மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 29 அக்டோபர், 2011பொறி (சவால் சிறுகதை - 2011)

(இந்தக் கதை யுடான்ஸ், பரிசல்காரன் மற்றும் ஆதி இணைந்து அறிவித்திருக்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கானது. கதையைப் படித்து உங்கள் கருத்தையும் தவறாமல் யுடான்ஸில் ஓட்டும் அளியுங்கள். யுடான்ஸ் திரட்டியில் நீங்கள் அளிக்கும் ஓட்டும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் சிறு பங்காற்ற இருக்கிறதாம். எனவே தவறாமல் வாக்களியுங்கள்.... எனக்கு மட்டுமல்ல... கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாக்களியுங்கள். )
டற்கரையில் அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதை ரசித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை நெருங்கினார் இன்ஸ்பெக்டர் கோகுல்.

"ஹாய் விஷ்ணு... எப்படியிருக்கீங்க?"

"வாங்க கோகுல்... நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?"

"நல்லாயிருக்கேன்... வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்..."

"என்ன கோகுல் திடீர்ன்னு என்னய வரச்சொல்லியிருக்கீங்க... அதுவும் அலுவலகத்துக்கு வரச்சொல்லாம... கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கீங்க... எனித்திங்க் இம்பார்ட்டண்ட்?"

"ஆமா விஷ்ணு.... இது முக்கியமான விசயம்... இதை அங்க வச்சு பேசக்கூடாது ஏன்னா சுவருக்குக்கூட காது இருக்கும்... நான் உங்ககிட்ட சொல்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியணும்..."

அவர்கள் ஆள் அதிகமில்லாத பகுதிக்கு வந்து கரையோரத்தில் கிடந்த படகில் அமர்ந்தனர். சிகரெட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு விஷ்ணுவிடம் நீட்டினார். அவனும் எடுத்துக் கொள்ள... சிகரெட் இருவர் கையிலும் கரைந்து கொண்டிருந்தது.

"இதுதான் மேட்டர் விஷ்ணு..." என்றபடி கரைந்த சிகரெட் துண்டை மணலில் போட்டார் கோகுல்.

"ம்... இந்த விசயத்துல நான் என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க..."

"விஷ்ணு.... இதுல ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறதுனால டிபார்ட்மெண்ட் எப்படித்தான் விசாரிச்சாலும் எங்க ஆளுக மூலமாக தினசரி நடவடிக்கைகள் அவங்களுக்கு தெரிஞ்சிருது... அதானால விசாரணையும் விசாரிக்கிற அதிகாரியும் பாதிக்கப்படுறாங்க... அதான் உங்களை யாருக்கும் தெரியாம விசாரிச்சு எனக்கு தெரிவிக்கச் சொல்லுறேன்..."

"என்ன கோகுல் நீங்க... இன்னைக்கு நாட்டுல நடக்கிற அம்புட்டு கெட்ட காரியத்துலயும் அமைச்சருங்க இல்லாததே இல்லையே... கொள்ள அடிச்சுப்புட்டு களி திங்கிறதைத்தான் இப்ப உலக நாடே பாத்துக்கிட்டுதானே இருக்கு..."

"அவனுங்க நேரடியா இருக்கதாலதான் எந்த விசாரணையையும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போகுதில்ல... எத்தன கேசு தூங்குது தெரியுமா?"

"சரி விடுங்க... ஜனநாயக நாடு... ஜனங்கள ஏமாத்திப் பொழக்க ஒரு எம்.எல்.ஏ. பதவி இருந்தாப் போதும்.. சரி விடுங்க... நமக்கெதுக்கு அரசியல்... மேட்டருக்கு வருவோம்"

"நான் சொன்னதை நீங்க சீக்கிரமா விசாரிச்சு நல்ல பதிலா சொன்னீங்கன்னா நான் எல்லார் மேலயும் ஆகஷன் எடுப்பேன்... அதுக்கப்புறம் தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துனாலும் கவலைப்படமாட்டேன்."

"கண்டிப்பா... இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு இந்த கேஸ் சம்பந்தமான எல்லா விவரங்களையும் கொண்டு வந்து தாறேன்... ஒகே... சரி நான் இப்படியே போறேன்... நீங்க வந்த வழியா போயிருங்க..." என்றபடி கிளம்பினான் விஷ்ணு.

