மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 21 பிப்ரவரி, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)

முந்தைய பகுதிகள் :


இருபதாவது பகுதியின் இறுதியில்...

"ஏங்க... இன்னும் என்னங்க உங்களுக்கு கோவம்... வீட்டுக்கு வந்துட்டு எந்தங்கங்க கண்ணக் கசக்கிக்கிட்டுப் போகுதுங்க... கூப்பிடுங்க... வாங்கன்னு சொல்லுங்க..."

"அப்பா... ப்ளீஸ்ப்பா.. மாமாவைக் கூப்பிடுங்கப்பா... ரெண்டு மாமாவும் அழுதுக்கிட்டு போறாங்கப்பா... மாமாவைக் கூப்பிடுங்கப்பா...ப்ளீஸ்..." அவனை உலுக்கினாள் சுவேதா.

அவர்கள் வண்டிக்கு அருகில் செல்ல, "கண்ணமச்சான்... அவனையும் கூட்டிக்கிட்டு உள்ள வாங்க" மகளை அணைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டான் ரமேஷ்.

இனி...

மேஷ் அழைக்கவும் இருவரும் மீண்டும் வீட்டிற்குள் வந்தார்கள். 'உக்காருங்க' எனச் சந்தோஷமாகச் சொன்னாள் கண்மணி. 'மாமா' என வந்து ஓட்டிக்கொண்டாள் ஸ்வேதா. குமரேசன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"கண்ண மச்சான் நான் அப்படி உங்ககிட்ட பேசியிருக்கக் கூடாதுதான். ஆனா நடந்ததெல்லாம் எனக்குள் இன்னும் அப்படியே இருக்கதாலதான் அப்படி... அதுக்காக பொசுக்குன்னு கால்ல விழுந்து என்னைய ரொம்ப சங்கடப்படுத்திட்டீங்க..."

"சரி விடுங்கத்தான்.. உங்க கால்ல நான் விழுந்ததுல இப்ப என்ன வந்திருச்சு... நீங்க நம்ம வீட்டுக்கு வரணும்... பங்கு பிரிக்கும் போது எல்லாரும் சந்தோஷமா இருந்து பிரிச்சி விடணும்..."

"ம்... எப்ப இருந்தாலும் என்னோட கணக்கை பைசல் பண்ணாம விடமாட்டேன்" குமரேசனைப் பார்த்தபடி சொன்னான் ரமேஷ்.

"அத்தான்... எல்லாத்தையும் விடுங்கத்தான்.... எல்லாருமே உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்காங்க.... பெரியத்தான் மாதிரி நீங்களும் எல்லாத்துலயும் கலந்துக்கணும்... அதான் எங்களுக்கு வேணும்..." என்றான் கண்ணதாசன்.

"ம்... வர்றோம்..."

"சந்தோசமா இருக்குத்தான்... எல்லாரும் வந்துருங்க..." என்றவன் குமரேசனிடம் மெதுவாக 'நீயும் வாங்கன்னு சொல்லுடா' என்றான்.

"அத்தான் எல்லாரும் வந்திருங்க... அக்கா வந்திரு... பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு வந்திரு..." என்றான்.

"ஆமா... கூடப் பொறந்தவங்களுக்கு உந்தம்பி கெடா விருந்து வைக்கப் போறானுக்கும்..." நக்கலாகக் கேட்டான் ரமேஷ்.

குமரேசன் முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு அவரைப் பார்க்க, "கிடாதானே வெட்டணும்... வெட்டிட்டாப் போச்சு... வாங்கத்தான் விருந்துக்கு என்னத்தான்... உங்களுக்கு இல்லாததா..." என்று அந்த சூழல் மீண்டும் எங்கே வம்புக்குள் போயிருமோ என்று சிரித்துப் பேசி மாற்றிய கண்ணதாசன் "சரி... நாங்க கிளம்புறோம்..." என்றான்.

"இருண்ணே.... பொங்க வச்ச சாமி கும்பிட்டுப் போகலாம்..."

"அங்க இந்நேரம் இந்தப் பயக போனவனுங்களைக் காணோமுன்னு அப்பா புடுங்க ஆரம்பிச்சிருப்பாரு.... அங்கயும் போயி பொங்க வச்சி சாமி கும்பிடணுமில்ல... நாங்க கிளம்புறோம்... வாடா..." என்ற கண்ணதாசன் "அத்தான் வர்றோம்த்தான்" என்று கிளம்ப, "வாறேன்... ஸ்வேதாக்குட்டி பை... மாப்ள மாமாவுக்கு ஒரு முத்தம் கொடுங்க.." என்றபடி குமரேசன் குனிய சங்கர் அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

"பாசம் அப்படியே பொத்துக்கிட்டு வழியுதே... ஏய் மச்சானைப் பாத்துப் போகச் சொல்லுடி... பாசத்துல வழுக்கி விழுந்திடாம.." என்றான் ரமேஷ் கிண்டலாக. இருவரும் ஒன்றும் பேசாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

"என்ன இந்தப் பயலுகளை இன்னும் காணோம்...." வாசலை எட்டிப் பார்த்தபடிக் கேட்டார் கந்தசாமி.

