மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 ஆகஸ்ட், 2013

மனசின் பக்கம்: சில வாழ்த்தும் பருகத் தமிழும்

பதிவர் சந்திப்புக்காக நமது பதிவுலக உறவுகளும் நட்புக்களும் சென்னையில் குழுமியிருக்கிறார்கள். விடிந்தால் இரண்டாம் ஆண்டு பதிவர் விழா சிறப்பாக நடக்க இருக்கிறது. எல்லாரும் ஒரிடத்தில் கூடி சந்தோஷமாக தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தும் நேரடி ஒளிபரப்பில் விழாவைக் காண முடியும் என்ற போது கொஞ்சம் சந்தோஷம்... ஆனால் அலுவலகம் சென்று திரும்பி வருவதற்குள் விழா நிறைவுக் கட்டத்திற்கு வந்துவிடும் என்பதால் நிறைவுரையைத்தான் பார்க்க முடியும் போலும்... எப்படியும் நண்பர்கள் விழா நிகழ்வு குறித்துப் பகிர்வார்கள். அதில் பார்த்துக் கொள்ளலாம்.

நண்பர் சங்கவி மற்றும் திரு. மோகன் குமார் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை வாசு அண்ணா அவர்களின் அகநாழிகை புத்தக நிலையத்தில் நடந்துள்ளது. புத்தக ஆசிரியர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிப்புக்கள் வெளியிட வாழ்த்துக்கள்.

சகோதரர் கதிர்பாரதி அவர்களின் "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" கவிதை நூலுக்கு சாகித்ய அகாதெமியின் 'யுவ புரஸ்கார் விருது' கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி, மேலும் தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் விருதுக்கும் தேர்வாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் சகோதரா.... தாங்கள் இன்னும் நிறைய கவிதை நூல்கள் வெளியிட்டு சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்க வாழ்த்துக்கள்.

எனது நண்பரும் கவிஞருமான சிலம்பூர் தமிழ்க்காதலன் அவர்களும் அவரது நண்பர்க்ளும் இணைந்து தமிழ்க்குடில் அறக்கட்டளையை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். அவர்களது சீரிய பணியின் முதல் முயற்சியாக பெரம்பலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் ஒரு நூலகமும் தமிழ்குடிலுக்கு என ஒரு அலுவலகமும் நண்பர்களின் உதவியுடன் கட்டி முடித்திருக்கிறார்கள். அதன் திறப்பு விழா வரும் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு நண்பர்களின் உதவியுடன் தனியாளாய் ஊரிலேயே இருந்து இப்பணியைச் சிறப்பாக செய்து முடித்திருக்கும் எனது நண்பனை வாழ்த்தும் இந்த நேரத்தில் அவனு(ரு)க்குப் பக்கபலமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் விழாவில் கலந்து கொள்ளுங்கள்.

தேவகோட்டையில் நடக்கும் கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக நகரில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமரா பொருத்தினால் மட்டும் போதாது. காவல்துறை அதனை சரிவர செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்து. மேலும் தியாகிகள் ரோடு, திருப்பத்தூர் ரோட்டில் எல்லாம் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்து வந்தார்கள். தற்போது காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து அதையெல்லாம் சரி பண்ணி போக்குவரத்தை சரி செய்திருக்கிறார்களாம்.. இந்தப் பணி சரிவர நடைபெற்றால் தேவகோட்டையில் போக்குவரத்து பிரச்சினையை சீர்பண்ண முடியும்... செய்யுமா காவல்துறை... செய்ய விடுமா பொதுஜனம்...?

பாரதி குறித்து திரு.நெல்லைக் கண்ணனின் பேச்சு. பாரதியின் பாடல்களுடன் தமிழ்கடல் ஆழிப்பேரலையாய் அடித்து நொறுக்கும் ஒரு பகிர்வு. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள்... கேட்டுப்பாருங்கள்... வியப்பில் ஆழ்வீர்கள்.



மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

கவியாழி சொன்னது…

நண்பர்கள் விழா நிகழ்வு குறித்துப் பகிர்வார்கள். அதில் பார்த்துக் கொள்ளலாம்.//ஆம் அதற்கான ஏற்பாடும் உள்ளது.

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
நண்பர்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அமையவும் அவர்களின் எழுத்துப்பணிகள் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துகள்.
'யுவ புரஸ்கார் விருது'பெற்ற சகோதரர் கதிர்பாரதி அவர்களுக்கு மென்மேலும் விருதுகள் வந்தடையவும், எழுத்துப்பணி சிறக்கவும் வேண்டுகிறேன்.
கவிஞர் திரு.தமிழ்க்காதலன் சிலம்பூர் அவர்களின் மகத்தான பணிக்கு மனமார்ந்த பாராட்டுகள். _/\_ தோழமைகள் அனைவரும் தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழாவில் கலந்துகொள்ளும்படி வேண்டுகிறோம். அழைப்பிதழ் இன்று பகிரப்படு. மேலும் விவரங்களுக்கு தோழமைகள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில்
http://tamilkkudil.blogspot.in/இணைந்து தொடர்ந்த ஆதரவு வழங்கவும்..:)
பாரதி குறித்து திரு.நெல்லைக் கண்ணனின் பேச்சுப்பகிர்ந்தமைக்கு நன்றி..கேட்டுப்பார்க்கிறேன்.. தேவக்கோட்டையின் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துகள்.
நல்லதொரு பகிர்விற்கு தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..வாழ்க வளமுடன்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - அருமையான பதிவு - பாராட்டத்த்க்க அனைத்து நிகழ்வுகளையும் இங்கு எழுதி - பாராட்டியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

பதிவர் திருவிழா,புத்தக வெளியீடு பகிர்வுகளுக்கு நன்றி!