளியில் தூக்கி வீசணும் தமிழக ஸ்டிக்கர் முதலமைச்சரை.... இல்லையேல் எல்லாருடைய வீட்டிலும்.... எல்லாப் பொருளிலும்... இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்... அதற்கான கடன் அடுத்த ஐந்தாண்டில் மில்லியன்களின் கூட இருக்கலாம். தமிழனை கேவலப்படுத்தவே  இந்த ஈனப்பிறவிகள் பதவியில் இருக்கிறார்கள் போல.

***
பாப்பா மதிய சாப்பாட்டை சில தினங்களாக சாப்பிடுவதே இல்லை... டிபன் பாக்ஸ் அப்படியே வருது... தினமும் கஷ்டப்பட்டு விதவிதமாச் செஞ்சு கொடுத்துவிட்டா... சாயந்தரம் கோழிக்குத்தான் கொட்ட வேண்டியிருக்குன்னு மனைவி சொல்ல, நான் பாப்பாவிடம் என்ன..? ஏன்..? என்று கேட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விஷால், 'இவுகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா பாவம் கோழிங்க பசியா இருக்கும்ன்னு அப்படியே கொண்டாந்துடுறாங்க... இனிமே இதுக்கு கொடுத்து விடுறதுக்குப் பதிலா காலையிலயே கோழிக்கு போட்டிடலாம்... சூடாவாச்சும் சாப்பிடுங்க' என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். இப்படி அப்பப்ப நிறைய டைமிங்கா பேசிக்கிட்டே இருப்பான்... எல்லாத்தையும் பதிஞ்சு வைக்கணும்.


***
நாம் மனசுக்குள் யோசித்து வைத்து... அதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி ஒரு பதிவாக்கினால் காப்பி செய்யும் நபர்கள் ஏதோ தாங்கள் எழுதியது போல் பல தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். 'தேவதா தமிழ்' கீதா அக்கா, 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா என நிறையப் பேர் தங்கள் பதிவுகள் பல தளங்களில் வேறு பெயரில் பதிவாகியிருக்கு என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் படைப்பு மட்டுமில்லை... பலரின் படைப்புக்கள் அப்படித்தான் வலம் வருது. ஒரு முறை 'RSS Feed' என்னும் தளத்தில் எனது பதிவுகள் இன்னும் நம் நட்பின் பதிவுகள் எல்லாம் அனுமதியில்லாமல் மொத்தமாக பதியப்பட்டிருந்தன. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எனது பதிவுகளை நீக்கினேன். நாம் பெற்ற பிள்ளைக்கு வேறொருவன் உரிமை கொண்டாடுவது எப்படி நியாயம்..? எனவே இனிமேல் மனசு தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள் எல்லாம் நிறுத்திவிட்டு  மனசில் பட்டது, மனசு பேசுகிறேன், மனசின் பக்கம், சினிமா என எழுதலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குங்க கஷ்டப்பட்டு சிறுகதை எழுதி நாளைக்கு எவனாச்சும் அதை புத்தகமாப் போடுவான்... என்னைக்காச்சும் வாசிக்க நேர்ந்தால் என்ன இது எல்லாமே நம்மளோட கதை மாதிரி இருக்குன்னு புலம்பினாலும் அவனை ஒண்ணும் செய்ய முடியாதுதானே... எனவே இப்போ நான் தீவிர யோசனையில்... இல்லேன்னா பேசாம மனசு வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்திடலாமான்னு கூட யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க..?

***
ன்னைக்கு காலையில வேலைக்கு போகும் போது சிக்னலில் ரெண்டு மலையாளி பசங்க பேசிக்கிட்டு நின்னாங்க... ஒருத்தன் மற்றவனிடம் 'பெல்ட் போடாம இன் பண்ணக்கூடாதா என்ன?ட என்றான். 'ஏன்... பண்ணலாமே...? யார் பண்ணக்கூடாதுன்னு சொன்னா... போலீஸ்காரனா...?' மற்றவன் அப்பாவியாய்க் கேட்டான். 'அட நீ வேற... வர்றப்போ எதிரே போன பிலிப்பைனி பொண்ணுங்க ரெண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு போகுதுங்க...'என்றான். உடனே மற்றவன் அவனை ஏற இறங்கப் பார்த்துட்டு 'மூதேவி... முதல்ல சிப்பைப் போடு... இன் பண்ணின சட்டை அதுவழியா வெளியே வந்திருக்கு பாரு... அப்புறம் சிரிக்காம என்ன பண்ணுவாளுங்க' என்றதும் 'அய்யே...' என அவன் வேகமாக ஜிப்பை இழுக்க நான் சிரித்துக் கொண்டே கடந்தேன்.