"வந்துருவானுங்க... அந்த ஆளு என்ன முறுக்கு முறுக்கினாரோ... வந்தாத்தானே தெரியும்... அவனுகளை போங்கடா... போங்கடான்னு அனுப்பி வச்சிட்டு இப்ப வீட்டுக்கும் வாசலுக்குமா உலாத்துனா... கொஞ்சம் உக்காருங்க..." கடுப்படித்தாள் காளியம்மா.

"ஆமா... உம்மவன் அங்க போயி ஏழரையை இழுத்துருவானோ என்னமோன்னு பயமா இருக்குலா....கண்ண போனதால கொஞ்சம் நிம்மதி... எங்கண்ணன் மாதிரி பேசியே எதிரியையும் உறவாக்கிருவான்..."

"அதுக்காகத்தானே அந்தப்பயலையும் போகச் சொன்னீக.... எல்லாத்துக்கும் ஓடுறான்... அவனுக்கு நம்ம என்ன செய்யிறோம்?"

"அயித்த... நீங்க என்ன செய்யலை... அவரும் உங்க பிள்ளைதானே... "என்றபடி வந்தாள் கண்ணகி.

"வாத்தா... சித்ரா... இந்தா உங்க தம்பி பொண்டாட்டி வந்திருக்கு பாருங்க..." என்று அடுப்படிப் பக்கம் பார்த்துக் கத்தினார்.

"என்ன கண்ணகி... பயலுக எங்க?" என்றாள் காளியம்மா.

"அதுக டிவியக் கட்டிக்கிட்டுத்தான் அழுகுதுக... மாடு வெயில்ல கெடக்கு... பிடிச்சி தொட்டியில தண்ணி காட்டிட்டு கசாலைக்குள்ள பிடிச்சிக் கட்டுங்கடான்னு சொன்னா எந்திரிக்கலை... நாந்தான் கட்டிட்டு வாறேன்... பொங்க வக்கலாமா மாமா... இவுகளையும் காணோம்..."

"ஆமா... ஆமா... வைக்க ஆரம்பிங்க... அவனுக வந்துருவானுங்க.. கண்ணதாசனுக்கு போனடிச்சுப் பாருவேத்தா..." கண்ணகியைப் பார்த்துச் சொன்னார்.

"அடிச்சுப் பாத்தேன் மாமா... கட் பண்ணி விடுறாக..."

"அப்ப வந்துக்கிட்டு இருப்பானுக... ஏலா மூத்தவன் எங்க பொயிட்டான்..? " காளியம்மாளிடம் கேட்டார்.

"குளிச்சிட்டு வந்தான்... எங்க போயிருப்பான்.... அந்த பாண்டிப்பய வீட்டுக்குப் போயி பேசிக்கிட்டு இருப்பான்... இன்னமும் சின்ன வயசில இருந்த மாதிரித்தான் எந்தப் பொறுப்பும் இல்லாம இருக்கான்..." அலுத்துக் கொண்டாள்.

"நாஞ் சொன்னாத்தான் உங்களுக்கு கோபம் வரும்... இந்தா சின்னவுக அப்படியிப்படி இருந்தாலும் எல்லாத்துலயும் பொறுப்பா இருக்காக.... இவரு இன்னும் இப்படித்தான்..." சித்ரா இடைப் புகுந்தாள்.

"அட விடுக்கா... மாமாவுக்கு என்ன... இப்ப இங்க என்ன வெட்டியா முறிக்கப் போறாக... எப்பவாச்சும் வர்றாக... பாண்டியண்ணனும் மாமாவும் ரொம்ப நெருக்கம்... பேசிக்கிட்டு இருந்துட்டு வரட்டும்..." என்றாள் கண்ணகி.

"அதுக்காக... நல்லநாளு பெரியநாளு இல்லை..."

