மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 26 அக்டோபர், 2011தீபாவளி....


பட்டாடை உடுத்தி
பல்வகை இனிப்பு உண்டு
பந்தங்களுடன் பாட்டாசு வெடித்து
பகட்டாக கொண்டாடினாலும்...

புதுத்துணி உடுத்தி
இட்லியுடன் சில இனிப்பும்
சில்லறை வெடிகளுமாய்
நடுத்தரமாக கொண்டாடினாலும்...

இருப்பதில் புதிது உடுத்தி...
இருப்பதை மகிழ்ந்து உண்டு
வெடிப்பதை பார்த்து மகிழ்ந்து
ஏழ்மைத் தீபாவளி கொண்டாடினாலும்...

ராமநாதன் கொடுத்த துணி அணிந்து
சாந்தியக்கா கொடுத்த இட்லியும்
சிந்தாமணி கொடுத்த சில வடையும்
சிக்கனமாய் சாப்பிட்டு
சுப்ரமணி மகன் வெடித்த வெடியில்
வெடிக்காததை தீயிலிட்டு வெடிக்க வைத்து
இல்லாமை தீபாவளி கொண்டாடினாலும்....

கிடைக்கும் சந்தோஷத்தில்
உயர்வேது... தாழ்வேது...
உள்ளத்தின் மகிழ்ச்சியில்
எல்லையில்லா இன்பத்தை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்
இத் தித்திக்கும் தீபாவளி...என் இனிய உறவுகள் அனைவருக்கும்
உள்ளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

கொண்டாடுங்கள்... சந்தோஷமாய் இருங்கள்.

இத்தினம் மட்டுமல்ல...
இனி மலரும் தினங்கள் எல்லாம் மகிழ்வை
மலரச் செய்யட்டும்.


தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.  
வாழ்த்துக்களுடன்,
-‘பரிவை’ சே.குமார்.
Thanks: Google (Photos)


20 கருத்துகள்:

 1. நண்பர் குமார் அவர்களுக்கு, நலம், நலமறிய ஆவல். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

  Read more: http://nanjilmano.blogspot.com/2011/10/blog-post_3230.html#ixzz1brzDs7Nh

  பதிலளிநீக்கு
 4. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. யதார்த்தமான அருமையான கவிதை.
  மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் வாழ்த்துகள் குமார்.

  நல்லா எழுதி இருக்கீங்க :))

  பதிலளிநீக்கு
 7. கிடைக்கும் சந்தோஷத்தில்
  உயர்வேது... தாழ்வேது...
  உள்ளத்தின் மகிழ்ச்சியில்
  எல்லையில்லா இன்பத்தை
  எல்லோருக்கும் கொடுக்கட்டும்
  இத் தித்திக்கும் தீபாவளி...


  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
 8. இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! ////தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.////எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு.தீபாவளி தினத்தில் இந்த அறிவிப்பை விடுத்ததும் ஒரு வகையில் நரகாசுர வதம் தான்!

  பதிலளிநீக்கு
 9. தீபாவளி தீபாவளி தான்!

  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. //
  தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.//

  தரமான எழுத்துக்கு என்றும் மதிப்புண்டு. முடிவை வரவேற்கிறேன்..........

  ஓட்டுபட்டை நீக்கினாலும் தானியங்கி மூலமாக தமிழ்மணத்தால் உங்கள் பதிவு திரட்டப்படுமே ;-)

  பதிலளிநீக்கு
 11. அருமையான கவி வரிகள்

  தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. //கிடைக்கும் சந்தோஷத்தில்
  உயர்வேது... தாழ்வேது...//

  நச்........நச்.......

  பதிலளிநீக்கு
 13. மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் !

  பதிலளிநீக்கு
 14. அருமை தம்பி, அழகான கவிதை.என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  //ராமநாதன் கொடுத்த துணி அணிந்து
  சாந்தியக்கா கொடுத்த இட்லியும்
  சிந்தாமணி கொடுத்த சில வடையும்
  சிக்கனமாய் சாப்பிட்டு
  சுப்ரமணி மகன் வெடித்த வெடியில்//
  இவுக எல்லாம் யாரு..

  பதிலளிநீக்கு
 15. ஆமினா said...
  //
  தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.//
  ஓட்டுபட்டை நீக்கினாலும் தானியங்கி மூலமாக தமிழ்மணத்தால் உங்கள் பதிவு திரட்டப்படுமே?///அதனாலென்ன,த.ம. வும் நாலு காசு பார்க்கட்டுமே???

  பதிலளிநீக்கு
 16. ஆஹா ! இப்ப தான் கடைசி செய்தியை பார்த்தேன்.மகிழ்ச்சி.நானும் போடுட்டேன்..தம்பி..

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...