மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : சுய டைரிக் குறிப்பு

து இந்த வருடத்தில் நிகழ்ந்தவைகளின் தொகுப்பாக எழுதப்படும் பகிர்வே... ஜோதிஜி அண்ணனைப் போல் வருடா வருடம் விரிவாக, அலசி ஆராய்ந்து எல்லாம் எழுத நம்மால் முடியாது... நாம பட்டதும் பெற்றதும் என்னன்னு கொஞ்சம் எழுதி வச்சுப்போமேன்னு வருட முடிவில் ஏதாவது கிறுக்கி வைக்கிறது போல இந்த வருட முடிவிலும் சில...

Image result for new year gif file

2016... வருட ஆரம்பத்தில் எங்கள் ஊரில் வீடு வேண்டும் என்பதற்காக கையில் காசில்லாத நிலையில் வீட்டை ஆரம்பித்து அப்படி இப்படி புரட்டி வீட்டைக் கட்டி மே மாதம் பால்காய்ச்சினோம். ஏதோ ஒரு விதத்தில் விரயமாகும் என்றார்கள் வீட்டைக் கட்டியதால் கடனாகி நின்றாலும் வீடு நமக்கானதே என்ற நிம்மதி.

2016...  சில நல்ல நிகழ்வுகள் நடந்தன என்றாலும் நிறைய பிரச்சினைகள், கஷ்டங்களைச் சுமந்து பயணித்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு அப்போதைய நிவாரணியாய் ஏதாவது ஒரு மாற்று அமைந்து தற்காத்துக் கொண்டே வந்தது.

2016...  கச்சா எண்ணெய் விலை குறைவுப் பிரச்சினையால் எங்க வேலைகள் எல்லாம் தடைபட்டதால் வருடத்தின் இறுதியில் சில மாதங்களாய் அலுவலகத்தில் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய சூழல்... ஊருக்குச் செல்லச் சொல்லி விட, முடியாது என சண்டையிட்ட காரணத்தால் மலையாளிகள் ஊருக்குச் செல்ல, என்னை மட்டும் போக வேண்டாம் என்று சொன்னார்கள்... இன்னும் எந்த ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை.

2016... தமிழ்வாசி மூலமாக பொன்னியின் செல்வன் வாசிக்க ஆரம்பித்து வரலாற்றுப் புதினங்களில் அதிகம் பயணிக்க ஆரம்பித்தேன். நிறைய வாசிக்க முடிந்தது.

2016... வருத்தங்கள் கவலைகள் சூழ இருக்கும் தினங்களில் எல்லாம் ஆறுதலாய் காயத்ரி அக்கா, நிஷா அக்கா, நண்பன் தமிழ்க்காதலன், குடந்தை சரவணன் அண்ணன் என நட்புக்கள் எல்லாம் சரியாகும் என ஆறுதலாய் நின்றார்கள்.

2016... பதிவுக் காப்பியின் காரணமாக மனசு தளத்தில் சிறுகதைகள், எழுதிக் கொண்டிருந்த தொடர்கதை எல்லாம் நிறுத்திவிட்டு மனசு பேசுகிறது நிறைய எழுத ஆரம்பித்தேன்.

2016... 2015-ல் பாக்யா மக்கள் மனசு பகுதிக்கு எழுத ஆரம்பித்து இந்த வருடத்தில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து தொடர்ந்து எனது கருத்து வந்து கொண்டிருக்கிறது.

2016... நிறைய சிறுகதைப் போட்டிகளில் ஒரு சில காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் எனது கதைகள் ஏதோ ஒரு பரிசைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2016... ஸ்ரீராம் அண்ணா அவர்களின் எங்கள் பிளாக் வலைத்தளத்தில் கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது கதையான ஹரிணியும் வெளிவந்தது.