*******

றுநாள் மதியம் 12.30 மணிக்கு சூர்யா லாட்ஜ்க்குள் நுழைந்தான்.

"எக்ஸ்கியூஸ் மீ... பரந்தாமன் சாரைப் பாக்கணும்..."

"நீங்க விஷ்ணுவா... எப்ப வந்தாலும் உங்களை அனுமதிக்க சொல்லியிருக்கார். நாலாவது மாடியில ரூம் நம்பர் 401ல இருக்கார். நீங்க போங்க நான் கூப்பிட்டு சொல்லிடுறேன்."

லிப்டில் நாலாவது மாடிக்கு சென்று ரூம் நம்பர் 401 முன்னால் செல்ல, உள்ளே இருந்து வந்த ஒருவர் "நீங்கதான் விஷ்ணுவா... அண்ணன் உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கார்..." என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

"வாங்க தம்பி... காலயிலயே வராம இப்பத்தான் வாறிய.." வெற்றிலையை மென்றபடியே கேட்டார்.

"இல்லங்க... கொஞ்சம் முக்கியமான வேலையா சிலரப் பாக்க வேண்டியிருந்துச்சு... அதான் முடிச்சிட்டு வாறேன்... என்ன பேசணும்..." அவரிடம் பேசியபடி அருகிலிருந்தவர்களைப் பார்த்தான்.

"நம்ம ஆளுகதான்... ஒண்ணும் பிரச்சினையில்ல... சொல்றேன்... ஒக்காருங்க..."

"தம்பி... துப்பறிஞ்சு நல்ல பேரு சம்பாரிச்சு வச்சிருக்கியலாமே..." பெரிய மீசை அவனைப் பார்த்து கேட்டது.

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்லங்க... எதோ பொழப்பு ஓடுது..."

"சரி தம்பி விசயத்துக்கு வருவோம்..." என்ற பரசுராமன், "ஒங்களுக்கு எம்புட்டு பணம் வேணும்" என்றார்.

"என்னங்க எதுக்கு எனக்குப் பணம்... என்ன வேலையின்னு சொல்லுங்க... வேலைக்குத் தகுந்தமாதிரித்தான் வாங்குவோம்..."

"நீ வேல பாக்கம இருக்கத்தான் பணம் தாறேங்கிறேன்..." வெற்றிலை எச்சில் தெரிக்க சிரித்தார்.

"எனக்குப் புரியல..."

"என்ன தம்பி நானே நேரடியா பேசுறேன்னா... என்ன வேலயின்னு தெரியாதா ஒனக்கு... நாலு ஓட்டலு... ரெண்டு தேட்டரு... நாலஞ்ச்சு மில்லு... சில பல லாரியின்னு பெரிய லெவல்ல இருக்க நானே எறங்கிப் பேசுறேன்னா... பிரிய வேணாமா தம்பி.."

"உண்மைக்குமே புரியலங்க..."

"கோகுல் ஒங்கிட்ட சொன்ன வேலய பாக்காம இருக்கத்தான் பணம் தாறேன்னு சொல்றேன்..."

"...." அதிர்ச்சியாய் அவரை நோக்கியவன் சுதாரித்து " எந்த கோகுல்... எனக்கிட்ட என்ன வேலை கொடுத்தார்".

"தம்பி நடிக்காதீங்க... எங்களுக்கு எல்லா எடத்துலயும் ஆளு இருக்கு... கடற்கரைக்குப் போயி பேசினா... இது பெரிய ரிஸ்கான வேல தம்பி... அமைச்சரு, எம்.எல்.ஏ. பெரிய பெரிய புள்ளிங்கன்னு நிறைய பேரு இதுல இருக்கோம்... எங்க எல்லாரையும் நீங்க தண்டிக்கணுமின்னா தமிழ்நாடு தாங்காது..."

"என்ன மிரட்டுறீங்க... எனக்கு தெரியாதுங்கிறேன்..."

