மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 டிசம்பர், 2015

மனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்

க்களின் வாழ்க்கையை அடித்துத் துவம்சம் செய்த மழை வெள்ளம் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து மதம் கடந்த மனிதத்தை காண்பித்துச் சென்றிருக்கிறது. ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் அதற்காகவாவது மழைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ழை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து உதவிய யூனூஸின் பெயரையே தங்கள் மகளுக்கு வைத்து தங்கள் நன்றியைக் காட்டினர் மோகன் தம்பதிகள் என்றால், தன் மீது அன்பு வைத்து தன் பெயரையே குழந்தைக்கு சூட்டியவர்களின் அன்பில் நனைந்து அந்தக் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் தானே செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் அந்த நண்பர். மேலும் இவர்களுக்கு மட்டுமில்லாது இன்னும் வாழ்வை இழந்து நிக்கும் எல்லாரும் பயனடையும்படியாக காரியங்களைச் செய்ய முனைந்து வருவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். நண்பர் யூனூஸ் அவர்களை நாமும் வாழ்த்துவோமே.


முகநூலில் கூட அதிகம் பகிரப்படாமல் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு பிறந்தநாள் கழிந்திருக்கிறது என்றால் அது இந்த முறைதான் என்று நினைக்கிறேன். அவர் வேண்டாம்... வேண்டாம் என்று சொன்னாலும் பாலாபிஷேகங்களும் ஊர்வலங்களும் தமிழகத்தையே அதிர வைக்கும். அவருக்கு அரியாசனம் கொடுத்தும் அதை துச்சமென மதித்தார் என அண்ணன் ஒருவர் எழுதியிருந்தார். எப்போது அரியாசனம் கொடுத்தார்கள் அவருக்கு என்றுதான் தெரியவில்லை. படத்தில் வசனம் பேசினாலும் விஜயகாந்த் போல் எழுச்சி கொண்டு கட்சி ஆரம்பிக்க உள்ளுக்குள் அவருக்கு பயமே அதிகமிருந்தது என்பதே உண்மை. சரி அரசியல் எதுக்கு நமக்கு. அவரே ஒதுங்கித்தான் இருக்கார்... அப்படியே இருக்கட்டும் அதுவே தமிழகத்துக்கு நல்லது... இல்லையென்றால் சினிமாவில் நுழையும் எல்லாருக்கும் முதல்வர் கனவும் சேர்ந்து வந்துவிடும். தமிழனின் தலைவிதி சினிமாக்காரர்கள்தான் ஆளணுமின்னு வழிவழியா தொடர ஆரம்பிச்சிடும். இந்த முறை மக்கள் அவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொன்னதற்காக எதுவும் செய்யவில்லை என்று சொன்னால் அது நகைப்புக்குரியதாகும். மக்கள் கொண்டாட விரும்பவில்லை என்பதே உண்மை. மக்களின் இந்த நிலைப்பாடு ரஜினிக்கு அல்ல மற்ற நடிகர்களுக்கும் சற்று வருத்தமாகத்தான் இருக்கும். இதை ரஜினிக்கு மட்டுமல்ல எந்த நடிகருக்கும் செய்யாமல் நாம் நம் வேலையைப் பார்த்தோம் என்றால் அவர்களும் சாதாரண மனிதர்களாக நம்மோடு உலாவருவார்கள்.  எனிவே ஹாப்பி பர்த்டே ரஜினி சார்.

