மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 11 ஜனவரி, 20171. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்

னசு தளத்தில் 'எங்கள் பிளாக்' போல் வித்தியாசமான முயற்சியாய் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஒருவேளை ஸ்ரீராம் அண்ணன் அவர்களின் கேட்டு வாங்கிப் போடும் கதைதான் இந்த முயற்சியை முன்னெடுக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். வேலைப்பளு மற்றும் அலைச்சல், கொஞ்சம் மன அழுத்தம் இதெல்லாம் எழுத்தில் ஒரு இடைவெளி கொண்டு வந்து விட்டது, எல்லோரையும் வாசித்தாலும் கருத்து இடாமல் வலை நட்புக்களில் இருந்து விலகிச் செல்வது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது, அதற்கு காரணமும் இருக்கு... சிறுகதை, தொடர்கதை காப்பி பேஸ்ட் நண்பர்களுக்குப் பயந்து பதிவதில்லை என்பதுடன் வாரம் இரண்டு பதிவெழுதுவதே பெரிய விஷயமாகிவிட்டது. இந்தச் சோர்வில் இருந்து மீள, நாலைந்து பேர் சேர்ந்து வாரம் ஒருவர் என குறுநாவலை எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது... அதற்கிடையே 'என்னைப் பற்றி நான்' என நம் பதிவுலக நட்புக்களை அவர்களைப் பற்றி அவர்களையே எழுத வைத்தால் என்ன என்று தோன்றியது. வித்தியாசமாகவும் இருக்கும் நாம் வாசிக்கும் நேசிக்கும் பதிவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமையும் என்பதால் முதலில் இதைச் செயல்படுத்துவோம் என முதற்கட்டமாக சில உறவுகளுக்கு விபரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினேன்.

இன்று நண்பரிடம் பேசும் போது நானெல்லாம் பிரபலம் இல்லையே என்றார். இது பிரபலங்களை அறிவதற்கான பகிர்வு அல்ல... என்னைப் பொறுத்தவரை, இந்த வலையுலகில் நான் வாசிக்கும் என்னை நேசிக்கும் எல்லாருமே எனக்குப் பிரபலம்தான்... எனவே எழுதி அனுப்புங்கள் என்று சொன்னேன். அதுதான் உண்மை... நான் முதல்கட்டமாக மின்னஞ்சல் அனுப்பியவர்களில் இவர் பிரபலம்... அவர் பிரபலம் என்றெல்லாம் பார்க்கவில்லை... ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தில் ஒவ்வொரு விதத்தில் அசைக்க முடியாதவர்கள்... எனவே நான் மின்னஞ்சல் செய்தவர்கள், இனிச் செய்ய இருப்பவர்கள் ஒத்துழைக்கும் பட்டத்தில் இந்தப் பதிவு நிரந்தர முதல்வர் போல புதன் கிழமையை நிரந்தரமாக்கிக் கொள்ளும். என் முயற்சிக்கு தங்களின் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆங்.... சொல்ல மறந்துட்டேன் பாருங்க... முதல் வாரத்தில் 'என்னைப் பற்றி நான்' எனப் பேச வருபவர் அன்பின் அண்ணன் 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அவர்கள். அவரைப் பார்த்துத்தான் நான் இதில் இறங்கினேன் என்றால் நான் அனுப்பியவர்களில் எனக்கு முதல் முதலில் பதில் அனுப்பியவர் இவர்தான். இதுநாள் வரை இன்னும் மற்றவர்கள் அனுப்பவில்லை என்றாலும் குருவின் பாதம் பணிந்து நம்பிக்கையுடன் அவரின் எழுத்தை இங்கு பகிர்கிறேன்... 

நன்றி.


'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வாசியுங்கள்....


ன்னைப்பற்றி நான் என்ன எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால், டைரி எழுதுவது போல கற்பனையும், பொய்யும் கலந்து வந்து விடுமோ என்று தோன்றுகிறது!!!

வலைப்பதிவு அனுபவங்களில் சொல்லவேண்டியது உங்களைப் போன்ற பலப்பல நட்புகள் கிடைத்திருப்பதுதான்.  சுஜாதா ஒருமுறை சொல்லும்போது எதிர்காலத்தில் எல்லோரும் ஐந்தைந்து நிமிடங்கள் பிரபலமாக இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்.  அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ..  நான் கூட அந்த  ஐந்து நிமிடப் பிரபலங்களில் ஒருவன் இப்போது!  அதாவது முன்பு இருந்ததை விட ஒரு ஐநூறு ஆயிரம் பேர்களுக்கு எங்கள் ப்ளாக்கும் எங்கள் பெயர்களும் பழக்கமாகியிருக்கிறது பாருங்கள்!  இதற்கெல்லாம் நான் கே ஜி கௌதமன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  எழுதும் எண்ணம் எல்லாம் இல்லாமல் இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்டது அவர்தான்.  