"தம்பி அடிச்சி மிரட்டச் சொல்றியா... என்ன... ம்... ஊட்ல ஒருத்த உயிரோட இருக்கமுடியாது... நீ பிரண்டுன்னு அவனுக்கு உதவப் போற நான் கோடிய கொட்டித் தாறேன்னு சொல்லுறேன்... என்ன கண்டுபிடிச்சியோ எங்கிட்ட கொடுத்துட்டு ஒதுங்கிக்க... நாங்க அவன போட்டுத் தள்ளிடுவோம்... மண் அள்ளுறதை எதுத்த இன்ஸ்பெக்டரை கல்யாணமாகி நாலு மாசத்துல மண்ணு லாரியில மோதி கொன்ன எங்களுக்கு இவன் என்ன பிஸ்கோத்து... வாழ வேண்டிய வயசு... சின்ன சின்ன வேலய பாத்துக்கிட்டு வாழ்க்கய ஓட்டமா... எதுக்கு இதெல்லாம்... ம்"

"அது..." நாக்கு வறண்டது.

"தம்பி நாங்க கஷ்டப்பட்டு ரிஸ்க்கெடுத்து காரியம் பண்றோம்... அவன் இதுல மூக்க நொழச்சதுமில்லாம... பாவம் நீ ஒன்னயும் இழுத்து விட்டிருக்கான்..."

"நான்... அது..."

"பயப்புடாதே... இன்னயில இருந்து நீ நம்மாளு ... ஒனக்கு சொன்னபடி பணம் வரும்... அவன திசை திருப்பி விட்டுட்டு ஒதுங்கிக்க... சரி... முகத்தை தொடச்சிட்டு கிளம்பு. காலையில பண்ணினது என்னோட பெர்சனல் நம்பர்... சேவ் பண்ணி வச்சிக்க.... ஒகே... நாங்க என்ன பண்றோம். எங்க பண்றோமுன்னெல்ல்லாம் நீ துப்பறிய வேண்டாம். பேசாம ஓன்னோட வேலயப் பாரு... அப்புறம் எதுக்கும் நீ என்னய தேடி வரவேண்டாம். அது கோகுலுக்கு சந்தேகத்தை வரவச்சிடும்... அப்புறம் சிக்கலாயிடும். எனக்கு நீ போனெல்லாம் பண்ண வேண்டாம். அவசியமுன்னா நாங் கூப்பிடுறேன்."

"சரி..." என்று கிளம்பியவன் கடற்கரையில் பேசியது இவங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னா இன்ஸ்பெக்டரை பாலோ பண்றாங்க... இதுல மாட்டிக்கிட்டு நாம குடும்பத்த இழக்கணுமா... இவங்களுக்கு உதவுனா பணத்துக்கு பணமுமாச்சு... உயிர் பயமும் இல்ல... என்று நினைத்தான். ஆனால் உள் மனசு தப்பு பண்ணாதே என்று கத்தியது.

கீழே இறங்கியவன் அவளைப் பார்த்தான்... அவளும் பார்த்தாள். இருவருக்கும் மிகுந்த சந்தோஷம். பின்னர் அவளுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினான்.

*******

ரவு தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் திவ்யா என்ற பெயரில் வந்திருந்த மின்னஞ்சலை படித்தவன், 'எஸ்... எஸ்... கிடைச்சிருச்சு... இதை முதலில் கோகுல்கிட்ட சொல்லணும்' என்று நினைத்தபோது போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் 'இவரு எதுக்கு இப்போ கூப்பிடுறாரு?' என்று நினைத்தபடி 'அலோ' என்றான்.

"என்ன தம்பி ஒன்னோட டிடக்ட்டிவ் புத்திய நமக்கிட்டே காட்டுற..?" எதிர்முனையில் பரந்தாமன் கோபமாய் கேட்டார்.

"எ... என்ன... நான் ஒண்ணும் பண்ணல சார்... உங்களுக்கு பேவராத்தான் இருப்பேன்..."

"தம்பி... எங்கிட்ட பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது... ஆமா ஒன்னால ஒரு பொம்பளப்புள்ள மாட்டிக்கிட்டாளேப்பா..."

"சார்... அவள ஒண்ணும் பண்ணிடாதீங்க... ப்ளீஸ்..."

"நீ நடந்துக்கிறதப் பொறுத்துத்தான் எதாவது பண்ணுவேன்... இன்னும் ஒண்ணும் பண்ணல... சரி வெசயத்துக்கு வா... அவ பண்ணுன காரியத்துக்கு பிசுனசு பேச வாற ரெண்டு வெள்ளக்காரப்பயலுவ நம்ம பக்கத்து பொண்ணு பிரசா வேணுமின்னாங்க... அவங்களுக்கு விருந்து வைக்கலாமுன்னு இருக்கேன். அவள காப்பாத்துது ஒங்கையிலதான் தம்பி இருக்கு..."