வீணாப்போன சிம்புவும் அனிருத்தும் 'பீப்' பாடல் போட்டிருக்கானுங்களாம். ரெண்டு பேருமே அக்கா, தங்கச்சியோட பிறக்கலை போல. கதாநாயகியை தொடாமலே நடித்த, காதலித்த பெண்ணையே கரம்பிடித்து வெளியுலகிற்கு டண்டணக்கா ராஜேந்தராக இருந்தாலும் பன்முகத் திறமையில் ஜொலித்த மனிதரின் மகன் மாற்றி மாற்றிக் காதலித்து காதல் என்ற அழகிய வார்த்தைக்கு மோசமான இலக்கணம் எழுதியவன். இன்னொருவன் ரஜினியின் சொந்தக்காரன் என்று சொல்லிக் கொண்டு ஆண்ட்ரியாவின் உதடை கமல் உறிஞ்சுமுன்னே பலகோணத்தில் உறிஞ்சியவன் ரெண்டு சேர்ந்து பாட்டு போட்டிருக்காம் பாட்டு... கேவலப்பட்டவனுங்க... அவனவன் மழை வெள்ளத்துல வாழ்வை இழந்து கிடக்கிற மக்களுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு திரியிறானுங்க... மக்கள் பிரச்சினையை இனி நடிகர் சங்கம் பேசாதுன்னு சொன்ன விஷால் கூட மக்களுக்காக இறங்கி வேலை செய்யிறான். இவன் என்னடான்னா... இலக்கிய, இலக்கண ரசனையோடு பாட்டெழுதுறான். இதுல உனக்குப் பிடிக்காட்டி கேக்காதேன்னு வேற ஆவேசமாச் சொல்றாராம் இந்த கேடுகெட்ட சிம்பு. இந்தப் பாடலை யூடிப்பில் தடை செய்ய வேண்டும் என ரிப்போர்ட் நிறைய பேர் பண்ணியிருக்கிறார்கள். நானும் அதில் ஒருவன்.  'பீப்' பாடலின் கழுத்து நெறிக்கப்படுதா என்று பார்ப்போம். ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளரான ஒரு பெண் அருமையாக கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்.


றுமீன்... பாபி சிம்ஹா ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். முன் ஜென்மத்துக் கதையோடு இந்த ஜென்மத்துக் கதையை இணைத்து ஒரு புத்தகமும் அதில் இருக்கும் கடிகாரமும் என மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். 'மெட்ராஸ்'கலையரசன் அருமையாக நடித்திருக்கிறார். முன் பின் என இரண்டிலும் கலக்கல். அழகர்சாமி கூட நல்லாவே நடித்திருக்கிறார். விறுவிறுப்பான கதை... பரபரப்பாக கதை பயணிப்பதால் நாயகியை பாதியிலேயே பஸ்ஸில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். இறுதி காட்சியில் வரும் சண்டைதான் ஏற்புடையதாக இல்லை. நாயகனும் வில்லனும் அப்போது கூட மோதாமல் நாயகன் மாஞ்சாக் கயிற்றில் பட்டம் விட்டு மக்கள் கழுத்தை அறுத்துக் கொள்ளும் சென்னை வாழ் மாஞ்சாக்கயிறு பட்டவாசிகள் போல அண்டர்கிரவுண்ட் பாதைக்குள் வைத்து அத்தனை பேரையும் அறுத்து எடுக்கிறார். அது மட்டுமே நல்லாயில்லை... மற்றபடி உறுமீன் நன்றாகவே இருக்கிறது.

ஸ்டாலின் இன்னும் நமக்கு நாமே படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை ஷூ போட்டு கெரண்டைக் கால் தண்ணீரில் நடந்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொள்கிறார். அதற்கு விஜயகாந்த் சேற்றிலும் சகதியிலும் செருப்பில்லாமல் தான் நடக்கிறார். மக்களிடம் அன்போடு பேசுகிறார். என்ன கோபம் வந்த கைதான் படக்குன்னு எந்திரிக்குது... அதையும் கழுத்துப்பக்கமாக கொண்டு போயி சமாளிக்க கத்துக்கிட்டு இருக்கார். சீமான் இப்போத்தான் வெள்ளம் வந்தது போல மீண்டும் கத்த ஆரம்பித்திருக்கிறார். பார்த்தீபன் சப்தமில்லாமல் உதவிகள் செய்து வருகிறார். வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஸ்டாலினும் அவர் மனைவியும் கேரளாவில் தங்கி ஓய்வெடுத்திருக்கிறார்கள். அதை கேரளப் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு கேலி செய்திருக்கின்றன. அலுவலக நண்பர் காலையில் சொல்லிச் சிரித்தார். மாலையில் பேப்பர் செய்தியும் பார்வைக்குக் கிடைத்தது. இவர்தான் மக்களுக்கான முதல்வராம். இவர் இது செய்தார்... அதைச் செய்தார்... நாங்கள்தான் மக்கள் நலம் விரும்பிகள் என்று முகநூலில் பலர் கத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.


