மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 12 மார்ச், 2017

மனசின் பக்கம் : நம்மையும் என்னையும் பற்றி கொஞ்சமாய்..

வ்வொருவரும் பதிவில் எதாவது ஒரு வகையில் தனித்துவமாய் இருக்க, நானெல்லாம் கதை, கவிதையின்னு மாவரைத்து அப்படி நான் அரைத்த மாவையும் சிலர் சப்தமில்லாமல் எடுத்து வடை சுட, இதென்னடா இது நம்ம மாவை வேற ஒருத்தன் சொல்லாமக் கொல்லாம எடுத்துட்டானேன்னு பொங்கி கதைகள் பகிர்வதை நிறுத்தியாச்சு. வேற ஒண்ணும் எழுதத் தோணாத நேரத்தில் எதாவது வித்தியாசமாய் ஆரம்பித்து வைப்போம் என ஆரம்பித்ததுதான் 'என்னைப் பற்றி நான்'. அதற்காக பலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தப் பலரில் முதலாவதாய் 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் அனுப்பி வைத்து, என்னைப் பற்றி நான் பகுதியை தொடங்கி வைத்தார். அந்தப் பலரில் சிலர் கூட அனுப்பித் தராத நிலையில் அடுத்தடுத்து நான் முகநூல் வாயிலாக கேட்ட, உறவுகள் அனுப்பிக் கொடுக்க 'என்னைப் பற்றி நான்' எல்லாரும் விரும்பும் பதிவாக மாறியிருக்கிறது. இதுவரை கொடுத்தவர்களுக்கும் இனி கொடுக்கப் போகிறவர்களுக்குமே அந்தப் பகிர்வின் வெற்றியில் முழுப் பங்கு உண்டு என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஒருவர் கொடுப்பதை நான் அப்படியே பகிர்கிறேன் அவ்வளவே. இதுவரை வெளிவந்த உறவுகளின் பகிர்வுகளைப் படிக்காதவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்களைச் சொடுக்கி வாசித்து அறிந்து கொள்ளலாம்... அதே போல் வலைத்தளப் பெயர்களைச் சொடுக்கி அவர்களின் வலைத் தளத்தையும் வாசிக்கலாம்.

5.'KILLERJEE'                                      -   கில்லர்ஜி அண்ணன்.



சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசும்போது 'நீ இப்போ சிறுகதைகளை உன் தளத்தில் பகிர்வதில்லை... அதிகம் எழுதுவதும் இல்லை' என்றார். சிறுகதை பகிராத காரணம் உனக்குத் தெரியும் என்று சொல்லி, எழுதாததற்கு காரணம் மனசு லேசாக இல்லை என்பதால்தான்... பிரச்சினைகள் சுற்றிலும் தீமூட்டி வைத்து வேடிக்கை பார்க்கின்றன... விரைவில் வாரம் 3 பகிர்வாவது எழுத முயற்சிக்கிறேன் என்றதும். 'ஏன் அந்தத் தொடர்கதையை நிறுத்தி வச்சிருக்கே..? தளத்தில்தான் பகிரலை... முழுவதும் எழுதி முடிச்சிட்டியா..?' என்றார். நான் எப்பவும் பதிவில் போடும்போதுதான் எழுதுவது வழக்கம், அதனால் அது பாதியில்தான் நிற்கிறது என்றதும் 'அப்ப அதை முழுவதும் எழுதவாவது மீண்டும் தளத்தில் ஆரம்பி... எதுக்கு பாதியோட நிப்பாட்டி வச்சிருக்கே'ன்னு சத்தம் போட்டார். யோசிப்போம் என்று முடித்துக் கொண்டேன்... தளத்தில் எழுதும் யோசனையில்லாமலே...

