மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 14 ஜனவரி, 2013பொங்கலோ பொங்கல்..!

வயலெல்லாம் வெளஞ்சு நிக்க
களத்து மேடு காத்துக் கிடக்க
களம் நிறையும் நெல்லுக்காக
காத்திருக்கும் வேளையிலே...

வாசலிலே கோலமிட்டு
வண்ணங்கள் அதில் கொடுத்து
இரும்பு அடுப்பினிலே
இனிய பொங்கல் வைக்க...

புதுப்பானையில் கோலமிட்டு
மஞ்சள் கொத்து அதில் கட்டி
சுத்தமான பசும்பாலோடு
புத்தரிசிப் பால் கலந்து வைத்து...

பொங்கி வரும் வேளையிலே
சந்தோஷம் பொங்கவே
பச்சரிசி வெல்லமிட்டு
பக்குவமாய் பொங்கல் வைத்து...

குடும்பத்தோடு உறவுகளும்
கூடிக் களித்திடவே...
இந்நாளை நமக்களித்த
தை மகளுக்கு நன்றி சொல்வோம்...

பொங்கலோ பொங்கலென
கூடியே சொல்லிடுவோம்...
மங்களமாய் நம் வாழ்வு
மகிழ்ந்தே சிறக்கட்டும்...

              அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

                                                                                                                         -'பரிவை' சே.குமார்.

Thanks--- Photo from Google

11 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.பொங்கல் வாழ்த்து அருமை.வாழ்த்தில் பொங்கல் வைப்பதையும் சுவைபட சொன்னது சூப்பர்..

  பதிலளிநீக்கு
 3. எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பொங்கல் வாழ்த்துக்கள்
  நன்னாளில் நற்கவிதை

  பதிலளிநீக்கு
 7. பொங்கல் வாழ்த்துக்கள்
  நன்னாளில் நற்கவிதை

  பதிலளிநீக்கு
 8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
  நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான கவிதை, வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 10. கவிதை மிக மிக அருமை....உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 11. பொங்கல் கவிதையும் பொங்கல் படமும் அருமை.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...