மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 3 ஜூலை, 2014

மழை இரவில்...


சோவென பெய்தமழை
சோர்வுற்ற போதினிலே...
கீதமிசைக்கும் தவளைகள்..!
'டக்... டொக்...' தாளநயத்துடன்
குடிசைக்குள் வழியும் தண்ணீர்..!
காற்றை சில்லிப்பாக்கி
உடம்பை ஆட்டிப்பார்க்கும் குளிர்..!
சாக்கடைக்குள் கலக்கும்
தெரு நீரின் சலசலப்பு..!
உறுமியபடி நீரில் நீந்தும் வாகனம்..!
கருமேகங்களுக்கிடையே
கட்டழகி நிலவின் முகம்..!
வெளிச்சக் கீற்றை
அள்ளித்தெளிக்கும் மின்னல்..!
எங்கோ பெய்யும்
மழையின் இடியோசை..!
எல்லாம் ரம்மியமாய்..!
மழையால் விழித்துக் கொண்ட
கண்களுக்குள் இருட்டு பயம்..!

(மீள் பதிவு, 2009 ஆகஸ்ட்டில் நெடுங்கவிதைகள் தளத்தில் எழுதியது)
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

மீள் பதிவு என்றாலும் தூள் பதிவு !மழைச்சாரலில் நனைந்த சுகம் !
த ம 2

ADHI VENKAT சொன்னது…

மழைக்கு இதமான வரிகள். பாராட்டுகள்.

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

அப்புறம் எனக்கொரு சந்தேகம். மழை எதற்காக 'நாகேஷ்' என்றெல்லாம் பெய்யாமல் எப்போதும் 'சோ' என்றே பெய்கிறது?

:)))))))

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

மழைக்கவிதையை இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ சொன்னது…

மழைக்கால இரவு அப்படியே - கண் முன்னே..அருமை..

J.Jeyaseelan சொன்னது…

ரசனையான கவிதைப்பாடல் ஐயா! வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரம்மியத்தை ரசித்தேன்...

கோமதி அரசு சொன்னது…

மழையை அனுபவித்த சுகம் கவிதையில்.
அருமையான மழை கவிதை.
இங்கு இடியும் மின்னலும் சிறு தூறலுமாய் எங்களை ஏமாற்றி செல்கிறது.

Unknown சொன்னது…

மனதிற்குள்ளும் மழை பொழிந்த உணர்வு

KILLERGEE Devakottai சொன்னது…


நல்ல எழுத்தின் நடை...
இரவிலும் கூட...
வாழ்த்துக்கள் நண்பா.

Unknown சொன்னது…

மழை............நன்று!நல்லதும் கூட!!!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_10.html?showComment=1407632115925#c853170747686434206

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-