'ஆள் இல்லை... ஒரு மாசம் லீவ் தரமுடியாது... நீ பொயிட்டா யார் உன் வேலையைப் பார்ப்பா...' என்றெல்லாம் சொன்ன குஜராத்தி மேனேஜரை மடக்க வேண்டிய விதத்தில் மடக்கி விடுமுறைக்கு ஓகே பண்ணியாச்சு.  ஐந்து மாதமாக வேலையில்லாமத்தான் இருந்தோம்... ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் ஒரு புராஜெக்ட் ஆரம்பித்தோம்...குஜராத்தி மேனேஜர் (மோடி ஆள்), ஒரு சர்வேயர் (எகிப்து) அப்புறம் நான் மூவர் மட்டுமே இந்த புராஜெக்ட்டில்... மூன்று வருடமாக சம்பளத்தில் மாற்றமில்லை. இந்த வருசமும் எண்ணெய் விலை சரிவு பிரச்சினையால் வேலை இல்லாத சூழல்... அதனால் சம்பள உயர்வு என்பது கேள்விக்குறியே... இந்நிலையில் ஊருக்கு போற லீவையும் விட்டுக் கொடுத்து என்ன சாதிக்கப் போறோம்... புதிய புராஜெக்ட்டில் 21 மாதங்கள் வேலையிருக்கு... அதுக்காக 21 மாதத்துக்கு ஊருக்குப் போகாம இருக்க முடியுமா... என்ன... எல்லாருக்கும் விடுமுறை கொடுப்பானுங்க, ஆனா நமக்குன்னா... ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவானுங்க... நமக்கு ஒரே காரணம்தான்... அது லீவு வேணும் என்பதே... ஒரு வாரம்... 15 நாள்... என்றவன் ஒரு மாதத்தில் வந்து நின்றிருக்கிறான்.  மே மாதம் 18ஆம் தேதி இரவு விமானத்தில் டிக்கெட் போடணும்... ரிட்டன் டிக்கெட் போடாமல்தான் வர்றேன்.. அதனால் சில நாட்கள் விடுமுறை நீடிக்கலாம். இந்த முறை பதிவர்களைச் சந்திக்க வேண்டும்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதிய சிறுகதையில் இருந்து சில வரிகள்....

"ம்... இங்க வந்து எத்தனை வருசமாச்சு..?"

"பத்து வருசம் முடிஞ்சிருச்சு.. அந்தப் புள்ளைக்கு வயசு பதிமூணாவுது..."

'பதிமூணு வயசுப் பொண்ணு படுத்த படுக்கையாய்... பணத்தின் பின்னே நகரும் வாழ்க்கையில் அப்பா, அம்மா அதைத் தேடி ஓட யாரோ ஒரு பெண்ணால் பாதுக்காக்கப்படுகிறாள்... பாவம் இப்படி படுத்த படுக்கையாய் கிடந்து அவள் சாதிக்கப் போவதென்ன...? கால ஓட்டத்தில் இந்த ராதா, பெற்றவர்கள்... எல்லாம் நகர்த்தப்பட அவள் என்ன செய்வாள்...? இந்த உலகில் அவளுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது... இவரும்.. அவளிருக்கும் அறையுமே அவள் உலகமாகிப் போக, என்ன வாழ்க்கை...? இறைவா ஏன் அந்தக் குழந்தைக்கு இந்த நிலை...? எதற்காக அவளுக்கு இந்தப் பிறவி..?' என்று வருத்தத்தோடு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினேன்.

"என்னங்க அமைதியாயிட்டீங்க... அந்தக் குழந்தைக்காக வருத்தப்படுறீங்களா..?"

மிழகத்தில் மக்கள் ஒவ்வொன்றையும் போராடிப் போராடி பெற வேண்டிய காலம் வந்துவிட்டது... எல்லாவற்றிற்கும் போராட்டம்.... காரணம் நல்லரசு என்பது எப்போதும் இல்லை... இப்போது சுத்தமாக இல்லை... இதை மத்திய அரசு தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது. அதற்கான காய் நகர்த்தல் மிகத் தெளிவாகத் தெரிகிறது. பொறுக்கித் தமிழன் என்று சொல்லும் சுப்ரமணிய சாமியை அரசியல் சாணக்கியன் என்றும், பொறுப்பற்று பேசும் பொன்னார், இசை, வானதி என எல்லாருமே மக்களுக்காக பாடுபடும் அரசியல்வாதிகள் என்றும் தாமிரபரணி தண்ணீரா... அது முன்னமே ஒப்பந்தமான திட்டம் அதை எப்படி நிறுத்த, நெடுவாசல்.. அது முப்பது வருசத்துக்கு முன்னால அந்த மக்கள் ஒத்துக்கிட்டது, ஜல்லிக்கட்டு போராட்டமா... அது சும்மா... கேலிக்கூத்து அரங்கேறிய இடம்... தந்தி டிவியா... இருக்கதுலயே உண்மை பேசும்... அறிவு ஞானமுல்ல பாண்டேயை வைத்திருக்கும் டிவி அதுதான், பன்னீரு... அரசியல் பண்ணத் தெரியாத ஆளு, தினகரன்... அருமையான அரசியல்வாதி இப்படி நிறைய... நிறைய விஷயங்களை ஒரு நண்பர் பேசினார். நேற்றைய பொழுது அவரோடு கழிந்ததில் ஒன்றல்ல... இரண்டு மட்டும் தெரிந்தது... அது கட்சிக்காரன் என்றால் தமது கட்சியில் செய்கைகளுக்கு எப்படியும் முட்டுக் கொடுப்பார்கள் என்பதும்... தண்ணியடிச்சவனிடம் பேசினால் டென்சனில் உடம்பு சூடாகும் என்பதும்...  மற்றொரு பதிவில் இதைப் பற்றி விரிவாய்ப் பேசலாம்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

