மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : சேரன் என்னும் மனிதன்

Image result for bigg boss-3 8th september images
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது எல்லாருக்குமே தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருந்தது. சேரனா ஷெரினா என்பதாய் மாறி மாறி நகர்த்திக் கொண்டிருந்த ஓட்டுக்கள் ஓரிடத்தில் போக வேண்டியவர் ஷெரின் என்ற நிலைக்கு வந்த போது வனிதாவால் ஷெரினை மேலே நகர்த்தி சேரனை பின் தள்ளிவிட்டன. 

ஏதோ தப்புச் செய்திருக்கலாம் இது மக்கள் முடிவுதானே என்று சொல்லிய சேரன் குறித்து அதிகம் பேசியிருக்கலாம்... சும்மாவே நீ சேரனுக்கு ஆதரவுன்னு சொல்லி சண்டையெல்லாம் போட்டீங்க...  இருந்தாலும் பதிவுக்குள் போகும் முன்னே சேரனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதைச் சொல்லி விடுகிறேன்.

ஆம் வனிதாவின் மிஷன் சாக்சி, ஷெரினுக்குச் சாதகமாகத்தான் இருந்தது. இது தெரிந்தால் கூட... தெரிந்தால் என்ன தெரிந்தால்... நான் போட்ட நாடகத்தாலேயே நீ காப்பாற்றப்பட்டாய் என  இந்த வாரத்தில் ஒருநாள் வனிதாக்கா கண்டிப்பாச் சொல்லும் பாருங்கள்.

கமல் வருவதற்கு முன்னர் படுக்கை அறையில் டேய் தம்பிகளா போதும்டா இந்தக் காதல் காதல்ங்கிற பிரச்சினைகள்... படம் முழுக்க காதலையே வச்சாலும் நல்லாயிருக்காதுடா என சாண்டி, தர்ஷனிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். அங்கு வந்த வனிதா சம்பந்தமே இல்லாமல் குரலை உயர்த்தி, தான் பேசுவதே சரியென்பது போல் பேச, வனிதா அதை விட்டுத் தொலை என்று சொன்னார் சேரன். அவர் விடுவதாய் இல்லை... ஷெரின் பாகிஸ்தான் தீவிரவாதி என்ற அளவுக்குப் பேசினார். அதுவும் தான் கேப்டன் என்ற தற்பெருமையுடன். இவர் கேப்டனாக இருந்தால் மட்டுமே வீட்டுக்குள் நானே கேப்டன் என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதன் பின் கக்கூஸிலிலும் சேரனின் காதைக் கடிக்க, நீ சொல்றதெல்லாம் சரிதான்... அவ உன்னோட பிரண்ட்... அதனால சொல்ற விதமாச் சொல்லுன்னு சேரன் சொல்லிவிட்டு வர, சாப்பிட்டுக் கொண்டிருந்த தர்ஷனும் சாண்டியும் என்னண்ணா காதுல ரத்தம் வருதுன்னு கலாய்க்க, நீ என்னோட கழுத்தைப் பார்க்கலையான்னு சேரன் சொல்லிட்டுப் போனது செம.

கமல் வந்தார்... ஏதோ கல்வி குறித்தும் ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் குறித்தும் பேசினார்... வாயில் நுழையாத பேரெல்லாம் சொன்னார். எனக்குத்தான் போரடித்தது. 

சத்தமில்லாமல் அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார். அங்கே சாண்டி அத்திவரதராய் பள்ளி கொண்டிருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எல்லாரும் அமர்ந்திருந்தனர். சத்தமில்லாமல் எப்படி வந்தேன் என நடித்தும் காண்பித்தார்.. கலைஞானி அல்லவா... சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ் எல்லாம் சூப்பர். என்ன ரங்கநாத சாண்டி எனக் கேலி செய்ய, சும்மா சிந்தனை பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் எனச் சமாளித்தார் சாண்டி.

கவினுக்கு காலர் ஆப் த வீக்கில் கேட்கப்பட்ட கேள்வி பத்து வாரங்களைக் கடந்தும் சிறந்த போட்டியாளர், தலைவருக்கான போட்டியில் நீங்க வரவேயில்லையே என்பதுதான். கவினுக்குப் பதில் தெரியலையாம்... 

விளையாண்டால்தானே பெயர் வரும்... காதலித்தால் மட்டும் எப்படி பெயர் வரும்... அதுபோக நட்புக்குன்னு சொல்லி நரித்தனம் பண்றதை வேற நீங்களே சொல்லிக்கிட்டா அது கேட்ட வார்த்தையாக இருக்காது கெட்ட வார்த்தையாகத்தான் தெரியும்ன்னு  கமல் வேற சொல்லிட்டாரா... நீங்க சொன்னதைச் சிந்திச்சேன் சார்ன்னு ஆரம்பிச்சிட்டான். ஆனா செமையா திட்டம் போடுறதுல சாண்டியை விட கில்லாடி இவன்.

இனி எப்படியிருந்தாலும் எவனுக்கு விட்டுக் கொடுப்பேன்னு சொன்னானோ அவனையே நாமினேஷன் பண்ண வேண்டிய நிலைதான் வீட்டுக்குள். அதுக்காகவே நீங்க சொன்னதை யோசிச்சேன் சார்... விளையாட்டை விளையாட்டா எடுத்துக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன் சார்ன்னு சொல்லிட்டான்... உன்னோட டக்கால்டி வேலை எல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும்டின்னு கவுண்டமணி மாதிரி சொல்லத் தோணுது.

பேசுனவனைக் கலாய்க்கிறேன்டான்னு என்ன நண்பா தூங்கிக்கிட்டே பேசுறீங்களான்னு கவின் கேட்க, ஒரு கேள்விதான் என்ற கண்டிப்பான உத்தரவை முன்னரே பிறப்பித்திருப்பதால் பிக்பாஸ் போனைக் கட் பண்ணிட்டார். உடனே கமல் என்ன எல்லாரும் சாண்டியா என நகைச்சுவையாய்க் கேட்டார். ஒருவேளை அந்தக் காலர் பதில் சொல்லலாம் என்றிருந்தால் ஆமா சகோ... நீங்கதான் தூங்காம காவியக் காதலை வளர்க்கிறீங்க.... நாங்க ஏன் தூங்காம இருக்கணும்... தூங்கப் போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கேள்வியைத் தூக்கிப் போடலாம்ன்னு பார்த்தேன்னு சொல்லியிருக்கலாம்... பிக்பாஸ் சதி பண்ணிட்டார்.

சனிக்கிழமை போல் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமலின் சாடல் எல்லாமே வனிதாவுக்குத்தான்... பேசும் போது குறுக்கிட்டவரை இடை நிறுத்தி, அப்புறம் எனக்கு என்ன பேச வந்தேன்னு மறந்து போகுங்க என்றவர் பார்வையாளர்களைப் பார்த்து மறந்து போச்சுங்க என்றது செம. 

மேலும் வனிதாவிடம் கேள்வி எனக்கேட்டு விட்டால் கமல் போய் அரைமணி நேரம் தூங்கி எழுந்து வரலாம்... அவ்வளவு நீளத்துக்கு நீட்டி முழங்க ஆரம்பிச்சிடுறாங்க. வனிதாவை வாரிய போதெல்லாம் உள்ளே சிரித்தது கவின் என்றால் வெளியே மகிழ்ந்து ரசித்தது அபிராமி... எல்லாருக்கும் அக்கா மேல செம காண்டு.... ஆனா நேர்ல பார்த்தா அம்மாவைப் பார்த்த எம்.எல்.ஏ மாதிரி ஆயிடுறாங்க.... அதுதான் அக்காவின் வாய்த்திறமை.

அடுத்து சிறந்த போட்டியாளராய் உங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்கிட்டீங்களான்னு வனிதாவைக் கேட்டதும் ஒரே கைதட்டல்... உடனே இப்ப எதுக்கு கை தட்டுனீங்க... நீங்க பாட்டுக்கு எல்லாத்துக்கும் கை தட்டுனீங்கன்னா என்னைத் தப்பா நினைப்பாங்கன்னு சொல்லிட்டு வனிதாவிடம் பேச, தான் மிகச்சிறப்பாக விளையாண்டதாய்ச் சொன்னார்... சேரன் நால்வரின் முடிவு என்க, தர்ஷனும் ஷெரினும் இல்லை என்றார்கள். தர்ஷன் சேரன் அண்ணாதான் நல்லா விளையாண்டார் என்றார் கூடவே ஷெரினும் அதையே சொன்னார். ஆனால் சேரனின் பார்வை வெகு சிறப்பாய் இருந்தது... அது ஒரு ஆழ்ந்த யோசிப்பின் வெளிப்பாடு... கமல் கூட வாழ்த்தினார்.

அப்புறம் லாஸ்லியா விருதைத் தூக்கி வீசிய பிரச்சினையில் லாஸ்லியாவுக்கு வலிக்காமல் குட்டிக் கொண்டே மோகனை வச்சிச் செய்தார். வயது வருடா வருடம் கூடும்... வயதுக்கு மரியாதை எதிர்பார்க்காதீங்க... மரியாதை அதுவாக் கிடைக்கணும்... கேட்டுப் பெறக்கூடாது... சிலர் மேடையைத் தொட்டுக் கும்பிடுவாங்க... ஆனா மேல போனதும் மேடையை நாறடிச்சிருவாங்க... நான் மேடையைக் கும்பிட மாட்டேன்... எனக்கு எதிரே இருக்கும் மக்களைக் கும்பிடுவேன்... மேடைக்கு மரியாதை கொடுப்பேன். 

வட நாட்டுப் பக்கம் நடிக்கப் போனப்ப என்னைப் பச்சோந்தி கமல்ன்னு சொன்னாங்க... அதாவது நடிப்பில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதாக மாறுவேன் என்பதால்... அதைத் தவறா எடுத்துத் தூக்கி எறிய வேண்டியதில்லை என்றார். 

லாஸ்லியாவுக்கு தனக்கு மெல்லக் குட்டினாலும் என்ன சொல்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். மோகன் யாரைச் சொல்கிறார் என்பது தெரியாமலே ரசித்தாரா... அல்லது தெரியாதது போல் காட்டிக் கொண்டாரா..?

சாக்சி எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி கவினிடம் உன்னுடன் இருந்த காதல் பிரிவுக்குப் பின் நான் ரொம்ப நல்லாயிருக்கேன்... இப்பத்தான் அஞ்சு வேளை அசராமல் சாப்பிடுறேன்... எங்க வீட்டு பப்பிச் செல்லம் கூட படுத்தாம தூங்குது... நீ ஊட்டிவிட்ட நினைவுகளை எல்லாம் ஊரை விட்டே ஒதுக்கி வச்சிட்டேன்னு எல்லாம் சொன்னார். 

பனியன் பிரச்சினையில் ஷெரின் வருத்தப்பட்டது குறித்து கமல் பேசிய போது ஆறு செட் வந்தது. ஷெரினுக்கு கொடுக்கலாம் என்று இருந்தபோது அபி வந்ததால அவகிட்ட கொடுத்துட்டோம்ன்னு சாண்டி சொல்ல, பனியன் வந்து ஒரு வாரம் ஆச்சு சார்... கொடுக்க மனமில்லை... அபி வந்தது இந்த வாரம்தான் என சேரன் உண்மையை உடைக்க சாண்டி சிரித்து மழுப்பினார்.

நாமினேசனில் இருந்த முகன் நான் போகமாட்டேன் எனத் திடமாகச் சொன்னார்....எனவே அவர் காப்பாற்றப்பட்டார்... 

அடுத்து ஷெரின் 'ஆ'வெனக் கத்தியது போல் கத்திக் காட்டி அவரும் காப்பாற்றப்பட்டார்... 

கவினும் காப்பாற்றப்பட.. 

அவன் சேரன் லாஸ்லியாவுக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக் கொண்டான். வடிவேலு சீரியஸாக இருந்தாலும் காமெடியாகத்தான் தெரியும்... நாம் சிரிக்கத்தான் செய்வோம்... கவினுக்கு தாடியில்லாத சோக முகம் சரிவரலை... தாடி வளருங்க சகோ.

அப்பாவா மகளான்னு வந்தப்போ நான் போறேன்... போதும் எல்லாம் பார்த்துட்டேன்.... எழுபத்தைந்து நாள் என்னை நிறைய மாத்திருச்சு என சேரன் சொல்லும் போதே அவர் பெயர் போட்ட கார்டைக் காட்டி கமல் அழைத்தார். 

லாஸ்லியா ஒரே அழுகை... அந்த அழுகையில் சில வாரங்களுக்குப் பிறகு ஒரு மகளின் பாசம் தெரிந்தது. தனக்கு வந்த அழுகையை சேரன் கட்டுப் படுத்திக் கொண்டார். 

இதென்ன அநியாயம் நல்லா விளையாண்டா வெளிய போகணுமா என வனிதா ஆடித் தீர்த்தார்.. தனியே போய் பிக்பாஸிடம் வேறு பேசித் தீர்த்தார். பிக்பாஸ்க்கு வனிதா பேசினதைப் பார்த்ததும் 'கதக்'ன்னு இருந்திருக்கும். இருக்காதா பின்னே என்னய்யா டாஸ்க்குன்னு இதுவரை அடிச்சாடிய அக்கா, இப்ப என்னய்யா பித்தலாட்டம் பண்ணி வெளிய அனுப்புறேன் அப்புறம் நாங்கள்லாம் எதுக்கு இங்க இருக்கணும்... அப்படின்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சுல்ல... 

சேரனுக்காக முதல் முறையாக கொஞ்சம் அழுகையும் வனிதாவிடமிருந்து வந்தது... இவர்தான் யார் உள்ளே இருக்கணும் என்ற போது சேரன் அண்ணாவைப் பிடிக்கும் ஆனால் லாஸ்லியா வேலையெல்லாம் சரியாச் செய்வா அது இதுன்னு சொல்லி லாஸ்லியாவை உள் நிறுத்த வேண்டும் என்றார்.

