மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஆகஸ்ட், 2011நாயகன்:தல... '50'

காலங்காலமாக ஜொலிக்கும் நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களை மட்டும் உச்சத்தில் மட்டுமல்ல இரு துருவங்களாகவும் தமிழ்த் திரையுலகம் வைத்திருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி வரிசையில் இன்று அஜீத் - விஜய் இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்கு அடுத்து வந்தவர்களில் எத்தனையோ பேர் நல்லா நடித்தாலும் இந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள் சிம்பும் தனுஷும்தான். இந்த துருவ நட்சத்திரங்கள் தாங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டாலும் இவர்களை தலையில் வைத்து ஆடும் ரசிகர்களுக்குள் எப்பவும் கார்கில் போர்தான்.

இந்த முறை அஜீத்தின் மங்காத்தாவும் விஜயின் வேலாயுதமும் ஒரே நேரத்தில் களம் இறங்கலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இரண்டும் சில நாட்கள் இடைவெளியில்தான் வெளியாகும் என்று தெரிகிறது.

என்னடா தலைப்பு 'தல...50'ன்னு வச்சிட்டு வேற மாதிரி மொக்கை போடுறானேன்னு நினைக்காதீங்க... தலக்குள்ள...மன்னிக்கனும் தலைப்புக்குள்ள் போகலாம்.

தமிழ் திரையுலகில் மனதில்பட்டதை மறைக்காமல் பேசும் நடிகர் அஜீத்தின் சினிமா வாழ்க்கை 1992ல் வெளியான 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாக ஆரம்பமானது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

அஜீத்தின் முதல் தமிழ்ப்படம் 'அமராவதி', இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழ் திரையுலகில் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையிலும் மனம் தளராமால் போராடி 'பாசமலர்கள்', 'பவித்ரா', 'ராஜவின் பார்வையிலே' போன்ற படங்களில் நடித்தார். இதில் பவித்ரா மட்டுமே பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

இன்னொரு மைனஸ் என்னவென்றால் நடிக்க வந்த புதிதில் சூர்யா எப்படியோ அப்படித்தான் அஜீத்தும் இருந்தார். அவர் நடித்த ஆரம்ப கால தமிழ் திரைப்படங்களை பார்ப்பவர்கள் நடிக்கவே தெரியாத இவனெல்லாம் நடிகனா என்றே நினைத்தனர்.

கார், பைக் ரேஸ் பிரியரான அஜீத், சினிமாவைவிட பந்தயங்களையே அதிகம் நேசித்தார். அடிக்கடி மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் அவர் ஒரு போட்டியின் போது படுகாயம் அடைந்தார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்களானது.

அஜீத்தின் திரையுல வாழ்வில் முதல் வெற்றிப் படமாக சுவலெட்சுமியுடன் இணைந்து நடித்த 'ஆசை' அமைந்தது. அகத்தியனின் 'காதல் கோட்டை' இவரை முக்கிய நடிகராக உயர்த்தியது. பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தார்.

அதன்பின் காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,சிட்டிசன், வரலாறு என பெயர் சொல்லும் படியான படங்கள் இவரை உயரத்தில் ஏற்றி வைத்தன. இருந்தாலும் எத்தனை படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தனவோ அதே அளவுக்கு திருப்பதி, அசல் போன்ற மொக்கைப் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை தானே அழித்துக் கொள்வார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி, அவருக்குப் பின் யாருக்கு என்ற பேச்சு அடிபட்ட போது நான்... நீ என்று எல்லோரும் போட்டி போட்டு அறிக்கைகளை அள்ளிவிட, அது குறித்து மனதில் பட்டதை சொல்லி ரஜினி ரசிகர்களிடம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனால் மனதில் பட்டதை சொல்லும் இவரது குணம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால் சூப்பர் ஸ்டாரின் செல்லப்பிள்ளையாக மாறினார். அதன் மூலமாக இவருக்கு பில்லாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி வெற்றி வாகை சூடினார். இன்று சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் பில்லா-II, சந்திரமுகி-II போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகி இவருடன் அமர்க்களம் படத்தில் நடித்த ஷாலினியை காதலித்து கரம் பிடித்து அனோஷ்கா என்ற பெண் குழந்தைக்கு தந்தையான அஜீத் மிகவும் சந்தோஷமான குடும்பஸ்தராக வாழ்ந்து வருகிறார்.

அஜீத் மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர் என்பதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினி அவர்கள் எழுந்து நின்று கைதட்டினார். இந்தப் பேச்சு அவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது. அதன்பின் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தால் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

ஆனால் இந்த ஆர்வம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை மீண்டும் சினிமா உலகிற்கே வந்தார். கலைஞர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத்தின் அம்பதாவது படமாக வெளிவர இருக்கும் மங்காத்தாவை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மங்காத்தா - சீட்டாடத்தில் ரம்மி, மூணு சீட்டு, செவன்ஸ் என்ற வரிசையில் ஒரு விளையாட்டு என்பதாலோ என்னவோ வெளிவரும் முன்னரே நிறைய ஆட்டங்களை பார்த்துவிட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் ஆட்சி மாற்றத்தால் வெளிவருமா... இல்லையா என்ற ஆட்டத்தில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து தற்போது சன் பிக்ஸர்ஸ் கலாநிதி மாறன் கைகளில் தவழ்வதால் எப்படியும் சொன்ன தேதியில் திரையில் வினாயக்கை (அஜீத் கதாபாத்திரத்தின் பெயர்) பார்த்துவிடலாம் என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் உங்கள் குடும்பங்களை பாருங்கள்... என் படம் பிடித்திருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்லி தனது ரசிகர் மன்றங்களை திடீரென கலைத்தார். இவர் மன்றம் இல்லை என்று சொன்னாலும் தலயின் விசிறிகள் மாறுவார்கள் என்று தெரியவில்லை.