ப்புக்கருவாடு.... கஞ்சிக்கு சுட்ட கருவாடு இருந்தால் இன்னும் இரண்டு தட்டு சாப்பிடத் தோணுமே அப்படியிருக்கு... சான்ஸே இல்லை... ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் படம் பார்ப்பவர்கள் சிரித்து ரசிக்கலாம். ராதாமோகனின் கதை வசனத்தில் படம் ரொம்ப நல்லாயிருக்கு. இது உப்புக் கருவாட்டிலும் நெய்மீன் கருவாடு சும்மா கம.. கமன்னு... சரவணன் மீனாட்சி நாயகி இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி... அவரை சினிமா நாயகியாக வருபவருக்கே அதிக வாய்ப்பு. டைமிங்க் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ரசித்துப் பார்க்கலாம்.

டலூரில் களப்பணியில் இருக்கும் நண்பன் தமிழ்க்காதலனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த செய்தி இது.

"கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பணிகளுக்கு இடையே நாம் செய்த மற்றொரு பணியும் இருக்கிறது. ஆங்காங்கே கைகட்டி, ஏரிக்கரை, குளக்கரை, கோயில் வாசல், ஆற்றுப் பாலம், என கிடைத்த இடத்தில் அமர்ந்து கதைப்பேசி கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும், அதற்கான தேடல்களையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சொல்லி, அவர்கள் சும்மா இருக்க, வெளியூர்களில் இருந்து வரும் மற்றவர்கள் களப்பணியில் ஈடுபடுவதைப் பார்க்க உங்களுக்கு உறுத்தலாக இல்லையா என்று வினாத்தொடுத்து, நாம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் நமது இளைஞர்களை களப்பணியில் இறக்கி அவர்களுக்கும் சமூக அக்கறையை ஊட்டி இருக்கிறோம். இந்த பணி ஓரளவு எமக்கு நிறைவைத் தந்திருக்கிறது."

தமிழ்க்குடில் தன் கடமையைச் செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.

தொடர்ந்து பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருப்பதில் சந்தோஷம். நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துக்களும் தொடர்ந்து வருகின்றன. வாழ்த்துக்கள் நண்பரே.


கேரளா எப்.எம். சேனலில் சென்னை மக்கள் சூப்பர் கிங்க்ஸ் என்று புகழ்ந்திருப்பதாக முகநூலில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. வெள்ளத்தில் தவித்த சென்னை மக்களுக்கு உதவ தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் தமிழன் ஓடிவந்தான். இங்கே சென்னை மக்கள் மட்டும் சூப்பர் கிங்க்ஸ் அல்ல... தமிழக மக்களே சூப்பர் கிங்க்ஸ்தான்.... உதவியின்னா முதல்ல நிக்கிறவன் தமிழன்தான். அது என்னவோ தெரியலை கடலூர்ல மழை, இப்போ தென் தமிழகம் எங்கும் மழை அப்படியிருக்க சென்னை மட்டுமே எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கு. ஒருவேளை நம்ம ஆட்சியாளர்கள் நினைப்பது போல் தமிழகம் என்றால் சென்னை மட்டும்தான் என்று நினைத்து விட்டார்கள் போல. எப்படியோ தமிழர்கள் வாழ்த்துக்காகவும் வீடியோக்களுக்காகவும் உதவவில்லை. மனிதாபிமானத்தோடுதான் உதவி வருகிறார்கள். வாழ்த்துவோம் நம் மக்களை.

இந்த மனசின் பக்கம் நேற்று (வெள்ளி) வரவேண்டியது... உடல் நலமும் மன நலமும் கொஞ்சம் யோசித்ததால் இன்று  இனி வழக்கம் போல் அடுத்த வெள்ளி மலரும்.

-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனசிலிருந்து வெளியிட்ட அனைத்தும் நன்று.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சிம்பு அனிருத்
பெயரினைத் தட்டச்சுச் செய்யவே
அருவெறுப்பாக இருக்கிறது நண்பரே
தம =1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படுபாவிகளுக்கு தண்டனை உடனே கிடைத்தால் தான் மனதிற்கு நிம்மதி...

மகிழ்நிறை சொன்னது…

ரெண்டு படம் பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சு. பத்திரிகையில் வெளிவந்த கருத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா. ஏன் கடலூருக்கும் நண்பர்கள் உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என் கணவர் தன் நண்பர்கள் குழுவோடும், என் தம்பி அவன் நண்பர்கள் குழுவோடும், புதுகையில் இருந்து என்னும் பலரும் கடலூருக்கு உதவுவதை நான் வாழும் சாட்சியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன கடலூர் நிவாரண பணி ஆர்வலர்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளவில்லை.... அவ்ளோ தான். மிக்க நன்றி அண்ணா.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அனைத்தும் அருமையான தொகுப்பு!
த ம 5