வனிதாவுக்கு லாஸ்லியா மீது அப்படி என்ன பாசம்ன்னு பார்த்தால்... ஐவர் குழுவில் இருக்கும் கவினோட சகோதர பாசம் காட்ட வேண்டும்... அப்பத்தான் அந்த அணியை உடைத்து தர்ஷனை நாமினேசனில் கொண்டு வந்து நிறுத்தலாம்... புல்லைப் பார்த்த மாடு மாதிரி லாஸ்லியாவுக்கு கிரீடம் சூட்டினால் கவின் நம் காலடியில் கிடப்பான் என்பதை அக்கா உணர்ந்தே வைத்திருக்கிறது. கவின், லாஸ்லியா இருவரும் அக்காவை நாமினேட் செய்யாத பட்சத்தில் முகனும் செய்ய வாய்ப்பில்லை... ஷெரின் செய்யக் கூடும். 

அக்காவின் திட்டம் வேற லெவல். சேரனெல்லாம் தனக்கு செட்டாக மாட்டார் என அக்காவுக்குத் தெரியும்... இருந்தும் ஒரு தடாலடி நடிப்பை அரங்கேற்றினார். லாஸ்லியாவை முந்தானைக்குள் முடிந்து கொண்டார். ஷெரினையும் கட்டிப்பிடித்து லவ்யூ பேசி எனச் சொல்லி வைத்திருக்கிறார்.

ஷெரினுக்குத்தான் தன் பிரச்சினைகளுக்கு எல்லாம் முதிர்ச்சியான பார்வையில் தீர்வு கொடுத்து, தன்னை அரவணைத்த சேரன் இல்லாதது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கும்... அவரும் அழுதார்... சாண்டி சில நாட்களாக சேரனுடன் ஒட்ட ஆரம்பித்திருக்கிறார் என்பதை பார்த்துத் தெரிந்திருந்த நிலையில் அவரின் வருத்தமும் சரியெனப்பட்டது.

எல்லாருக்கும் ஆறுதல் சொன்னார்... முகனிடம் நீ நல்லா விளையாடணும்ன்னுதான் நாமினேட் பண்ணினேன் என்றார். கவினிடம் உன்னைத்தான் அதிகமாக காயப்படுத்தியிருப்பேன் மன்னிச்சுக்க என்றார். லாஸ்லியாவை விளையாட்டில் கவனம் செலுத்து மத்ததெல்லாம் வெளியில் வந்து பார்த்துக்கலாம் என்றார். வனிதாவிடம் எதையும் பொறுமையாப் பேசு என்றார். ஷெரினிடம் வனிதாவோட சண்டையில்லாம நட்போட இருன்னு சொல்லி இருவரையும் சேர்த்து வைத்தார். தர்ஷனை நல்லா விளையாடு என்றார். 

சேரனின் பேச்சில் நல்லதொரு அனுபவ முதிர்ச்சி... நிதானமான பேச்சு... பிக்பாஸ் குரலை மறக்கமாட்டேன் என நன்றி சொன்னதில் அவர் இப்படியானவர்தான் என்பதை உணர முடிந்தது. லவ் யூ சேரன்... உங்களைப் போல் மனிதனாய் இருக்க ஆசை... முயற்சிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் சந்திக்க நினைக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர். காலம் நினைத்தால் நிச்சயம் உங்களைச் சந்திப்பேன்.

எல்லாரும் அழ, லாஸ்லியா மட்டும் 'சாரி...சாரி...' என்றும் 'நான் போறேன்' என்றும் அழ, நீ விளையாடணும்ன்னுதான் அப்பா போறேன் என்று சொல்லி சமாதானப்படுத்திட்டுக் கிளம்பினார். அவர் மேடைக்குப் போய் தன் குடும்பத்தினர் வந்திருக்காங்களான்னு தேடினார்... யாரும் வரலை என்றதும் மனசு வலித்திருக்கும். அதைக் காட்டாமல் கோபக்கார சேரன் இப்ப எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒரு சாதாரண மனிதனா இங்க நிக்கிறேன் சார் என்றார். 

மீண்டும் எல்லாருடனும் அகம் டிவி வழி பேசினார். லாஸ்லியாவிடம் பேசும் போது உடைந்தார்... நீ உங்க அப்பாவை பத்து வருசமாப் பாக்கலை... இந்த அப்பாவுக்கா இவ்வளவு ஏன் அழறேன்னு கேட்டபோது லாஸ்லியா உடைந்து அழுதார்... கவினோடு கலந்த பின் பிடிக்காமல் போன லாஸ்லியா ஒரு மகளாய் நின்ற போது மகளைப் பெற்ற அப்பனாய் பிடித்துத்தான் போனார்.

உங்களுக்கான குறும்படம் என்ற போது பிக்பாஸ் இடை புகுந்து சேரன் இந்தப் போட்டியில் தொடர இன்னொரு வாய்ப்புன்னு ரகசிய அறைக்குப் போகச் சொல்லிட்டார். குறும்படம் காட்டப்படவில்லை... சேரன் ரகசிய அறைக்குள்...

கவின் லாஸ்லியாவிடம் நீ போயிருந்தா நான் இங்க எதுக்கு..? என காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு தடை விலகியதில் உள்ளூர மகிழ்ச்சி இருக்கலாம்.

பிக்பாஸ் இல்லம் மயான அமைதியில் இருந்தது. ஒரு மனிதன் வாழ்ந்து விட்டுப் போன வாழ்க்கையை சகபோட்டியாளர்களின் அழுகை பிரதிபலித்தது. அதுதான் வேணும்... அதைச் சேரன் சிறப்பாக செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் சேரன்.

இப்ப சேரன் ரகசிய அறைக்குள்... கமல் சில விஷயங்கள் பேசினார். தனிமைச் சிறை... நிறைய கற்றுக் கொடுக்கும்.

யார் உண்மையான நட்புடன் தன்னுடன் பழகினார்கள் என்பதை அவர் உணரும் நாட்களாய் வரும் நாட்கள் அமையும்... மீண்டும் அவர் வீட்டுக்குள் செல்லும் போது யார் யார் உண்மையான அன்போட முகம் மலர்வார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

என்ன கமல் சார்... சேரனைப் போகச் சொல்லிருவீங்கன்னு பார்த்தா இப்படிப் பண்ணிட்டீங்க... இன்றுதான் பிக்பாஸ் பதிவு கடைசிப் பகிர்வு என முடிவு செய்து வைத்திருந்தேன்... பிக்பாஸ் முடிந்ததுன்னு போடாம இப்பவும் ஆட்டத்தில் சேரன் தொடர்வதால் நானும் தொடர்கிறேன்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வனிதா மட்டுமே தவறுகள் செய்கிறாரா ஆண்டவரே..?

ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி-2019-ல் எனது 'வீராப்பு' என்னும் கதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். எத்தனையோ முறை இணைய வழிப் போட்டிகளில் பரிசு பெற்றிருந்தாலும் ஒரு அமைப்பின் மிகப் பெரிய அளவிலான போட்டியில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் சிறப்புக்குரியது.

போட்டியை நடத்திய ரியாத் தமிழ்ச்சங்கத்தும், பகிர்ந்து கொண்டு வாழ்த்திய எங்கள் அமீரக எழுத்தாளர் சங்கம் வாட்ஸப் குழுமத்திற்கும் வாழ்த்திய எங்கள் பிளாக், பாக்யா வாட்ஸப் குழும நண்பர்களுக்கும் போனிலும் வாட்ஸப்பிலும் முகநூலிலும் வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி. எப்பவும் போல் ஒரு போட்டி என்றுதான் கடந்து போனேன்... வாழ்த்துக்கள் வந்த விழுந்த வண்ணம் இருந்த போதுதான் இது ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வெற்றி என்பதை உணர்ந்தேன். 

வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற தேனம்மை அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

Image result for bigg boss 07 september 2019 images hd
சனிக்கிழமை கமலஹாசனின் நாள்... 

சென்ற சீசனில் கமல் வரும் நாட்களில் மட்டுமே பிக்பாஸ் பார்த்திருக்கிறேன்... அவ்வளவு நேர்த்தியாக, நிறைய விஷயங்களுடன், யாருக்கும் சார்பாய் நிற்காது... சிறப்பானதொரு நிகழ்ச்சியாக அது இருந்தது... ஆனால் இந்த சீசனில் வடிவேலு கிணத்தைக் காணோம்ன்னு சொன்ன மாதிரி 'உத்தமன்' கமலைக் காணோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அவர் கிரேசி போல் டைமிங் ஜோக் பண்ணலையா..? உலக விஷயங்கள், உள்ளூர் அரசியல் பேசலையா..? கண்டிக்க வேண்டியவர்களைக் கண்டிக்கலையா..? வனிதாவை வச்சிச் செய்யலையா..? இதற்கு மேல் என்ன வேண்டுமென எதிர்க் கேள்வி வரலாம்.

வனிதாவை மட்டுமே டார்க்கெட் செய்துவிட்டால் போதுமா..? தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் சார்பு நிலை எடுத்தால்  மட்டும் போதுமா..? இந்த வீட்டுக்குள் எல்லாரும் போட்டியாளர்களே, அதில் என்ன பாகுபாடு..? சாண்டிக்கும் கவினுக்கும் எப்போதும் பொன்னாடையும் மற்றவர்களுக்கு கதர் துண்டும் போடுவது ஏன்..? எதற்காக அவர்களுக்கு இத்தனை ஆதரவு..? ஆண்டவர் என்பதால் ஏழை, பணக்காரன் பாகுபாடு ஆலயத்தில் இருப்பது போல் இங்கும் காட்டப்படுகிறதோ..?

வனிதா பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி மட்டுமல்ல... அதன் பின்பும் பக்கம் பக்கமாய் நாவல்தான் எழுதுகிறார். அவர் செய்வது பிக்பாஸைப் பொறுத்தவரை தவறில்லை என்றுதான் தட்டிக் கொடுத்து வைத்திருக்கிறார்... அவர்களுக்கு போட்டியில் சுவராஸ்யமும் வேண்டும்... டிஆர்பியும் அதிகரிக்க வேண்டும்... அதற்காகவே வனிதாவை வம்படியாக மீண்டும் களமிறக்கியிருக்கிறார்கள். இல்லையென்று சொல்ல முடியுமா விஜய் தொலைக்காட்சியும் கமலும்..?

தர்ஷன்தான் வனிதாவின் குறியே தவிர ஷெரின் அல்ல... இதை வனிதா உள்ளுக்குள் மீண்டும் திரும்பி வந்த போது நிகழ்ந்த பிரச்சினைகளின் போதே நான் எழுதியிருந்தேன். தர்ஷனை குறி வைத்த போது அவனின் பதிலடி பலமாக இருந்ததால் மிஷன் ஷெரினுக்கு மாறியவர்தான் வனிதா. அவளின் இலக்கு நானல்ல... தர்ஷன்தான்... அவனை அடிக்க என்னைக் கட்டம் கட்டுகிறாள் என ஷெரினும் நேற்றுச் சொன்னார். அதுதான் உண்மையே தவிர என் தோழி லவ் பண்றதால வெளிய ஒரு பொண்ணு பாதிக்கப்படுறான்னு சொல்றதெல்லாம் வேஷம்... ஆமா வனிதா வெசம். இந்த வெசமே விஜய் டிவிக்கு தேனாய் இருக்கிறது. பின் ஏன் அடிப்பதாய் ஒரு நாடகம்..?

தர்ஷனை நேரடியாக அடிக்க முடியவில்லை... அதனால் தன் தோழியை அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஷெரின் உடைந்து அழுதது வனிதாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றியாய் தெரிய ஆரம்பித்துவிட்டது. இதை அவரே எதிர் பார்க்கவில்லை... ஷெரின் அழாமல், இரண்டு வாரங்களுக்கு முன்பு போல இதைச் சட்டை செய்யாமல் போயிருந்தால் வனிதா இவ்வளவு பெரிய பிரச்சினையை எழுப்பியிருக்க முடியாது. இதற்கு எண்ணெய் ஊற்றியது சாக்சி என்பதை மறக்க முடியாது. ஷெரினின் அழுகை தர்ஷனை செயலிழக்க வைக்கும் என்பதாலேயே பிரச்சினையை பூதாகரமாக்கினார். பிக்பாஸ் இதை விரும்பவில்லை என்றால் வனிதா கண்டிக்கப்பட்டிருக்கலாம்... ஆனால் அவரின் விருப்பமும் பிரச்சினைகள்தான் என்பதால் வனிதாவை எப்படி கண்டிப்பார்..?

நாமினேசன் என்பது அந்த வாரத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை, தங்களுக்குள் நிகழும் பிரச்சினைகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் செய்யப்பட வேண்டும் என்பதுதான் கடந்த சீசன்களில் நடைமுறையாக இருந்தது.

சில சமயங்களில் சொல்லும் காரணம் சரியில்லை என்றால் பிக்பாஸ் இது சரியான காரணமில்லை இந்தக் காரணத்துக்காக நீங்கள் அவரை நாமினேட் செய்ய முடியாது எனச் சொல்லி, சரியான காரணம் கேட்பார். அப்படியிருக்க, நீ பிரபலம்.... வெற்றியாளன்... இங்க இருக்க வேண்டியதில்லை என கவின் சொன்னதை வனிதா தட்டிக் கேட்டது தவறு... அவங்கவங்க கருத்து அவங்கவங்களுக்குன்னு கமல் கவினுக்கும் அந்தக் குரூப்புக்கும் வக்காலத்து வாங்குவது ஏன்..? அவர்கள் செய்ததெல்லாம் நியாயம் எனப் பேச கமல் எதற்கு... வடிவேலுக்கள் போதுமே. 