வலைப்பதிவு பணியில் மறக்க முடியாத அனுபவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.  நான் எழுதிய சில கதைகளை அப்பாதுரை, ஜீவி ஸார் போன்ற பெரியவர்கள் பாராட்டியபோது மகிழ்ச்சி ஏற்பட்டது.  நம் எழுத்தைக் கூட பாராட்டுகிறார்கள் என்கிற சந்தோஷம் ம(று)றக்க முடியாதது.

புனைப்பெயர் வைத்து எழுதுவது அவரவர் விருப்பம்.  நான் முகம் காட்டா பதிவர்!  அவ்வளவுதான்.   

ஆசை என்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை என்பதால் நிறைவேறிய, நிறைவேறாத ஆசை என்று இல்லை.

 சாதனைகள் என்று ஒன்றுமே இல்லை!

 எதிர்காலத் திட்டம் என்று கூட ஒன்றும் பெரிதாக யோசித்ததில்லை.  நாளை பொழுது என்றும் நல்ல பொழுதாக வேண்டுமென்று நம்பிக்கை  வைக்கும் கோடி மனிதர்களில் நானும் ஒருவன்.  ஒவ்வொரு நாளும் புதிதாக விடிகிறதா, அன்றைய வேலைகளை ஒழுங்காக கவனிக்க முடிகிறதா, இவைதான் என் சாதனை, எதிர்காலத் திட்டம் இல்லை, எதிர்கால ஆசை!

மனசின் முதல் முயற்சிக்கு முதலில் தங்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி அண்ணா...

குறிப்பு : உறவுகளே உங்களைப் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகச் சொல்லுங்கள்... விபரமாய்... எனக்குத் தெரிந்த எல்லாரிடமும் வாங்க எண்ணம், சிலரை மின்னஞ்சலில் பிடித்துவிடுவேன்... சிலரை முகநூலில் பிடித்து விடுவேன்... இரண்டிலும் பிடிக்க முடியாமல் பலர் இருக்கலாம்... விருப்பம் இருப்பின் 'kumar006@gmail.com' என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
நன்றி.

-'பரிவை' சே.குமார்.

42 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   உங்களைப் பற்றி அறியும் ஆவலில் நாங்கள்...
   அனுப்பியமைக்கு நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   எதற்கு நன்றி....
   என் சிறுகதையை தாங்கள் பகிரவில்லையா...
   நான் கேட்டதும் அனுப்பியதற்கு நாந்தான் நன்றி சொல்லணும்...

   நீக்கு
 4. என்னங்க Sriram Balasubramaniam.

  அத்தனை பெரிய பிளாக்கை தினமும் பதிவு போட்டு நடத்திட்டிருக்கிங்க. இத்தனை சுருக்கமாக பதில் தந்து முடிச்சிட்டிங்க. நீங்களும் முகம் காட்டா பதிவர் என இன்று இந்த பதிவின்மூலம் தான் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன எழுத நிஷா சகோ? தோன்றியதை எழுதினேன். ரொம்பச் சுருக்கமாயிடுச்சோ!

   நீக்கு
  2. இது என்ன கேள்வி? ஆனால் அத்தனை பேரையும் எழுத வைத்து பதிவு வாங்கி போடும் நீங்கள் இத்தனை சுருக்கமாக முடிந்தால் உங்களை தொடரும் நாங்களும் இப்படித்தானே எழுதுவோம்?

   நீக்கு
  3. வணக்கம் அக்கா..
   நானும் அதிகம் எதிர்ப்பார்த்தேன்...
   ஆனாலும் சுருக்கமாய் சொன்னாலும் நறுக்கென்று சொல்லிவிட்டார்...
   கேட்டவுடன் அன்றே அனுப்பினார் என்பது அவருக்கு நம் மீதான அன்பைக் காட்டுகிறதல்லவா...

   நீக்கு
 5. சுருக்கமாக அதே சமயம் செறிவாக. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. அவரின் சகோதரரை கண்டு பேசி விட்டேன் (மதுரை வலைப்பதிவர் சந்திப்பு விழாவின் போது)

  ஆனால் இனிய நண்பரை இது வரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி DD. விரைவில் சந்திப்போம்.