KILLERGEE Devakottai சொன்னது…

தகவல்கள் நன்று இவங்கே ரெண்டு பேரும் இடம் பெறும் படங்களை இனிமேல் பார்க்கவே கூடாதுனு கல்லூரி மாணவிகளை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் கண்டிப்பாக செய்யமாட்டாங்க... இதுதான் இவர்களின் பலம் நண்பரே இப்படிச்சொன்னால் இனி எந்த நாயும் இப்படி எழுதாது இதுதான் வெற்றியின் சூட்சுமம் ஆனால் நமது மக்களுக்கு உரைக்காது

இது சிறிய சலசலப்பு இந்தப்பாடல் இன்னும் பிரபலமாகும் இப்படித்தான் காலம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கின்றது இது ஒரு சாபக்கேடு

நானும் பதிவு போடுகிறேன் நண்பரே...
தமிழ் மணம் 6

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அனைத்துமே சுவாரஸ்யமாயிருந்தன!

ஸ்ரீராம். சொன்னது…

கதம்பமாக எல்லாவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறீர்கள்.
தம +1

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தண்டனை நிச்சயம்.... கிடைக்கும் பெயர்களை உச்சரிக்கவே மனம் விடவில்லை...த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல தொகுப்பு. சிம்பு அநிருத் கீழ்த் தரப் பாடல் அனைவரையும் கோபப் படுத்தியுள்ளது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
கேவலப்பட்ட ஜென்மங்கள் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் இந்த நாதாரிகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
கடலூர் களத்தில் எனது நண்பன் பத்து நாட்களுக்கும் மேலாக நிற்கிறான்... சென்னையைச் சூழ்ந்த மீடியாக்கள் கடலூரை கண்டுகொள்ளவில்லை.. அதனால் அங்கிருக்கும் களப்பணியாளர்கள் பற்றி வெளியில் தெரியவில்லை. என் நண்பன் எனக்கு விபரங்க்ள் சொல்வதால் நான் அறிந்து கொண்டேன்.

தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
நீங்கள் சொல்வது உண்மைதான்.
அதற்கு எதிராக கருத்துக்கள் கிளம்ப யூடிப்பில் ஹிட்ஸ் அடித்துப் பறக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
ம்... ரொம்பக் கேவலம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அனைத்து செய்திகளும் கலந்து கட்டி...படங்கள் பார்க்க வேண்டும். கடலூருக்கு நம்ம மக்கள் நிறைய பேர் போயிருக்கிறாரள் குமார்.

தமிழ்க்குடில் அருமையான பணியினைச் செய்திருக்கின்றது. இளைஞர்களைத் தட்டி எழுப்பிப் பணியில் ஈடுபடுத்தியதற்கு. இதுதான் மிக முக்கியமானது. னம்ம ஊருல இப்படித்தான்..

கேரளத்து எஃப்ம் ஆம். ஆமாம் நாங்கள் இதற்கு ஒரு பதிவு ரெடிபண்ணுகின்றோம் என்ன அடுத்த வாரம்தான் வரும்...உங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளோம். வேறு ஒன்றும் இல்லை இதற்கு முன் உங்கள் பதிவில் உங்கள் கேரளத்து நண்பர் தமிழ்நாட்டைப் பற்றிச் சொன்னது...இதோ இந்தப் பதிவில் கூட...சரி அத எங்கள் பதிவிலேயே பார்த்துக்கங்க...என்ன நாங்க சொல்லுறது சரிதானே ..!!!

நிஷா சொன்னது…

சந்தனம் சந்தானம் இல்லை தானே?

ஹாப்பி பேர்த்தே ரூ சூப்பர் ஸ்டார். நீங்க யாரும் வாழ்த்தாட்டி போங்க.. நிஷா விஷ் செய்துட்டுது. நிஷா விஷ் செய்தால் 100 இல்லை 1000 பேர் விஷ் செய்த மாதிரின்னு நிஷா புது டயலாக் செட்டும் பண்ணிடுத்தாம் . ஹாப்பி பிறந்த நாள் ரஜ்ஜ்ஜ்னி சார். உங்களை யாருமே வாழ்த்தலையா? கவலையே படாதீங்க.நான் வாழ்த்திட்டேன்ல.இன்னும் 100 வருடம் இருப்பிங்க.எல்லாரும் நல்லா திட்டுவாங்க..அப்புறம் உங்க படம் வந்தால் தலையே தலைவான்னுஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ப்ப்டி வந்து பார்ப்பாங்க.டோண்ட் வொரி மைடியர் சூப்பர் ஸ்டார்!

