மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 மே, 2017குடந்தையூராரை வாழ்த்துவோம் வாங்க....

ர்.வி.சரவணன்.

குடந்தையூர் ஆர்.வி.சரவணன்.

Image may contain: 1 person, glasses

இந்தப் பெயரை வலையுலகில் நாம் அனைவரும் அறிவோம். இன்று அவரின் பிறந்ததினம். நேற்று இரவே எழுதி வைத்து இன்று காலையில் பகிர்ந்திருக்க வேண்டிய பகிர்வு இது. நேரமின்மை மற்றும் எழுத நினைத்தாலும் எழுத வராத மனநிலையும் வேலைப்பளு கொடுக்கும் அசதியும் சேர்ந்த காரணத்தால் எழுதவில்லை.

சரவணன் அண்ணன் எனக்கு நம்ம அண்ணாச்சி... பலமுறை போனில் போனில் பேசியிருக்கிறோம். இரண்டு நாளைக்கு ஒருமுறை எப்படியும் முகநூல் உள்டப்பியில் வந்து நலம் விசாரித்துவிடுவார். கடந்த வாரம் கூட 'என்னாச்சு... ஏன் எந்தப் பதிவும் வருவதில்லை' என்ற விசாரணையோடு முகநூல் உள்டப்பியில் வந்தார். எனக்குப் பிடித்த அண்ணன்களில் இவரும் ஒருவர்.

தனது வலைப்பக்கத்தில் கதை, கட்டுரை. பார்த்தது கேட்டது படித்தது என எல்லாம் பகிர்வார். நாவல் எழுத்தாளர்... 'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் தொடரை தனது தளத்தில் எழுதி அதை நாவலாக வெளியிட்டவர், திருமண ஒத்திகை என்னும் நாவலை வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருக்கும் போது அதை பாக்யாவில் தொடர்கதையாக வெளியிடும் வாய்ப்புக் கிடைத்து அந்தத் தொடரின் மூலமாக மிகச் சிறந்த எழுத்தாளராக அடையாளம் காட்டப்பட்டார். அது விரைவில் நாவலாக... அவரின் அடுத்த வெளியீடாக மலரும் என்று நினைக்கிறேன். குமுதத்திலும் அவ்வப்போது ஒரு பக்க கதைகள் எழுதி வருகிறார். 

இரண்டு குறும்படங்களை இயக்கிய இந்த எழுத்தாளர்... இயக்குநர்... திரையுலகில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்போடு அதற்கான முயற்சியிலும் இருக்கிறார். காலமும் நேரமும் இன்னும் கை கொடுக்கவில்லை என்றாலும் காலம் ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை அவரைப் போல எனக்கும் இருக்கிறது. 

குறும்படம் எடுத்ததுடன் துளசி அண்ணாவின் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பல்சுவைப் பதிவர் என்பதுடன் பல்சுவை மனிதர் இவர்... குமார் இந்த முறை ஊருக்கு வரும்போது நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று மூன்று வருடங்களாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தனபாலன் அண்ணா, புதுகை செல்வக்குமார் அண்ணா என எல்லாரையும் எப்படி சந்திக்கிறேனோ அப்படித்தான் இவரையும்... இந்த முறையாச்சும்... ம்... முயற்சிக்கணும்.

அவரின் குறும்படமான அகம் புறம் தங்கள் பார்வைக்கு...அன்பின் அண்ணாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாங்களும் வாழ்த்துக்கள் உறவுகளே....
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. நண்பர் குடந்தையூராருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - உங்கள் தளம் மூலமாகவும்!

  பதிலளிநீக்கு
 6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
  காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன் மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. குடந்தை சரவணன் சார் எங்களுக்கு இனிய நண்பர்!!! உழைப்பாளி! வாழ்வில் பல கஷ்டங்களைச் சந்தித்தவர். சந்தித்தும் வருகிறவர். ஆனால் அவர் அனைத்தையும் தகர்த்து எதிர்நீச்சல் போட்டு வந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது அன்பு நிறைந்த குடும்பம். எளிமையான ஆனால் அன்பு மட்டுமே நிறைந்த குடும்பம்! எங்களின் இனிய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

  அவரது கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் அந்த இறைவன் அவருக்கு அதை நிறைவேற்றிடவும், அவரும், அவரது குடும்பமும் மகிழ்வுடன் எப்போதும் இருந்திடவும் எல்லா நலன்களையும் நல்கிட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. வாழ்க பல்லாண்டு!...

  அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சிப்பேன் குமார். தங்களின் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்திய நணபர்களுக்கு என் நன்றியும் அன்பும் என்றென்றும்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...