மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 29 ஜனவரி, 2011கண்ணாடி சிதறல்கள்


ஒரே தலைவலியாக இருந்ததால் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு படுத்திருந்தான் ராகவன். மாத்திரைகள் போட்டும் தலைவலி நிற்பது போல் தெரியவில்லை. நேற்றிரவு சரக்கு அளவுக்கதிகமாய் போய் வண்டி ஓட்ட முடியாத நிலையில் நண்பர்கள் கொண்டு வந்து விட்டுச் சென்றது ஞாபகச் சுவற்றில் வட்டமிட்டது. எப்பவும் ஒரு பீர்தான் ஆனால் நேற்று ஸ்காட்ச், நண்பர்கள் தடுத்தும் அளவுக்கதிகமாய் குடித்தான். அதுதான் இன்றைய தலைவலிக்கு காரணம் என்பதை அவன் உணராமல் இல்லை. ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு போக எதாவது காரணம் இருக்கணுமே... அவனுக்கும் ஒரு காரணம் இருந்தது.

அந்தக் காரணம்... யாழினி... அவனின் மனைவி, நல்ல அழகி என்று சொல்வதைவிட பேரழகி என்று சொல்லலாம். அவளைப் பெண் பார்க்க சென்றபோது அவளைப் பார்த்த வினாடி முதல் தன்னையே மறந்தான் ராகவன். அவனை அவளுக்கும் பிடித்துப் போக இரண்டாண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டையில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடந்தது.அதன் பின் ஆசை மனைவியுடன் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் தனிக்குடித்தனம். அவளும் கணிப்பொறியில் பட்டம் பெற்றவள் என்பதால் வேலைக்குப் போனாள். நல்ல வருமானம்... அவர்களின் அன்பான வாழ்க்கைக்கு ஐந்து மாதங்கள் ஆன போதுதான் அது அவர்களுக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது... அந்த அது...ஈகோ.

இருவருக்குள்ளும் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் சண்டை வர ஆரம்பித்து சண்டையே வாழ்க்கையானது. எல்லாவற்றிற்கும் சண்டையென்றான வாழ்க்கையில் சந்தேகம் என்ற கரும்புள்ளியும் இருவர் உள்ளத்திலும் புகுந்தது. இதன் பின் அவளுக்கு அவனோ... அவனுக்கு அவளோ... போன் செய்யும் போது அவர்கள் எடுக்காமல் அவன் போனை பெண்ணோ அவள் போனை ஆணோ எடுத்தால் அன்று இரவு பயங்கரமான சண்டை நடக்கும். அவளை வச்சிருக்கியா என்றும் அவனை வச்சிருக்கியா என்றும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களின் முடிவில் இருவரும் அடித்தும் கொள்வார்கள்.

இதன்பின்னான வாழ்க்கையில் ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் தனித்தனி அறையில் வாசம். யாராவது சொந்தங்கள் வரும்போது மட்டும் கணவன் மனைவியாய் நடிக்க கற்றிருந்தார்கள். உறவுகள் அதிகம் கோவைக்கு வருவதில்லை என்பதால் அவர்கள் அதிகம் நடிக்க வேண்டியிருக்கவில்லை. ஊருக்கு செல்லும் போது இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்த்தார்கள். ஊரில் யாராவது கேட்டால் வேலை என்ற காரணம் சொல்லப் பழகியிருந்தார்கள். வீட்டில் சமைத்து நாட்களாகிவிட்டன. இருவரும் வெளியில்தான் சாப்பாடு, யாராவது வந்தால் மட்டுமே அபூர்வமாய் அடுப்புக்கு வேலை. நீ எப்படியிருக்கே என்று ஒருவரை ஒருவர் கேட்பதுகூட இல்லை.

கிராமங்களில் மொரப்பாடு என்று ஒன்று வழக்கத்தில் இருக்கும். மொரப்பாட்டுகாரர்களின் வீட்டில் சாப்பிட மாட்டார்கள்.அது மாதிரிதான் இருவரும் பார்த்துக் கொள்வதே அபூர்வமானது. காலையில் அவள் குளித்து வெளியில் வரும்போது இவன் குளிக்கப் போவான். அப்போது சந்திக்கும் அந்த சில நிமிடங்கள்தான் அவர்கள் அன்றைய இருபத்து நான்கு மணி நேரத்திற்கு அவர்களின் சந்திப்பு. அவன் குளித்து வரும்போது அவள் வண்டி தெருமுனையை தாண்டியிருக்கும். விடுமுறை தினங்களில் அவள் சமைத்து சாப்பிடுவாள். இவன் எங்காவது வெளியில் போய்விடுவான்.

