மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 12 பிப்ரவரி, 2015

மனசின் பக்கம் : அரசி ஐயா முதல் மருத்துவர் ஐயா வரை...

நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் கவிஞர். பேராசிரியர். அர.சிங்காரவடிவேலன் அவர்கள் நேற்று இயற்கை எய்திவிட்டார்கள். மாணவர்களிடம் மிக அன்பாகப் பழகக்கூடியவர். அதுவும் நாங்கள் படிக்கும் காலத்தில் அடிதடிக்குப் பிரபலமான கல்லூரியில் ஒரு ஆசிரியர், அதுவும் தமிழாசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பிடித்தவராய் இருத்தல் என்பது அரிது. தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் மூன்று துறை மாணவர்களை ஒரே வகுப்பில் வைத்து பாடம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். 


தம்பி கவனி... தம்பி கவனி... என்பதிலே பெரும்பாலான நேரம் கடக்கும். அப்படியிருந்தும் சிரிக்கச் சிரிக்கப் பேசும் குணத்தால் மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக இருந்தவர். கவிதைகள், கதைகள் என அழகாக வகுப்பைக் கொண்டு செல்பவர். எங்கள் கல்லூரியில் பாடப்படும்'அண்ணாமலையார் அறிவுக் கோவிலை விண்ணாய் உயர்த்துவோம், வெற்றிகள் குவிப்போம்...' என்ற பாடலின் ஆசிரியர்... மிகச் சிறந்த பேச்சாளர்... அருமையான எழுத்தாளர்.. கவிஞர்... என பன்முகம் கொண்டவர்... மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் 'அரசி' என அன்போடு அழைக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

***************
புதாபியில் வரும் வெள்ளிக்கிழமை மாலை (13/02/2015) பாரதி நட்புக்காக அமைப்பினர் நடத்தும் ஆபூர்வராகம் நிகழ்ச்சி இந்தியன் கலாச்சார மையத்தில்  (ISC) நடைபெறுகிறது. இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா, நடிகர்கள் திரு. டெல்லி கணேஷ், திரு.யூகி சேது, மற்றும் பாலச்சந்தரின் உதவியாளர் திரு. மோகன் ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் திரு. ராஜேஷ் வைத்யா அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அபுதாபியில் இருக்கும் நம் நட்புக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைக் கண்டு ரசிக்கவும்.


***************

சென்ற வார பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தும் வெளியாகியிருந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாக்யாவில் கவிதை வந்திருக்கிறது. அதன் பின் இப்போதுதான் எனது கருத்து வெளியாகியிருக்கிறது. அபுதாபி வந்த பின்னர் தினத்தந்தியில் மட்டுமே சில கதைகள் வந்திருக்கின்றன. மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதில்லை. பாக்யா எடிட்டர்களில் ஒருவரான திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்கள் மக்கள் மனசுக்கான கேள்வியை முகநூலில் பதிந்து வருகிறார். அதில் பலரும் எழுதும் கருத்துக்களில் தேர்வு செய்து அச்சில் ஏற்றுகிறார். அதன் மூலம் எனது கருத்துக்கும் பாக்யாவில் இடம் கிடைத்திருக்கிறது. வெகுஜன பத்திரிக்கையில் என் கருத்து. அதுவும் அரசியல் சார்பான கருத்து/.. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி S.S.பூங்கதிர் சார்.


***************

சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராய் பதிவர்களை அறிமுகம் செய்த சகோதரி. திருமதி. உமையாள் காயத்ரி அவர்கள், மழை என்ற தலைப்பில் செய்த அறிமுகங்களில் எனக்கும் இடமளித்திருந்தார். மூன்று முறை வலைச்சர ஆசிரியனாய் இருந்ததைவிட, மற்றவர்களால் அறிமுகம் செய்யப்படும்போதுதான் மிகவும் சந்தோஷமாக இருக்கும். காரணம் என்னவெனிம் நமது எழுத்துக்கான அங்கீகாரம் அப்போதுதானே கிடைக்கிறது. மேலும் நாம் கிறுக்கும் ஏதோ ஒரு பகிர்வு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். வலைச்சரத்தில் நண்பர்களால் பலமுறை அறிமுகம் ஆகியிருக்கிறேன். இந்த முறை அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி.
***************