"நீ வேற... அவனை சின்னப்புள்ளயிலயே ராத்திரி கத்திக்கிட்டே இருந்துதான் படுக்கக் கூப்பிடணும்... இல்லேன்னா ரெண்டு பேரும் என்னதான் பேசுவானுங்களோ.... கோயில்ல உக்காந்துக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பானுங்க... காலையில எந்திரிச்சி காபி கூட குடிக்க மாட்டான்... அவன் வந்துருவான்... ரெண்டு பேரும் வெளிய பொயிட்டு பல்லுக்குச்சியை வாயில வச்சிக்கிட்டு கம்மா கரையில நின்னு பேசி வீடு வந்து சேர எட்டு மணியாயிரும்... சின்னவன் எப்பவும் எதுலயும் கலந்துக்க மாட்டான்..."

"அதான் இப்ப எல்லாத்துலயும் சேர்றாரு..." அபி சொல்ல, "எம் புள்ளைகளை கரிச்சிக் கொட்டாட்டி உங்களுக்கு தூக்கமே வராது... பொங்க வைக்க அடுப்பெல்லாம் எடுங்க... நீங்க கொஞ்சம் மண் அள்ளியாந்து இப்படிக் கொட்டுங்க... கண்ணகி நீ போயி பொங்க வையி அவன் வந்துருவான்..." என்று காளியம்மாள் சொல்லும் போது மணி வீட்டுக்குள் வந்தான்.

"இன்னும் அவனுக வரலையாப்பா?" என்றான்.

"இல்லப்பா..."

"என்ன இம்புட்டு நேரமாச்சு... அந்தாளு பாட்டுக்கு எதாவது ஏழரையைக் கூட்டிட்டாரா?"

"எங்களுக்கு என்ன தெரியும்... வேணுமின்னா நீங்க போயி பாத்துட்டு வாங்க" சித்ரா நக்கலாகச் சொன்னாள்.

"ஏன் போகமாட்டேனா.... நா போனா ரெண்டு சாப்பாடு கொடுத்துருவேன்னுதான் அப்பா அவனைப் போகச் சொன்னாரு..."

"ஆமா... அடிச்சிக்கிட்டே நில்லுங்கடா... நாங்க செத்தாக்கூட அந்த மனுசன் இந்த வீட்டுப் படியேறாம ஊரைச் சிரிக்க வைக்கட்டும்..." கோபமாச் சொன்னார் கந்தசாமி.

மணி பேசாமல் வீட்டுக்குள் போனவன், மொபைலில் குமரேசனின் நம்பரை அழுத்தினான்.

"அந்தாளுக்கு திமிருண்ணே... நீ போயி அவனோட கால்ல விழுகுறே...?" வண்டியை ஓட்டியபடி கண்ணதாசனிடம் கத்தினான் குமரேசன்.

"விடுடா... வர்றேன்னு சொல்லிட்டாருல்ல... கண்மணிக்காக நாமதான்டா இறங்கிப் போகணும்...."

"அதுக்காக... இவனெல்லாம் திருந்த மாட்டான்... பைசல் பண்ணுறானாமே பைசல்... அன்னைக்குத்தான் இருக்கு அவனுக்கு..." பல்லைக் கடித்தான்.

"உனக்கு ஏண்டா இவ்வளவு கோபம் வருது... கோபத்தைக் குறை..."

அப்போது போன் அடிக்க, பார்த்தவன் " அண்ணன் பேசுது... வர்றோம்ன்னு சொல்லு" என்று போனைக் கொடுத்தான்.

"என்னப்பா... எதுவும் பிரச்சினையில்லையே...?" வண்டியை நிறுத்தும் போதே கேட்டபடி ஓடிவந்தார் கந்தசாமி.

"ஒரு பிரச்சினையும் இல்ல... ஆரம்பத்துல முறுக்கினாரு... அப்புறம் வாறேன்னு சொல்லிட்டாரு.." என்றான் கண்ணதாசன்.

"அதானே... அதுக்குத்தானே உன்னைய போகச்சொன்னேன்... நீதான்டா சரியான ஆளு..." கண்ணதாசனைத் தட்டிக் கொடுத்தவர், "இவரு முகத்தைத் தூக்கிட்டே இருந்தாரா...? இல்ல பேசினாரா...?" என்றார் குமரேசனைப் பார்த்தபடி.

"அவன் எதுவும் சொல்லலை... அத்தான்னு சொன்னான்.... வாங்கன்னு சொன்னான்... அம்புட்டுத்தான்... நாளைக்கி வருவாரு... எல்லாம் சரியாகும் சித்தப்பா... "

"சரியாகணும்ப்பா... எல்லாரும் நின்னு சிறப்பா எங்களை வழியனுப்பணும்.. அதுதான் எனக்கு வேணும்..."

"பொங்கன்னைக்கு என்ன பேசுறீங்க.... போங்கப்பா..." என்றவன் வீட்டுக்குப் போக,  குமரேசன் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தான்.

"என்னடா... என்னாச்சு முகத்தை உர்ருன்னு வச்சிருக்கே...?" - மணி.

