மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 ஜனவரி, 2013நித்திய சந்தோஷம்...நானாகி இருந்த மனசுக்குள்
நாம் என்று அமர்ந்தவள் நீ..!
வாழ்க்கைப் போராட்டத்தில்
அச்சாணியாய் அமைந்தவள் நீ..!
வேதனைகளையும் கோபங்களையும்
புன்னகையால் புறந்தள்ளுபவள் நீ..!
வேசமில்லா பாசமும் நேசமும்
வெள்ளந்தியாய் கொடுப்பவள் நீ..!
இன்பமும் துன்பமும் இணைந்த
வாழ்க்கையில் சுமைதாங்கியாய் நீ..!
ஆணில் பாதி பெண் என்பதை மாற்றி
என்னுள் எல்லாமும் ஆனவள் நீ..!
காதலியாய் என்னுள் நிறைந்து
தாயாய் எனக்காய் வாழும்
என்னவளே... என்னுயிரே...
இந்தநாள் மட்டுமல்ல இனிவரும்
நாட்களெல்லாம் இனிமை நிறையட்டும்..!
வலிகள் எல்லாம் வடிந்துபோய்
வசந்தகாலம் மலரட்டும்..!
சந்தோஷங்கள் உன் வசமாகட்டும்..!

************************************************

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் உயிருக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 
உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் சந்தோஷத்தை கொடுக்கட்டும்...

பிரியமுடன் வாழ்த்தும்...

சே.குமார்
ஸ்ருதி குமார்
விஷால் குமார்

5 கருத்துகள்:

 1. கவிதை அருமை.. இனிய வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. என்னோட அன்பான வாழ்த்துக்களும்!என்றென்றும் இதே போல் சந்தோஷமாக,அன்பாக வாழ இறைவன் ஆசி வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 3. உங்கள் மூவரின் வாழ்த்தோடு என் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் குமார்.இதே சந்தோஷமும் அன்பும் நீடித்து வாழட்டும் !

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அருமையான கவிதை.தங்களின் மனைவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...