போன மாதம் ஒரு ஞாயிறு அவன் வெளியே கிளம்ப ஆயத்தமானபோது நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று அவள் சொல்ல, என்ன என்பது போல் பார்த்தான். நாம விவாகாரத்து அப்ளை பண்ணலாம் என்று நேரடியாக சொன்னாள். அவன் எதுவும் பேசாமல் இருக்க, இந்த வாழ்க்கை நமக்கெதுக்கு...ஒப்புக்காகவும் உறவுக்காகவுமா? நமக்குள்ள என்ன இருக்கு... ரெண்டு தனித்தனி தீவா இருக்கோம்... இதை கட்டிக்கிட்டு வாழ்க்கையை ஏன் நாம கெடுத்துக்கணும்... விவாகரத்து வாங்கிட்ட அவங்கவங்க அவங்கவங்க வாழ்க்கையை பாக்கலாம் என்றாள். சரி அப்ளை பண்ணலாம் என்றவன் முகம் எப்போதும் போல்தான் இருந்தது எந்த மாற்றமும் இல்லை.

அதற்கான வேலையில் இருவரும் இறங்கியபோது நண்பர்கள் வேண்டாம். உங்க பிரச்சினையை பேசித் தீர்த்துக்கங்க என்று எவ்வளவோ சொல்லியும் இருவரும் பேசாமல் இருக்கவே நினைத்தனர்.

எல்லாம் முடிந்து நேற்று குடும்ப நலக் கோர்ட்டில் விசாரணை நடந்தது. விசாரித்த பெண் நீதிபதி, இருவரிடமும் நல்லா படிச்சிருக்கீங்க... லவ் மேரேஜ் பண்ணியிருந்தாலும் சில பிரச்சினைகள் வரும். அப்பா, அம்மா பாத்து கட்டி வச்சிருக்காங்க... அவங்க மனதையும் நோகடிச்சிருக்கீங்க... குழந்தை பெத்துக்காம இருந்தது ஒரு விதத்துல நல்லதுதான்... இல்லேன்னா இங்க ஆறு மாசம் அங்க ஆறு மாசமுன்னு அதோட வாழ்க்கை பாழாப்போகும் என நிறைய பேசி இருவரையும் ஈகோவை விட்டு வெளிய வந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொன்னார். ஒரு வருடம் பிரிந்து இருங்கள. அடுத்த ஆண்டு இதே தேதியில் விசாரணைக்கு அழைப்பு வரும். அப்போது நீங்க சட்டப்படி பிரியலாம். அதில் ஜீவனாம்சம் குறித்தும் முடிவு செய்யப்படும் என்று சொல்ல, யாழினி ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் எனக்கு வேண்டியது விடுதலை மட்டுமே என்று அடித்துக் கூற, ராகவன் எதுவும் சொல்லாமல் நின்றான்.

அதன் பின் வீட்டிற்கு வந்தவன் நண்பர்கள் அழைப்பின் பேரில் பாருக்குப் போய் ஸ்காட்சில் நீந்தியதன் விளைவுதான் காலையில் எழுந்திருக்க முடியாத தலைவலி. தைலங்கள் எல்லாம் தேய்த்தும் விடுவதாக இல்லை. எதாவது சாப்பிடலாம் என்றால் வீட்டில் எதுவும் இல்லை. தெருமுனைக் கடைக்குத்தான் போக வேண்டும். இந்த நிலையில அங்கு செல்வது சாத்தியமில்லை என்று தெரிந்ததால் தண்ணீர் குடித்துவிட்டு தைலம் தடவிக் கொண்டு படுத்தான். அப்படியே தூங்கிப் போனான். எவ்வளவு நேரம் தூங்கினான் என்பது தெரியாது. ஆனால் விழித்த போது சற்று தலைவலி விட்டது போல் இருந்தது.

மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தவனுக்கு எங்கோ தனித்தீவுக்குள் இருப்பது போல் இருந்தது. யாழினி வீட்டில் இருந்தால் அவள் அறையில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவள் இல்லாத வீட்டில் மயான அமைதி... அவனை தனிமை கொல்ல, தொலைக்காட்சி பார்க்க முயன்றான். ஒன்றும் அவனுக்கு பிடிக்கவில்லை. சரி வெளிய போய் சாப்பாடு எதாவது வாங்கி வரலாம் என்று எழுந்தவன் லேசாக திறந்திருந்த யாழினியின் அறைக்கதவை பார்த்தவுடன் யாழினி உள்ளே இருப்பது போன்ற பிரமையால் மீண்டும் அந்த அறையை பார்த்தான். அவள் இல்லா வெறுமையை உணர்ந்தவன் அவதான் போயாச்சே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

