மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 ஜனவரி, 2017

வலையுலக பிரம்மாவை வாழ்த்துவோம்

"தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்"

ந்த வரிகளை  ராமு படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர்க் குரலில் பாடிய 'கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்' என்ற பாடலில் கேட்டிருப்பீர்கள். எதற்காக பாடல் வரிகளை தேடி எடுத்து அதுவும் 'தேடி நின்ற கண்களிலே' என்ற வரியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன் என்ற எண்ணம் தோணலாம்... அந்த வரிகளை வாசித்தபடி நகரும் போது 'கேட்டவருக்கு கேட்டபடி..' அப்படின்னு ஒரு வரி இருக்கா... இன்றைக்கு வலையுலகில் கேட்டவருக்கு கேட்டபடி மட்டுமின்றி கேட்காத உதவியையும் செய்பவரைப் பற்றி கொஞ்சம் பேசலாமேங்கிறதுக்காக எழுதிய கட்டுரைதான் இது. யார் அவர்..? எதற்காக இந்த பாடல் வரிகள்ன்னு கேட்டீங்கன்னா நீங்க அவரைப் பற்றி அவரின் திருக்குறள் பகிர்வுகளைப் பற்றி அறியாதவராகத்தான் இருப்பீர்கள். வலையுலகில் அவரைத் தெரியாது என்று சொல்லக் கேட்பது ஆச்சர்யமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம் வலையுலகில் அடியெடுத்து வைக்கும் புதியவர்களுக்கு கூட அவரின் கருத்து பறந்து வந்து விழும் போது அவரை அறியாதவர் வலையுலகில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமே.

என்னது... அட ஆளு யாருன்னு புரிஞ்சி தெரிஞ்சி போச்சா... ஆஹா போயிடக்கூடாது மனசுக்குள்ள வச்சிக்கங்க... பாண்டவர்களுக்கு உதவ கண்ணன் ஓடி வந்தது போல் வலைப்பதிவர்களுக்கு உதவ ஒடோடி வருபவர் இவர்... இவரின் பதிவுகள் பாடல்கள் சுமந்து நிற்கும் அதனால்தான் இவரைப் பற்றி எழுத பாடல் வரிகளோடு ஆரம்பம்... ஆம்... அவர்தான்... அவரே தான்... நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அண்ணா... இவரைப் பற்றி மிகச் சிறப்பாக தேவியர் இல்லத்தில் 'திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை?' என்ற தலைப்பில் ஜோதிஜி அண்ணன் எழுதியிருக்கிறார். அதைவிட என்னால் சிறப்பாக எதையும் எழுத முடியாது. எப்பவும் கிறுக்குற மாதிரி இதிலும் நமக்குத் தெரிந்தவற்றை கிறுக்கலாம்.

Image result for திண்டுக்கல் தனபாலன்

வலைச் சித்தர்...

அதென்ன வலைச் சித்தர்... சித்தரை விட மருத்துவர் என்று சொல்லலாம்... ஆம் வலை மருத்துவர்... உடம்புக்கு முடியலைன்னா எங்க போவோம்... டாக்டர்கிட்ட போவோம்... ஒரு ஊசி... ரெண்டு நாளைக்கு மாத்திரை கொடுப்பார்... நமக்கும் சரியாகிவிடும்... அதுபோல்தான் இவர் வலைஞர்களின் மருத்துவர்... எந்த பிரச்சினை என்றாலும் ஜஸ்ட் ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டால் போதும் உடனே சரி பண்ணிக் கொடுத்துருவார்... நானெல்லாம் மின்னஞ்சல் கூட விடுவதில்லை முகப்புத்தகத்தில் ஆள் இருக்கிறாரோ இல்லையோ ரெண்டு வரி தட்டி விடுவேன்... சரி பண்ணி விட்டு மின்னஞ்சல் அனுப்புவார். எல்லாருக்கும் எப்பவும் உதவும் 24 மணி நேர வலை மருத்துவர் இவர். எனவே வலைச் சித்தர், வலை மருத்துவர் என எப்படியும் அழைக்கலாம்... வலையுலகப் பிரம்மான்னும் அழைக்கலாம்.

இவருடனான உறவு நாலாண்டுக்கு மேல் இருக்கும்... ஆனாலும் சந்தித்ததில்லை... சந்தித்தால்தானா.. ஆண்டுக்கு ஒரு முறை போன் பண்ணும் போது 'நல்லாயிருக்கீங்களா?' அப்படின்னு கேட்கும் போதே அவரின் அன்பைத் தெரிந்து கொள்ள முடியும். வருடம் ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது சந்திக்க வேண்டும் என்று நினைத்து போன் பண்ணுவது உண்டு... ஆமாம் பண்ணுவது உண்டு... ஆனால் பார்ப்பதில்லை... அதற்கான நேரமும் வாய்ப்பதில்லை... ஊருக்கு வருகிறேன் என்றதும் இந்த முறை கண்டிப்பாக நாம பார்க்கணும் என்பார்... புதுகை நட்புக்களும் இப்படித்தான். அங்கு செல்ல முடியாத நான் திண்டுக்கல்லுக்கு எப்படிச் செல்வேன். ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன் ஆனாலும் சூழல்... ஒரு மாத விடுப்பு... எல்லாமாய் சேர்ந்து பார்க்காமலே நகர்த்தி விடும்.... ஆனாலும் அன்பு மட்டும் அங்கு நகராமல் நின்று கொண்டிருக்கும் என்பதை அடுத்த போனில் அறியலாம். சமீபத்தில் நான் போன் பண்ணிய போது ஒரு பிறந்தநாள் விழாவில் இருந்தார். அப்படியிருந்தும் என்னுடன் பதிவுலகம், அரசியல், குடும்பம் என நீண்ட நேரம் பேசினார். வலையுலக நட்புக்கள் குறித்தும் பேசினார். இந்த முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டோம்... ;)