னுஷ் + அமிதாப் நடிப்பில் வெளியான இந்திப்படம் ஷமிதாப் பார்த்தேன்.. அமிதாப்பின் கம்பீரமான குரலில் தனுஷ் நடிக்கும் போது ஆரம்பத்தில் வித்தியாசமாகத் தெரிந்தாலும் பின்னர் கதையின் ஊடே பயணிக்கும் போது மிகவும் பிடித்துவிட்டது. நடிப்பில் தனுஷூக்கும் அமிதாப்புக்கும் போட்டி என்றே சொல்லலாம். அக்ஷரா ஹாசன்... ஸ்ருதி போலில்லை... இரு மலைகளுக்கு இடையே காணாமல் போகாமல் தான் நவரச நாயகனின் மகள் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் குறித்து மற்றுமொரு பகிர்வில் பேசலாம். நமக்கும் பதிவு தேத்தணுமில்ல... தலைப்புக்கு அலையாம ஒரு பதிவு எழுதலாம்தானே.
***************

டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு பிரதமரின் செயல்பாடுகளால் குறைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மணலைக் கயிறாக்குவேன் என்றெல்லாம் சொன்னவருக்கு லட்சங்களில் ஆடை உடுத்தி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மற்ற மாநிலத்து மக்களுக்கு அவர்களின் செயல்பாடுகள் அதிகம் தெரிய வாய்ப்பில்லை... விடிந்து எழுந்தால் அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்த மக்கள் ஆம் ஆத்மிக்கு அள்ளிக் கொடுத்துவிட்டார்கள்.


இதில் அந்த அம்மா கிரண்பேடி முதல்வராகும் கனவு தகர்ந்து போனதும் இது எனது தோல்வி இல்லை பாஜகவின் தோல்வி எனச்சொல்லி தன்னை தேற்றி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார். தனக்கு இருந்த பெயரால் அந்த மூவர் வெற்றி பெற்றதுபோல் இந்த அம்மாவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை. அப்படியென்றால் இவருக்கு இருக்கும் நல்லபெயருக்குப் பின்னே மிகப்பெரிய கெட்டபெயரும் இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். எது எப்படியோ மேக் இந்தியான்னு சொல்லிக்கிட்டு மக்களை ஏமாற்றியதற்கு தலைநகரம் முதல் அடியைக் கொடுத்திருக்கிறது. இதில் இருந்து மோடிஜி பாடம் கற்றுக்கொண்டால் சரி.
***************

மிழ்நாட்டுல நாங்க காங்கிரஸ்க்கு முட்டை கொடுத்தோம்ன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.  எங்க தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களநாய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்ததாலும் அவர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டதாலும் நாங்க ஆப்பு அடிச்சோம். ஆனா டெல்லியிலயும் முட்டை வாங்கியிருக்காங்களே... கேவலமில்லையா... ஒரு சீட்டுக்கூட வாங்க முடியாத தேசியக்கட்சி... மிகப்பெரிய பாரம்பரியமான கட்சி... ஊழல் ஆட்சிக்கு வித்திட்டதால்தானே இன்று வித்து முளைக்கவேயில்லை. இதில் பாஜக மூணு சீட்டுத்தானே வாங்கியிருக்கு... மிகப்பெரிய தோல்வியின்னு நம்மாளுக அறிக்கை விடுறானுங்க... முட்டை வாங்கினா அது தோல்வி இல்லைபோல...செத்தபாம்புக்கு எதுக்கு வெற்றி தோல்வி எல்லாம்... இப்படியாய்யா எல்லாப் பக்கமும் சோனியா காங்கிரஸூக்கு பாடை கட்டுவானுங்க.
***************