பின் தன் அறை நோக்கி நகர்ந்தவனின் கால்கள் யாழினி அறை முன் நின்றன. திருமணமான புதிதில் அந்த அறைக்குள் வந்திருக்கிறான். அதற்குப் பின் பிரச்சினைகள் சூழ்ந்த வாழ்க்கையில் யாழினியின் உடமையான அந்த அறைக்குள் நுழையும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை. மெதுவாக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

கட்டிலின் மேல் சில பழைய துணிகள் மட்டுமே கிடந்தன. அவளின் மற்ற எல்லா பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டாள். யாழினியிடம் அவனுக்கு பிடித்த பழக்கம் இது தான். எப்பவும் எல்லாவற்றையும் சுத்தமாகவும், பொருட்களை நேர்த்தியாகவும் அடுக்கி வைத்திருப்பாள். நேற்றுவரை அவள் உபயோகித்த அறை இன்று வெறுமையாய் இருந்தாலும் சுத்தமாக வைத்துச் சென்றிருந்தாள்.

இதே ராகவனாக இருந்தால் இருக்கிற பேப்பரை எல்லாம் தரையெங்கும் பரப்பி போட்டுவிட்டுத்தான் போயிருப்பான். அவன் உபயோகிக்கும் அறையோடு இந்த அறையை ஒப்பிட்டுப் பார்க்ககூட அவனால் முடியவில்லை. பார்வையை சுழற்றியவன் கண்ணில் பட்டது அந்த நிலைக்கண்ணாடி. அதில் எதோ ஒட்டியிருந்தது. அருகில் சென்று பார்த்தான். அது அவன் போட்டோ...

திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை போட்டாவாய் கொடுத்தது. இருவருக்குள்ளான பிரச்சினையில் எவ்வளவோ இழந்திருந்தாலும் அவள் மனது அவனை இழக்கவில்லை என்பது அவனுக்கு விளங்கியது. இருந்தும் பிரச்சினைகளே பூதாகரமாய் இருந்ததால் விவாகரத்து வரைக்கும் அவளை வர வைத்து விட்டது. அதற்கு நானும் காரணம்தான் என்று நினைத்தவன், கண் கலங்க அவளின் படுக்கை மீது அமர்ந்தான்.

அதே நாளில் வேலைக்கு செல்ல குளித்துவிட்டு குளியலறையை விட்டு வெளியே வந்த யாழினியின் கண்கள் அவனைத் தேட, 'சே... இது அம்மா வீடுல்ல...' என்றபடி அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த கண்ணாடி வெறுமையாய் தெரிய தன் கைப்பையைத் திறந்து அதிலிருந்த ராகவன் போட்டாவை கண்ணாடியில் ஒட்டினாள்.

இதையும் பாருங்கள்:
இந்தக் கருத்தை வைத்து கதை எழுதும் போது என் அருமை நண்பர் இதயச்சாரல் தமிழ் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு வந்தது. அவரிடம் இது குறித்து பகிர்ந்த போது இதே கருவை மையமாகக் கொண்டு கவிதை எழுதுகிறேன் என்றார். "செந்தமிழ்க்கோன்" தமிழ் காதலன் தனது கவிதையை இன்று பகிர்ந்துள்ளார். அந்த அருமையான கவிதையை பார்த்து நண்பனைப் பாராட்ட இங்கே (நேச முடிச்சுக்கள்) செல்லுங்கள்.


எனது நண்பன் "இதயச்சாரல்" தமிழ்க்காதலன் குறித்து திரு. ராம்சாமி அவர்கள் தனது ஸ்டார்ட் மியூசிக்! என்ற தளத்தில் பகிர்ந்துள்ளார்... அப்படிக்கா ஒருக்கா பொயிட்டு வாங்க... அங்கே போக இந்த வழியா போங்க...
-'பரிவை' சே.குமார்.

23 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ஈகோ மறைந்தால் பிரச்சனை இல்லை

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா29/1/11, பிற்பகல் 5:32

  வாசித்ததும் எதுவும் சொல்லமுடியவில்லை..பெரும்பாலோர் பிரியாமல் இதே நிலையில் சேர்ந்திருக்கிறார்கள் சமுதாயத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஈகோ கொடிய நோய் தான்..

  பதிலளிநீக்கு
 4. பிரிவின் போது தான் அதன் வலி தெரியும்,யாராவது ஒருவர் விட்டு கொடுத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.
  நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 5. கதை சூப்பர் குமார்...ஈகோவை கோ என்று விரட்டினால் எல்லாம் சுகமே..

  பதிலளிநீக்கு
 6. குமார்...உங்கள் சிறுகதைகள் உயிரோடு உலவும் நிஜங்கள்.எழுத்து மைல் கல்லைத் தாண்டுகிற்து !