மேலும் பிரபலம் என்ற போது போட்டியாளராய் ஏன் கூட்டி வந்து அமர வைக்க வேண்டும்... இவர்களுக்குப் பதில் வேறு சாதிக்காத, பிரபலமில்லாத ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாமே.... கவின் கூட இதையே சொல்லி நாமினேட் செய்யாமல் இருந்திருப்பானே...

பிரபலமோ பிராபலமோ தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பணம் வேண்டித்தான் உள்ளே வருகிறார்கள். இருக்கும் ஒவ்வொரு நாளும் பணமே... அதற்காகத்தான் வீட்டுக்குள் ஊடலும் கூடலும்...

சேரன் பிரபலம் என்றாலும் வெற்றியைச் சுவைத்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை கவின் அறிவானா..? அவரின் போராட்ட வலிதான் அவனுக்குத் தெரியுமா..? ஒரு காலத்தில் கனவுக்கன்னியாய் ஷெரின் இருந்தாரென்றால் இப்போது அவரின் நிலமை என்னவென்பது யாருக்குத் தெரியும்..?

தர்ஷனுக்கும் முகனுக்கும் வாழ்க்கைப் பிரச்சினை இருக்குன்னா வேறு யாருக்கும் இல்லையா.. ஷெரின் சொன்னது போல் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை... காயம் இல்லாமலில்லை. இது போட்டி என்னும் போது வலிகளையும் காயங்களையும் வெளியே வைத்துவிட்டுத்தான் களமிறங்கணும். அதை வைத்து வெல்ல நினைக்கக் கூடாது.

ஒரு சில விஷயங்களில் வனிதாவின் பேச்சும் கேள்வியும் சரியானதே என்றுதான் தோன்றுகிறது. நேற்று கமலையே கேள்விகள் கேட்டார். மிஷன் கமல் இன்னும் செய்யலைன்னு சொல்லியிருந்தேன் முந்தைய பதிவில்... அதை நேற்று செய்துவிட்டார். வனிதாவிடம் பேசியதில் கமலுக்கே வேர்த்துவிட்டது. மக்களை துணைக்கு வைத்துக் கொண்டு திருப்பி அடிக்க ஆரம்பித்தார் கமல். வனிதா நின்னு ஆடக்கூடிய மனுசி என்பதாலேயே சில விஷயங்களில் சேரனைப் போல கமலும் நாசூக்காக ஒதுங்கி நகர வும் செய்தார்.

நேற்று கமல் எப்பவும் போல் சாண்டி, கவின், கூடவே தர்ஷனுக்குச் சொம்படித்தார்... வனிதாவை மட்டுமே டார்க்கெட் பண்ணியது எந்த வகையிலும் நியாயம் இல்லை. வனிதாவின் பேச்சுக்கெல்லாம் சில நேரம் கிரேஸியாகவும் சில நேரம் ரகுவரனாகவும் முகபாவம் காட்டிப் பேசியது  அவரை மிகவும் ரசிக்க வைத்தது, இல்லை என்று சொல்லவில்லை... ஆனாலும் கமல் கமலாய் இல்லை என்பது வருத்தமே 

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கமல் செம கலக்கல்தான்... சாக்சி, சாட்சி வைத்துப் பேசியது... கிரிக்கெட் ஹைலைட் வைத்துச் சொன்னது... யோசிச்சுப் பேசுங்க என்றது... Affairs-க்கு கொடுத்த விளக்கம்... வனிதாவின் கேள்விகளுக்கு நையாண்டியாய் பதில் சொன்னது என எல்லாமே அருமை. அதற்காக வாழ்த்துக்கள் கமல் சார்.

இருப்பினும் வனிதாவின் கேள்விகள் எல்லாமே தவறென்பதாக சித்தரிப்பது அழகல்ல... வனிதா கத்திப் பேசக்கூடியவர்தான் என்றாலும் எதிராளி குரலை உயர்த்தினால் அடங்கிப் போகக்கூடியவர் என்பதால்தான் எதிராளியைப் பேசவிடாத லாவகத்தை கையில் வைத்திருக்கிறார் என்பதை கமல் உணர்ந்தபின் வனிதாவை அடியோ அடியென அடிக்க ஆரம்பித்தார். 

ஒரு கட்டத்தில் வனிதா என்னோட கேம்தான் என்ன சார்...? நீங்க என்ன எதிர் பார்க்கிறீங்க என்று கேட்டதெல்லாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டியவைதான். நீ செய்தது எல்லாமே தப்புத்தான் என்பதற்கு நியாய அநியாத்தை அலசி ஆராய்ந்து பேசக்கூடிய ஆள் தேவையில்லையே. வனிதாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கடந்து போய்விடுவதால் நீதி நிலைத்து விடுமா..?

சாக்சி மக்களை நாய் என்றது தெளிவான விஷயம்... அவரைக் காக்கும் பொருட்டு கண்டிக்காமல் சப்பைக் கட்டு கட்டியதில் எல்லாம் கமல் வீழ்வேனேனென்று நினைத்தாயோ எனக் கொக்கரிக்க முடியாமல் வீழ்ந்துதான் கிடந்தார்.

சாண்டி, கவினுக்கு சாமரம் வீச வேண்டும் என்பது கமலுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா..? சுதந்திரமாக பேசும் அவரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறதா..? வாய்க்குப் பூட்டு இட்டு விட்டார்களா..? வனிதாவை அந்த அடி அடித்த நீங்கள் குழுவாய் ஒருவரை நாமினேட் செய்வது தவறென ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே... ஏன்?

ஷெரினிடம் ஒன்று, வனிதாவிடம் ஒன்று என தர்ஷன் - ஷெரின் உறவைப் பற்றி சாக்சி சொன்னதை நான் எப்பவும் போட்டுக் கொடுக்கும் வேலை பார்க்கமாட்டேன் என்றாலும் இது பிரச்சினைக்கான தீர்வாய் இருக்கும் என  சாக்சியை வைத்தே சொன்னது சிறப்பு.

அடிக்கடி சொல்வது நல்லதல்ல என கவினுக்கு நண்பேன்டாவுக்காச் சொன்னது சரியே என்றாலும் அது எப்பவும் போல் கமல் என் பாக்கெட்டுக்குள்ள இருக்கார் என கவின் சொல்வதற்கு வழிதான் வகுத்துக் கொடுத்ததே தவிர, அதற்காக துளி கூட அவனை யோசிக்கவோ வருந்தவோ செய்யவில்லை... தர்ஷன் சொன்னப்போ புரிஞ்சிக்கிட்டேன் சார் என்றும் என் வாழ்க்கை நண்பர்களால் ஆனது என்றும் கடந்து போனான் கவின்.

கமலின் பேச்சின் இடையே ஷெரின் குறித்து பேச ஒரு பதினைந்து நிமிடத்தை வனிதா எடுத்துக் கொண்டார். கமலும் வீணாவுல எதுக்கு நிற்பானேன்னு போய் உட்கார்ந்து விட்டார். வனிதாவுக்கும் தர்ஷனுக்கும் பெரிய சண்டை ஆரம்பித்த போது வனிதா மெல்லப் பின் வாங்கினார். 

தர்ஷன், சேரன், ஷெரின் மட்டுமே வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் வனிதாவிடம் ஒரு கேள்விதான் கேட்டார்கள். ஷெரினைப் பற்றி ஓராயிரம் பதில்கள் சொல்லி, இடையில் பேச வந்தவர்களை நிறுத்தி, தான் மட்டுமே பேசினார்... இது மேலே சொன்ன காரணத்தின் வெளிப்பாடுதான்... எதிராளியைப் பேசவிட்டால் தன்னோட பேச்சின் வீரியம் குறைத்து வீழ்வோம் என்பதைக் கணித்து வைத்திருக்கும் மனிதர்களின் மிகப்பெரிய உக்திதான் இது.

மற்றவர்கள் எல்லாம் ஜெயலலிதா முன்.... அவ்வளவு தூரம் ஏன் போக.. சசிகலா முன் குனிந்து நின்ற எடப்பாடி போலத்தான் அந்த பதினைந்து நிமிடமும் நின்றார்கள். வனிதா ஷெரினை எந்தளவுக்கு கீழ்த்தரமானவள் என்று சொல்ல முடியுமோ அந்தளவுக்குச் சொல்லி, கவின் லாஸ்லியா காதல் கவித்துமானது... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்ற ரீதியில் பேசினார்.  

கவின் லாஸ்லியாவின் காதல் பண்பான காதல் என வனிதா சொன்னதற்கு இரண்டு காரணங்களே உண்டு. ஒன்று ஷெரினையும் தர்ஷனையும் தாக்கி அதில் தர்ஷனை வீழ்த்த, இவனுக ஆதரவு வேண்டும். ரெண்டாவது உள்ளே அக்கா சொல்றதைக் கேளுன்னு சொன்ன சாக்சி, வெளியில இருந்து ஷெரினுக்கு ஆதரவாய்ப் பேசியது. இவற்றைத் தவிர வேறெதுவும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை... நானே சர்வாதிகாரி என்ற நிலையில் தன்னை ஒருத்தி எதிரிக்கும் போது அவளை அடிக்க வனிதா நகர்த்திய காய்தான் கவின் - லாஸ்லியாவின் காதல் புனிதக் காதல் என்றது.

லாஸ்லியாவுக்கு தனது நட்புக்களை மனதில் நிறுத்துவதில் ரேசன் இருக்கிறது அல்லவா என கமல் கேட்டபோது ஆமென ஒத்துக் கொண்டார். கவினைக் காப்பாற்ற நல்லா விளையாண்ட முகனை நேரடி நாமினேசனுக்கு கொண்டு வர முயன்றவர்தான் என்ற போது நாமினேசனில் முகனைச் சொன்னதை வைத்துத்தான் இதைக் கண்டு பிடிக்க வேண்டுமா என்ன..? தனது கேள்வியால் முகன் புரிந்து கொண்டு விளையாட ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை கமலுக்கு... ஆனால் முகனுக்கு..?

போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வைத்து அபிராமி, சாக்சி, மோகன் மூவரும் ஓப்போ போனுக்காக சிறிய வீடியோ ஒன்று எடுத்தார்கள். போட்டியாளர்கள் தங்களை வீடியோ எடுத்தவரை போட்டோ எடுக்க வேண்டும். எந்தப் போட்டோ சிறந்தது என்பதை மூவரும் கேமரா முன் சொல்ல வேண்டும்... இதில் கூட வனிதாக்காவின் மனம்தான் குளிர்விக்கப்பட்டது.

அபிராமியும் மோகனும் வெளியில் இருந்து போட்டியாளர்கள் பற்றிய கருத்தைச் சொன்னார்கள். வனிதா அட்சய பாத்திரத்தோட வந்த மணிமேகலை, கற்பகத்தரு என்றெல்லாம் மோகன் பேசியது ரொம்ப அதிகம்... அபிராமிக்கு ஆச்சர்யம் கலந்த சிரிப்பு வந்தது. எனக்கும்தான்... வனிதாவுக்கு கைதட்டலாமே என மோகன் கேட்டு வாங்கிய போது கமலும் கைதட்ட, அது குளோசப்பில் காட்டப்பட்டது கவிதை.

மொத்தத்தில் கமல் எப்போது சார்பு நிலையிலிருந்து மாறுவார் என்ற எதிர்பார்ப்பை மனசுக்குள் தொடர வைத்ததுடன் வனிதா மோசமானவர் என்றாலும் அவரை மட்டுமே கட்டம் கட்டிப் பேசுதல் என்பது வெறுப்பாகத்தான் இருந்தது என்பதையும் மட்டுமே செய்ததுதான் நேற்றைய எபிசோடின் சாராம்சம்.

ஆண்டவர் இன்னைக்காவது எல்லாப் பக்கமும் அடித்து விளையாடுவாரா..? அல்லது அதே ஆப் சைடு விளையாட்டு மட்டும்தானான்னு பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 7 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : 'பச்சோந்தி' லாஸ்லியா

Image result for bigg boss-3 74th day images hd
முந்தைய நாளின் தொடர்ச்சியாய் சாண்டி அன் கோ படுக்கை அறையில் ஜாலியாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஷெரினுக்கிட்ட நான் தனியாப் பேசணும்ன்னு போய் சொல்லு என கவினிடம் தர்ஷன் சொல்ல, அடேய் இங்க சேரனைத் தொடர்ந்து குத்திக்கிட்டு இருக்கேன்... அந்தாளு கூட அருவாளைத் தூக்கலை... ஆனா இவ வெட்டியே ஆவேன்னு வீராவேசமாத் திரியிறா... இதுல வனிதா வேற ஏத்திவிட்டிருக்கு... இப்ப எரிஞ்சிக்கிட்டு வேற இருக்கா என்னைய எரிச்சிருவாடா... என நினைத்தபடி அதெல்லாம் சரியாகும்டா... கவலைப்படாதே எனத் தேற்றினான்.

அந்த நேரத்தில் சாண்டி மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என பள்ளிக்கூட டாஸ்க் மூணாம் வகுப்பு மாணவனாய் மாறி 'இங்க மொத்தத்துல மனுசனா இருக்கக் கூடாதுடா' எனத் சொன்னது செம. கவின் சோகமாயிருக்க தாடியே ப்ளஸ் பாயிண்டாக இருந்தது அதையும் லாஸ்லியா எடுக்கச் சொல்லிருச்சு போல... தாடியெடுத்துட்டு தனுஷ் மாதிரியிருந்தான்.

