மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 22 அக்டோபர், 2011

அதீதத்தில் 'கூழாங்கல்'



"நாஞ் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ எரும மாட்டுல மழ பேஞ்ச மாதிரி நிக்கிற... என்ன நாஞ் சொல்றது புரியுதா... "
"ம்..." அழுகையினூடே தலையாட்டினாள் சுதா.
"மறுபடியும் நீ அவங்கூட பேசுறதப் பாத்தேன்னு எவளாவது சொன்னா, அன்னக்கே உன்னய கொன்னு போட்டுருவேன்...கொன்னு... நாஞ் சொன்னதை செய்வேன்னு உனக்குத் தெரியுமில்ல..."
"..."
"போ... போயி வேலயப் பாரு..."
"...."
"சொல்லுறேன், மரமாட்டம் நிக்கிற... போ... போயி சந்திரா தண்ணிக்குப் போறதாச் சொன்னா... போயி நல்ல தண்ணி தூக்கிட்டு வா.. போ... அப்புறம் போகும் போது எவகிட்டயும் எங்காத்தா திட்டுச்சுன்னு சொல்லி வைக்காதே... புரியுதா."
"ம்..." கண்ணைத் துடைத்தபடி குடத்தை எடுத்துக்கொண்டு சந்திரா வீடு நோக்கி நடந்தாள்.
"சந்திரா... ஏய் சந்திரா..."


மேலும் படிக்க அதீதம் போங்க.. 'கூழாங்கல்'

இந்தக் கதை அதீதம் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.முதல் முறை இணைய இதழில் என் சிறுகதையை வெளியிட்ட அதீதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

---------------


என்ன நண்பர்களே கோவை கின்னஸ் கவியரங்கத்துக்கு 28 வரிகளுக்குள் 3 கவிதையும் உங்க போடவும் அனுப்பிச்சா... அனுப்பாத கவிஞர்கள் உடனே அனுப்புங்க... விவரங்களுக்கு இந்த இடுகையை பாருங்க...



-'பரிவை' சே.குமார்
Thanks: Photo from இளையராஜா

21 எண்ணங்கள்:

Asiya Omar சொன்னது…

//"அடியேய்... அரையணா சொத்துக்காக அடிச்சிக்கிட்டா, ஒறவு செத்துப் போயிருமா என்ன... எத்தன பிரச்சினையினாலும் ரத்த பாசத்துக்கு முன்னாடி எதுவுமில்லடி... //

நல்ல கதை,சிறப்பான எழுத்து நடை.தம்பியின் எழுத்தை சொல்லவும் வேண்டுமா...

r.v.saravanan சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்

கூடவே தீபாவளி வாழ்த்துக்களும்

சென்னை பித்தன் சொன்னது…

யதார்த்தம்!நன்று.

ராமலக்ஷ்மி சொன்னது…

நீர் அடித்து நீர் விலகாதென்பதைச் சொல்லும் அருமையான கதை. அழகான நடை. வாழ்த்துக்கள் குமார்:)!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வாழ்த்துக்கள் குமார். படித்துவிட்டு வருகிறேன்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//"அடியேய்... அரையணா சொத்துக்காக அடிச்சிக்கிட்டா, ஒறவு செத்துப் போயிருமா என்ன... எத்தன பிரச்சினையினாலும் ரத்த பாசத்துக்கு முன்னாடி எதுவுமில்லடி...//

அழகான வரிகள். ஆம் பாசத்திற்கு முன்னாடி எதுவும் இல்லைதான் அதுவும் உடன் பிறந்தவர்களின் பாசத்திற்கு கேட்கவே வேண்டாம்.

அருமையான கதை குமார். வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அழகா யதார்த்தம் கலந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள் குமார்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிமானம் தவிர எல்லா ஓட்டும் போட்டாச்சு...

மகேந்திரன் சொன்னது…

ஒரு செங்கல் அளவுக்கு இடத்திற்காக
உறவுகளை தொலைக்கும் நபர்கள்
இருக்கும் இவ்வுலகத்திற்கு
தேவையான பதிவு.

Riyas சொன்னது…

வாழ்த்துக்கள் நல்லாயிருக்கு,,

r.v.saravanan சொன்னது…

யதார்த்த வரிகளில் ரத்த பந்தத்தின் வலிமையை உணர்த்திய கதை நல்லாருக்கு குமார்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பாசத்துக்கு முன்னாடி எந்த மனஸ்தாபங்களும் நிலைச்சு நிக்கிறதில்லை என்பதை அருமையாக சொல்லுகிறது கதை.

மனோ சாமிநாதன் சொன்னது…

காலம் காலமாய் உற‌வும் பின் பகையும் பின் மீண்டும் உற‌வும் என்று கிராமங்களில் இவை போல எத்தனையோ கதைகள் தினம் தினம் நடக்கும். அந்த யதார்த்தத்தை அப்படியே கதை உருவில் சுவாரஸ்யமாகக் கொண்டு வந்ததற்கும் அதீதத்தில் பிரசுரமானதற்கும் இனிய வாழ்த்துக்கள்!

ஷைலஜா சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

Vidhya Chandrasekaran சொன்னது…

வாழ்த்துகள்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Jaleela Kamal சொன்னது…

//அடியேய்... அரையணா சொத்துக்காக அடிச்சிக்கிட்டா, ஒறவு செத்துப் போயிருமா என்ன... எத்தன பிரச்சினையினாலும் ரத்த பாசத்துக்கு முன்னாடி எதுவுமில்லடி//

ரொம்ப அருமையா இருந்தது சிறுகதை அதற்கேற்ற படமும் நல்ல இருக்கு

ஹேமா சொன்னது…

உறவின் நெருக்கத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.எப்பவும்போல உங்கள் எழுத்தோட்டம் அருமை.ரசித்தேன் குமார் !