2016... எனக்கு இங்கு ஆறுதலாக இருந்த கில்லர்ஜி அண்ணன் அவர்கள் குடும்பச் சூழல் காரணமாக வேலையை விட்டுவிட்டு தேவகோட்டைக்குச் சென்று விட, வருத்தங்கள் நிரம்பிய நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது.

2016... திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுடன் போனில் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பை வருட இறுதி கொடுத்தது.

2016... ஆரம்பத்தில் இருந்த கஷ்டங்கள் கவலைகளை விட வருடத்தின் இறுதியில் கஷ்டத்தை இன்னும் இறுக்கமாய் அளித்து நகர்ந்தது.

2016...அகல் மின்னிதழில் அதிக கட்டுரைகள் எழுதும் வாய்ப்பை அதன் ஆசிரியர் திரு. கணேஷ் (சத்யா) அவர்கள் வழங்கினார்.

2016... நிஷா அக்கா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் என்னைக் குறித்தும் சொல்லியிருந்தது இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. மகிழ்ச்சி.

2016... 2013-ல் இருந்து புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, அதற்கான முயற்சியில் இறங்க நினைக்கும் போது எதாவது ஒரு பிரச்சினை முன் வந்து பூதகரமாக, முயற்சி முயற்சியாகவே இந்த வருடம் வரை பயணித்துக் கொண்டிருக்கிறது.

2016... என் கதை புத்தகமாகவில்லை என்றாலும் என் எழுத்து சகோதரர் ஒருவரின் புத்தகத்தில் இணைந்திருக்கிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு.

2016... பல கவலைகளை மறக்க வைத்தது எங்கள் விஷாலின் குறும்புச் செயல்கள்.

2016... என் மனைவி தனது கைவண்ணத்தில் வரைந்த கோலங்களுக்காகவே 'சிநேகிதி' என்ற தளத்தை ஆரம்பித்தார்.

2016... வட்டார வழக்கில் எழுது... அது உனக்கு நல்லா வருது என ஜோதிஜி அண்ணாவுடன் பேசும் போது குறிப்பிட்டார். மிகச் சிறந்த எழுத்தாளர், கருத்தோடு புள்ளி விவரங்களை வைத்து எழுதுவதில் நிபுணர் அவர் என்பதை அனைவரும் அறிவோம்... அப்படிப்பட்டவரின் பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி.

2016... குடும்பத்தைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில் நிறைய வலிகளைக் கொடுத்த ஆண்டு இது. மொத்தத்தில் இந்த ஆண்டில் கற்றது அதிகம் என்றாலும் பெற்றது குறைவுதான்... அதிலும் பட்ட கஷ்டங்கள் பட்டை தீட்டின என்று எடுத்துக் கொண்டாலும் அதிக கஷ்டம் அயற்சியை உண்டாக்கியது என்பதே உண்மை.

நாளையும் எப்பவும் போல்தான் விடியும் என்றாலும்... அந்த விடியல் எல்லோருடைய கனவுகளையும் நனவாக்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் ரசித்தேன்...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகள். இந்த வருடம் இன்னும் புதியபல கதவுகள் திறக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த வருடம் இன்னும் பல வெற்றிகளை உங்களுக்கு அளிக்கட்டும்....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

Yarlpavanan சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி சொன்னது…

வருகிற வருடம் நீங்கள் நினைத்தவை யாவும் நிறைவேறட்டும்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்தப் புத்தாண்டு தங்களுக்கு மேலும் பல வெற்றிகளைத் தந்து மகிழ்விக்கட்டும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நிஷா சொன்னது…

கடந்தவை கடந்து விட நடப்பவை நல்லதாக கசப்புக்கள் கரைந்தோட புதுவருடம் புதிதாக பிறக்கட்டும் குமார். எல்லோர் வாழ்விலும் ஏற்றமும் இறக்கமும் இருவழிப்பாதையாகவே இருந்து கொண்டிருக்கும். இனிவரும் நாட்கள் வளமாகட்டும்.

தொகுப்பு அருமை