ஷெரினுடன் தர்ஷன் பேசிப் பிரச்சினையையும் ஷெரினின் அழுகையையும் முடிவுக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தான். தன்னை முதுகில் குத்தியது நண்பன் என்பதால் மன்னித்து விட்டுட்டுப் போக நானொன்றும் சசிக்குமார் இல்லை ஷெரின் எனப் பேசினார். அவரைப் பொறுத்தவரை வேறு யார் இப்படிப் பேசியிருந்தாலும் கடந்து போயிருப்பார் ஆனால் சொன்னது உயிர்த்தோழி வனிதா, தோழியாக இருந்த போதிலும் அவர் பேசிய வார்த்தை ஷெரினை ரொம்பத் தாக்கியிருக்கிறது. இதில் நான்தான் முடிவெடுக்கணும்.. இது உன்னையோ அவளையோ (காதலி) பாதிக்கப் போறதில்லைன்னு தர்ஷன் முழு விளக்கம் கொடுத்தான் என்றாலும் ஷெரின் சொன்னது தோழி அந்த வலி உனக்குப் புரியலையாங்கிறதுலயே நின்னாங்க.

ரொம்ப நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின் ஷெரினுக்குள் ஒரு மத்தாப்பு மெல்ல பூவாய் விரிய, அந்த நேரத்தை தர்ஷன் தனக்குச் சாதகமாக்கி என்ன சிரிப்பு எனச் சொல்ல, தேவதை புன்னகையை இதழ்களில் உயிர்ப்பித்தது.. இந்த இடத்தில் இருவரின் வேதியியல், உயிரியல், மண்ணியல், பெண்ணியல் எல்லாமே செம. தர்ஷனின் காதலி சனம் இந்தப் பிரச்சினையில் தர்ஷன் மேல செம கோபமாய் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். யூடியுப் சேனல்காரர்கள் அவர்களுக்குள் காதல் முறிந்தது என்பது வரை தலைப்பு வைத்து ஹிட்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் தர்ஷன் கடைசியில் தனியே தன்னந்தனியேதான் போல.

வெற்றிகரமான எழுபத்தைந்தாவது நாளை 'சொப்பன சுந்தரி நாந்தானே' பாடலுடன் ஆரம்பித்தார் பிக்பாஸ். ஷெரினும் சாக்சியும் ஒரு பக்கம் ஆட மற்றவர்கள் ஒரு பக்கம் ஆட ரகளையாய் ஆரம்பித்தது அந்தக் காலை.... அதெப்படி ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம்... வனிதாவுக்கு கொஞ்சமாச்சும் எடுத்துக் கொடுப்போமே என மோகன் ஷெரினுக்கு வைத்தியம் பார்த்தார்... இங்க எல்லாருமே... அதாவது எல்லாருமே உதட்டளவுலதான் பேசுறாங்க... உள்ளத்துல இருந்து வார்த்தை வரலை... புரிஞ்சிக்க ஷெரின்னு சொன்னதும் அருகில் முகன் இருந்ததால் முகனெல்லாம் அப்படியில்லை என்று சொன்னார் ஷெரின். அவனும்தான் என மோகன் சொல்ல, முகன் தட்டைக் கொண்டு போய் கழுவப் போடும் போது மோகனையே தூக்கிப் போட்டதா நினைச்சிருப்பான் போல... மோகனுக்கு கோமா வந்த மாதிரி ஆயிருச்சு.

அப்புறம் வெளியில போயி உக்கார்ந்திருந்தார்... முகன் வேற காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி சுத்திக்கிட்டு இருந்தான்... ஆஹா கட்டிலை உடைச்சாலும் பரவாயில்லை கட்டையில போறவன் கையைக் காலை உடைச்சிட்டான்னு பயந்த மோகன் அவனை அழைத்து உன்னோட பிரண்ட்ஸ் என்னைக் கலாய்க்கும் போது நீ எதிர்த்துப் பேசலை... பேசியிருக்கணும்... நைனா அப்படியில்லைன்னு சொல்லியிருக்கணும்... நீ சொல்லலை... எவ்வளவு வலிச்சிச்சு தெரியுமான்னு சிவாஜி பெர்பார்மன்ஸ் கொடுக்க, யோவ் இங்க சிவாஜியா நடிக்க ஒரு ரெண்டு பொண்டாட்டிக்காரன் இருக்கான்... நீ வேறயான்னு நினைச்சிக்கிட்டே, அவங்க கலாய்ச்சது நல்லாயிருந்துச்சு அதனால கேக்கலை... தப்புத்தான்... ஆனாலும் இனிமேல அவங்ககிட்ட கேட்க மாட்டேன். இப்பவும் உங்களை வச்சித்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க... நானும் சிரிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன் சொல்லாமல் சொல்லிட்டுப் போக, மோகனுக்கு ஏன்டா கூப்பிட்டுப் பேசினோம்ன்னு ஆயிருச்சு.

இந்த மோகனை நைனா நைனான்னு தூக்கித்தான் வச்சிருந்தானுங்க சாண்டி குழு... கேலி பண்ணினாலும் கிண்டல் பண்ணினாலும் பாசம் என்பது உண்மையாகத்தான் இருந்தது. அதில் லாஸ்லியா, கவின் நடிப்பெல்லாம் இல்லை... அது தரமான அக்மார்க் நெய்தான்... தனக்கு இருக்கும் வருத்தத்தை இருவரிடமும் மனம் விட்டுப் பகிர்ந்திருக்கலாம்... உட்கார்ந்து பேசினால் தீராத விஷயங்களே இல்லை ஆனால் நாம்தான் உட்கார்ந்து பேசுவதில்லை... அதனாலேயே சின்னப் பிரச்சினை என்று நினைத்திருப்பது மிகப் பெரிய பிரச்சினையாக பூதகரமான பிரச்சினையாக வளர்ந்து சாகும் வரை பேச்சு வார்த்தையில்லை... பச்சத்தண்ணி குடிக்கக் கூடாது அவன் வீட்டுல என உறவுக்குள் சுவர் எழுப்பி விடுகிறது. 

இனித் திரும்பப் போவதில்லை என்ற போதிலும் கூட கடைசியாக தன்னோட பிறந்தவன் / வள் முகத்தைக் கூட பார்க்க மாட்டேனென உட்கார வைத்துவிடுகிறது. எல்லாரையும் அத்து விட்டுட்டு வாழ்வதால்  போகும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம். மோகன் பெரிய மனிதர் என்றால்... வெளியில் பார்த்துட்டுத்தான் வந்திருக்கிறேன் என்றால்... அவர்களிடம் பேசியிருக்கலாம்... அவர்களும் மன்னிப்புக் கேட்டிருக்கலாம்... ரத்த உறவு இல்லையென்றாலும் இது கொஞ்சக் காலம் தொடரும் உறவாக இருந்திருக்கும். ஆனால் அவர் பேசவேயில்லை... செஞ்சிட்டானுங்கன்னு மனசுக்குள்ள வச்சிக்கிட்டு வன்மம் தீர்க்கப் பார்த்தல் முதுமைக்கு அழகல்ல. அதுபோக வனிதாவிடம் நல்ல பேர் வாங்குவதால் எந்தப் பிரயோசனும் இல்லை. ஏன்னா அதுவே தன்னைப் பெற்றவர்களிடம் நல்லபேர் வாங்க முடியாமல்தான் நடுத்தெருவில் நிற்கிறது. மோகனெல்லாம் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டும். தடித்த வார்த்தைகள் அன்பைக் கொடுக்காது என்பது புரியாத மனிதரா மோகன்...?

வனிதா சமையல்ல... காதல் கவின், சாண்டி, லாஸ்ஸான லியா, முகன் என எல்லாரும் ஜாலியாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். சாம்பார் கொதித்ததோ இல்லையோ வனிதா மனசு கொதிக்க, புயலென வெளியில் வந்து மதியச் சமையல் ஆரம்பிச்சிட்டோம்... என்ன பாத்திரம் வேணும்... ஏதைக் கழுவணும்ன்னு பாத்திரம் கழுவுற பயலுக வந்து கேக்க மாட்டீங்களா... உங்களை எல்லாம் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கணுமான்னு கத்த, புல்லுக்கட்டைப் பார்த்த கன்னுக்குட்டி மாதிரி வனிதா பின்னால ஓடினான் கவின்.

வனிதா கேக்கலைன்னு சொல்ல, ஒன்னறை மணி நேரமாக் கழுவுனோம்க்கா... அப்ப இந்தப் பாத்திரங்களைக் கொடுத்திருக்கலாம்ல்ல அவங்க ஏன் கொடுக்கலைன்னு சொன்னான். வனிதாவோ இப்பத்தானே சமைக்கிறோம்... அப்புறம் அப்பவே எப்படிக் கொடுப்போம்ன்னு சொல்ல, அதாங்க ஒன்ன்றை மணி நேரமா இங்கதானே கழுவிக்கிட்டு இருந்தோம்ன்னு கவின் ஆரம்பிச்சான்... முடிக்கவேயில்லை... நீ செஞ்சியா... என்ன நீ செஞ்சியான்னு வடிவேலு ஆடு திருடுன காமெடி ஒண்ணு இருக்குமே... அதுல கூட 'நான் சரியாத்தானே பேசுறேன்'னு தலைவர் சொல்லி டயர்டாகிருவாருல்ல அப்படி வனிதாக்காவை டயர்டாக்கிட்டான்.

இவனுக்கிட்ட பேசுனா நம்ம நிலமை கந்தல்ன்னு சேரன்கிட்ட உங்க அணியில் ஒருத்தர் வேலையே பார்க்கலைன்னு சொல்லி, அதுக்கு இடையில கமலஹாசன் மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்ட மாதிரி 'டூ பி ஹானஸ்ட்...', 'அஸ் ஏ கேப்டன்...', 'ப்ராங்கிளி ஸ்பீக்கிங்...', 'போல்டாச் சொல்லுறேன்...' எல்லாம் போட்டு ஏத்திவிட்டார். அங்கு வந்த ஷெரினிடம் சேரன் கேக்க, வனிதா வாயைத் திறக்க, அப்பா டேய் அது வாயாடா அது... திருவிழாவுக்கு குழாய் ரேடியோ கட்டுன மாதிரி கத்த ஆரம்பிச்சிருச்சு... ஆனா ஷெரின் குளிச்சிட்டு வந்து கேட்டப்ப எல்லாம் முடிஞ்சதுன்னு  சொன்னது அந்த வாய்தான்... அதைச் ஷெரின் சொன்னபோது பேச விடாமல் கத்திக்கிட்டே இருந்துச்சு... வனிதாவைப் பொறுத்தவரை எதிராளி பேசினால் தன் நிலமை மோசமாகும் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறார்.

எப்பவுமே ஒரு பிரச்சினையோட விஸ்வரூபத்தைத் தடுக்கணும்ன்னா எல்லாருடைய கவனமும் வேற பக்கம் திரும்புற மாதிரி எதாவது செய்யணும்... அதை சேரன் செய்தார்... சூடான பாத்திரத்தை அப்படியே தூக்க கையில் சுட்டு குதித்து ஓட, எல்லாரும் சார் பார்த்து எனக் கத்த, வனிதா பேஸ்ட் கொண்டு வந்தார். ஷெரின் தண்ணியில வைங்க என்றார். சேரனுக்குப் பேஸ்ட் போட சண்டைக்குப் பூட்டுப் போட்டாங்க என்றாலும் வனிதா வேலை முடிந்தது என்று சொல்லி பின்னர் வம்பிழுத்ததை ஷெரினால் தாங்க முடியவில்லை. சேரனிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினார். விடும்மா... என ஆறுதல் சொன்னார் சேரன்.

சாக்சி, வனிதா, சேரன், மோகன் பேசிக் கொண்டிருக்க, ஷெரினை ஏஞ்சல் எனச் சொன்னது இந்த ஊஞ்சல் வனிதாவுக்குப்  பிடிக்கலை... அதெப்படி எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்க்கிற நான் ஏஞ்சலாக இல்லாமல் எரிச்சலாக இருக்கிறேன்... ஒரு வேலையும் பார்க்காமல் காயத்துக்கு மருந்திடும் நர்ஸ் வேலை பார்க்கிற அவள் ஏஞ்சலாவாள் என்பதுதான் வனிதாவின் இந்த ருத்ரதாண்டவத்துக்கு காரணம் என்பது பேச்சு வாக்கில் வந்தது. சாக்சி இங்கிட்டு வாங்கி அங்கிட்டுப் போட்டு... அங்கிட்டு வாங்கி இங்கிட்டுப் போட்டு... ஆஹா... இதுக்கெல்லாம் ஆயிரம் அவார்டு கொடுக்கலாம். ஷெரின்தான் மெல்லப்படும் பொருள் என்பதாக மாற, சேரன் தண்ணி இல்லை என்பதாய் வாட்டர் கேனை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். ஜென்டில்மேன்கள் எப்பவும் இப்படித்தான்... வெண்டக்காய் நறுக்குவார்கள்... இல்லேன்னா வெளிநடப்புச்  செய்வார்கள்.

பட்ஜெட் டாஸ்க்ல யார் ரெண்டு நல்லா விளையாண்டாங்கன்னு ஜெயிச்ச டீம்ல இருந்து சொல்லுங்கன்னு உதவாக்கரை பிக்பாஸ் சொன்னாரு... தேர்வுல முதலிடத்தில் வரலைன்னா அவன் படிக்கலைன்னு அர்த்தமா... எங்க படிச்சீங்க பிக்பாஸ்... ரெண்டு அணியிலும் தலா ஒருவரைத்தானே தேர்ந்தெடுத்திருக்கணும்... அதைவிட்டு விட்டு ஒரு அணியில் இருவர் என்றால் தோற்ற அணியில் விளையாண்டவனுக்கு என்ன பயன்... உலகுக்கே முகினும் தர்ஷனும் விளையாட்டில் நல்லா விளையாண்டார்கள் என்பது தெரியும். இங்க உங்க அணி மட்டும் என்றதும் எதுவுமே விளையாடாத எங்க வனிதா தன்னோட பேரையும் தர்ஷனோட பேரையும் சொல்லிக்கிச்சு... அப்படியே வெற்றி பெற்ற அணி என்றால் ஷெரின் சொன்னது போல் சேரன் தன்னோட வேலையை நல்லாவே செய்தார். தர்ஷனுடன் ஓடி அவன் தள்ளிவிட உதவியாய் இருந்து அழகாக தலையணை தைத்து எல்லாம் பண்ணினாலும் அடிச்சி ஆடியது ரோகித் என்றாலும் கப் வாங்குறது கோலி மாதிரி அக்கா தன்னையே முன் நிறுத்திக்கிச்சு.

