மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 6 ஜனவரி, 2015

மனசின் பக்கம் : பிடித்த பிசாசு... பிடிக்காத மொசக்குட்டி


உதய நாள்

நேற்று என் மனைவியின் பிறந்தநாளுக்கு வலைப்பூ, முகநூல் மற்றும் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

ன்று பிறந்தநாள் கொண்டாடும் வலையுலகின் முக்கியப் பதிவர் வலைச்சித்தர் என்று அன்போடு அழைக்கப்படும் அன்பு அண்ணன் 'DD' என்கிற திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ வாழ்த்துவோம்.

பணி

புதிய புராஜெக்ட்டில் நியமிக்கப்பட்ட மலையாளி ஊருக்குப் போயிருப்பதால் அவனுக்குப் பதிலாக இரண்டு மூன்று வாரங்களுக்கு எனக்கு அலைனில் பணி. இங்கு வந்து தங்கி மூன்று நாட்கள் வேலைக்குப் போய் வந்தாச்சு. அபுதாபி பிறந்த வீடு போல... அங்கிருப்பது மகிழ்ச்சியே... அலைன் புகுந்த வீடு போல்... மலையாளிகளுடன் தங்கி இருக்கிறேன். காலை 5.30 மணிக்கு குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பழனி, சபரிமலைக்குச் செல்லும் போது அதிகாலையில் கண்மாயில் குளித்த அனுபவம் இருந்தாலும் இந்த குளிரில் குளிர்ந்த நீரை ஊற்றும் போது ஏன்டா இப்ப குளிக்கணுமின்னு இருக்கு. அறைக்கு பூட்டில்லை... வெளியில் மட்டுமே கேட்டை பூட்டுகிறார்கள். பதினைந்து நாள்தான் என்பதால் சரியென தங்கியிருக்கிறேன். இப்ப தினமும் கம்ப்யூட்டரையும் எனது சர்ட்டிபிகேட்டுக்களையும் தூக்கிச் சுமக்கிறேன்.

சினிமாக்கள்

நாய்கள் ஜாக்கிரதை படம் பார்த்தேன். சத்தியராஜ் மகனுக்காக தானே சொந்தமாகத் தயாரித்திருக்கிறார். நாயும் சிபி நல்லாத்தான் நடிச்சிருக்காங்க... ஒருவரிக் கதையை வச்சிக்கிட்டு எம்புட்டுத்தான் இழுப்பானுங்க... முடியலை.

மொசக்குட்டி அப்படின்னு ஒரு படம் இன்று மதியம் பொழுது போகாமல் பார்த்தேன். 1980களின் கதை வடிவம். பாடல்கள் கேட்ட போது நல்லா இருந்தது. படத்தில் பார்க்கும் போது ஐய்யோ முடியலை... ரெண்டுக்குமே ஆடத் தெரியலை... அதுவும் பாட்டின் சப்தத்தைக் குறைத்து விட்டு படத்தைப் பார்த்தால் அழுத பிள்ளை கூட சிரித்துவிடும். நாயகனின் ஆட்டம் அப்படி... கொலையாக் கொல்லுறானுங்க.

திருடன் போலீஸ் படம் பார்த்தோம். கொஞ்சம் நல்ல கதை போல் தெரிந்தாலும் நாயகன் சிரிப்பு போலீஸ் போல நடித்து சொதப்பி விட்டார். திருடன் போலீஸ் மனதைக் களவாடவில்லை.

பிசாசு படம் முழுவதும் குறியீடுகள் நிரம்பி வழிந்தாலும்... மிஷ்கினைப் பிரதிபலிப்பது போல் நாயகன் நடை உடை பாவனை இருந்தாலும்... மனதைக் கொள்ளை கொண்டது. நல்ல படம்... ஆனா இந்த மிஷ்கின் வலையுலக விமர்சகர்களையும் படம் பார்க்க வருபவர்களையும் என்னமா பேசுறான்(ர்). எல்லாம் திமிரு... என்ன செய்ய... மண்டைக்குள் சரக்கு இருக்கு ஆனா மனுசனை மதிச்சிப் பேசத் தெரியலை... பிசாசு பிடிச்ச ஆளை விடுங்க... பிசாசு பிடிச்சிருக்கு...

புத்தகம்
கில்லர்ஜி அண்ணன் கொடுத்த இரண்டு கவிதைப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் எனக் கொண்டு வந்து அப்படியே பெட்டிக்குள் பத்திரமாக வைத்திருக்கிறேன். இங்க இரவு 9.30 மணிக்கெல்லாம் லைட்டை ஆப் செய்கிறார்கள். நாங்க அபுதாபி எங்க அறையில் 11.30 மணிக்குத்தான் லைட்டை ஆப் பண்ணுவோம். அங்கு படிக்க... எழுத நேரமிருந்தது. இங்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஊருக்குப் பேசவும்... கடையில் சாப்பிட்டு விட்டு வரவும்... படுக்கவும்தான் சரியாக இருக்கிறது.

போட்டி
கோதரர் ரூபன் அவர்கள் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறார். அதில் கலந்து கொள்ள எண்ணம்... இந்த வார இறுதியில் அபுதாபி செல்லும் போதுதான் அதற்கான முயற்சியில் இறங்கணும்... நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். சிறுகதைப் போட்டி குறித்த விவரம் அறிய இங்கு  சொடுக்கி ரூபனின் தளம் சென்று அறிந்து வாருங்கள்.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

கதம்பம் மணத்தது நண்பரே,,,,,

தமிழ் மணம் 2

மகிழ்நிறை சொன்னது…

டி.டி அண்ணாவுக்கும், நம்ம அண்ணிக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துகள்:) போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொகுப்புச் செய்திகள் அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தங்கை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்கள் வாழ்த்தை அண்ணியிடம் சேர்த்தாச்சு.
போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கலாம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

பல தகவல்களின் தொகுப்பு.. அருமை!..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி நன்றி... போட்டியை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி...

ஸ்ரீராம். சொன்னது…

நாய், முயல், பிசாசு என்று படங்கள்!அலைன் என்றொரு இடமா.... ம்...பொழுது போகட்டும்!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான தகவல்களை தொகுப்பித்து தந்தமைக்கு நன்றி!

Unknown சொன்னது…

வெளியூர் வேலை ,சினிமா ,புத்தகம் ...நல்லபடியா நாள் போகிறது போலிருக்கே என்ஜா ய் :)
த ம 4

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பரே! அழகாக, சுவையாகத் தொகுக்கின்றீர்கள்! அதுவும் சிறியதாக அதேசமயம் மனதில் நிற்கும்படி...எங்களுக்குச் சிறியது என்பதே வர மாட்டேங்குது...அஹ்ஹாஹ் என்ன செய்ய...

பிசாசு பிடிச்ச ஆளை விடுங்க... பிசாசு பிடிச்சிருக்கு...// ரசித்தோம்....ஆம் எங்களுக்கும் பிசாசு பிடித்தது! (மனதிற்கு! நல்ல காலம் எங்களைப் பிடிகக்வில்லை!!!)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பவிட்டேன் நண்பரே
பிசாசு என் மனமும் கவர்ந்த படம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
வெளியூரு... எஞ்சாயா? அதுசரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே!

சுவைபடும்படி பல விஷயங்களை தொகுத்தளித்த முறை சிறப்பானதாக இருந்தது...
இப்போதுதான் படித்து அறிந்தேன்...
சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் (தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
தாங்கள் கலந்து கொள்ளும் போட்டியில்,மகத்தான வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Angel சொன்னது…

நானும் பார்த்தேன் ..பிசாசு படம் ரொம்ப பிடித்திருந்தது