மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 28 மார்ச், 2011

சுவடுகள்




"இப்ப எங்க இருக்கே...?"

"கிளம்பிக்கிட்டே இருக்கேன்டி... எப்படியும் நீ வாரதுக்குள்ள நான் வந்துடுவேன்..."

"இப்படித்தான் சொல்லுவே... ஆனா வாராவாரம் நான் தான் போறவனையும் வர்றவனையும் பாத்துக்கிட்டு நிக்கணும்."

"இல்ல இன்னைக்கு உனக்கு முன்னால அந்த இடத்துல நிப்பேன். போதுமா... வந்து சேரு... சும்மா மிரட்டாம..."

"ஆமா... உங்களை மிரட்டிட்டாலும் ஐயா அப்படியே பயந்து அடங்கிடுவிய... அட ஏன் நீ வேற... நான் கிளம்பிட்டேன்... காக்க வச்சிடாதே..."

"சரி தாயே... வந்து சேரு... இன்னும் அரைமணி நேரத்துல நான் அங்க இருப்பேன்" செல்போனை அணைத்து சட்டைப் பைக்குள் போட்டபடி வண்டியை ஸ்டார்ட் பண்ணினான் நவீன்.

***

அதே நேரம் தனது சிவப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவில் இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள் அகிலா.

'எப்பவும் அவன் வந்து காத்திருந்ததா சரித்திரமே இல்லை. இன்னைக்கு வாராறாம். பாப்போம் அவனா நானான்னு... எங்கயாவது சுத்திட்டு வந்துட்டு டிராபிக் அதிகமா இருந்துச்சு, அப்பா அப்பத்தான் ஒரு வேலை கொடுத்தாரு, அண்ணன் வந்துட்டான்னு ஆயிரங்கதைகள் சொல்லுவான். அவனுக்கு மட்டும்தான் கதைகள் கிடைக்குமா என்ன... நமக்கும்தான் கிடைக்கும், இன்னைக்கு ஒருவேளை லேட்டாப் போனால் நாமளும் ஒரு கதையை எடுத்துவிடலாம் என்று நினைத்தபடி அந்த தெருவில் திரும்பியவள் அவனைப் பார்த்துவிட்டாள். 'இவன் சந்துருதானே...' ஆமா என்று உள்மனசு சொல்ல "ஏய்... சந்துரு... சந்துரு..." என்று கத்தினாள்.

வண்டியை ஸ்லோப் பண்ணி திரும்பியவன் இவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

"ஏய் அகி... எப்படிடி இருக்கே?"

"நல்லா இருக்கேன்டா... ஆமா நீ பாளையங்கோட்டைதானே... எப்படா சென்னைக்கு வந்தே?"

"நாம திருச்சியில படிப்ப முடிச்சதும் கொஞ்சநாள் ஊருப்பக்கம் இருந்தேன். அப்புறம் சும்மா இருந்து என்ன செய்ய... அதான் நண்பன் ஒருத்தனோட உதவியில சென்னை வந்து ஒரு சின்ன கம்பெனியில வேலை பார்த்தேன். இப்ப ஒரு ஆறுமாசமா மல்டி நேசனல் கம்பெனியில வேலை. நல்ல சம்பளம்... பரவாயில்லடி."

"நீ இப்ப வேளச்சேரியிலயா தங்கியிருக்கே...?"

"ஆமாண்டி... பஸ்ஸ்டாண்ட்டுக்குப் பக்கத்து சந்துல பிரண்ட்ஸோட இருக்கேன். ஆமா நீ திருச்சிதானே... இங்க எங்கயும் வேலை பாக்கிறியா?"

"அப்பாவுக்கு கவர்மெண்ட் ஜாப்ல அவருக்கு சென்னைக்கு மாற்றல் கிடைச்சது. அதான் இங்க வந்தோம். கவுஸிங் போர்டுல பி பிளாக்ல இருக்கோம். ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்கிறேன். அப்புறம் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாடா...?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க. எந்தங்கச்சி மேரேசுக்கு நம்ம செட்ல எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்க நினைச்சேன். யாரும் தொடர்புல இல்லை. சிலருக்கு ஆட்டோகிராப் அட்ரஸை வச்சு இன்விடேசன் அனுப்பினேன். நிறைய ரிட்டனாயிடுச்சு... சில பேர் மட்டும் வந்தாங்க. உன்னைய பாத்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?"

"எனக்கும்தான்டா... அதுக்கப்புறம் கவிதாவை பாத்தியாடா..."

அவன் மௌனமாக நிலம் பார்க்க, "ஏண்டா... பாக்கலையா.?"

"இல்லடி... அந்தப் பிரச்சினைக்கு அப்புறம் எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்லைங்கிறதும் அந்த பிரச்சினைக்கு ஜவகர்தான் காரணம் நான் இல்லைங்கைறதும் உனக்கெல்லாம் தெரியும்தானே.."

"ஆமா.. நாங்கதான் அவகிட்ட எடுத்துச் சொன்னோமே...?"