மொத்தத்துல பெஸ்ட்டுன்னு சேரன் அண்ணாவைச் சொல்றேன்னு சொன்னுச்சு... ஆனா முடிவில் எல்லாருமே ஒரு மனதா லாஸ்லியா என்றார்கள். இங்க முகினைச் சொல்லியிருக்க வேண்டும் என சிலர் எழுதியிருந்தார்கள்... டாஸ்க் மட்டுமின்றி ஒட்டுமொத்தமான எல்லா வேலைகளும் என்று வரும்போது சேரன், லாஸ்லியாதான் சரியான தேர்வு... அதில் லாஸ்லியாவுக்கு என்பது சரியே. கவினுடன் லவ்வினாலும் வேலைகளை சரிவரச் செய்திருந்தார். எல்லாத்தும் அந்த 'ஈஈஈ'ன்னு சிரிக்கிறதை விட்டுடலாம்... அது பார்க்கச் சகிக்கலை. சரி யாருடா சரியா விளையாடலைன்னு ஜெயிக்கிற அணி சொல்லனும்ன்னு சொல்லி வச்சிருந்த பிக்பாஸ், எப்படியும் கவினைத்தான் சொல்லுவானுங்க... ஏற்கனவே ஷெரின்- கவின், சேரன் - கவின், வனிதா - கவின்னு வாய்க்கால் தகராறு இருக்கு... அப்புறம் அதுக்கு ஒரு பஞ்சாயத்தைக் கூப்பிட்டு இந்த வனிதா தன்னைக் கண்டமேனிக்குத் திட்டும் என்பதால் தோற்ற அணியே முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டார்.

எப்பவும் போல கவின் முன்வர, லாஸ்லியா அவனைக் காப்பாற்ற முகனையாவது சாண்டியையாவது வண்டியில் ஏற்ற பெரும் முயற்சி எடுத்தார்... ஆனாலும் அது வெற்றி பெறவில்லை...கவின் அடுத்த வாரத்துக்கு நேரடி நாமினேசன் ஆனார். லாஸ்லியாவுக்கு முகம் காற்றுப் போன பூரி மாதிரியாயிருச்சு... ஒரு காயின் கிடைத்ததை வேண்டா வெறுப்பா எடுத்து வந்து உண்டியல்ல எரிஞ்சிட்டு உம்முன்னு போயி கம்முன்னு படுத்துட்டார். கணவனைக் காக்க முடியலையே... சாவித்திரி ஆக முடியலையேன்னு கவலை... அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு.

சரி விருது கொடுக்கலாம்... அப்பத்தான் அடிச்சிப்பானுங்க... நமக்கு எபிசோடை தயாரிக்க விருந்து கிடைக்கும்ன்னு வெளிய இருந்து போனவங்க முடிவு பண்ணி, என்ன காரணத்துக்காக இந்த விருது எனச் சொல்லிக் கொடுங்கன்னு பிக்பாஸ் சொல்லிட்டார்... எந்த விருது யாருக்கு என்பதையும் அவரே சொல்லி விட்டிருப்பார் என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா..?

விழா மேடையில் நடுவர்கள்... அபிராமி அழகுய்யா... முதல் விருதான 'பச்சோந்தி' லாஸ்லியாவுக்கு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி நானெல்லாம் இதை ஏத்துக்க முடியாது என தூக்கியெறிந்தார். உடனே சண்டை... சாக்சிக்கும் லாஸ்லியாவுக்கும் குழாயடிச் சண்டை... ரெண்டு பொண்டாட்டிக்காரன் நிலமை திருவிழாவுல காணமப்போன குழந்தை மாதிரித்தான் என கவின் புரிந்து கொண்டிருப்பான். சண்டை உச்சம் பெற மோகனைப் பார்த்து லாஸ்லியா அலோ என அழைக்க, மோகன் நரசிம்ம அவதாரம் எடுத்தார். சண்டையின் களம் மாறுவதைப் பார்த்த சேரன், இடையில் புகுந்து காரணம் சொல்லாமல் கொடுத்தது தவறுன்னு பேசி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்பா - மக பாசத்தில் லாஸ்லியா பச்சோந்தியாய் இருக்கிறார் என்று சொன்னதை சேரன் ஏற்கவில்லை... வேறு காரணம் சொல்லிக் கொடுக்கப்பட்ட போது லாஸ்லியா தான் செய்தது சரியே என்பதாய் போட்டு விட்டுத்தான் வந்தார். மேலும் லாஸ்லியா நடந்து கொண்ட விதம் மிகமிக கேவலமானது. மக்கள் தன்னையும் கவினையும் உச்சத்தில் தூக்கி வைத்து இருக்கிறார்கள் என்ற மதர்ப்பு லாஸ்லியாவுக்குள் அதிகமிருக்கிறது. ஆரம்பக் கைதட்டலையும் தற்போதைய கைதட்டலையும் உற்று நோக்கி ஆராய்ந்தார் என்றால் அவருக்கே உண்மை புரியும்... இங்கே வான்கோழி தன்னை மயிலாக நினைத்துக் கொண்ட கதைதான் நடக்கிறது. மயிலை ஒவியா என்றும் சொல்லலாம்.

சாண்டிக்கு நரி விருது கொடுத்ததும் தாங்கள் ஐவரும் யாரை நாமினேட் செய்வது என முன்முடிவு செய்வதைத் தைரியமாக மேடையில் ஒத்துக் கொண்டார். யாரை நாமினேசன் செய்வது என்றோ... செய்தோம் என்றோ பேசக்கூடாது என்பது பிக்பாஸ் விதி, அதை நாங்கள் உடைத்துத்தான் இருக்கிறோம் என்ன செய்வாய் பிக்பாஸ் என்பதாய் இருந்தது அவரின் பதில்... மேலும் முதல் இரண்டு சீசன்களில் இருந்த கமல் வேறு... இப்போதிருக்கும் கமல் வேறு... இவர் எங்க பாக்கெட்டுக்குள்ள இருக்கார் என்பதாய்த்தான் இருந்தது அவரின் வெளிப்படையான பேச்சு.

கவினுக்குத் தவளை, சேரனுக்கு யானை, முகனுக்கு கிளி, ஷெரினுக்கு மின்மினிப்பூச்சி, வனிதாவுக்கு கொசு, பசு என விருதுகள் வழங்கப்பட்டன.  எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. 

விருதை மதிக்கணும் என லாஸ்லியாவுக்கு வகுப்பெடுத்தவர் வனிதாவுக்கு மற்றொரு விருது கொடுக்கப்பட்ட போது வாங்க மறுத்து பெரிய நாவலே எழுதினார். ஒரு வழியாக பிரச்சினைகளுடன் நடந்த விருது விழா முடிவுக்கு வர, மோகன் லாஸ்லியாவுடன் சமரசம் பேசினார். லாஸ்லியாவோ அலோ சொன்னதுக்கு மட்டும் சாரி கேட்பேன்... இந்த வீட்டுல சாரிக்கு மரியாதையில்லை...  அப்படியிப்படின்னு பேசினார். மேலே சொன்னதுதான் ஓவியா என்னும் அணிலைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருக்கும் எலிதான் லாஸ்லியா.

கமல் வரும் நாட்கள் அழகாய் இருந்தன முந்தைய சீசன்களில்... அப்ப இந்த சீசனில்... கமல் ஏன் வருகிறார் என்றே தோன்றுகிறது. எப்பவும் போல் கவினுக்கும் சாண்டிக்கும் சொம்படித்து விட்டு சாதித்ததைப் போல் மக்களுக்கு கருத்துச் சொல்லிவிட்டுச் செல்வார். 

சேரன்தான் என்றாகிவிட்டது இந்த வாரம்... வனிதா செய்த காரியத்தால் ஷெரினுக்கு ஓட்டுக்கள் கூடி விட்டன. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் தனிப்பட்ட முறையில் ஓட்டுக்கள் வழங்கப்படுகின்றன என்பதாய்ப் பேச்சு.... சேரனை சீக்ரெட் அறைக்கு அனுப்பலாம் என்ற வதந்தியும் இருக்கு... சீக்ரெட் அறை என்றானால் சேரனைவிட ஷெரின் அல்லது லாஸ்லியாவை அனுப்பலாம்.

பார்ப்போம் ஆண்டவரின் அந்தர் பல்டி ஆடுறா ராமா வகைதானா இல்லை அதையும் தாண்டி அதிரடியாய் இருக்கிறதா என்பதை...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

மனசின் பக்கம் : கணினித் தமிழும் ரியாத் தமிழ்ச்சங்கமும்

புதுக்கோட்டை கணினித் தமிழ்சங்கம் நடத்தும் இணையத் தமிழ் பயிற்சி முகாம் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் வரும் அக்டோபர் மாதம் 12, 13ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. 

எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சி என்பது இணையம் இல்லாது சாத்தியமில்லை... இனி வரும் காலம் இணையத்தோடு பயணிக்கும் காலம்தான். இணையத் தமிழில் சிறந்தவர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

இந்தப் பயிற்சிக்கு நன்கொடையாக் மாணவர்கள் எனில் ரூ.100ம் மற்றவர்களுக்கு ரூ.200 ம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை இரண்டு நாட்களுக்கான மதிய உணவு, தேநீர், கையேடு போன்றவைகளுக்காக மட்டுமே. மேலும் இந்த நிகழ்வுக்கு நன்கொடை செலுத்த நினைப்பவர்கள் முத்து நிலவன் ஐயாவின் பதிவில் கொடுத்திருக்கும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


மொத்தம் நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதாலும் பயிற்சியாளர்கள், விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் என 25 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்பதால் 75 பேருக்குத்தான் இந்த வாய்ப்பு. விரைந்து முன்பதிவு செய்யுங்கள். மிகச் சிறப்பானதொரு வாய்ப்பு இது வாய்ப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

விழா குறித்த முழு விபரங்கள் அறிய அழைப்பிதழ் பார்க்க முத்துநிலவன் ஐயாவின் கீழ்க்கண்ட பதிவுகளின் சுட்டி வழிச் சென்று அறிந்து கொள்ளுங்கள்.
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் பங்கு பெற அழைப்பு
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ்
வருடா வருடம் சிறப்பாக பயிற்சி முகாம் நடத்தும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அண்ணா, மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

எனது சிறுகதை மூன்றினை பிரதிலிபியில் ஆடியோ கதையாக மாற்றியிருக்கிறார்கள்.  தொழில் நுட்பக் கோளாறு என்பதால் கதை எழுதிய, வாசித்தவரின் பெயர் இடம்பெறவில்லை. சென்ற முறை இரு கதைகளை இதே போல் ஆக்கிய போது ஆடியோ பைல் எழுதியவருக்கு அனுப்பப்படவில்லை. இந்த முறை நான் கேட்டிருந்ததால் அனுப்பியிருக்கிறார்கள். ஆடியோ பதிவை இங்கு இணைக்க முடியவில்லை. அனுப்பிக் கொடுத்த அவர்களுக்கு நன்றி.

சிறுகதைகள். காம் தளத்தில் எனது முதல் கதை (விழலுக்கு இறைத்த நீர் - சேனைத்தமிழ் உலா சிறுகதை போட்டி -2015-ல் முதல் பரிசு பெற்றது) சென்ற வாரம் பகிரப்பட்டு அந்த வாரத்துக்கான சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு சிறந்த கதைகள் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. நன்றி சிறுகதைகள்.காம்.


ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில நான்கு நடுவர்களின் தேர்வாய் வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய இருக்கும் ஐந்தாவது நடுவரின் கரத்துக்குச் சென்ற 40 கதைகளில் எனது கதையும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி. பரிக்குரிய கதையாக தேர்வாகிறதோ இல்லையோ வெற்றியாளர்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதே மிகப்பெரிய விஷயம்தான்... அழுகாச்சி கதைகள் எல பலர் கேலி செய்தாலும் இவையே வாழ்க்கையைப் பேசுகின்றன என்பதை என் 'வீராப்பு' நிரூபித்திருக்கிறது. நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்... இதைத் தெரிவித்த, எங்கள் அமீரக எழுத்தாளர் குழுமத்தில் பகிர்ந்து கொண்ட சகோதரர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும்  வாழ்த்திய நட்புக்களுக்கும் நன்றி.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வனிதாவின் பேயாட்டம்

Related image
73ம் நாளின் தொடர்ச்சியாய்  தன்னையும் தர்ஷனையும் சேர்த்து வைத்து வனிதா பேசியது தொடர்பாக தர்ஷனுடன் பேசிக் கொண்டிருந்தார். மிகத் தெளிவான பேச்சு இருவரிடமும்... இருவருக்குள்ளும் காதல் என்னும் ஒன்று மெல்ல இடையோடியதையும் சேரன் முன்பே சொன்னதைப் போல் காதலுக்கும் நட்புக்கும் இடையிலான மெல்லிய ஒரு கோட்டில் பயணிக்கும் அழகான நட்பாய் சூழல் கருதி மாற்றிக் கொண்டதையும் பேசினார்கள்.