***
ன்னைக் கவர்ந்த பாடலாக அனார்கலி படத்தில் இருந்து 'ஆ ஒருத்தி அவளோருத்தி...'  அருமையான பாடல்... இது கண்டிப்பாக உங்களையும் கவரும்... என்னது படம் குறித்தா..? அதை அடுத்த பதிவுல விரிவாச் சொல்றேன்... இப்ப பாட்டைக் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

19 கருத்துகள்:

 1. மூதேவிக்கு மலையாளத்தில் என்ன?!!

  அனைத்தையும் ரசித்தேன். பிரதிலிபி சென்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...

   அவங்களும் மூதேவியின்னுதான் சொல்லுவானுங்க... ஆனா அதை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் தெண்டி (ராஸ்கல்) என்பதுதான். இங்கும் அவன் அட தெண்டி என்றுதான் சொன்னான்... நாந்தான் சுவராஸ்யத்திற்காக அதை ராஸ்கல் என்று எழுதாமல் மூதேவி என்று மாற்றினேன்.

   கதையை வாசித்து கருத்து இட்டமைக்கு நன்றி அண்ணா....

   நீக்கு
 2. வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   முடிந்தால் வாசித்து கருத்து இடுங்கள் ஐயா...

   நீக்கு
 3. ஓரே சமயத்தில் பல தளங்களை திறக்க வேண்டாம்... பிறகு பாருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   இனி அப்படிச் செய்து பார்க்கிறேன் அண்ணா...

   நீக்கு
 4. அருமையான கலவை ...மகிழ்ச்சி ,வருத்தம் எல்லாம் கலந்து...அருமை குமார்...தொடர்ந்து எழுதுங்கள் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க செல்வா அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. வழக்கம்போல் சூப்பர், கதையை படித்துவிடுகிறேன், ஸ்டிக்கர் பாய்ஸ் மீதான தங்கள் பாய்ச்சல் நியாமானது, ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்... தேர்தல் வரட்டும்.. பிரபலமான பதிவர்களின் பதிவுகளை சுடுவது சகஜமாகிக் கொண்டே வருகிறது... கண்டனத்துக்குரியது, அவர்களுக்காக நீங்கள் இந்த முடிவை எடுக்கக் கூடாது என்பது என் எண்ணம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சீலன்...
   தங்கள் கருத்துக்கு நன்றி.
   கதையை வாசித்து கருத்து இடுங்கள்...
   ஸ்டிக்கர் பாய்ஸ் கேவலப்பட்ட ஜென்மங்கள்...
   பதிவு சுடுவதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது...
   பார்க்கலாம்.

   நீக்கு
 6. பல தரப்பட்ட விபரங்கள் மற்றவர்களுக்காக நாம் ஏன் எழுதுவதை நிறுத்த வேண்டும் பதிவை காப்பி செய்ய முடியாதவாறு மாற்றவும்
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   அப்படியும் தோணுது... இப்படியும் தோணுது... எப்படி நடக்குதுன்னு பார்ப்போம்...

   காப்பி பண்ண முடியாதவாறு மாற்ற முயற்சிக்கிறேன்...

   நீக்கு
 7. தலைப்பு மிக பொருத்தம் !
  வானம்பாடி சொல்லாமலேயே சென்று விட்டதே ..
  பல காதல்கள் இப்படித்தான் முழுமையடையாமல் சென்றுவிடுகின்றன ரகசியங்களை சுமந்த வானொலிப்பெட்டி போல // மதிபெண்ணையும் கமெண்டையும் போட்டேன் ஏனோ கமெண்ட் வரவேயில்லை அங்கே .

  அனைத்து தகவல்களும் படித்தேன் ரசித்தேன் .
  காபி பேஸ்டுக்கு என்ன பண்றதின்னே தெரியல்லை ..நிறைய இடத்தில பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. குமார் உங்களின் கதையை பிரதிலிபியில் வாசித்துக் கருத்தும் இட்டுவிட்டோம்.நேசம் சுமந்த வானம்ப்பாடி!!! தலைப்பு அருமை...கதையும்.

