மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 17 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : ஆயிஷாவைத் தேடி சந்திப்பும் இரு சினிமாவும்

சென்ற வெள்ளியன்று அலைனில் இருந்து அபுதாபிக்கு பிரபு வந்திருந்ததால் மாலை நண்பர்கள் ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாமே என யோசித்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் நண்பர்களின் சங்கமம் என்பதால் தேநீருடன் கூடிய ஒரு சிறு சந்திப்பைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றார் வேல்முருகன். அதன்படி நாங்கள் மாலை அங்கு சென்றோம்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலான பேச்சு.. வாசித்த கதைகள், தன்னைக் காண 100 ரூபாய் கேட்ட எழுத்தாளர், ஷார்ஜா புத்தகவிழா, சினிமாக்கள் என எல்லாவற்றையும் கலவையாய் பேசி மகிழ்ந்தோம். நல்லதொரு காபியும் கொறிச்சிக்க பக்கோடாவும் திருமதி. வேல்முருகனின் கைப்பக்குவத்தில் அதீத சுவையுடன் அருமையாய் இருந்தது. பிரச்சினைகளில் உழலும் மனசுக்கு இதமானதொரு சந்திப்பு.

Image result for மகாமுனி

ர்யா நடித்த மகாமுனி நல்ல பிரிண்ட் வந்ததும் பார்க்கலாமென நினைத்திருந்த படம்... இரண்டு நாள் முன் பார்க்க வாய்த்தது. தொய்வில்லாமல் நகரும் திரைக்கதையால் தொடர்ந்து பார்க்க முடிந்தது. 

ஆஹா... ஓஹோன்னு சொல்லுமளவுக்கெல்லாம் கதையில்லை... தமிழ்ச்சினிமாவின் அரதப்பழசான கதைதான்... பிள்ளைகளைத் தவிக்கவிட்டு அம்மா எங்கே சென்றாள் அப்படின்னு ஆராய்ச்சி செய்யக்கூடாது ஏன்னா இது பிறவியைத் தேடலை... அதே ரவுடி... அதே அடியாள்... தனக்குப் பிரச்சினை என்றதும் அடியாளைப் பலி கொடுக்கும் அதே அரதப் பழசான கதைதான்...

ஆர்யா நல்லா நடிக்கும் நடிகன் என்பதால் இரு பாத்திரமும் சிறப்பாக இருந்தது. நாயகிகள் இருவருமே தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். விறுவிறுப்பு இல்லையென்றாலும் போராடிக்காமல் போகிறது மகாமுனி. பார்க்கலாம்.

Image result for actor nani's kutralam

குற்றாலம் அப்படின்னு பேர் மாற்றம் செய்யப்பட்ட நாணி நடித்த தெலுங்குப் படம். ரவுடியான அண்ணனுக்குத் தெரியாமல் காதலிக்கும் தங்கை... வம்பு, சண்டை என்றால் காததூரம் ஓடும் கதாநாயகன்... தெலுங்குப் படத்துக்கே உரிய பலி வாங்கத் துடிக்கும் வில்லன், என்கவுண்டர் போலீஸ், பலி வாங்கலின் தொடர்ச்சியாய் தேடப்படும் போலீஸின் குழந்தைகள், அவர்களை ஹைதராபாத்துக்கு கூட்டிச் செல்லும் கதாநாயகன் இப்படியாக நகரும் கதையில்... பாலகிருஷ்ணா படத்தை ஒட்டி வச்சி, ரஜினி வசனத்தை மொபைலில் வச்சி என் தலைவன் சூப்பர்ஸ்டார்டான்னு சொன்னானுங்க... 

பெயர் போடும்போது SPECIAL THANKS - அப்படின்னு போடுற போதெல்லாம் SPECIA THANKS-ன்னு போட்டானுங்க... எதுவும் நியூமராலஜியா இருக்குமோ..? 

மொக்கைப் படத்தையும் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் காதல், கொஞ்சம் வில்லத்தனம்ன்னு வச்சி பார்க்க வச்சானுங்க... உலகமே பயப்படுற வில்லன்னு ஒருத்தனை சிங்கப்பூர்ல இருந்து இறக்கி படம் முழுவதும் சிறையில் வைத்துக் காமெடி பண்ணுனானுங்க... தமிழ்ப்படுத்தப்பட்டாலும் 'ஏய்...','ஊய்' எனக் கத்தும் தெலுங்குப்படமாக இல்லாமல் இருந்தது சிறப்பு... 

லுவலகத்தில் மதியம் சாப்பிடும் போது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் தன் முன்னாள் காதலியைத் தேடுவதாகவும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். அவரைக் காதலித்து வீட்டுக்குத் தெரிய வந்ததாலேயே வெளிநாட்டுக்கு வந்தது, வேறு திருமணம். கிடைத்திருக்கும் அருமையான துணைவி, ஓரளவு பொருளாதாரத்தில் மேம்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றுக்குமே அவர் தன்னைப் பிரிந்து சென்றதுதான் காரணம் எனவே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். 

அவர் பிரிந்ததாலேயே இவ்வாழ்க்கை என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள் எனக் கேட்டதும் அவரைக் கட்டியிருந்தால் இது நடந்திருக்காது என்பது எனக்குத் தோன்றும் எண்ணம் என்றார். உங்களைக் கட்டாமல் அவர் போனதால் அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கலாம்தானே என்றதை ஒத்துக்கொள்ளவே இல்லை அவர்... அவர் மனதில் அந்தப் பெண் ஏழ்மை நிலையில்தான் இருப்பாள் எனப் பதிந்திருக்கிறது.... அதை எப்படி நம்மால் மாற்ற முடியும்...?

முடிஞ்சா ஆயிஷான்னு அடிச்சித் தேடிப்பிடிச்சித் தாங்க... நான் முயன்று என்னால் முடியவில்லை என்றார். அவரின் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது... இப்போது பழைய காதல் மனசுக்குள் மணியடிக்கிறது பாருங்கள்... இதிலிருந்து என்ன தெரிகிறது... காதலை மறந்துட்டேன்... இப்ப அதை நினைக்கிறதேயில்லை என்பதெல்லாம் வாய் வார்த்தைகள்தான்... காதல் கடைசி வரை இதயத்துக்குள் உலா வரத்தான் செய்யும்.

ஆயிஷாவைத் தேட முடியவில்லை.... வேணும்ன்னா ஆயிஷாவைத் தேடின்னு ஒரு கதை எழுதலாம்....
-'பரிவை' சே.குமார். 

2 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

அமேசானில் நானி நடித்த கேங் லீடர்  பார்த்து ரசித்தேன் நேற்று.  நம்ம ஊர் லட்சுமி, சரண்யா எல்லாம் நடித்த படம்.   பதின்னு படி என்றுஒரு மாமூட்டி படம் இருக்கிறது.  ஷாஓலின் டைப் படம்போல...    பார்க்கணும்!

ஆயிஷா...    ஆண் ,மனோபாவத்துக்கு ஒரு அடையாளம்?!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல சந்திப்பு.

நீங்கள் சொல்லியிருக்கும் படங்கள் பார்க்கவில்லை. ஓகேதான் இல்லையா.

துளசிதரன்

இப்படியான சந்திப்புகள் எல்லாம் சந்தோஷமா இருக்குமே குமார் உங்களுக்கு.

படங்கள் அறிந்து கொண்டேன்.

அலுவலக நண்பர்...ம்ம் அவரது மனப்பான்மை சரியாக இல்லையே...

கீதா