ராத்திரி ரெண்டு மணிக்கெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு என கமல் ஒரு முறை சொன்னபோது எல்லாரும் கவின் லாஸ்லியா என்று நினைத்திருக்க, அந்த இடத்தில் தாங்களும் இருந்ததை... அதன் பின் தங்களுக்குள் இடைவெளி அமைத்துக் கொண்டு நட்பைத் தொடர்வதையும் பேச்சின் ஊடே சொல்லிக் கொண்டார்கள். மேலே சொன்னதைப் போல் மிகத் தெளிவான பார்வை தங்கள் நட்புக் குறித்து இருவருக்குள்ளும் இருக்கிறது. இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை..?

பேசிக் கொண்டிருக்கும் போது சாக்லெட் பேப்பரைக் கடித்துக் கொண்டிருந்த தர்ஷனிடம் பேப்பரைத் தின்னுறாதே... உனக்கு வேணும்ன்னா நான் வேற சாக்லெட் கொண்டு தாரேன் என ஷெரின் சொன்னது கவிதை... இந்த நட்பையா அப்படி ஒரு வார்த்தை சொல்லி கொச்சைப் படுத்துகிறீர்கள்... இவர்களின் நட்பு விவகாரமான (AFFAIR) காதல் என எப்படி உங்களால் யோசிக்க முடிகிறது..?

மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சியாய் மாரி படப்பாடல்...

'தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு
சரியான பயலா கெட் அவுட்டு
கொஞ்சம் ராங்காதான் இருக்கும்
ஆனா ரைட்டு' 

வீட்டுக்குள்ள சிரிப்பாச் சிரிச்சா பிக்பாஸ் சிச்சுவேசன் பாடல் போட மட்டும் மறக்கமாட்டாரு... ஷெரின் - தர்ஷன் நட்புக் குறித்த தவறான பார்வை வீட்டுக்குள் விரவிக் கிடக்கும் நிலையில் இந்தப் பாடல்... சாக்சிக்கிட்ட நீ விருந்தாளியாத்தான் வந்திருக்கே ஆடலைன்னா பிக்பாஸ் கோவிச்சிக்க மாட்டாருன்னு யாராச்சும் சொன்னா நல்லாயிருக்கும்.

காலையில் டிபன் ஷெரின் செய்யணும் அவங்க வரவில்லை என்பதால் மோகன் செய்திருப்பார் போல, மேலும் முதல் நாள் மதியம் செய்ய வேண்டிய சாப்பாட்டையும் அவர் நேரத்துக்கு செய்து முடிக்கலை போல  இதை ஒரு பெரிய குற்றமாக வனிதா பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில் பாத்திரம் கழுவுறது யாரு லாஸ்லியாதானேன்னு அழைக்க, என்னைச் சமையல்ல இருந்து பாத்திரம் கழுவ மாத்தியிருக்கீங்களான்னு வந்த லாஸ்லியாவிடம் விவரம் சொல்லியபடி ஷெரினைக் கட்டம் கட்டினார் வனிதா.  

முந்தின நாள் தர்ஷனையும் தன்னையும் சம்பந்தப்படுத்திய பேச்சில் கடுப்பில் இருந்த ஷெரின் சற்றே கோபமாய் குரலை உயர்த்த, சேரன் கூட அவ சொன்னப் புரிஞ்சிப்பா வனிதா என பேசினார். ஆனால் வனிதா வசம்பு தேய்த்த வான்கோழிக் குஞ்சு மாதிரி கியாக் கியான்னு கத்திக்கிட்டே இருக்க, எதிர்க்குரல் எதுவும் ஒலிக்காத வண்ணம் அடக்கியாள, ஒரு கட்டத்தில் ஷெரின் அதீத கோபத்தில் வெளியேறினார். 

சாக்சி அவர் பின்னே ஓடினார். இங்க யாரும் சின்னப்பிள்ளை இல்லை... உடனே பின்னால போயி சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்த வேண்டாம்... கொஞ்சம் விட்டா சரியாயிருவாங்க... என்னாச்சுப்பா... ஏதாச்சுப்பான்னு போயி ஏத்தி விடுற வேலையை முதல்ல விடுங்கன்னு வனிதா கத்திக்கிட்டு இருந்தார். சாக்சி உள்ளே வந்தது கவினையும் லாஸ்லியாவையும் வச்சிச் செய்வார் எனப் பார்த்தால் இவருக்குக் கொடுக்கப்பட்ட பணி வேற போல.

மீண்டும் ஒரு வட்ட மேசை மாநாடு... வனிதாவே நடுவர்... வனிதா பேச்சாளர்.. வனிதா எதிரணியும்... ஷெரினைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே வைத்து ஒரு பேச்சு... யார் எது சொன்னாலும் 'டூ பி ஹானஸ்ட்', 'நானே தலைவர்' எனச் சொல்லி பேச விடவில்லை. தர்ஷன் கூட பேசுறவங்களைப் பேச விடு... நீயே பேசிக்கிட்டுன்னு சத்தம் போட்டான். தர்ஷனுடைய குரல் ஒலிக்க ஆரம்பித்தாலே வனிதாவுக்கு பேதியாயிரும்... நீ பேசாதே... நான் உன்னைச் சொல்லலைன்னு ஜகா வாங்கிரும்.

சாண்டி கூட இதை நீங்களே பேசி முடிவு பண்ணியிருக்கலாம்... இல்லை இதை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்... அதை விட்டுட்டு எதுக்கு சுற்றி வளைத்துப் பேசுறேன்னு வனிதாவைக் கேக்க, உடனே அக்கா குரலை உயர்த்துச்சு. சேரன் இடைபுக, வனிதா அடித்து அடக்க, அந்தாளு வெடிக்க ஆரம்பித்தார். இப்ப என்ன நீயே பேசிக்கிட்டு இருக்கே... எம்புட்டு நேரம் நாங்க இங்க இருக்கது... முட்டாளா நாங்கன்னு கத்திய போது சாண்டி, சேரன் பேசுவது சரியென நின்றார்.

சேரனின் குரல் உயர்ந்தவுடன் வனிதா அடங்க, சேரன் சற்றே வேகமாக, குரலை உயர்த்தி வனிதா என்ன சொல்ல வர்றான்னான்னு விபரமாச் சொன்னார். அந்த நேரத்தில் கேமரா 'காதல்' கவினுக்குப் போக தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சேரன் பேசினாலோ... சேரனுடன் லாஸ்லியா பேசினாலோ... கவினுக்கு கடுப்பாயிரும்... அப்புறம் லாஸ்லியாக்கிட்ட சோகமா எதாவது நடிப்பைப் போடணும்... ஆனா இந்தச் சுழல் வேற ஒரு பக்கமா நகர்வதால் நடிக்க முடியாமப் போயிருச்சு... அது கூட அவனுக்கு வருத்தமாயிருக்கலாம்.

ஷெரின் மிகவும் கோபமாகி, என்னையும் தர்ஷனையும் பற்றிப் பேச இங்க யாருக்கும் உரிமையில்லை என்றபடி , மோசமான பேச்சுக்கள் கொடுத்த வலியில் உடைந்து அழுதபடி வெளியேற, சாக்சி பின்னே போனார்... என்னோட பிரண்டா இருந்துக்கிட்டு அவகிட்ட பேசியதை இப்படி பொதுவில் வைத்து என்னைத் தாக்குறான்னு அழ, சாக்சியோ வனிதா சொல்வதைக் கேளு... அவகிட்ட மன்னிப்புக் கேளு... அவ உனக்காகத்தான் பேசுறா... நான் வெளியில பாத்துட்டு வந்திருக்கேன்... என்றெல்லாம் கேனத்தனமாக சமாதானம் பேசிக்கிட்டு இருந்துச்சு. அப்ப வந்த சேரன் ஷெரினிடம் நீ ரொம்பத் தன்மையான பொண்ணு... உன்னால அவகிட்ட பேசிச் சரி பண்ண முடியும்.. அழாதே எனச் சொல்லி ஆறுதல் படுத்த, சேரனிடமே அதிகமாக எதையும் பேசக்கூடிய ஷெரின் என்னால முடியல சார்... என்னென்னவோ பேசுறாங்க... உங்களுக்கு என்னைப் பற்றி தெரியும்தானேன்னு சின்னக் குழந்தை போல அழுதார்... பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அந்த நேரத்தில் வனிதா அங்கு வர, சாக்சி அவரை உக்கார வைத்து இருவரும் பேசுங்க என்று சொன்ன போது வனிதா வேற மாதிரி ஆரம்பிக்க, ஷெரின் எதிர்த்து நிற்க, சேரன் எழுந்து செல்ல, சாக்சி அண்ணா வாங்க நீங்க இருந்தாத்தான் சிக்குவீங்கன்னு அழைக்க, நம்மால பேச முடியாதும்மான்னு அடுப்படிக்குப் போய் சமையலுக்கு உதவ ஆரம்பித்தார். அதே நேரம் வெளியே பிரச்சினை மிகப் பெரிதாகி, வனிதாவின் வாயில் தர்ஷனுக்கும் ஷெரினுக்குமான உறவு கள்ளத்தனமானது... ஏன்னா அவனுக்கு வெளியில ஒருத்தி இருக்கா... நீ அவளுக்குத் துரோகம் பண்ணுறேன்னு பேச, என்னைப் பார்த்து எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்வேன்னு ஷெரின் அடித்து ஆட, தர்ஷன் சற்றே தள்ளி நின்று கேள்வி கேட்டான். 

நேரா அவனிடம் போன ஷெரின் நம்ம நட்பைக் கொச்சைப்படுத்துறா... உனக்கு நான் என்னடா பண்ணுனே... வெளியில இருக்க அந்தப் பொண்ணுக்கு துரோகம் பண்ணினேனா... இனி நான் யார் கூடவும் பேசலை... உன் கூடவும் என சொல்லவும் தர்ஷன் வனிதாவை மீண்டும் கேள்வி கேட்டதும், உன்னைப் பேசலை தர்ஷன் இது வேற மேட்டர் என வின்னர் வடிவேலு கணக்காய் நானும் கோட்டைத் தாண்டி வரலை... நீயும் வராதேன்னு கேட்டைப் போட, என்னைப் பற்றித்தானே பேசுறேன்னு கேட்டதும் உன்னையில்லைன்னு சொல்லிட்டேன்... இது யாரோ அவ பக்கத்து வீட்டு தர்ஷனாம் அப்படின்னு ஜகா வாங்க, என்னைத்தான் சொன்னேன்னு பய நிற்க, சரி உக்காந்து பேசுறதுன்னா இங்க வான்னு வனிதா கூப்பிட்டுப் பேசிச்சு.

தர்ஷனிடம் வனிதா விளக்கிக் கொண்டிருக்க, கக்கூஸ்க்குள்ள தீரைச்சீலைக்குப் பின்னே ஷெரின் புலம்பி அழுது கொண்டிருக்க, சாக்சி சமாதானம் செய்வதைப் போல் சகுனி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வனிதாக்கா தெய்வம்... வனிதாக்கா தேவதூதர்... வனிதாக்கா செம்மனச் செம்மல்... வனிதாக்கா புண்ணியவதி... வனிதாக்கா புரட்சித் தலைவி... வனிதாக்கா வரலாற்று நாயகி... வனிதாக்கா தெய்வத் திருமகள்... அப்படின்னு வனிதாக்கா புகழ்பாடி அவ கால்ல போயி விழுன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு... இந்தப் பேச்சுல மக்களை நாய்யின்னு சொல்லிருச்சு சாக்சி... ஷெரின் மக்களை ஏன் சொல்றேன்னு கேட்க, அவங்க அப்படித்தான் நடந்துக்கிறாங்கன்னு வேற சொன்னுச்சு... இந்த நிகழ்ச்சியை பார்த்து இவங்களுக்கு ஓட்டு வேற குத்தி... ஆர்மி எல்லாம் வச்சிக்கிட்டு கவினைத் திட்டாதே... லாஸ்லியாவைத் திட்டாதேன்னு போராட்டமெல்லாம் பண்ணிக்கிட்டு சின்சியரா வேலை பார்க்கிற மக்கள் நாயாம்... பணத்துக்காக நாயா அடிச்சிக்கிற அவங்க நல்லவங்க... நாம நாய்... கமல் இந்த நாய் விவகாரத்தை கையில் எடுப்பாரா... இல்ல  நயமாப் பேசி முடிச்சிடுவாரா...?

வனிதாவைப் பொறுத்தவரை கொடுத்த காசுக்கு அதிகமாக் குரைக்கிற... சாக்சியைப் பொறுத்தவரை கடிக்க வேண்டிய இடத்தில் கடிக்க முடியாமல் கத்துற... மோகனைப் பொறுத்தவரை வாசல்ல நின்னு கத்துற... கவினைப் பொறுத்தவரை கார்த்திகை மாசத்து... லாஸ்லியாவைப் பொறுத்தவரை இணையுடன் குலாவும்... சாண்டியைப் பொறுத்தவரை கார்த்திகை மாசத்து... காவல் இருக்கும்... இப்படி பல நாய்கள் இருக்கையில் மக்கள் நாய்களாம்... என்னத்தைச் சொல்ல.

வனிதா ஷெரின் பிரச்சினையில் கவின் பேசவே இல்லை... நேற்று கவின் லாஸ்லியாவின் குரல் இல்லாமல் நகர்ந்தது சிறப்பு... இப்படியே தொடர்ந்தால் நல்லது... இப்பவும் சொல்றேன் சேரன் சார் உங்க நிறுத்தம் வந்தாச்சு... இறங்கிருங்க... அதான் நல்லது... இல்லைன்னா வனிதாவின் அடுத்த டார்க்கெட் நீங்கதான்... 