"வேண்டாம்... நா... நா... எ... என்ன செய்யணும்?"

"அவ அனுப்புனதை வச்சி நீ கோகுலுக்குட்ட வெசயத்தை சொல்ல ரெடியாயிருப்பே... நாங்க இன்னும் ரெண்டு நாள்ல செய்யப் போற இந்த ஆபரேசன் எங்க நடக்குதுன்னு ஒனக்கு தெரிஞ்சி போச்சு... ஒருவேளை ஒனக்கு முன்னாடி அவனுக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா நீ சொன்ன அவன் நம்புவான். அதனால அவனுக்கு பொய்யான தகவலை கொடு. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்."

"சரி செய்யிறேன்... திவ்யாவை...."

"எங்க வேல முடியட்டும்... அவ பத்திரமா வருவா..." என்றபடி போனை கட் பண்ணினார்.

'சை... எப்படி... எப்படி மாட்டுனா... எல்லாம் போச்சு...' என்று நினைத்தவன் திவ்யாவுக்கு எதாவது ஆனால் என்ன பண்றது என்று நினைத்தபோது மனசு படபடக்க ஆரம்பித்தது.

யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் பரந்தாமன் நம்பருக்கு போன் செய்ய, அது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. 'இப்பத்தானே பேசினான். அதுக்குள்ள மப்படிச்சிட்டு மல்லாந்துட்டானா... இல்ல திவ்யாவை எதாவது...' யோசித்த போதே வியர்க்க ஆரம்பித்தது.

கணிப்பொறியில் வேகவேகமாக எதோ டைப் செய்து பிரிண்ட் போட்டு இரண்டாக கட் பண்ணி எடுத்தான். அதில் 'sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்துள்ளேன். கவலை வேண்டாம். -விஷ்ணு' என்றிருந்ததை படித்துப் பார்த்தவனுக்கு ஏதோ தவறு இருப்பது தெரிய... மீண்டும் டைப் செய்தான். இந்த முறை குறியீட்டை தகவலாக மாற்றி பிரிண்ட் எடுத்து ஒரு கவரில் போட்டான்.

'Mr.கோகுல், s w H2 6f - இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு' என்று இருந்ததை இன்னொரு கவரில் போட்டு பேரெழுதி இரண்டையும் எடுத்துக் கொண்டு வேகமாக வண்டியை எடுத்தவன், எதுக்கு லெட்டர்ல கொடுத்துக்கிட்டு காலையில சொல்லிக்கலாம் என்று வீட்டுக்குள் வந்து கோகுலுக்கு பிரிண்ட் எடுத்த மேட்டரை அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அவசரம் என்று தலைப்பிட்டு அனுப்பிவிட்டு அதை கிழித்து எறிந்தான்.

*******

சில தினங்களுக்குப் பிறகு தினங்களுக்குப் பிறகு அன்றைய நாளிதழ்கள் ஏழைக் குடும்பத்து பிள்ளைகளை கடத்தி வந்து கிட்னி திருடும் கும்பல் கூண்டோடு கைது என்றும் சில நகரங்களின் முக்கிய புள்ளிகளுடன் சேர்ந்து ஒரு மத்திய மந்திரியும் இந்த பாதகச் செயலை செய்திருக்கிறார். பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து மத்திய மந்திரி இன்று மாலைக்குள் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்புச் செய்தியை தாங்கி வந்திருந்தன.

*******

ன்று மாலை கடற்கரைக்கு அருகில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டில் "எந்த மிரட்டலுக்கும் பயப்படாம எனக்கு சுப்ரமணியபுரம் மேற்குல வீட்டு வசதி வாரிய கட்டிடம் எண் 2 தளம் எண் 6 அப்படிங்கிறதை அழகா s w H2 6f - குறியீடா அனுப்பி, அதே சமயம் பரந்தாமனையும் நம்ப வச்சி... மிகப்பெரிய கிட்னி திருட்டுக் கும்பலை பிடிக்க உதவுனதுக்கு ரொம்ப நன்றி விஷ்ணு. அதுதான் உங்க டிடெக்டிவ் மைண்ட்... உங்களுக்கு என்ன செய்யணுமோ அது விரைவில் காவல்துறை மூலமா செய்யிறேன். இது என்னோட கிப்ட் உங்களுக்காக..." என்று அவனது கையில் அந்த பாக்ஸை கொடுத்த கோகுல், "ஆமா ரெண்டு மூணு நாளா நீங்க தூங்கல போல..." என்று கேட்க

