மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 பிப்ரவரி, 2016மனசு பேசுகிறது : வந்தவன் தமிழன்னா...


ன்று குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மாலை அலுவலகத்தில் இருந்து வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னருகில் வந்து "ஒரு நிமிடம்... நீங்க மலையாளியா?" அப்படின்னு கேட்டார். "இல்ல தமிழ்..." என்றதும் "தமிழா... நானும் தமிழ்தான்..." என்றவர் "இங்க பாஸ்போர்ட் ரினிவல் பண்ணி வாங்குற இடம் எங்க இருக்கு" என்றார். "இங்கயா... பாஸ்போர்ட் ரினிவல் என்றால் போஸ்ட் ஆபீஸ்ல போயி வாங்கணும்... இல்லேன்னா உங்க ஆபீஸ்க்கு வரும்... அங்க போயில்ல வாங்கணும்... இந்த ஏரியாவுல போஸ்ட் ஆபீஸ் இல்லையே" என்றேன். "இல்ல எங்க இந்திக்கார டிரைவர் இங்க இறக்கி விட்டுட்டு அந்தப் பக்கம் இருக்கு போய் வாங்கிக்கன்னு சொல்லிட்டுப் போனான்" என்றார். "எங்க இருந்து வாறீங்க...?" என்றேன். "நான் இருக்கது பெத்தாசயீது... போட்ல போயி மீன் பிடிக்கிற வேலை... நாலைந்து பேர் சேர்ந்து கடலுக்குள்ள போவோம்... பத்து வருசம் முடிஞ்சிருச்சு... பாஸ்போர்ட் ரினிவலுக்கு கொடுத்தேன்" என்றார். "நல்லாக் கேட்டீங்களா? இங்கதானா...?" என்றதும் ஒரு நம்பருக்கு போன் செய்து 'இவரும் எங்க டிரைவர்தான்... மலையாளி... தமிழ் பேசுவார்... எனக்கு இங்க இடமெல்லாம் தெரியாது... கொஞ்சம் விசாரிங்க" என்றார். நானும் அந்த டிரைவருடன் பேச, "இப்ப எவட இருக்கு?" என்றான். "அல்மசூத் ஆட்டோ மொபைல்ஸ்கிட்ட சிக்னல் முன்னாடி நிக்கிறார்..." என்றதும் "அப்படியெ ஸ்ட்ரைட்டா வரச்சொல்லு... சிக்னல்தாண்டி இருக்கிற பஸ் ஸ்டாப்புக்கு வரச்சொல்லு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்றான். "சரி வாங்க போகலாம்... நானும் அந்தப் பக்கம்தான் போறேன்..." என அவருடன் பேசியபடி வர, ஊர் இராமேஸ்வரம்... மீன் பிடிக்கிறதுதான் எங்க தொழில்... அதனால இங்கயும் அது பிரச்சினையில்லாம இருக்கு..." என்றார். "ம்... நான் தேவகோட்டை" என்றேன். "அப்படியா... எனக்கு இந்த ஏரியா தெரியாது... கொண்டாந்து இறக்கிவிட்டுட்டு வாங்கிக்கிட்டு வான்னு சொல்லிட்டுப் பொயிட்டான்... நீங்க வந்தஹ்டு நல்லதாப் போச்சு" என்றார். "உங்களுக்கு இங்க பக்கத்துல ஆபீஸ் இருக்கும் போல அங்கதான் வாங்க வேண்டி வரும்.." என்றேன். "தெரியலைங்க... மீன் பிடிக்கிறோம்... எங்களுக்கு எது ஆபீஸ்... அது எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது..." என்றார். சிக்னல் கடந்து அவன் சொன்ன பஸ்ஸ்டாப் அருகில் வந்து "இங்கதாங்க வரச்சொன்னான்... இங்க நில்லுங்க வந்து பிக்கப் பண்ணிப்பான்" என்றபடி நகர்ந்தேன். "நான் அவனைக் கூப்பிட்டு எப்படிப் பேசி... நீங்களே மறுபடியும் அதே நம்பர்ல ஒரு வார்த்தை கேளுங்களேன்..." என்றார். மீண்டும் மலையாளிக்கு போன்... ரிங்க் போனது... "அண்ணா... எங்கேருக்கு...?" என்றான். "ஆளு இவட நீ சொன்ன பஸ் ஸ்டாண்டிலானு... நீ பிக்கப் செய்யுமோ... அவருக்கு ஏரியா அறிஞ்சிட்டில்லா..." என்றேன். "எவடன்னு ஸ்தல் பரை..." "ஏ... நீ பறைஞ்ச ஸ்தலமான்னு... நேஷனல் பெயிண்ட் ஷாப் இருக்குல்ல... அவடயானு..." என்றதும் "அண்ணா... இவட நோக்கு... யான் கை ஆட்டுது பாரு... கண்டுட்டுண்டா..." என்றான். நானும் அவனைப் பார்த்து கையை அசைத்து "ஆளு அவட வரும்... ஒகே" அப்படின்னு சொல்லி போனைக் கட் பண்ணினேன். "அந்தா நிக்கிறான் பாருங்க... அவந்தான் உங்க மலையாளி டிரைவர்... அவன் நிக்கிற கடைதான் உங்களுக்கு விசா போட்டிருக்கும் கடைபோல... அங்கதான் பாஸ்போர்ட் இருக்கும்... போய் வாங்கிக்கிட்டு பத்திரமாய் போய் சேருங்க..." என்று சொல்ல, "எனக்கு இவ்வளவு தூரம் உதவியதற்கு ரொம்ப நன்றிங்க..." என்றபடி ஓடினார். அந்த மலையாளி சொன்ன கடை சிக்னலுக்கு அருகில் இருந்தது. நானும் என் வழியில் நடந்தேன்... நானும் அவர் பெயரைக் கேட்கவில்லை... அவரும் என் பெயரைக் கேட்கவில்லை... தமிழன் என்ற உணர்வு மட்டுமே... # இதை முகநூலில் பகிரலாம் என அங்குதான் எழுதினேன்... ரொம்ப நீளமாப் போனதால் இங்கும் பதிவாக்கிட்டேன்.
-'பரிவை' சே.குமார்.