ஷெரினை அந்த வார்த்தை ரொம்பவே தாக்கிருச்சு... தன் வேலையுண்டு தானுண்டுன்னு இருந்தவரை அழ வைத்து வேடிக்கை பார்த்துட்டாங்க... இந்த அழுகை ஷெரினுக்கான ஓட்டுக்களை இன்னும் அதிகமாக்கும் என்றாலு சின்னப் பிள்ளை போல் அழதது மனசுக்கு வலியாய்த்தான் இருந்தது.

வனிதாவெல்லாம் பெத்தாங்களா இல்லை சொர்ணாக்காகளின் குணாதிசயங்களை எல்லாம் பொறுக்கி எடுத்து செஞ்சாங்களா... ஆத்தாடி என்ன பொம்பள இது..? நல்லவேளை விஜயகுமார் விரட்டி விட்டுத் தப்பிச்சிட்டாரு... ஆனா பிக்பாஸ் மறுபடியும் கூட்டியாந்து மாட்டிக்கிட்டாரு... இன்னும் செய்ய வேண்டியது மிஷன் சேரன், மிஷன் கமல், மிஷன் பிக்பாஸ் மட்டுமே... அதையும் செஞ்சிருச்சுன்னா அக்கா ரொம்ப நிம்மதியா வீட்டுக்குப் போகும்... ஆமா இதைப் பார்க்கிற அக்காவோட பிள்ளைங்க வீட்டில் இருக்குங்களா..?

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 5 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வனிதாவின் மிஷன் ஷெரின் உண்மையானதா..?

Image result for biggboss 04 september 2019 images hd
முதல் நாளின் தொடர்ச்சியாய் தேர்தல் முடிவுக்கு காத்திருக்கும் தொண்டர்கள் போல ஆங்காங்கே குழுவாய் அமர்ந்து பேசினார்கள். 

வனிதாவும் சாக்சியும் கவினைப் பற்றிப் பேசினார்கள். சாக்சியைப் பொறுத்தவரை உன்னைக் காதலிக்கலை ஆனா லாஸ் என்னோட பிரண்ட் என்ற வார்த்தைதான் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் 'காதல்' கவின் அப்போதே ஆமா அவதான் என்னோட லவ்வர்ன்னு சொல்லியிருந்தாலோ... நான் அவனை லவ் பண்றேன்னு லாஸ்லியா தைரியமாச் சொல்லியிருந்தாலோ சாக்சி இதைப் பத்தோடு பதினொன்றாய்க் கடந்து போயிருப்பார் என்றே தோன்றுகிறது. இவர்களின் இந்த நம்பிக்கைத் துரோகத்தைத்தான் அவரால் தாங்கமுடியவில்லை... அதுவே அவ்வப்போது வெடிக்கிறது.

உள்ளே வந்திருக்கும் மூவரில் அபிராமி நான் உங்களோட ஜாலியாக இருக்கத்தான் வந்தேன்... ஆனா அவங்க முன் முடிவுகளுடன் வந்திருக்காங்க... எனக்கு அதெல்லாம் தெரியாதென ஐவர் குழுவுடன் ஆட்டம் போடுகிறார். 

பிக்பாஸ் விதிகளே வெளியில் இருப்பதைச் சொல்லக் கூடாது என்பதுதான் என்றாலும் மூவரும் வெளியில் நடப்பதை... பிக்பாஸில் நடப்பதைப் பார்த்ததைச் சொல்லி, எட்டுப் பேருக்குள் முரட்டுப் புயல் அடிக்கும்படியாக காய் நகர்த்துகிறார்கள். ஒருவேளை மொக்கை போடுறானுங்கய்யா... நீங்க கொஞ்சம் போட்டுக் கொடுத்துட்டு வாங்கய்யான்னு பிக்பாஸே மீட்டருக்கு மேல போட்டுக் கொடுத்து அனுப்பியிருப்பாரு போல.

நைனா வரணும்ன்னு ஐயனாரு கோவிலுக்கு கிடா வெடடுறோமுன்னு வேண்டிக்கிட்ட ஐவர் குழுவுக்கு நைனாவின் வரவே நம்மளை வெட்டத்தான் என்பது புரிந்து புலம்பிக்கிட்டுத் திரிய ஆரம்பிச்சிட்டானுங்க.... அதிலும் கவின் சேரன் மன்னிப்புக் கேக்கணும்ன்னு சொன்ன மாதிரி, தங்களை கட்டியணைத்து விடைபெறாத நைனா அதுக்காக மன்னிப்புக் கேட்காட்டியும் வருத்தமாச்சும் படணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இதுவரை இவன் யாரிடமாவது செய்த செயலுக்கு வருத்தமோ மன்னிப்போ கேட்டிருக்கிறானா... செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்... ஆனா அடுத்தவர்கள் சார்க்கிட்ட மன்னிப்புக் கேட்கணும்... என்ன சார் நியாயம் இது...?

விளக்கணைத்த பின் வனிதா, சாக்சி, ஷெரின், சேரன் பேசிக்கிட்டு இருந்தாங்க... சாக்சியும் வனிதாவும் வெளியில் காட்டுவதை... மக்கள் பேசுவதை வைத்துப் பேசிக் கொண்டிருக்க, சாக்சியோ ஷெரின் வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்றதும் வனிதா அவளை முதலில் விளையாடச் சொல்லு... அப்புறம் வெற்றியைப் பற்றி யோசிக்கலாம் எனச் சொன்னதுடன் தர்ஷனுடன் இணைத்துப் பேச ஆரம்பித்தார். இதை ஷெரின் தீவிரமாக எதிர்க்க, சண்டை வலுத்தது. இனிமே இப்படிப் பேசாதேயென சொல்லியபடி ஷெரின் வெளியே போனார். ஆமா சேரன் அங்கெதுக்கு உட்கார்ந்திருந்தார்..? 

வெளியில் போன ஷெரினைச் சமாதானப்படுத்த பின்னால் சென்ற சாக்சியிடம் வனிதா என்னோட தோழிதான்.... ஆனாலும் எதைப் பேசணும்ன்னு இருக்குதானே... தர்ஷன் என்னோட பிரண்ட்... எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு... அதைக் காதல்... காதல்ன்னு சொல்றா... எதுக்கு அப்படிச் சொன்றான்னு ஒரு பாடு அழுதார் ஷெரின். 

ஷெரின், அடுத்தவங்ககிட்ட செல்வாக்குப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்... அதுக்கு மத்தவங்க எப்படி நமக்கிட்ட நடந்துக்கணும் என்றெல்லாம் பேசினார். சாக்சியும் ஒத்துப் போனார். ஷெரினைப் பொறுத்தவரை தேவையானதை சேமித்துக் கொள்வேன்... தேவையில்லாததை வெளியே தள்ளிடுவேன் என முன்பே கமலிடம் சொல்லியிருக்கிறார்... அதன்படிதான் அவரின் செயல்பாடு இருந்தது.

மொத்தத்தில் என்னையும் தர்ஷனையும் சேர்த்து கவின், லாஸ்லியா அளவுக்கு ஒரு கதையை உண்டு பண்ணீடாதீங்க... அது உருப்படாத கேசு... நானும் தர்ஷனும் விளையாட்டை விளையாட்டாய் பார்த்துக் கொண்டு நட்பாய் நகரும் உருப்பட்ட கேசு... இங்கயிருந்து பொயிட்டா யாரும் யாருக்கும் சொந்தமுமில்லை பந்தமுமில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார் ஷெரின்.

வெளியில நைனா கூட கவின், சாண்டி, தர்ஷன், சாக்சி பேசிக்கிட்டு இருந்தாங்க.... அப்பத்தான் அதுவரை ஞாபகத்தில் வராத கவின் தாவி விழுந்தது ஞாபகத்தில் வந்து, அதைப் பார்த்து அழுதுட்டேன் தெரியுமான்னு நைனா நைசா திரியைக் கிள்ளி பத்த வச்சாரு... உடனே சாக்சி வெடி வெடிக்க ஆரம்பிச்சிருச்சு... சாண்டி யாரையும் நான் தள்ளி விடலை... அப்படியொரு கேவலமான புத்தி அந்த யாருக்கோ மாதிரி எனக்கில்லைன்னு சொல்ல, கவினுக்கு உச்சி மண்டையில நச்சுன்னு போட்ட மாதிரி ஆயிருச்சு... சாண்டிண்ணே இன்னைக்கு கொசு அதிகமாயிருக்கு.... வா படுக்கப் போவோம்ன்னு கூப்பிட்டான். சாக்சியை கொசு எனச் சொன்னதும் சாக்சி கொசு இதுகளைக் கடிச்சா நாமதான் சாவோம்ன்னு பறந்து போயிருச்சு.

கவினும் சாண்டியும் நடந்துக்கிட்டே பேசிக்கிட்டு போனாங்க... அண்ணே அவளைப் பார்த்தாலே எனக்கு கடுப்பாகுது. இந்த மூஞ்சியை இங்க வந்ததால லவ் பண்ணினேன் வெளிய இருந்திருந்தா நிமிர்ந்து  கூட பாத்திருக்க மாட்டேன்னு வனிதாக்காக்கிட்ட சொல்லியிருக்கா... அடிச்சி மூஞ்சி கீஞ்சி எல்லாம் உடைக்கப் போறேன்... எங்கிட்ட கிராஸ் பண்ணக் கூடாதுன்னு சொல்லி வையின்னு சொல்ல, எப்பா டேய் அடிக்கிறேன் உதைக்கிறேன்னு கிளம்பிடாதேடா... உன்னால என்னையும் திட்டுவானுங்க... அடக்கி வாசி.... அவ போயிருவா... நம்மளைக் காக்க கமல் சார் வந்திருவாரு... அது வரை சும்மா இருடான்னு சாண்டி சொல்லிட்டார். கவினுக்கு சாக்சி வந்தது வயிற்றில் புளியை இல்லை புளிய மரத்தையே கரைச்சிக்கிட்டு இருக்கு. அதனாலயே முதல் நாள் ஊடல் கொண்ட லாஸ்லியாவிடம் இப்போது தீராக் காதல் கொண்டவனாய் நடிக்கிறான்.

ஒரு வழியாக அன்றைய இரவு மெல்லக் கழிந்து மறுநாள் விடியல் எப்பவும் போல் எட்டுமணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது. 'சில்லாக்ஸ்...' பாட்டுக்கு குதித்தோடி வந்து தன்னோட இடியாப்பச் சிக்கல் டிரேட் மார்க் ஆட்டத்தைப் போட்டார் சாக்சி... கூடவே முகனும் சாண்டியும்.... சக்களத்தி ஆடுவதால் ஆட்டத்துக்கு டாட்டா சொல்லியிருந்தார் லாஸ்லியா . கவினார் நைட் டூட்டி பார்த்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். சேரனும் தூங்கினார்... ஒருவேளை மகளின் பாதுகாப்புக்காக விழுந்திருந்திருப்பாரோ..?

காலையிலேயே இன்னைக்கு டார்க்கெட் சேரனென முடிவு செய்து விட்டார்கள் போல, வனிதா, சாக்சி, மோகன் மூவரும் அவருக்கு வேப்பிலையடித்துக் கொண்டிருந்தாரகள். 

இதுவரைக்கும் எதையும் ஆராய்ந்து அதிலிருக்கும் நல்லது கெட்டது என எல்லாம் பார்த்து தன்னோட விளையாட்டை அழகாய் விளையாண்டு பத்துநாள் தாங்க மாட்டார்ன்னு நினைச்ச சேரன் எழுபத்தைந்தாவது நாளை நெருங்கிக்கிட்டு இருக்கார். இப்ப வனிதா மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக எங்கே பகுப்பாய்வை தூக்கிப் போட்டுட்டு படுத்துருவாரோன்னு தோணுச்சு... ஆனா மனுசன் எப்பவும் போல் நாம நாமளா இருப்போம்ன்னு சொல்லிட்டார்.

மறுபடியும் சாக்சி, ஷெரினைத் தூக்கி சிம்மாசனத்துல அமர வைக்கணும்ன்னு சொல்ல, வனிதாவுக்குள்ள ஆயிரம் காளிகள் ஆட்டம் போட, சும்மா சும்மா அவளுக்கு கேடயத்தைக் கொடுக்கணும்ன்னு கேனத்தனமாச் சொல்லிக்கிட்டு இருக்காதே... அவனுக கூட சேத்துக்கலைன்னு புலம்புறவதான் வெற்றியை நோக்கி வேகமாப் போப்போறாளாக்கும்... பேனு பாருன்னு சொன்னா பெருமத்தா சரியில்லைன்னு சொல்றவளா இருக்காடி அவ... என சாக்சியின் வாயை சாக்கை வைத்து அடைத்தார்.

அதே நேரம் படுக்கை அறையில் லாஸ்லியாவை நீ ஏய்யா மகமகன்னு சொல்லி சரிகமபதநிச போடுறே... அவ உங்கிட்ட அன்பாய் பேசிட்டு அடுத்த நொடியே அவனுக்கிட்ட போயி பண்பாச் சொல்லிடுறா... அவனும் வம்பா உன்னை வச்சிச் செய்யிறான்... இந்த மக பாசத்தை மடிச்சி கட்டிலுக்கு கீழே போட்டுட்டு கவனமா விளையாடுயான்னு மோகன் தீவிரமாக இரண்டாம் கட்ட வைத்தியத்தை சேரனுக்கு ஆரம்பித்தார். 

அப்படியா சொன்னுச்சு... அவங்க காதலிக்கிறாங்க அதான் பேசுறாங்க என்ற சேரன், இப்பவும் நாம நாமளாவே இருப்போம்ன்னு சொல்லிட்டார். மோகனுக்கு அணுகுண்டு அளவுக்கு இல்லேன்னாலும் குருவி வெடி அளவுக்காச்சும் வெடிக்கும்ன்னு நெனச்சா இது புஸ்வானமாயிருச்சேன்னே முகம் கலையிழந்து போச்சு.