  காபி பேஸ்டிற்கு, மதுரைத் தமிழன், கௌசல்யா, கூட்டாஞ்சோறு செந்தில்குமார், கில்லர்ஜி....டிடியும்தான் ..போன்றோர் தங்கள் பதிவுகளைக் காப்பி செய்ய முடியாமல் தளத்தைச் செய்திருக்கின்றார்கள். ஆனால் அதையும் உடைத்துவிடமுடியும் என்றும் யாரோ...மதுரைத் தமிழன் தளத்தில் சொல்லியிருந்தார்கள். நீங்கள், நிஷா எல்லோரும் அதை முயற்சி செய்யலாம். ஆனால் மனசு வலைட்த்தளத்தை மூடிவிடவேண்டாம் குமார்.
  பாக்யாவில் தங்களின் கருத்துகள் வெளிவருவதற்கு வாழ்த்துகள். விஷாலின் கமென்ட் அழகு!!ரசித்தோம்.

  அமீரகம் வாசிக்கின்றோம்....கருத்தும் சொல்லுகின்றோம்...

  கீதா: பாப்பா சாப்பிடாமல் இருப்பதற்கு ஒருவேளை வயிற்றில் பூச்சி இருக்கலாம்...பூச்சி மருந்து கொடுத்துப் பார்க்கச் சொல்லுங்கள் குமார்

  ஐயோ அந்தக் கேடுகெட்ட ஸ்டிக்கர் ஒட்டிகளை என்ன செய்ய சொல்லுங்கள். மட்டுமல்ல இன்று அம்மாவின் பிறந்தநாள்...மூலை முடுக்குகள் எல்லாம் பாட்டு அலறுகின்றது. காது அடைக்கின்றது. சவுன்ட் பொல்யூஷன். இதை எல்லாம் அரசு வேடிக்கைப் பார்க்கின்றதே! சொல்லுங்கள்...

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கு நேர்ந்த ரோபோ பிரச்சனைகள் எங்களுக்கும் நேர்கின்றது. அதே அதேதான். படங்களும் வரும் ...பல நாட்கள் தொடர்ந்தன. இப்போது ஏனோ இல்லை. கில்லர்ஜிக்கும் வந்ததாகச் சொன்னார்.

  பதிலளிநீக்கு
 10. அமீரகம் வாழ்க்கை வாசித்தோம்...ஏற்கனவே அரபு வாழ்க்கைப் பற்றித் தெரிந்திருந்தாலும் தங்கள் கட்டுரை பல தகவல்க்ளைச் சொல்லியது. அடுத்தபகுதிக்குக் காத்திருக்கின்றோம் . அருமையாக எழுதியிருக்கீங்க.

  கீதா: ஒன்று மட்டும் சொல்ல விழைகின்றேன் குமார். அங்கு மட்டுமில்லை கழிவறைச் சுத்தம்...அசிங்கப்படுத்துவது..ம்ம் சுத்தம் செய்பவர்கள் இருக்கிறார்களே என்று. இங்கும் வீடுகளில் வேலைக்கு ஆள் அமர்த்தியிருப்பவர்கள் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் அவர்களிடம் எதுவும் கமென்ட் சொல்லுவதில்லை என்றாலும், வீட்டு வேலை செய்பவர்கள் பாவம் நாம் கழிக்கும் கழிவறைகளை அவர்களைக் கொண்டுச் சுத்தம் செய்யச் சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தோன்றும். மிக மிக வயதானவர்கள் தனியாக இருக்க நேரிடும் போதும், நோயாளிகளையும் தவிர...மற்றவர்கள் தங்கள் வீட்டுக் கழிவறைகளை அவர்களே சுத்தம் செய்வதை விட்டு வீட்டுப் பணிகள் செய்வோரைக் கழுவச் சொல்லுவது என்பது ஏனோ என் மனம் ஒப்பவில்லை...அப்படியிருக்க பொதுக் கழிவறைகள் பாவம் அந்தப் பணியாளர்கள்...உங்கள் வரிகள் மனதை நெகிழ்த்திவிட்டது..நல்ல கட்டுரை

  பதிலளிநீக்கு
 11. அப்பாடா படித்தாகி விட்டது குமார்!

  நேசம் சுமந்த வானம் பாடிக்கு அன்றே வாக்கிட்டு விட்டேன், கதை குறித்து கருத்திடவில்லை. அதையும் எழுத வேண்டும்.வெற்றி பெற என் வாழ்த்துகள் குமார்!

  ஸ்ருதி சாப்பிடாமல் வருவதற்கு மனசும் காரணமாயிருந்திருக்கலாம், அவ கிளாஸில் ஏதேனும் சங்கடமான சூழல் இருந்தால் அந்த சோர்வில் உணவை தவிர்க்கலாம்,அத்தோடு இந்த வயதில் சில பெண் குழந்தைகள் சாப்பாட்டை தவிர்ப்பதும் இயல்பு,அவளிடம் பேசி அவளுக்கு பிடித்ததாய் செய்து கொடுக்க சொல்லுங்கள்.

  மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்தும் பெரியவர் நீங்களாய் இருக்க மாட்டீர்கள் என்பதால் இந்த வலைப்பூவில் இனி எழுதுவதா இலலியா எனும் கதைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு எழுதுங்கள். நம்ம எழுத்துக்கள் நாலு பேருக்கு பிடிச்சு போகத்தானே காப்பி செய்கின்றார்கள். அது நமக்கும் பெருமை தானே? விட்டு தள்ளுங்கள்.

  காப்பி பேஸ்டுகளுக்கு பயந்தால் ஆகுமா? என் வீட்டுக்காரருக்கு இப்ப கவிதை படிக்கும் ஆர்வம் வந்திருக்கு குமார், ஒரிரு மாதம் முன்னால் அவர் படிக்கும் கவிதையைஎல்லாம் தன் பேஸ்புக் பக்கம் காப்பி செய்து போட்டுகொண்டிருந்தார்,அதை அவர் நட்புக்களும் லைக் செய்வாங்க, ஆனால் அது அவர் எழுதியது இல்லை என எனக்கு தெரியும், அப்படி செய்யாதிங்க,காப்பி செய்தால் எழுதியவர் பெயரையும் போடுங்க,இல்லன்னால் உங்களை திட்டுவாங்க என சொன்னேன், உடனே அப்படில்லாம் ஆகாது, பேஸ்புக்கில் நிரம்ப இடத்தில் அந்த கவிதை இருக்குது, அதனால் யாரும் திட்ட மாட்டாங்க என எனக்கு சொல்லிட்டு அவர் வேலையை அவர் அப்பப்ப செய்து கொண்டு தான் இருக்கின்றார்.

  இத்தனைக்கும் வாசிப்பு எனில் அத்தனை கசப்பாய் நினைப்பார். அவருக்கே கவிதை படிக்கும் ஆர்வமும் அதை காப்பி செய்து போடும் ஆர்வமும் இருக்கும் படி கவிதை வரிகள் இருந்தால் அது எழுதியவருக்கு பெருமை தானே?

  நான் சேனையில் போடும் பதிவுகளை காப்பி செய்யாமல் தடுக்கும் செட்டிங்கில் போடுவது நல்லது என முசம்மிலுடன் பேசினேன், ஆனால் அவர் அப்படி வேண்டாம் அக்கா என சொல்லி விட்டார். நாம் இணையத்தில் பதிவது நான்கு பேர் படித்து பயன் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் எனும் போது சில பல செய்திகளை காப்பி செய்து பந்திந்தால் என்ன அக்கா என்கின்றார். அவர் சொல்வதும் சரி தான் என எனக்கும் தோன்றியது!

  கதை, கவிதை அல்லாத பொதுதகவல்கள், மருத்துவவிடயங்கள், உலகம் குறித்த பகிர்வுகளை நாம் தேடி இடுவதும் ஆராய்ந்து எழுதுவதும் அனைவரும் பயனடைய எனும் போது எதற்காக காப்பி செய்ய முடியாதபடி செட்டிங்க் செய்ய வேண்டும்! அதுவும் ஒருவகை சுய நலம் தானே?அனைவருக்கும் பயன் படவேண்டும் எனும் நினைத்தோமானால் நாம் எதையும் இலகுவாய் எடுத்துக்கொள்வோம் அல்லவா!?

  பதிலளிநீக்கு
 12. த.ம ஒட்டுப்போட்டேன்ல!

  பதிலளிநீக்கு
 13. நான் ரோபோட் இல்லை என்பதும் படங்களை குறிக்க சொல்வதும் ஒருவகை செக்ரூட்டி பாதிகாப்பு என நினைக்கின்றேன் குமார், நான் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அடுத்தடுத்து பலரின் பதிவுகளை திறந்து கருத்திட முனையும் போது மட்டும் தான் இம்மாதிரி காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஏதேனும் வைரஸோ என பல பதிவுகளை கருத்திடாமல் தவிர்த்து விட்டேன்.

  எனக்கும் இப்படித்தானே, வந்தால் ஒரேயடியாக் இங்கே வந்து குடியிருப்பேன்,இல்லாவிட்டால் மொத்தமாய் காணாமல் போய் விடுவேனே,, அடுத்த தடவை மீண்டும் இந்த ரோபோ இல்லை வந்தபோது சட்டென இதான் காரணம் என புரிந்து போனது,

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...