"ஏய்... ஒண்ணுமில்ல..."

"ஒண்ணுமில்லையின்னா எதுக்கு இப்படி இருக்கே.... அவருக்கிட்ட சண்டை போட்டியா... என்ன...?" கந்தசாமி சத்தமாகக் கேட்டார்.

"என்னங்க ஆச்சு... அண்ணன் எதாவது சொன்னாரா?" அபி அவனிடம் தண்ணீரைக் கொடுத்தபடிக் கேட்டாள்.

"அவரு என்னைக்கு இருந்தாலும் பைசல் பண்ணுவாராம்... அதெல்லாம் எனக்கு பிரச்சினையில்லை... அந்தாளா நானான்னு நான் பாத்துக்கிறேன்..."

"வர்றேன்னு சொல்லிட்டாருல்ல... அதெல்லாம் சரியாகும்... சும்மா மொறைச்சிக்கிட்டு நிக்காதே.... உனக்கு ரொம்பத்தான் கோபம் வருது..." என்றபடி கட்டிலில் அமர்ந்தார் கந்தசாமி.

"என்னப்பா... அவரு சண்டைக்கு வந்தாரா... முகமெல்லாம் சரியில்லையே... இவரு சொன்னாக் கேக்குறாரா... நல்லநாளன்னைக்கி எம்புள்ளைய அந்தாளு என்னமோ சொல்லியிருக்காரு..." காளியம்மாள் அவன் அருகே அமர்ந்து முகத்தைத் துடைத்தாள்.

"அதெல்லாம் இல்லம்மா... சத்தம் போட்டவரு சரியாயிட்டாரு... ஆனா அதுக்காக அண்ணன் அந்தாளு கால்ல..." அழுக ஆரம்பித்தான்.

"ஏய்... ஐயா.. எதுக்கு அழுகுறே.... அண்ணனை கால்ல வந்து விழணுமின்னு சொன்னாரா?"

"இல்லம்மா... கண்ணண்ணே அந்தாளு கால்ல விழுந்து..." அவன் முடிக்கும் முன்னர்...

"என்ன கண்ண கால்ல விழுந்தானா...?" - காளியம்மா

"இவன் எதுக்குடா அவன் கால்ல..." - மணி.

"மாமா... கால்ல விழுந்தாகளா?" - அபி.

"கண்ண மச்சானுக்கு என்ன கிறுக்கா... அந்தாளு வரலைன்னா போகட்டுமே... வந்து என்னத்தை தாங்கப் போறாரு..." - சித்ரா.

"கண்ணா... அடேய் கண்ணா..." வாசலில் நின்று கத்தினார் கந்தசாமி.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

திரும்பவும் - வீட்டுக்குள் புயல் சின்னம் உருவாகின்றதா!?..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

அருமையாக உள்ளது .. கந்தசாமி கத்துகிறன் அப்புறம் என்ன நடக்கப்போகு என்று ஆவலுடன் காத்திருக்கேன்... பகிர்வுக்கு நன்றி த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Menaga Sathia சொன்னது…

கண்ணதாசன் மேல் ஒரு மதிப்பு வருகிறது..தொடருங்கள்!!

KILLERGEE Devakottai சொன்னது…

வழக்கமான எதிர்பார்ப்புடன் செல்கிறது...
தமிழ் மணம் 3

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கதையின் பாத்திரங்களோடு எங்களையும் அழைத்துச்செல்வதுபோல உள்ளது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
புயல் சின்னம் அப்ப அப்ப தோன்றாமல் போனால் வாழ்க்கை இனிக்காதே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குடும்ப சமாதானத்திற்காக நல்லவர் ஒருவர் விட்டுத் தந்தாலும், அவருக்காக அனுதாபத்துடன், குடும்பத்தில் உள்ளவர்கள் தவிப்பது போல் முடித்திருப்பது கதையின் சிறப்பை காட்டுகிறது.! ஆரம்பத்திலிருந்தே கதையாக உணராமல், நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்தின் நிகழ்வாக நீங்கள் எழுதும் பாணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தொடர காத்திருக்கிறேன்.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கதையைத் தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம்ம்ம் மீண்டும் பிரச்சினையா....எதிர்பார்த்ததுதான்....கண்ண தாசன் அருமையான கதாபாத்திரம்! தொடர்கின்றோம் நண்பரே!

கோமதி அரசு சொன்னது…

அருமையாக குடும்ப உறவுகளின் கோபதாபங்களை அவை மறையும் விதத்தையும் சொல்லி வருகிறீர்கள். விட்டுக் கொடுத்தவர்களுக்கு இன்பம் தான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்/ கீதா மேடம்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.