இதுவரை தல பெற்ற விருதுகள்:

சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பிரேம புஸ்தகம் படத்தில் நடித்ததற்காக பெற்ற அஜீத், நாயகன் மற்றும் வில்லனாக இரட்டை வேடத்தில் நடித்த வாலிக்காக பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் மற்றும் தினகரன் விருதுகளைப் பெற்றுள்ளார் மேலும் பிலிம்பேர் விருதை வில்லன் மற்றும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களுக்காக பெறறிருக்கிறார்.வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். முகவரிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதையும் வென்றுள்ளார்.

'தல... 50' ஒரு பார்வை:

1. பிரேம புஸ்தகம் (1992 - தெலுங்கு அறிமுகம்)

2. அமராவதி(1993 - தமிழில் அறிமுகம்)

3. பாசமலர்கள்

4. பவித்ரா

5. ராஜாவின் பார்வையிலே

6. ஆசை

7. வான்மதி

8. கல்லூரி வாசல்

9. மைனர் மாப்பிள்ளை

10. காதல் கோட்டை

11. நேசம்

12. ராசி

13. உல்லாசம்

14. பகைவன்

15. ரெட்டை ஜடை வயசு

16. 1998 காதல் மன்னன்

17. அவள் வருவாளா

18. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

19. உயிரோடு உயிராக

20. தொடரும்

21. உன்னை தேடி

22. வாலி

23. ஆனந்த பூங்காற்றே

24. நீ வருவாய் என

25. அமர்க்களம்


26. முகவரி

27. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

28. உன்னை கொடு என்னை தருவேன்

29. தீனா

30. சிட்டிசன்

31. பூவெல்லாம் உன் வாசம்

32. அசோகா (ஹிந்தியில் அறிமுகம்)

33. சாம்ராட் அசோகா (தமிழ்)

34. ரெட்

35. ராஜா

36. வில்லன்

37. என்னை தாலாட்ட வருவாளா

38. ஆஞ்சநேயா

39. ஜனா

40. அட்டகாசம்

41. ஜீ

42. பரமசிவன்

43. திருப்பதி

44. வரலாறு

45. ஆழ்வார்

46. கிரீடம்

47. பில்லா

48. ஏகன்

49. அசல்

50. மங்காத்தா

தற்போது நடிப்பில்... லிங்குசாமி தயாரிப்பில் பில்லா-II மற்றும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி-II ஆகியவை.

தலயின் 50வது படம் வெற்றிப் படமாக அமைவதுடன் தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுக்கட்டும்.மீண்டும் ஒரு நடிகர் பற்றிய பார்வையோடு அடுத்த நாயகனில் சந்திப்போம்.

அஜீத் குறித்த தகவல்களுக்கு உதவிய தமிழ் விக்கிபீடியாவிற்கும் அஜீத் படங்களைக் கொடுத்த இணைய தளங்களுக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

16 கருத்துகள்:

 1. என்னது சந்திரமுகி பாகம் இரண்டில் தல நடிக்கிறாரா...??? அவ்வ்வ்வ்...

  பதிலளிநீக்கு
 2. அஜித் பற்றி இத்தனை விஷயங்கள் !!!! பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தல..அஜீத்.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  புள்ளி விவரமெல்லாம் அருமையா சேகரிச்சிருக்கீங்க குமார்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு பதிவு குமார். தலைக்கு வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 5. மிகச் சிறப்பான பகிர்வு குமார். தலையைப் பற்றி மொத்த தகவல்களுக்கும் இதைப் படிக்கலாம்>:)

  பதிலளிநீக்கு
 6. அஜித் பற்றி புள்ளி விவர பகிர்வுக்கு நன்றி.

  நானும் அஜித் ரசிகன்

  பதிலளிநீக்கு
 7. எல்லாம் ஓக்கே, சூட்டோட சூடா மங்காத்தா பற்றியும் உங்க பார்வையை சொல்லி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 8. தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஆஹா ! குமார் எப்பயிருந்து இப்படி எல்லாம்,அட்டகாசம்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க செங்கோவி...

  வாங்க பிரசாத்...

  வாங்க பிரபாகரன்...

  வாங்க சித்ரா அக்கா...

  வாங்க ரமா அக்கா...

  வாங்க கருன் சார்...

  வாங்க சுசிக்கா...

  வாங்க தேனம்மை அக்கா...

  வாங்க சரவணன்...

  வாங்க செந்தில் அண்ணா...

  வாங்க முனைவரே...

  வாங்க ஆசியா அக்கா... (நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை... ரொம்ப சந்தோஷம்)

  உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
  எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...