   நீக்கு
  2. வணக்கம் அண்ணா...
   ஸ்ரீராம் அண்ணாவையும் சந்திச்சிருவோம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. கேட்டிருந்தீங்க இன்றிரவுக்குள் அனுப்பி விடுகிறேன். ஸ்ரீராமும் சுஜாதாவும் சொன்னபடி நானும் ஐந்து நிமிடம் உங்கள் ப்லாகில் பிரபலமாகிவிடுகிறேன். :) நன்று குமார் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   அனுப்புங்க அக்கா...

   நீக்கு
 8. நல்லதொரு முயற்சி. எங்கள் பிளாக் - கே.ஜி.ஜி. அவர்களை மட்டும் சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். திருச்சி வரும்போது பார்க்க முடியாமல் போனது!

  உங்கள் நல்ல முயற்சி தொடரட்டும்.... பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   விரைவில் உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்...

   நீக்கு

 9. அருமையான முயற்சி
  வலைப்பதிவர்கள்
  தம்மைப் பற்றிப் பகிருவதால்
  பலருக்கு வழிகாட்டலாக அமையுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கவிஞரே...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. நல்ல முயற்சி. பாராட்டுகள் குமார்.. நிஷா சொல்வது போல ஸ்ரீராம் அவர்கள் தன்னைப் பற்றி மிகவும் சுருக்கமாக முடித்துக்கொண்டார் என்றுதான் தோன்றுகிறது. எனினும் சிறப்பான மன வெளிப்பாடு.. வாழ்த்துகள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்குமேல் என்னிடம் சொல்ல ஒன்றுமில்லை கீதமஞ்சரி.... அதுதான் சுருக்கமாக... நன்றி.

   நீக்கு
  2. வணக்கம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. வாழ்த்துக்கள் குமார் சகோ..மிக அருமையான முயற்சி ..சுருக்கமாக இனிமையாக தன்னைப்பற்றி ஸ்டாம்ப் முத்திரை இட்டு சென்ற சகோதரர் ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. போற்றுதலுக்கு உரிய முயற்சி
  தொடருங்கள் நண்பரே
  நானும் விரைவில் எழுதிஅனுப்புகின்றேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சே.குமார், நலம்தானே .. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு சந்திக்கிறேன். நானும் உங்களைப்போல ஒரு வருடமாக கைவிட்டிருந்தேன், ஆனா மனதில் ஒரு கவலை இருந்துகொண்டே இருந்துது 2010-12 காலப்பகுதிகள் போல மீண்டும் புளொக்கை கலகலப்பாக்கோணும் என, புளொக் என்பது ஒரு விதத்தில் நம் டயறி, ஆல்பம் போலத்தான் இப்போ எழுதி வைத்துவிட்டு வயதான காலத்தில் படிக்க இனிமையாக இருக்கும். அதனால்தான், நான் மட்டுமல்ல, எல்லோர் புளொக்குக்கும் போய் அனைவரையும் ஊக்குவித்து அதிகம் எழுத வைக்கோணும் என இப்புதுவருடத்தில் கங்கணம் கட்டுக் களமிறங்கியிருக்கிறேன் பார்ப்போம்.. எதுவரை போகிறதென.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், இடையே சோர்ந்துவிடாமல் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 14. சகோதரர் ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்.. முதல் முதலா இங்கு ரிப்பன்:) கட் பண்ணியிருக்கிறீங்கள்.