"ஆமா சார் திருட்டுக் கும்பல்கிட்ட இருந்து எனக்கு பிராப்ளம் வந்தா நான் பேஸ் பண்ணிப்பேன். எனக்கு உதவப் போய் என்னோட காலேஸ் மெட் திவ்யா மாட்டிக்கிட்டதுதான் சார் எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு..."

"அவங்களத்தான் சேப்பா காப்பாத்தியாச்சில்ல... நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு..." என்றபோது விஷ்ணுவின் போன் அடிக்க... அதில் திவ்யா என்று வந்ததும விஷ்ணு முகத்தில் காதலின் மொட்டு மலர்வது கோகுலுக்குத் தெரிந்தது.

-'பரிவை' சே.குமார்.

25 கருத்துகள்:

 1. நல்ல கதை! இயல்பான நடை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. எழுத்துநடை நல்லாருக்கு.சவாலில் வெல்ல வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. எழத்து
  நடையும் சொல்லாக்கமும்
  வரிகளில் வாழும்
  நிழல் சித்திரங்களுக்கு
  சிந்தனைத் திரையில்
  உயிர் ஒளி ஊட்டுகிறது

  கதை அருமை
  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு..."

  கடைசியில் நல்ல பஞ்ச் வைத்திருக்கிறீர்கள், வெர்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு..."

  கடைசியில் நல்ல பஞ்ச் வைத்திருக்கிறீர்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கலக்குங்க சார்...

  வெற்றிப்பெற வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 7. வேகமா இருக்கு கதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 8. அற்புதமா இருக்கு குமார்,கதை.

  //"அவங்களத்தான் சேப்பா காப்பாத்தியாச்சில்ல... நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு..." //

  கடைசி வரிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 9. கலக்கிட்டீங்க குமார்..நல்லா இருக்கு..

  வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. கதை அருமை,வெற்றி நிச்சயம் தம்பி உங்களுக்கு வரலாம்.ஓட்டு போட்டாச்சு...

  பதிலளிநீக்கு
 11. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 12. Good crime story. All the best

  என்னோட முயற்சி இங்க வந்து பாத்துட்டுப் போங்க.

  பதிலளிநீக்கு
 13. கதை அருமை.

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. விறுவிறுப்பு.. சுறுசுறுப்பு..!!

  பகிர்வுக்கு நன்றி..!!! எனது வாழ்த்துகள்..!!


  எனது வலையில் இன்று:

  தமிழ்நாடு உருவான வரலாறு

  தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  பதிலளிநீக்கு
 15. தங்கள் வலைப்பூவில் பின்தொடர்பாகயிருக்கிறேன் என்பதை அறியத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 16. வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. எப்பவும்போல அற்புதம்.
  தொய்வில்லாமல் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குமார்.
  வெற்றிக்கு வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 19. அடடா எங்கே போனாலும் இந்த கொசுக்கடி தாங்க முடியலப்பா ..

  பராவயில்ல கதையை காதல் பக்கம் திருப்பி விட்டுட்டீங்க

  வெற்றி பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. கிரைம் நாவல் படித்ததுபோல் விறுவிறுப்பாக இருந்தது..வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 21. மாதவி அக்கா
  கோகுல்
  செய்தாலி
  சூர்யாஜீவா
  நம்பிக்கை பாண்டியன்
  சௌந்தர்
  வைகை
  ரமா அக்கா
  செங்கோவி
  ஆசியா அக்கா
  சகோ.கருன்
  சகோ. சரவணன்
  மாதவன்
  மகேந்திரன்
  சகோ. சாகம்பரி
  தங்கம் பழனி
  திரு. ஆபீஸர் ()
  சகோ. ஹேமா
  சிவகுமாரன்
  காயத்ரி
  சகோ.ஆனந்தி

  கதையினைப் படித்து பின்னூட்டம் மற்றும் வாக்களித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...