17 கருத்துகள்:

 1. இங்கே உல்லாசப்பயணிகளாய் வரும் எம்மவர்கள் இந்தியன் ரெஸ்டோரண்ட் தேடி அலையும் போது எமக்கும் இம்மாதிரி அனுபவங்கள் உண்டு குமார்.

  பத்து வருடம் முன்னர் இங்கே அதிகம் இந்தியன் உணவு விடுதிகள் இல்லாததால் அப்படி வருவோரை வீட்டுக்கு அழைத்து உணவு பரிமாறியதும் உண்டு,

  எங்கே போனாலும் இந்த தமிழ் எனும் உணர்வு மட்டும் மங்காது! ஊர் விட்டு ஊர் வந்த இடத்தில் நம் மொழி பேசும் எவரையேனும் கண்டால் அதை விட மகிழ்ச்சியும் வேறில்லை, நல்ல அனுபவம் குமார், பகிர்ந்தமைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. நல்ல உதவி. சொந்த நாட்டினரை உறவுகள் போல உணரவைக்கும் வெளிநாட்டுச் சூழல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. பாவம்..எதுவும் அறியாமல் உழைக்கும் அவரைப் போன்றவர்களுக்கு உங்களைப் போல் உதவுபவர்கள் கிடைக்கவேண்டும். த.ம.+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. நாம் எங்கு இருந்தாலும் ..அட நீங்க தமிழா னு கேட்கும் போது ஒரு சந்தோசம் வர தான் செய்யுது ...

  மேலும் உங்க உதவிக்கு.. மனமார்ந்த பாராட்டுகள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. அப்படீனாக்கா நாளைப்பின்னே எனக்கும் வழி கேட்டுக் கொள்ளலாம்.

  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. அங்கேயும் படித்தேன்..... இங்கேயும்.

  நல்ல வேலை செய்தீர்கள்.... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. அருமை குமார்...மொழி தெரியாத ஊரில் நம்மவர்க்கு செய்யும் உதவி..மறக்கமுடியாதது...உங்கள் உதவியும் அப்படித்தான்... பலன் வேண்டா உதவி நல்லது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. தமிழ் என்றாலே தனிசந்தோஷம் தொற்றிக்கொள்கிறது .எதோ நம்மால் ஆன உதவி !! பாராட்டுகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. பாவம் அவர். தமிழ் எனும் போது நாம் எந்த ஊரில் இருந்தாலும் ஒரு சந்தோஷம் வருகிறது இல்லையா....நீங்கள் உதவியது அவருக்கு மிகவும் மகிழ்வாய் இருந்திருக்கும்,. உங்களுக்கும்தான்..

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...