மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 ஜனவரி, 2018வானவேடிக்கையும் காய்ச்சலும்

னைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டுக்கு முந்தைய இரவில் அதாவது 2017 டிசம்பர் 31 ஆம் தேதி இரவு எங்கள் அறைக்கு அருகில் லீ மெரிடியன் ஹோட்டலுக்குப் பின்னே ரீம் ஐலேண்டின் கடற்கரையோரத்தில் மிகச் சிறப்பான வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அபுதாபியைப் பொறுத்தவரை கார்னிச் ரோட்டில் மெரினா மாலுக்கு அருகே ஷேக் பேலஸ் அருகிலும் இங்கும் வான வேடிக்கை நிகழ்த்தப்படும். இந்த முறை மிகச் சிறப்பான வான வேடிக்கையாக அமைந்தது. ராசல் ஹைமாவில் கின்னஸ் சாதனைக்கான வானவேடிக்கையும் துபாய் புர்ஜ் கலீபாவில் எப்பவும் போல் வித்தியாசமான வானவேடிக்கையும் நிகழ்ந்தப்பட்டது என்றாலும் நம்மால் பார்க்க முடிந்தது அருகில் நடந்த வானவேடிக்கையை மட்டுமே.


அந்த வானவேடிக்கையைப் பார்த்துவிட்டு வந்து படுத்தவன் அடுத்தநாள் எழுந்த போது அடித்துப் போட்ட உடல்வலியும்... அனலாய்க் கொதித்த காய்ச்சலுமாய்...

அன்றை தினம் அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி, அறை நண்பர் கொடுத்த மாத்திரையில் சற்றே காய்ச்சல் குறைந்தது போல் தோன்ற, மறுநாள் வழக்கம் போல் அலுவலகம். கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சல் எகிற, புராஜெக்ட் மேனேஜரிடம் என்னால் இருக்க இயலாது... காய்ச்சல் அதிகமாயிருச்சு என்ற போது மீட்டிங் அட்டண்ட் பண்ண யாரும் இல்லை, நீ மீட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்குப் போ என்றான். 

இருவருமாய் அபுதாபி முனிசிபாலிட்டிக்கு வந்தோம். மீட்டிங்கில் இருக்க முடியாமல் அமர்ந்திருந்தேன். பதினோரு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்கு முடிந்தது. அடுத்த புராக்ரெஸ் மீட்டிங் இருக்கு அதையும் முடிச்சிட்டு போ என்றான். என்னால் இனிமே இங்க உக்கார முடியாது என்று சொல்லவும் சரி போ நான் அட்டண்ட் பண்ணிக்கிறேன் என்றான். வீடு வந்து சேர்ந்து ஆவி புடிச்சி... மாத்திரை போட்டு உறங்கினேன். மறுநாள் ரொம்ப நல்லாயிருந்தது என்பதால் எழுந்து குளித்து அலுவலகம் சென்றேன்.

மணி ஆக ஆக காய்ச்சல் எகிற ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கண்ணெல்லாம் எரிய ஆரம்பிக்க, மூணு மணியளவில் பெர்மிஷன் போட்டு விட்டு ஹாஸ்பிடல் போய் மருந்து மாத்திரைகளுடன் அடுத்த நாளுக்கான மருத்துவ விடுப்புடனும் அறைக்கு வந்து சேர்ந்தேன்.

உடம்பெல்லாம் வலி.... விட்டு விட்டு வரும் காய்ச்சல் என இன்று காலை வரை அடித்து ஆட, இன்று மீண்டும் அதே மருத்துவரிடம் சென்றேன். மீண்டும் மாத்திரைகள்... இன்று கொஞ்சம் பரவாயில்லை.

ஆறு நாட்களாய் காய்ச்சல் என்பது எனக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. செம காய்ச்சல். சில நேரம் சுருண்டு படுக்க வைக்கிறது. சில நேரம் எழுந்து அமர வைக்கிறது. முதுகு வலி இப்படியும் இருக்கும் என்பதை உணர வைக்கும் வித்தியாசமான காய்ச்சலாய்.