27 எண்ணங்கள்:

மீரா செல்வக்குமார் சொன்னது…

ஆஹா....வருக...வருக குமார்

நிஷா சொன்னது…

ம்ம் உங்க பதிவுகள் அதிலும் என்னைப்பற்றி நான் பதிவுகள் பல படித்தும் கருத்திடாமல் இருக்கின்றேன். கடந்த மாதம் முழுதும் இட்ட பதிவொன்றும் கருத்திடவில்லை. நேரம் பார்த்து ஒவ்வொன்றாக கருத்து இட வேண்டும்.

என்னைப்ப்பற்றி நானும் எழுதத்தான் நினைக்கின்றேன். ஆனால் சொல்லத்தான் வார்த்தைகள் உருவாகாமல் தடை செய்கின்றது. பார்க்கலாம். சிக்கிரம் எழுதி விடுவோம்.

இங்கேயும் வேலைகள் அதிகமாகி விட்டது, இனி அக்கா நெட் பக்கம் வந்தாலும் பதிவுகள் இடுவது கஷ்டம் தான்.

விடுமுறைக்கு ஊர் செல்லும் குதுகலம் இப்பவே ஆரம்பித்து விட்டது போலும், சென்று வென்று வாருங்கள். எல்லாம் நலமாகட்டும், தொடர்வோம்.

அன்பே சிவம் சொன்னது…

வாங்க வாங்கன்னு வேட்பாளர்கள்.,? (மன்னிக்கனும்) பதிவர்கள் சார்பாக தங்களை வரவேற்கிறோம்.

ஸ்ரீராம். சொன்னது…

சத்தமில்லாமல் சுட்டு விடுகிறார்க்ளோ! அதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? இப்படி திருடப்படுவதே பிரபலத்துக்கு அடையாளம் குமார். காலரைத் தூக்கி விட்டுக்கலாம்! சரியான வெயில் நேரத்தில் இந்தியா வருகிறீர்கள் என்று தோன்றியது. அப்புறம் உங்கள் ஊர் இதைவிட தகிக்கும் ஊர் என்றும் தோன்றியது. சரிதானே!

KILLERGEE Devakottai சொன்னது…

வருக நண்பரே நல்வரவு ஆகுக...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

....சந்திப்போம்....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மே மாதம் வருகிறீர்களா... அச்சமயத்தில் எனக்கும் தமிழகம் வர வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம்...

பதிவுகள் காப்பி அடிப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்கள் பதிவுகள் சுடப்படுகிறது என்று முன்பே சொல்லியிருந்தீர்கள் இப்போது தங்கள் பதிவுகளுக்கு வேலியும் போட்டுவிட்டீர்கள்! எப்படிக் கண்டு பிடித்தீர்கள் சுடப்படுகிறது என்று? அப்போ நீங்கள் மிகவும் பிரபலம்??!!1 நம்மூர் சினிமாக்காரங்கள் ஹாலிவுட், கொரியன், ஜப்பானீஸ் படங்களைக் காப்பியடிக்கறாங்கனா அந்தப் அப்டங்கள் அத்தனை நன்றாக இருக்கின்றன என்றுதானே அர்த்தம் அது போல!!??

ஐயோ இங்கு வெயில் கொளுத்துகிறது குமார்! உங்கள் ஊரும் தான் அதான் நீங்கள் வாழும் ஊர்! அதைவிட இங்கு குறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது...வருக வருக!!

Avargal Unmaigal சொன்னது…

நாம் எழுதுவது என்பது பொழுது போவதற்காகவும் நாலு பேர் படிப்பதற்காகவும்தான் அதை பலர் காப்பி செய்து போடுகிறார்கள் என்பதால் எழுதாமல் இருப்பது நல்லது அல்ல. பலரும் காப்பி அடித்தாலும் அது உங்கள் க்ருத்து உங்கள் எழுத்தே அதனால் மனம் தளராமல் எழுதுங்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா....
இந்த முறை கண்டிப்பாக புதுகை வருகிறேன் அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
முதலில் உடல்நலம் பாருங்கள்... பின்னர் தொழில் பாருங்கள்.
என்னைப் பற்றி நான் - எழுதுங்க முதல்ல...
ஒரு குதூகலமும் இல்லை அக்கா... என் நிலை தெரியும் அக்கா உங்களுக்கு... இருந்து இந்த விடுமுறை விட்டால் அடுத்த விடுமுறை உடனே கிடைக்காது... இந்த லீவும் போகும்.
அதன் காரணமான பயணம்தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வரவேற்புக்கு நன்றி. ஆஹா வேட்பாளர்களா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
ஆமாம் அண்ணா... சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தளத்தில் எனது பதிவுகள் எல்லாமே இருந்தது. அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை நீக்கச் சொன்னேன்.

