மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 ஜூன், 2013கௌதமி எனக்கு அம்மாவா?- ஸ்ருதி; இனி ரெண்டு - விமல்

நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். 


இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். 

அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார். 

நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு, நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

இனி வருஷத்துக்கு ரெண்டு: விமல் 

விமல் சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஒரு முடிவை எடுத்துள்ளார். 

கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த் ஆகியோரின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது. 


கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல். 

இனி வரும், போகும் கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம். 

தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

நன்றி : தட்ஸ் தமிழ்

-'பரிவை' சே.குமார்

1 கருத்து:

  1. அவங்க அப்பாவோ/கெளதமியோ 'அம்மா' ன்னு கூப்புட சொல்லலியே?இந்த நிரூபருங்க தொல்ல தாள முடியலீங்க!நடிகைங்க தனிப்பட்ட வாழ்க்கை பத்தி கேள்வி கேட்டு ஏன் தாட்ஷர் பண்ணனும்?///பாவம் விமல்!

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...