ஊரில் விஷால் விளையாடப் போகிறேன் என ஓடி விழுந்து காலில் சிறிதாய் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டுப் போட்டு படுத்திருக்கிறான். காலை ஆட்டக் கூடாது என்பதற்காக முழங்காலில் இருந்து பாதம் வரை பெரிய கட்டாய்... பார்க்கும் போதே கவலையாய் இருக்கிறது. ஆனாலும் அவன் அடிக்கொரு வாய்ஸ் மேஜேஸ் அனுப்பிச் சிரிக்க வைக்கிறான். அதில் கரைக்கிறது கவலை.

இதற்கு முந்தைய பகிர்வில் மனவலியைச் சொன்ன விதம் பலருக்கு வருத்தம் அளித்திருக்கிறது. இங்கிருக்கும் அண்ணன் ஒருவர் அழைத்து ஏன் இப்படி.. இதெல்லாம் கடந்து போகும் என்று அன்போடு பேசினார். அவரின் அன்பு எனக்கு ஆதரவாய் அமைந்தது.

கஷ்டங்களில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்குள் உண்டு. அதுவே என்னை நம்பிக்கையோடு நடைபோட வைக்கிறது.

காய்ச்சலில் இருந்து மீண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகலாம் போல் தோன்றுகிறது. நல்ல பசி எடுக்கிறது... இரண்டு வாய் சோறு உள்ளே போனதும் சாப்பாடு இறங்க மறுக்கிறது. மனசு ஏனோ கவலையோடு சுழல்கிறது. சில பல நிகழ்வுகள் மனசுக்கு கொடுக்கும் வருத்தத்தைப் பார்க்கும் போது இந்த வாழ்க்கைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து விரைவில் ஊர் வந்து சேர வேண்டும் என்ற எண்ணம் ஹர்திக் பாண்டியா போல் அடித்து ஆடுகிறது.

நடக்கும் என்றே நம்புகிறேன்.

****

பிரதிலிபியின் ஊர் சுற்றிப் புராணம் போட்டிக்காய் எழுதி அனுப்பிய பயணத்தில் 'பய' அனுபவம் என்ற கட்டுரை பதியப்பட்டிருக்கிறது. முடிந்தால் வாசித்துக் கருத்துச் சொல்லுங்க. கட்டுரையை வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.

****

கல் பொங்கல் சிறப்பிதழ்-1 இன்று வெளிவந்திருக்கிறது. அதில் நான் எழுதிய என் வரலாற்றுப் பார்வையில் சிவகாமியின் சபதம் வாசித்த பாதிப்பில் எழுதிய சிவகாமி ஏமாந்தாளா..? ஏமாற்றப்பட்டாளா..? என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையை வாசிக்க இங்கு சொடுக்குங்கள். அடுத்த பதிவாக கட்டுரை இங்கு பகிரப்படும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

****

ன்பின் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்... அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சென்ற ஆண்டு அண்ணனின் பிறந்தநாளுக்கு எழுதிய கட்டுரை...


-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

 1. உங்களுக்கும், விஷாலுக்கும் விரைவில் உடல் நலம் குணமாக பிரார்த்திக்கின்றேன் நண்பரே..

  பதிலளிநீக்கு
 2. திண்டுக்கல் ஜி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்...

  பதிலளிநீக்கு
 3. குடும்பத்தோட சேர்ந்து இருக்க முடியாமல் வெளிநாட்டிலே காலம் முழுவதையும் செலவழித்துவிடாதீர்கள் .

  பதிலளிநீக்கு
 4. சீக்கிரம் முற்றிலும் குணமடைய பிரார்த்திக்கிறேன். இப்போது தேவலாமா? உடம்பு சரியில்லாத நேரங்களில் குடும்பம் அருகில் இல்லாமல் இருப்பது ஒரு துன்பம். மகனுக்கும் பரவாயில்லையா?

  பதிலளிநீக்கு
 5. DD க்கு இங்கும் ஒருமுறை வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். விரைவில் அனைத்தும் சீராகும்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  தற்சமயம் பூரண குணமா? விரைவில் உடல் நலம் தேறி, பரிபூரண சுகமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் ஆண்டவன் அருள் புரியவும் வேண்டிக்கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே
  வலைச் சித்தருக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. எல்லாம் விரைவில் சரியாகும் நண்பரே... கவலை வேண்டாம்.

  நல்லதே நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 10. அடேயப்பா நானும் இதே கஷ்டம் பட்டேன் .இன்னும் தெளிவாகவில்லை.விரைவில் நீங்களும் மகனும் குணமடைய வேண்டுகிறேன்.
  karthik amma

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...