சரி எங்கிட்டுப் பத்த வச்சாலும் பத்த மாட்டேங்கிது... இனிக் காத்திருக்கிறது வேலைக்காகாதுன்னு நினைச்ச பிக்பாஸ் பட்ஜெட் டாஸ்க் விளையாடப் போங்கன்னு சொல்லி, இதுல ஜெயிக்கிற அணியினர் எதிர் அணியில் இருந்து ஒருவரை நேரடியாக நாமினேட் பண்ணலாம்ன்னு சொல்லி,  அப்பத்தான்டா கைகால் உடையிற மாதிரி அடிச்சிப்பீங்கன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, பஸ்ஸர் அடிச்சதும் விளையாடுங்கன்னு சொல்லிட்டு திரும்பிப் படுத்துக்கிட்டார்.

இதுக்கு அப்புறம் கார்த்திகை மாசத்துக் காதல் ஜோடிக்குள்ள ஒரு பிணக்கு... நேரடி நாமினேசன்னு சொன்னதுமே கவினுக்குள்ள 'கதக்', எப்படியிருந்தாலும் தர்ஷனைத் தவிர மூணும் நம்மளைத்தான் சொல்லும்ங்கிற எண்ணம் ஓட, சோகமாய் படுத்துட்டார்... உடனே லாஸ்லியா போய் என்னாச்சுன்னு கேட்க, ஏம்ப்பா எல்லார்க்கிட்டயும் வெளியே போறேன்னு சொல்றேன்னு பிட்டைப் போட்டு, அப்படியே திட்டி, அழ வச்சி செம பெர்ப்பார்மன்ஸ்... ஆயிரம் சிவாஜி, எழனூறு கமல்,  ஐநூறு விக்ரம், இருநூறு விஜய் சேதுபதி, நூறு தனுஷ் கலந்த கலவை இவன். இதெல்லாம் ஒரு காட்சியின்னு பிக்பாஸ் வேற காட்டிக்கிட்டு இருக்கார்ன்னா பாத்துக்கங்க.

சங்கடித்ததும் கன்வேயர் பெல்ட்க்கிட்ட ஓடினாங்க முகனும் தர்ஷனும்... இன்று இருவருக்குள்ளும் ஒரு வேகம்... இருவருமே எடுக்க ஆரம்பித்தார்கள்... இந்த வாரத்தில் நல்லா விளையாண்டவர்கள் என்றால் இருவரையும் சொல்லணும்... ஆனா வனிதாக்கா வழி விடுமா..?

தர்ஷனுக்கு கையில் காயம்... லாஸ்லியாதான் மருந்து போட்டார்... காயத்துக்கு கட்டுக்கட்டியும் தர்ஷன் தன்னுடைய விளையாட்டில் பின்னடையவில்லை... அதே வேகம்... 

தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சண்டையிடாமல் தங்கள் வேலையைப் பார்த்தார்கள்... லாஸ்லியா இன்று எல்லாத்தையும் நல்லாயில்லைன்னு ஒதுக்கலை... ஒருவேளை தர்ஷன் காயம்பட்டதால் கூட இருக்கலாம்.. இந்தப் புள்ளைக்கிட்ட பாசம் கொஞ்சம் அப்பப்ப எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. அதை எழ விடாமல் அடிப்பதில் கவனமாய் இருக்கிறான் கவின். எழவிட்டால் அவன் கதி அதோகதி என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறான்.

அப்புறம் பிக்பாஸ்க்கிட்ட முடிவைச் சொன்னாங்க... வனிதா அணிக்கே வெற்றி... மேலதீக வெற்றித் தகவலுக்காக பிக்பாஸ்க்கிட்ட அனுப்பியிருக்காங்க... அவரு லேஸ் வச்சித் தச்சதையெல்லாம் ஆராய்ந்து இறுதி முடிவை இன்று அறிவிப்பார்.

அடுத்தது வந்த மூவரும் நடுவாராக இருக்க, பட்ஜெட் டாஸ்க்கில் ஆடிய அதே அணிகளாய் பட்டி மன்றத்தில் பேச வேண்டும். எந்த அணி வெல்கிறது என்பது மூவரின் தீர்ப்பில் என்றபோதும் வனிதா, சேரன், ஷெரின், தர்சன் என விவரமான ஆழ்ந்து யோசிக்கக் கூடிய ஆட்களை எதிர்த்து பேச வேண்டும் என்றபோதும் சாண்டி அணி போண்டிதான் என்பது தெளிவாய்த் தெரிந்தது.

1. போட்டியும் திறமையும் (வனிதா அணி) - விட்டுக் கொடுத்தலும் தியாகமும் (சாண்டி அணி)

இந்தத் தலைப்பில் சேரன் விட்டுக் கொடுத்து வருவது வெற்றியல்ல என்று ஆதாரங்களுடன் பேச, யார் விட்டுக் கொடுத்தும் வெற்றியைச் சுவைக்கக் கூடாது... நானெல்லாம் ஆரம்பத்திலிருந்தே என்னோட உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். எதிலும் என்னால் முடியாதுன்னு உக்காரலை... நீங்க விட்டுக் கொடுத்துத்தான் நான் ஜெயிக்கணும்ன்னு இல்லை... என்னால் கிடைத்தால்தான் அந்த வெற்றிக்கு மரியாதைன்னு தர்ஷன் சொல்ல, சாண்டி அணி பப்பப்பே... பெப்பரப்பேன்னு விளக்கம் கொடுக்க, 'பலமான' விளக்கம் இல்லாததால் நடுவர்கள் வனிதா அணியே 'வளமான' அணியின்னு சொல்லிட்டாங்க.

தர்ஷனின் பேச்சு யாருக்கு எப்படியோ தெரியலை... ஆனா கவினுக்கு மனசுக்குள்ள முள்ளாய் குத்தியிருக்கும் போல கண்ணில் தெரிந்தது அந்தக் காட்சி... பட்டிமன்றம் முடிந்தபின் கவின் பாடிய போது அடுத்த கெட்ச் உனக்குத்தான்டி என்பது போல்தான் தோன்றியது. 

2. தனியா விளையாடணும் (வனிதா அணி) - அணியா விளையாடணும் (சாண்டி அணி)

இப்பவும் ஒரு குழுவா இருந்துக்கிட்டு ஒருத்தரை வெளியேற்ற நினைப்பது தவறு என சேரன் தன் வாதத்தை வைக்க, குழு மனப்பான்மை இருந்தாலும் நாங்க அந்த வாரத்தில் யார் சரியில்லையோ அவரைத்தான் நாமினேட் பண்ணுவோம்ன்னு வனிதாவும் எங்க விளையாட்டை நாங்கதான் விளையாடுறோம்.. யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில்லை என ஷெரினும் பேச, இப்பவும் விளக்கம் கொடுக்கிறேன்னு கவினும் லாஸ்லியாவும் எரியாத விறகை ஊதிக்கிட்டு இருந்தாங்க.

லாஸ்லியா கையை ஆட்டி ஆட்டி பேசும் போது சேரன், வனிதா எல்லாம் குறுக்கிட்டுப் பேச, அம்மணிக்கு என்ன பேசுறதுன்னு மறந்து போச்சு போல, கோபமா பேசலைன்னு உக்கார்ந்திருச்சு.

நடுவர் குழு 'நச்'சின்னு சொன்னது வனிதா அணியேன்னு 'பட்'டுன்னு சொல்லிட்டாங்க.

இடையில் சாக்சிக்கும் கவினுக்கும் ஒரு மோதல்... கவின் நீ எனக்கு ஊட்டி விட்டது போதும் இப்ப வகுப்பெடுக்க வேண்டாம்... அதான் கக்கூஸ்ல வச்சி வகுப்பெடுத்துட்டு தொடுப்பு வந்ததும் நமக்குள்ள தடுப்புப் போட்டுட்டேல்லன்னு சாக்சி கத்த, கவினும் கத்த சண்டை சில நிமிடங்களில் முடிந்தது.

3. சாரிக்கு இங்க மதிப்பு இல்லை (வனிதா) - மதிப்பு இங்க இருக்கு (சாண்டி)

இங்க சாரி அவசியமில்லை... அதுக்கு மரியாதையும் இல்லை... தர்ஷனுக்குப் போட்ட ஹார்ட்டின் சப்பாத்தியை கத்தியால் குத்திட்டு சேரனால் கேட்க வைக்கப்பட்ட சாரி என்னை கேவலப்படுத்துவதாய் அமைந்தது என ஷெரின் பேசினார். இப்பவும் சாண்டி அணிக்கு சரியாய் விளக்கம் கொடுக்க ஆளில்லாததால் நடுவர் அணி அவர்களுக்கு 'சாரி' சொல்லிவிட்டு வனிதா அணியே வெற்றி என 'பூரி'ப்பாய் சொன்னார்கள். சொன்னது சாக்சி.

வெளியே வந்ததும் லாஸ்லியா முறையிடல்... உடனே கவின் இங்க மட்டுமில்ல உலகத்துக்கே அவங்க நல்லவங்க நாம கெட்டவங்கன்னு சொல்லிட்டு  வா கண்மணி லவ்வலாமெனக் கூட்டிப் போய்விட்டார்.

இதுல என்ன ப்யூட்டின்னா... தலைப்பைத் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்காங்க பாருங்க... செம.. அடிச்சி ஆடக்கூடிய தலைப்பு... செமையாப் பேசியது வனிதா அணிதான்... கவினுக்கு இன்னும் கொஞ்சம் கண்ணுல பயத்தைக் காட்டியிருக்கலாம். இனி தர்ஷனை ஒதுக்க கவின் தீவிரமாய் முயல்வான். வலி நிறைந்தவன் என்ற வரிகளை கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டு தன்னோட வேலையை ஆரம்பிப்பான் என்றும் நம்பலாம்.

ஐவர் அணியுடன் அபியும் ஜோடி போட, சமைத்துக் கொண்டே வனிதா ஏதோ காரசாரமாகப் பேச, மோகனும் சாக்சியும் கேட்டுக் கொண்டிருப்பதை சாண்டி அன் கோ சிகப்புக் கதவுக்கிட்ட உக்கார்ந்துக்கிட்டு டப்பிங் பேசி கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். 

இது புளிச்சிப் போன கஞ்சி என்றாலும் இதில் ஏதோ சுவை இருப்பது போல் பிக்பாஸ் காட்டிக் கொண்டிருப்பதுதான் கொடுமை. 

சாண்டி செய்யிறதெல்லாம் அயோக்கியத்தனம்... ஆனா கமல் நீங்க நகைச்சுவையில எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்கன்னு வாராவாரம் சொல்லவும் செய்யிறதெல்லாம் நகைச்சுவையின்னு சுவையே இல்லாமப் பண்ணிக்கிட்டு இருக்கார். 

லாஸ்லியாவுக்கு சாண்டியின் பேச்சால் ஒரே சிரிப்பு... முன்னெல்லாம் இந்தச் சிரிப்பும் கை ஆட்டுதலும் ரசிக்க வைத்தது... இப்போது வெறுப்பாகத்தான் இருக்கிறது. கவின் - லாஸ்லியா காட்சி என்றால் எப்போது மாறும்ன்னு தோணுது.

சந்தடிசாக்கில் அபி முகனாயிசம் பாடிக் கொண்டிருந்தார்... நான் போனபின் உடைத்துப் போட்ட பதக்கத்தை பார்த்து அழுது எடுத்து வச்சிக்கிட்டியே என்னடா பண்ணுறே.... என்னைக் காதலிக்கிறியான்னு கேட்டிருப்பாரா.. இல்லையா.. கேப்பாரு... கேப்பாரு....

சாக்சி வந்த பின் வனிதாவின் ஆட்டமெல்லாம் ஷெரின் மீதாய் இருக்கிறது. இன்றைய ப்ரோமோ கூட அதையே காட்டுகிறது. இதுவரை எடுக்க நினைத்து முடியாமல் போன தர்ஷன் காதலை இப்போது இன்னும் தீவிரமாக்குவதில் ஏதோ காரணம் இருக்கிறது. ஒருவேளை ஷெரினுக்குத்தான் குறைவான ஓட்டுக்கள் எனச் சாக்சி சொல்லியிருக்கக் கூடும். இந்த வேளையில் இப்படியொரு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தால் பிக்பாஸே ஷெரினை உள் நிறுத்த நினைக்கலாம்... கவின் - லாஸ்லியா காதல் மக்களிடம் வரவேற்ப்பை பெறாத நிலையில் இந்தப் புதிய ஆட்டம் இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸை வீழாமல் தாங்குமே எனக்கூட நினைக்கலாம் அல்லவா...? வனிதாவின் விளையாட்டுக்கள் வனிதாவுக்கே தெரியும்.

வனிதாவின் பேச்சு இப்படியானதா அல்லது உண்மையிலேயே தாக்குதல்தானா என்பது இன்றை எபிசோட் முழுவதும் பார்த்தால்தான் தெரியும். 

இந்த வாரம் சேரனை வெளியேற்றி, கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் லீலைகளை இன்னும் அதிகமாக்கி, ஷெரின் - வனிதா - தர்ஷன் காதல் அடிதடி ஒரு பக்கமும் கவின் - லாஸ்லியா காதல் கட்டிப்பிடி ஒரு பக்கமும் என விஜய் டிவி கல்லாக் கட்டப் பார்க்கும். 

மொத்தத்தில் சீசன்-3 மொக்கையாய்த்தான் போகிறது.

என்னோட ஆசையும் சேரன் போதும் என்று சொல்லுமளவுக்கு இருந்தாச்சு.. இனி பெட்டியைக் கட்டிட்டா நம்மளும் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்தி விடலாம் என்பதே.... நடக்குமா?

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.