"சொன்னீங்க... ஏனோ தெரியலை அதுக்கு அப்புறம் அவ என்னைய விட்டு விலக ஆரம்பிச்சா... சரியின்னு நானும் விலகிட்டேன். அப்புறம் அவளுக்கு கல்யாணம் ஆன விவரத்தை மகேசு சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சரிவிடு... அவ எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும். காதலிச்ச என்னைய அவ ஒதுக்கிட்டான்னு சாபமெல்லாம் விடுற அல்பையில்லை நான்... ஆமா கல்யாணம் பண்ணிட்டியா..."

"அதுக்குள்ளயும் ஏன்டா அந்த வட்டத்துக்குள்ள விழச் சொல்றே... வீட்ல அலையன்ஸ் பாக்கனுமின்னு நிக்கிறாங்க. நாந்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமின்னு சொல்லி கடத்திக்கிட்டு வாரேன். நீ பண்ணலாமுல்ல... கவிதா நெனப்பா?"

"சே... அப்படியெல்லாம் இல்ல. ஒரு தங்கச்சி மேரேஜ் முடிஞ்சிருச்சு. இன்னொரு தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்கிறாங்க. அப்புறம்தான் மேரேஜ் பத்தி யோசிக்கணும். நீ இங்க யாரையும்..."

"ஏன்டா நிறுத்திட்டே...லவ் பண்றியான்னுதானே கேக்குறே... ஆமா காலேசுல லேசா இருந்துச்சு... உனக்குத் தெரியுமே?"

"ஏய்... நவீன்..."

"ஆமா அவந்தான் இப்ப ரெண்டு பேரும் தீவிரமா இருக்கோம். வீட்ல சொல்லி பெர்மிஷனோட மேரேஜ் பண்ணனுமின்னு ரெண்டு பேருக்கும் எண்ணம்."

"ரொம்ப நல்லவன். அவன் எங்க இருக்கான்?"

"அவங்க பேமிலி இங்கதான் வடபழனியில இருக்காங்க. நவீன் சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான்"

"அப்படியா... அவனை ரொம்ப கேட்டேன்னு சொல்லு... சரிடி உன் நம்பரைக் கொடு கால் பண்றேன். பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க. இன்னைக்கு சண்டேயில பீச்சுக்குப் பொயிட்டு ராத்திரிதான் வருவோம்."

"உன் நம்பரை சொல்லு மிஸ்டு கால் கொடுக்கிறேன். போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாடா."

"கண்டிப்பா... வாரேண்டி... பாத்துப்போ..."

"ஒகேடா..."

***

அதே நேரம்...

அடுத்த பதிவில் முடியும்.

**************************

((இது தொடர்கதை அல்ல... சிறுகதைதான்.  இந்தக் கதை சில மாதங்களுக்கு முன்எழுதிய கதை என்பதால் சற்றே பெரியதாக இருக்கின்றது. போன சிறுகதைக்கே நண்பர்கள் நீளம் அதிகம் என்று சொன்னதால் "சுவடுகள்" இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. படித்து கருத்துக் கூறுங்கள்.  மீதி அடுத்த பதிவாக...))

-'பரிவை' சே.குமார்.

Thnaks for Photo : Google

19 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல தொடக்கம் பாஸ்.. :)

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது நண்பா

தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தீ்ர்களா...

http://gunathamizh.blogspot.com/2011/03/blog-post_23.html

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லாத்தான் போகுது...

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

தமிழ்க்காதலன் சொன்னது…

காக்க வைக்கும் கதை ஆரம்பம் நல்லா இருக்கு நண்பா...

அறிமுகப் படலம் கொஞ்சம் நீளமா இருக்குற மாதிரி தெரியுது. ஒரு முழுகதையாய் எழுதினால் மிக அருமையாய் வரும் போல தெரியுது.

சுசி சொன்னது…

எதிர்பாராத தொடரும்..

நல்லா இருக்கு குமார்.

Asiya Omar சொன்னது…

இரண்டு பேரும் பேசிக்கிற நடை புதுசாக இருக்கே,கதையை ஊகிக்க முடியலை,சுவடுகள் அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்..

r.v.saravanan சொன்னது…

நல்லா இருக்கு குமார்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//அதே நேரம்...அடுத்த பதிவில் முடியும்//

இப்படி அநியாயத்துக்கு சஸ்பென்ஸ்... ஹ்ம்ம்... ஒகே சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்க...:)

Chitra சொன்னது…

அருமையான எழுத்து நடை.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

intresting kumar..!

நிலாமதி சொன்னது…

தொடருங்க பாஸ் .............ஆவலுடன்

Sriakila சொன்னது…

கதை ரொம்ப இயல்பா இருக்கு...மேலும் படிக்க ஆர்வமாயிருக்கிறேன்.

vanathy சொன்னது…

நல்லா இருக்கு. ஏன் தொடரும் போட்டீங்க, பாஸ்???

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நல்லாயிருக்கு குமார்.

மோகன்ஜி சொன்னது…

நல்லா கொண்டு போறீங்க குமார்.. வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

காதலைப் பற்றி குறிப்பிட்ட இடம் ரொம்ப நல்லாயிருக்குங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

Pranavam Ravikumar சொன்னது…

அருமை!

ஹேமா சொன்னது…

அடுத்த பதிவுக்குக் காத்திருப்பு குமார் !

vidivelli சொன்னது…

அருமையான பதிவு
நல்லாயிருக்குங்க......