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்டெல்லி தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆம் ஆத்மி பெற்ற வெற்றியைப் போல் 2016-ல் தமிழகத்தில் தாங்கள் வெற்றிபெறுவோம் என மருத்துவர் ஐயாவின் வாரிசு சொல்லியிருக்காகளாமே... இதுதான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவையா இருக்கும் என்று நினைக்கிறேன். திமுக அதிமுகவோட பாதுகாப்போட வண்டி ஓட்டாம முதல்ல தனியா வண்டி ஓட்டப்பழகுங்க ஐயா... அப்புறம் நீங்க ஆம் ஆத்மி ஆகலாம்... அதுவரைக்கும் இப்படியெல்லாம் ஜோக்கடிச்சி ஜோக்கராகாதீங்க ஐயா...  கேப்பையில நெய் வடியிதுன்னு சொன்னதைக் கேட்ட ஜனமெல்லாம் இப்ப இல்ல... அதைப் புரிஞ்சிக்கங்க... இன்னொன்னு நாங்கள்லாம் காசுக்காக மானத்தை வித்து வருசமாகிப்போச்சு... 2016 தேர்தல்ல எங்களோட ஆரம்ப விலையே 10000 ரூபாயாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை...  மொத்தப் பணத்தையும் இறக்குவீங்களா?

-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

21 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கவிஞர். பேராசிரியர். அர.சிங்காரவடிவேலன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
நாளை ஐ.எஸ்.ஸி போவேன்.
மக்கள் மனசில் மனசு இடம் பிடித்தமைக்கு வாழ்த்துகள்.
இந்த புகைப்படத்தைப்பார்த்து விட்டு அமிதாப்பின் நிலையை அறிந்து சிரிப்புதான் வந்தது.
விளக்கமாறு கை மாறி விட்டது.
2015 ந்தின் நகைச்சுவை அருமை.

ஸ்ரீராம். சொன்னது…

தமிழாசிரியருக்கு அஞ்சலிகள். மற்ற செய்திகளை ரசித்தேன்.

துரை செல்வராஜூ சொன்னது…

கவிஞர் பேராசிரியர் அர.சிங்காரவடிவேலன் ஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடைவதாக!..

ஜோதிஜி சொன்னது…

கற்றுக் கொடுத்து ஆசிரியர்களைப் பற்றி, அவர்கள் சார்ந்த செய்திகளை வலைபதிவுகளில் அவசியம் பதிய வேண்டும். பலருக்கும் சென்று சேரும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஆசிரியர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! சுவையான சிறு தகவல் பகிர்வு சிறப்பு! நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

துடைத்து எடுத்துவிட்டார் கேஜ்ரிவால். ஒஊழளற்ற ஆட்சிக்கு உதாரணமா இருப்பாரா? பார்க்கலாம்.
ஆசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆசிரியருக்கு ஆழந்த இரங்கல்கள்...

மற்ற சின்ன சின்ன சந்தோசங்களும் அருமை...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

ஆசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... மற்ற தகவலையும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம5

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
அண்ணா நாளை நான் அபுதாபி வருவேனா என்பது சந்தேகமே.
வந்தால் ஐ.எஸ்.சியில் சந்திப்போம்.
அப்புறம் தங்கள் வாழ்த்துக்கு நன்றி,
தாங்களுக்கு சினிமா பிடிக்காது. ஆனால் இது கதைக்கான கோலம்தான்... இருவருமே நல்ல நடிப்பு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
உண்மைதான் அண்ணா...
அப்படிச் சிலரை வெள்ளந்தி மனிதர்களில் பகிர்ந்து வருகிறேன் அண்ண...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

தமிழாசிரியருக்கு அஞ்சலிகள்.

மற்ற அனைத்து செய்திகளும் அருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஆசிரியரைப் பற்றி நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியது மனதில் நின்றது. பாக்யாவில் தங்கள் கடிதம் வந்ததறிந்து மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி சொன்னது…

மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ஆசிரியர்! ஆழ்ந்த அஞ்சலிகள்!

Manimaran சொன்னது…

ஒவ்வொன்றும் சுவாரஸ்யம்.. அதிலும் சின்ன அய்யாவை செம நக்கல். பாக்யா- வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அரசி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்....

மற்ற செய்திகளும் ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆசிரியரைப் பற்றிய பகிர்வு மிக அருமை! ஆசிரியரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். எல்லா செய்திகளும் கலக்கல்ஸ்.....