  பதிலளிநீக்கு
 7. "யதார்த்த எழுத்தாளன்" இங்கே தன் எழுத்தின் முத்திரையை பதித்து இருக்கிறார். அன்பின் வலிமையையும், பிரிவின் வலியையும் அழகாய் படம் பிடித்து காட்டுகிறது உங்கள் கதை. வாழ்க்கையை முடிச்சுகளோடு முடித்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாய் நீடிக்க செய்த உங்களின் முடிவில் மனம் நெகிழ்ந்துதான் போகிறது.

  தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. இருவருமே கலக்கியுள்ளீர்கள் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது.....

  என்ன அண்ணே தீர்ப்பு கொடுத்துருவோமா இருவரின் வாழ்க்கையையும் மனதார வாழ்ந்திருக்கிறார் தமிழ்க்காதலர்.. அதான் தீர்ப்பை தாங்களே கூறிவிட்டீர்களே இதயச்சாரலில் ...

  தங்கள் கதையின் சாரல் பெரும்மழையாக நண்பரின் கவிதை வரிகளில்

  பதிலளிநீக்கு
 9. haai ஹாய் குமார்.. 2க்கும் மேல் இப்போது வேண்டாம்னு நீங்க உலவு தமிழ் 10ன்னை விட்டுட்டீங்க போல

  பதிலளிநீக்கு
 10. ஹேமா சொன்னது உண்மைதான் குமார். இந்த சிறுகதை பாதையில் இப்படியே நகர்ந்து முன்னேறுங்க.

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப நல்லாருக்கு பாஸ்.. :-)

  பதிலளிநீக்கு
 12. வாங்க எல்.கே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தமிழரசி அக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஆசியாக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க செங்கோவி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ஹேமா...
  //குமார்...உங்கள் சிறுகதைகள் உயிரோடு உலவும் நிஜங்கள்.எழுத்து மைல் கல்லைத் தாண்டுகிற்து !//
  நிஜம்மா?
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தமிழ்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க செந்தில்...
  //2க்கும் மேல் இப்போது வேண்டாம்னு நீங்க உலவு தமிழ் 10ன்னை விட்டுட்டீங்க போல//
  அது ரெண்டு வருசத்துக்கு முன்னாலயே முடிவு பண்ணியாச்சு...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க ஜோதிஜி...
  //ஹேமா சொன்னது உண்மைதான் குமார். இந்த சிறுகதை பாதையில் இப்படியே நகர்ந்து முன்னேறுங்க.//
  கண்டிப்பா சகோதரா... உங்கள் அன்பு இருக்கும் வரை என் பாதை போய்க் கொண்டிருக்கும்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க ஜோதிஜி...
  //ஹேமா சொன்னது உண்மைதான் குமார். இந்த சிறுகதை பாதையில் இப்படியே நகர்ந்து முன்னேறுங்க.//
  கண்டிப்பா சகோதரா... உங்கள் அன்பு இருக்கும் வரை என் பாதை போய்க் கொண்டிருக்கும்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாங்க ஜோதிஜி...
  //ஹேமா சொன்னது உண்மைதான் குமார். இந்த சிறுகதை பாதையில் இப்படியே நகர்ந்து முன்னேறுங்க.//
  கண்டிப்பா சகோதரா... உங்கள் அன்பு இருக்கும் வரை என் பாதை போய்க் கொண்டிருக்கும்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க தினேஷ்...
  நீங்க நாட்டாமையானதில் மகிழ்ச்சி...
  உங்கள் தீர்ப்புக்கும் மகிழ்ச்சி...

  நாங்கள் தீர்ப்புக்காக எழுதவில்லை... ஒரே கரு இருவர் மனதிலும் எப்படி வருகிறது என்ற சிறிய முயற்சிதான்... நாங்கள் தேர்ந்தெடுத்த களமும் வேறு வேறு... தமிழ் கவிதை, நான் கதை...
  கவிதைகளில் வார்த்தை ஜாலம் செய்யலாம்.... கதைகளில் வார்த்தை ஜாலம் செய்தால் வர்ணனையாகிவிடும்.
  இரண்டுமே கருவை மட்டும் வைத்து எழுதியது... நீ என்ன எழுதுகிறாய்... நான் இப்படி எழுதியிருக்கிறேன் என்ற எந்த உரையாடல்களும் இல்லாமல் எழுதியது.
  இருந்தும் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும், இருவரும் பிரிந்தவர்களை பிரிக்கவில்லை என்பது அந்த வகையில் எங்கள் நட்பு சிறப்பானதாக இருப்பதில் இருவருக்கும் பெருமை.

  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க உழவன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ANBU KUMAR,

  KATHAI KARU NALLAYIRUKKU... ATHUM NAANE KATHANAAYAGANAAI SUTHTHI SUTHTHI VANDHEN... KUMAR

  YAAZHINI... NALLA PEYAR. VAZHTHTHUKKAL!

  ANBUDAN
  RAGAVAN

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...