  ///இதுக்குமேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை//// எனச் சொல்லிட்டீங்க, ஆன கடசிவரைக்கும் நீங்க உங்களைப்பற்றிச் சொல்லவேஏஏஏஏ இல்லையே:).... நாங்க எதிர்பார்த்தது... உங்கள் பிறந்த ஊர் அப்பா அம்மா விபரம் முதல் தொடங்கி:).. இன்று உங்கள் எக்கவுண்ட் வைத்திருக்கும் பாங், ATM காரட் இன் 16 நம்பர் அதன் செக்கியூரிட்டி கோட்:), பாங் பலன்ஸ்... இதுவரைக்கும் எதிர்பார்த்தோம்ம்:) இதைத்தான் சொல்லத் தெரியாமல் எல்லோரும் கொஞ்சமா சொல்லிட்டீங்க எனச் சொன்னார்கள்.. மீ கொஞ்சம் தெகிரியசாலி:) என்பதனால் விபரமாச் சொல்லிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா ஹையோ எனக்கு கை கால் எல்லாம் ரைப் அடிக்குது.. சே.. சே அது இந்தக் குளிருக்காகத்தான் இருக்கும்...
  அஞ்சூஊஊஉ இதுக்குத்தானே என்னை இங்கு வரச் சொல்லிக் கை காட்டி விட்டீங்க இப்போ மீயைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்கோ... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள் குமார்! நல்ல முயற்சி! அதற்கு எங்கள் ப்ளாக் தூண்டுகோலாக இருந்தமையும் மகிழ்ச்சி! தொடருங்கள் தங்கள் முயற்சியை. நாங்களும் இப்போது எழுதுவது குறைந்து வருகிறது. பல பதிவுகள் பாதியிலேயே எழுதி நிற்கின்றன. என்னவோ எழுத ஒரு சோர்வு. வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. மூளை வறண்டுவிட்டது போலும்.

  கீதா: எல்லோரும் அருமையாக எழுதுகிறார்கள், நமக்கு ஒன்றுமே எழுத தெரியவில்லை என்ற ஒரு மனதுடன், ஏதேதோ பிரச்சனகளும் சேர்ந்து கொள்ள எழுத வரவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல. எழுத நினைக்கயில் வார்த்தைகள் முட்டுது!

  மிக அருமையாக எழுதும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் குமார்! வாழ்த்துக்கள்!

  கீதா: ஸ்ரீராம் மிகத் தெளிவாகத் தங்களைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள்! ஆனால் என்ன இப்படி இரத்தின சுருக்கமாக முடித்துவிட்டீர்கள்! இன்னும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது..!! உங்கள் தளத்தில் உங்கள் எழுத்துகளில் வருவது போல்... ஒருவேளை முகம் காட்ட மறுப்பது போல் எழுத்திலும்??? வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!

  தொடருங்கள் குமார்!!

  பதிலளிநீக்கு
 16. அருமையான முயற்சி சகோ. இதுபோல ஏதாவது செய்யலாமா என்று யோசித்துப் பணிச்சுமையால் விட்டுவிட்டேன். நீங்கள் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துகள் சகோ. பலரின் கட்டுரைகளை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
  ஸ்ரீராம், பல சாதனைகள் செய்துவிட்டு ஒன்றும் இல்லை சொல்லிவிட்டீர்களே. நான் வியக்கும், மதிக்கும் பதிவர்களில் நீங்கள் ஒருவர். நான் உங்கள் தளம் வருகிறேனோ இல்லையோ, உங்களை என் தளத்தில் பார்க்கமுடியும். அந்த அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. //வெளியிட அல்ல// சகோ, உங்கள் செய்தி பார்த்தேன். மகிழ்வுடன் அனுப்புகிறேன் சகோ. என்னையும் கேட்டதற்கு மகிழ்வுடன் நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்.

  பதிலளிநீக்கு
 18. உங்கள் முயற்சி பாராட்டுகுரியது.....ஆமாம் என்னை பற்றி எழுதினால் கண்டிப்பாக போடுவீர்கள்தானே இங்கே போடுவீர்கள் என்று நான் சொன்னது பகிர்வதை அதைவிட்டுவிட்டு எங்க வூட்டுகாரம்மா மாதிரி பூரிக்கட்டையால் போட்டுவிடமாட்டீர்களே

  பதிலளிநீக்கு
 19. கருத்துரைகள் எழுதாவிடினும் எப்போதும் போல வாசிக்கும் பதிவுகளில் உங்களுடைய வலைத்தளமும் ஒன்று. உங்களைப் பற்றிய முழு விவரங்கள் சொல்லும், உங்களது கிராமத்து அனுபவங்கள் முழுமையையும் தொடர்ந்து வாசித்து ரசித்து இருக்கிறேன்.

  ’என்னைப்பற்றி நான்’என்ற உங்கள் புதிய தலைப்பின் கீழ் வரும் வலைப்பதிவு நண்பர்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் சுருக்கமாகவே முடித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. எங்கள் ப்ளாக் பதிவர்களில் கேஜிஜி சாரையும், ஶ்ரீராமையும் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ஒரு பதிவு வந்ததே தெரியாது. இப்போத் தான் வெங்கட்டின் பதிவில் பார்த்துட்டு வந்தேன். ஶ்ரீராம் ரொம்பவே அடக்கமாகத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். :) மத்ததும் படிக்கணும்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...