அதேபோல் சமீபத்தில் எனது தளத்தில் ஆபாச பதிவுகள் இருப்பதாகவும் தடை செய்ய வேண்டும் என ஒரு மின்னஞ்சல்...

அதில் போய் பார்த்தால் எனது தளம் இதே பெயரில் அமெரிக்காவில் இருந்து இயக்கப்படுது... ஆனால் ஆபாசம் என்பதில்லை...

மேமாதம் வெயில்தான்.... இருப்பினும் ஊர் திருவிழா, குழந்தைகள் பள்ளி விடுமுறை என்பதால் மே மாதம்தான் என் தேர்வாய் அமைகிறது.

மதுரை வருவேன்... (மனைவியின் பிறந்தகம் அல்லவா), சென்னை வர நேர்ந்தால் தங்களைச் சந்திக்க ஆவல்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தேவகோட்டையில் சந்திப்போம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
இந்த முறை கண்டிப்பாக சந்திப்போம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
நிச்சயமாக தாங்கள் ஸ்ரீரங்கம் வந்தால் நான் வந்து பார்க்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வேலி என்பது சும்மா... தளம் திறந்து மற்ற அப்ளிகேஷன்ஸ் திறக்கும் முன்னர் காப்பி செய்து விடலாம்... எல்லா அப்ளிகேசனும் உடனே திறந்தால்தான் காப்பி செய்ய முடியாது.

சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளால்தான் கதைகளை பதியவில்லை. சிலரின் கதைகள் வேறு பெயர்களில் பத்திரிக்கைகளில் வந்ததாகவும் சொல்லியிருந்தார்கள்.

காப்பி அடிச்சா பிரபலமா நாம... அது சரி... நம்ம எழுத்துக்கு யாரோ உரிமை கொண்டாடுறாங்களே...

மே மாதம் பள்ளி விடுமுறை என்பதால் விடுமுறைக்கான மாதம் மே...

இங்கு இந்த மாத இறுதிவரை குளிர் சீசன்... இந்த வருடம் கடுமையான குளிர்....

ஏப்ரலில் ஆரம்பிக்கும் வெயில்... இரண்டு மூன்று அக்னி நட்சத்திரத்துக்கு சமம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
கண்டிப்பாக எழுதுவேன்...
நன்றி.

Kasthuri Rengan சொன்னது…

வெல்கம் பாக் ஜி
அசத்துங்க தொடர்ந்து

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாருங்கள் நண்பரே
வாருங்கள்

துரை செல்வராஜூ சொன்னது…

தங்களுக்கு வரவு நல்வரவு!..

அப்புறம் - வெகு நாட்களுக்குப் பிறகு தங்களுடைய பதிவில் கருத்துரையைப் பதிவு செய்ய முடிகின்றது..

வாழ்க நலம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களை நினைத்தும் இன்றைய எனது பதிவு :

இணைப்பு : பூட்டு

M0HAM3D சொன்னது…

வாருங்கள் நண்பரே

Anuprem சொன்னது…

என்னைப்பற்றி நான்.. உண்மையில் நல்ல முயற்சி...


பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்...

Angel சொன்னது…

ஊருக்கு பயணமா .மிக்க சந்தோஷம் .
பதிவு திருட்டுக்கள் திருடரா பார்த்து மனம் திருந்தினாதான் உண்டு ..அடுத்தவர் பொருளை தனதாக உரிமை கொண்டடடாரத்தில் என்ன ஆனந்தமோ ..
.
கதை //அந்த குழந்தைக்காக கடவுள் மேல் கோபமாக வருகிறது ....

G.M Balasubramaniam சொன்னது…

ஒரு மாதம் விடுப்பில் வருகிறீர்கள் வாய்ப்பு இருந்து முடிந்தால் எங்களூர் பெங்களூருக்கும் வாருங்கள் சந்திக்கலாம்

Yarlpavanan சொன்னது…

'என்னைப் பற்றி நான்' பகுதியைப் பகிரும் முயற்சிக்குப் பாராட்டுகள்.

எழுத்து என்பது
எமக்கு நிறைவு தர வேண்டும்
அதேவேளை
வாசகரையும் நிறைவுகொள்ள வைக்க வேண்டும்
அது எப்ப ஏற்படுதோ
அப்பவெல்லாம் - உங்கள்
சிறுகதைகளை வெளியிடுங்கள்
தொடருவோம்!