மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 6 ஜூன், 2021

வேரும் விழுதுகளும் - 'வேரும் தூணும்' - சகோதரி ஹேமா

'வேரும் விழுதுகளும்'
அமீரக எழுத்தாளர் வாசிப்பாளர் குழுமத்தின் எழுத்தாளரும் தோழருமான 'பரிவை' சே.குமார் அவர்களின் 'வேரும் விழுதுகளும்' புத்தகம் ஒரு பார்வை. முகநூலை திறந்தால் அவருடைய பல சிறுகதைகளுக்கு பல அமைப்புகளிலிருந்து அவர் பரிசுகளை வாங்குவதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். விருதுகள் என்றால்தான் பயம். பரிசுகள் என்றால் முழுமையாக நம்பலாம்.😆😆😆

மனம் நிறைந்த
வாழ்த்துகள்.


ஏற்கனவே அவருடைய எதிர்சேவை நூல் நல்ல வரவேற்பைப் பலரிடமும் பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு வெளிவந்திருக்கிறது குமார் அவர்களின் வேரும் விழுதுகளும் புத்தகம்.
ஒரு கிராமத்து கதை அதுவும் கிராமத்து சொல்லாடல் வழியே. முதலில் படிப்பதற்கு என்னை போன்று முழுமையாக கிராமச் சொல்லாடல்கள் அறியாதவர்களுக்கு சற்று தாமதமானாலும் இருபது பக்கங்கள் தாண்டும் போது இயல்பாகவே எழுத்தின் நடை வேகமெடுக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு சென்றுவிட்டாலும் அவர்களுக்கிடையே ஆன நெருக்கமும் பாசமும் வசையும் எள்ளலும் என முழுக் கதையும் நீள்கிறது. கதாபாத்திரங்களில் வேராக நிற்கும் அப்பா கந்தசாமியின் கதாபாத்திரமும், பிள்ளைகளில் தூணாக நிற்கும் சித்தப்பா மகன் கண்ணதாசனின் கதாபாத்திரமும் நெஞ்சில் நிறைகிறது. இயக்குநர் சேரனின் ஒரு குடும்ப திரைப்படம் பார்த்தது போன்று தோன்றுகிறது இக்கதையை வாசித்தபின்.
முக்கியமான திருப்பங்களில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை மனம் எளிதாக தீர்மானித்து விடுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. சினிமாவில் வருவது போலவே வில்லி கதாபாத்திரம் அல்லது பணம் பணம் என்று பேயாய் பிடுங்கும் கதாபாத்திரம் திடீரென்று நல்லவளாகி விடுவதை ஏற்பதற்கில்லை. ஒரு வேளை சில மரணங்கள் அப்படி ஒரு மாற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்துமா என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
கதையில் வரும் மனிதர்கள் அதிகமாகப் பேசுகிறார்கள் என்பதும் எழுத்தாளரே முன்னுரையில் சொல்வது போல கிராம மனிதர்களின் இயல்பே அப்படியாக இருக்கும் போது அதை அப்படித்தானே காண்பிக்க முடியும்.
ஒரு கிராமச் சூழலில் வளர்ந்த உங்கள் வாழ்க்கை எழுத்துக்களாக மிளிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். நிறைவாய் எழுதுங்கள். அன்பும் வாழ்த்துகளும் தோழர் நித்யா குமார்💐


வாசித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்ட சகோதரி. ஹேமாலதா சிவராஜனுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

மாதேவி சொன்னது…

வேரும் விழுதுகளும்' வாழ்த்துகள்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனையான விமர்சனம்... வாழ்த்துகள் குமார்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.

உங்களது ஆக்கங்கள் மேலும் பல புத்தகங்களா வெளி வர வாழ்த்துகள்.

மு. கோபி சரபோஜி சொன்னது…

வாழ்த்துகள் குமார்.....வாசிப்பு மராத்தானில் இந்த நாவலையும் கணக்கில் வைத்திருக்கிறேன். கொரானா கால வீடு அடங்கலால் இன்னும் நூலை வாங்கவில்லை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம். வாழ்த்துகள் குமார்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம். வாழ்த்துகள் குமார்.

துளசிதரன்