எனக்கு பிடிக்கவே பிடிக்காத... நான் பார்க்கவே பார்க்காத சின்ன வயசிலருந்து பிஞ்சிலயே பழுத்த சிம்பு பத்தி நோ காமென்ட்ஸ்.. விதை ஒன்று போட்டால் முளை என்ன வரும்? விதைத்தது வளர்ந்து நிற்குது! ராஜேந்திரர் சார் நோட் திஸ் பாயிண்ட்ஸ்!

உப்பு மீன் நல்லாருக்கா? அது கருவாடு.. உப்பு போட்டிருப்பதால் ருசியாத்தான் இருக்கும். சுடு சோத்தில் சுட்ட உப்புக்கருவாடும் இருந்தால் அப்பப்பா... ஆமாம் நீங்க கருவாடு பத்தி தானே சொன்னியள் குமார்!

இந்த மாதிரி ஆபத்து நேரம் உதவுவோரை பிள்ளைகளுக்கு வைக்கும் மனித நேயம் வாழட்டும். ஆனால் பெயர் வைக்கும் போது ஆண் பெயரை பெண் பிள்ளைக்கு உணர்வு வேகத்தில் வைத்தது அப்பிள்ளை வளர்ந்து பெரியவளாகதும் சமூகத்தில் சந்திக்கபோகும் சங்கடங்களையும் கருத்தில் கொள்ளணும் யூனுஸ் போல் இன்னும் பலர் களத்தில் நின்று உயிரை துச்சமாக மதித்து பணி செய்திருக்கார்கள். அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

பல நூறு வருட எதிர்மறை சிந்தனையை இந்த வெள்ளைம் தகர்த்திருக்கின்றது. இஸ்லாமியர்களை இன பேதம் பார்த்து தூரத்தில் நிறுத்தியோர இருண்ட மனங்களில் வெளிச்சம் பரவி இருக்கின்றது. இதுவே தொடரட்டும்.

மழை ....வெள்ளம்..... நிதி.... நிவாரணம்... முடிந்திருச்சா குமார்?

அடுத்த சிம்பு புராணம் ஸ்டாட்..ஜாமீனின் வெளிவர முடியாத வழக்கில் உள்ளே தள்ளணுமாம்...!

டெல்லியில் மானை சுட்ட மானை வெளியே விட்டாச்சாம். மேகிக்கும் விடுதலையாமே? அதை பத்தி எழுதலையோ?

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்புநிறை என் இதயத்தோழன் பரிவை.சே.குமார் என்கிற ”மனசு”க்கு சொந்தக்காரன், என்னால் தொடர்ந்து இணையத்தில் இணைந்து இருக்க இயலாத சூழலிலும், இந்த இணையவெளியில் தொடர்ந்து என்னை உச்சரித்துக் கொண்டிருக்கும் உதடுகளுக்கு சொந்தக்காரன், அன்பில் ஆழ்த்தி மனதை நெகிழ்த்தும் வம்புக்காரன், எத்தனை அக்கறையுடன் தொடர்ந்து என்னை எழுதத் தூண்டுகிறவன், எமது களப்பணியின் காட்சிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும், செல்லும் காலக்கண்ணாடி என் நண்பன், உன்னுடைய ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு சாட்டையை இந்த சமூகம் நோக்கி சுழற்றிக் கொண்டுதான் இருக்கிறது. பாராட்டும் அன்பும் தொடர்ந்த நின் தமிழ்ப்பணிக்கு. எழுது. எழுது. இன்னும் எழுது, எழுதாத எல்லாம் எழுது. உன்னுடன் நானும்..........உடன் பயணிக்கிறேன்.

கும்மாச்சி சொன்னது…

நல்ல தொகுப்பு, சிம்பு, அனிருத் செயல் அருவருக்கத்தக்கது. இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது.

Yarlpavanan சொன்னது…

எளிய சொல்
எளிய பொருள் என
எவர்
பண்பாட்டை மீறிக் கிறிக்கினாலும்
இலக்கியமாகதே!
கீழ்த்தரப் படைப்பாளிகளை
காலம்
ஒதுக்கி வைக்குமே!

மீரா செல்வக்குமார் சொன்னது…

உங்கள் கதம்ப மாலையில் அத்தனை வாசம் .....