மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011இதயத் துடிப்பே...


காலத்தின் பயணத்தில்
வசந்தங்களும்
கோடைகளும்
வந்து வந்து போகும்...

வாழும் வாழ்வில்
சொந்தங்கள் எல்லாம்
பல நேரம் சுடராகவும்
சில நேரம் சுடவும் செய்யும்...

எதிர்பார்ப்புகளைத் துறந்து
இதயத்தில் அமர்ந்து
இன்பத்தில் இணைந்தும்
துன்பத்தை தனதாக்கியும்
வாழும் உறவு...

மறைத்து வாழத் தெரியாமல்
மறுத்து வாழ நினைக்காமல்
உயிரோடு உயிராய்
வாழும் உறவு...

எத்தனை கோபம்
என்றாலும்
அத்துனையும் மறந்து
அரவணைக்கும் உறவு...

நீ...நான்...
உன்னது... என்னது...
உனக்கு.. எனக்கு...
என்ற பதங்கள் துறந்து

நாம்... நமது...
நமக்கு...
என வாழும் உறவு...

சுக துக்கத்தில்
நம்மோடு வாழும்
முகம் தெரிய
கணிப்பொறி உறவு...

ரத்த உறவுக்கு மத்தியில்
அழுத்த உறவாய் வாழும்
அமுத உறவே நட்பு...


(ஆகஸ்ட் முதல் ஞாயிறு (07/08-2011) நண்பர்கள் தினம். என் இனிய நட்புக்களுக்கு நம் நாள் வாழ்த்துக்கள்.)

-'பரிவை' சே.குமார்.
Thanks - Photos From Google

22 கருத்துகள்:

 1. நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் குமார்

  பதிலளிநீக்கு
 3. கவிதை அருமை.

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நிழற்படங்கள் கவிதையின் மதிப்பைக் கூட்டுவனவாகவுள்ளன.

  பதிலளிநீக்கு
 5. நட்பு கவிதை சூப்பர்...

  இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. //உன்னது... என்னது...
  உனக்கு.. எனக்கு...
  என்ற பதங்கள் துறந்து

  நாம்... நமது...
  நமக்கு...
  என வாழும் உறவு...//

  சிந்தனை தரும் வரிகள்

  பதிலளிநீக்கு
 7. படங்களும் கவிதையும் போட்டி போடுது..

  இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. சூப்பர் கவிதை, குமார்.

  பதிலளிநீக்கு
 9. கவிதை நல்லாயிருக்குங்க...

  உங்களின் மூத்தவன் சிறுகதை தினத்தந்தி இன்றைய குடும்பமலரில் வெளிவந்துள்ளது,வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 10. வாங்க செங்கோவி...
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க முனைவரே...
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  வாங்க மாணவன்...
  அடிக்கடி லீவு எடுத்துடுறீங்களே...?
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஆமினாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க அமைதிச்சாரல் அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மேனகாக்கா...
  நான் பார்த்துவிட்டேன் அக்கா...
  ரொம்ப நன்றிக்கா... எனக்கு தெரிவித்தமைக்கு.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. ரத்த உறவுக்கு மத்தியில்
  அழுத்த உறவாய் வாழும்
  அமுத உறவே நட்பு..//

  இனிய நட்பூவுக்கு என்றென்றும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. /வாழும் வாழ்வில்
  சொந்தங்கள் எல்லாம்
  பல நேரம் சுடராகவும்
  சில நேரம் சுடவும் செய்யும்...  அருமையான கவிதை....
  மனதுக்குள் புகுந்து நிற்கிறது வரிகள்...
  அன்புடன் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 16. அருமையான கவிதையுடன் கூடிய வாழ்த்திற்கு நன்றி!

  உங்களுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

  (பி.கு: பிறந்த மண்.. தலைப்பில் இன்னமும் தொடர வில்லை.. சீக்கிரம் எழுதி விடுகிறேன்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு
 17. //நீ...நான்...
  உன்னது... என்னது...
  உனக்கு.. எனக்கு...
  என்ற பதங்கள் துறந்து

  நாம்... நமது...
  நமக்கு...
  என வாழும் உறவு...//

  அழகான கவிதையில் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நன்றி குமார்.
  உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. >>நீ...நான்...
  உன்னது... என்னது...
  உனக்கு.. எனக்கு...
  என்ற பதங்கள் துறந்து

  நாம்... நமது...
  நமக்கு...
  என வாழும் உறவு...

  குட்..

  படங்கள் கலக்கல்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...