மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜூன், 2012சிறு பூக்கள்..!

அலையவிட்ட மனங்களை
அறியவில்லை...
அலையும் கூந்தல்..!

***

குளிக்க மறுத்தது
உன் உதடு தொட்ட
என் கைக்குட்டை..!

***

மேகம் விலகியதால்
வெட்கப்பட்டு சிரித்தது
முழு நிலவு..!

***

உணர்வுகளெல்லாம்
அவளாகிப் போக
உறவுகள் எல்லாம்
அந்நியமாய்..!

***

ஆடும் மயிலென
நாசி தட்டிச் செல்கிறது
முன் இருக்கைப்
பெண்ணின் கூந்தல்..!

-'பரிவை' சே.குமார்

6 கருத்துகள்:

 1. சிதறிய முத்துக்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 2. ஒன்று, ரெண்டு, ஐந்து இம் மூன்றும் முத்துக்களாய் மனசை கவர்கின்றன குமார்

  பதிலளிநீக்கு
 3. எதை குறிப்பிட்டு சொல்ல எல்லாம் அஹா அழகிய கவிதைகள்

  //குளிக்க மறுத்தது
  உன் உதடு தொட்ட
  என் கைக்குட்டை..!//  இந்த வரிகள் என்னமோ ரெம்ப நச் சார்

  பதிலளிநீக்கு
 4. கைக்குட்டைக்கு எழுதிய கவிதை மிக மிக அருமை சகோ...

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா18/9/13, பிற்பகல் 8:02

  அனைத்து ஹைகூக்களும் வெகு நேரம் வரையில்
  இதயத்தில் கூவுகின்றன.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...