தொழில் நுட்ப பகிர்வுகளையும் திருக்குறள் பகிர்வுகளையும் மிக அழகாக, சினிமாப் பாடல்கள் கலந்து எழுதுவார். மனுசனுக்கு எப்படித்தான் இவ்வளவு பாடல் தெரியும்ன்னு ஆச்சர்யமா இருக்கும். தொழிலின் காரணமாக நீண்ட இடைவெளி எடுத்தாலும் தீபாவளிக்குப் பின்னர், இந்த மோடிஜி பண்ணின கூத்தால சிறு தொழிலாளிகள் எல்லாம் பணப் பிரச்சினையில் வாட, இவருக்கும் கொஞ்சம் ஓய்வு... சரி இவ்வளவு நாள் உழைத்தோமே... அலைந்தோமே... என்றெல்லாம் ஹாயாக ஒய்வெடுக்காமல் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டியை கொண்டு வந்தார். புதியவர்களுக்கு வலைப்பூ சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். தானும் சில ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுதினார். தமிழ் பதிவர்களுக்கான வலைப்பூ திரட்டி ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். இன்னும் இன்னுமாய் வலையுலகின் பிதாமகனாய் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.

நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருக்கும் நம் வலைச் சித்தர், அன்பு அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்... இன்றைய பிறந்த நாளில் அவர் நீண்ட ஆயுளோடு நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன். அவரின் 'புவனா சாரீஸ்' தமிழகம் எங்கும் கிளைகள் பரப்ப வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா....

உங்களின் அன்பும் ஆசியும் வலைச் சித்தருக்கு கிடைக்கட்டும் உறவுகளே.

நன்றி.



குறிப்பு : முன்பு நண்பர்கள் ஒரு சிலருக்கு பிறந்தநாள் அன்று கட்டுரை எழுதினேன். அதை இன்று தனபாலன் அண்ணனின் பிறந்தநாளில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இனி என் நட்பில், நான் நன்கறிந்தவர்களின் பிறந்தநாள் எனக்குத் தெரிய வரும் பட்சத்தில் கண்டிப்பாக எழுதுவேன்.

-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

எனது வாழ்த்துகளும்....

balaamagi சொன்னது…

ஆஹா எம் வாழ்த்தும்,,,

ஸ்ரீராம். சொன்னது…

அன்பு வாழ்த்துகள் DD.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா நம்ம டிடி!!! எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

S.P.SENTHIL KUMAR சொன்னது…

நல்ல முயற்சி! தொடருங்கள்!
நமது தொழிநுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அற்புத வித்தகர் பற்றிய பதிவுக்கு வாழ்த்துக்கள்!
தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அபயாஅருணா சொன்னது…

வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். நல்ல ஆரம்பம். தங்களின் பிற நண்பர்களை அறிந்துகொள்ள இதன் அடிப்படையிலான பதிவு அமையும் என்று நம்புகிறோம்.

நிஷா சொன்னது…

அப்பாடா< என் பிறந்த நாள் கட்டுரைக்காக இன்னும் ஒன்பது மாதம் வெயிட் பண்ணனுமா குமார். 2015ல் எழுதியதை மறக்க முடியுமா?

தனபாலன் சாருக்கு எங்கள் நல் வாழ்த்துகளும்.வலையுலக நட்பில் எனக்கு அதிக தொடர்பில்லாவிட்டாலும் அடுத்தவர் பதிவுகளை படிக்கும் போதும் போடும் பதிவுகளின் பின்னூட்டங்கள் வரும் வேகம் பார்க்கும் போதும் ஆச்சரியமாக இருக்கும். ஒருவர் இருவர் என இல்லாமல் அனைவர் அகமும் கவர்ந்திழுத்திருக்கும் உங்கள் நற்பணி தொடரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த வருட பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவை விட வேறு ஏதும் பெரிதில்லை... மிக்க மிக்க நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தனபாலன்....

சிறப்பான பகிர்வு குமார். பாராட்டுகள்.

Yarlpavanan சொன்னது…

அருமையான தகவல்
சிறந்த பகிர்வு

Kasthuri Rengan சொன்னது…

my wishes too...
nice post

Unknown சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா ! :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வெயிட் பண்ணுங்க போனவரும் போட்டதை தூசி தட்டிருவோம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நம் நட்பு காலம் காலத்துக்கு குடும்ப நட்பாக தொடரட்டும்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே...
வாழ்த்துக்கான பகிர்வில் என்ன தகவல் இருக்கு... :)
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் மது சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.