மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 மே, 2010தோனியிடம் கலக்கல் பேட்டி20வது ஓவர் உலகக் கோப்பை 2010 போட்டியில் இருந்து சந்தோஷமாக (?) வெளியேறி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி அவர்களிடம் ஒரு எக்கச்சக்க பேட்டி...

பேட்டி எடுப்பவர் எல்லா இடங்களிலும் சிறப்பாக பேட்டி எடுத்து வரும் திரு. இந்தியன். இனி பேட்டிக்கு செல்லலாம்.

இந்தியன் : வணக்கம் தோனி அவர்களே.

தோனி: வணக்கம் இந்தியன். (சென்னை கிங்க்ஸிற்காக விளையாடியதால் நன்றாக தமிழ் பேசுகிறார்)

இந்தியன் : 2010 டுவெண்டி20 கோப்பை போட்டியில் இருந்து வெளிவந்தது குறித்து உங்கள் கருத்து..?

தோனி: ம்... உங்க ரஜினி என்ன சொன்னாரு ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்லலை. அது மாதிரி ஒரு தடவை கோப்பை வென்றால் நூறு தடவை வென்ற மாதிரி.

இந்தியன்: அடங் கொக்கா மக்கா, தலைவரு படத்துல புலோவுக்காக பேசினாரு. அது உமக்கு வேத வாக்கா...?

தோனி : போட்டிய இந்தியாவுல வச்சிருக்கணும்... ஏன்னா நாம் ஐபிஎல்ல வெளாண்டு பயிற்சி எடுத்து இருக்கோமுல்ல... அதவிட்டுட்டு வெஸ்ட் இண்டீஸ்ல வச்சா நாம என்ன செய்யிறது.

இந்தியன்: அது சரி... ஆமா சூப்பர் எட்டுல ஒரு போட்டியில கூட ஜெயிக்கலையே அது ஏன்..?

தோனி: அதுவா பெர்முடாஸோ, அயர்லாந்தோ வந்திருக்கணும். வந்திருந்தா ஒரு போட்டியாவது ஜெயித்திருக்கலாம்.

இந்தியன்: ஆமால்ல... உண்மைதான் நாம் அடிமாடுன்னா... அதுக அறுபட்ட மாடுகள். சரி நம்ம வீரர்கள் பற்றி...?

தோனி : ஹா... ஹா...ஹா... ஜோக்கடிக்காதீங்க இந்தியன்... சொல்றதுக்கு என்ன இருக்கு.

ரெய்னாகிட்ட இங்கயே சொன்னேன்... உயிரைக் கொடுத்து விளையாடாதே... போட்டி போனா மயிரே போச்சுன்னு... அவன் கேக்கலை... அதிகம் ரிஸ்க் எடுக்கிறான். போற போக்கைப்பார்த்தால் நம்ம இடத்தை பிடிச்சிடுவான் போல...

இந்தியன்: அப்படியா... ஆமா சேவாக்கை கவித்த மாதிரி திட்டம் எதாவது போட வேண்டியதுதானே...

தோனி: பார்க்கலாம்... அடுத்த சீரிஸ்லயும் அடங்கலைன்னா அதுதான். நாம வாழணுமில்ல.

இந்தியன்: சரி ஹர்பஜன்...?

தோனி: அதுவா... இங்க வெளாடும்போது நம்ம விக்கெட்டை எடுத்துட்டு முன்னாடி வந்து குதிக்கும். ரொம்ப கடுப்புல இருந்தேன். இலங்கை கூட அது போர் போரா கொடுத்தப்ப முன்னால போயி குதிச்சு நம்ம கடுப்பை தீர்த்துட்டமுல்ல.

இந்தியன்: நெஹ்ரான்னு ஒரு கிழடை கொண்டு போனிங்களே... அதுக்கு இன்னும் வாய்ப்பிருக்கா..?

தோனி: இல்லாம பின்ன... எத்தனை சிக்ஸ் அடிச்சாலும் மணிப்பர்ஸ் வாயை திறந்து சிரிச்சுக்கிட்டே பந்து வீசுமில்ல... டேன்சனை குறைக்க அவரு கண்டிப்பா வேணும்.

இந்தியன்: யூசுப் பதான் ஐபிஎல் ஹீரோல்ல...

தோனி: ஆமா... இங்க காசு குவிஞ்சது எல்லாரும் ஹீரோ ஆனோம். அதுக்காக எல்லா இடத்துலயும் ஹீரோ ஆகமுடியுமா? அவனை கண்ணாடிய கழட்டிட்டு வெளாடுடான்னு சொன்னா... பைத்தியக்காரனாட்டம் பொம்மை கண்ணாடி போட்டுக்கிட்டு கேவலமா விளையாண்டான்.

இந்தியன்: ஒருவேளை கண்ணாடியோட பாத்து பேட்ஸ்மேன் பேடியாகலமுன்னு நினைச்சிருக்கலாமுல்ல.

தோனி: ஆமா கிழிச்சான்.

இந்தியன்: தோற்கிற போட்டிகளிலெல்லாம் நீங்க பேட்ஸ்மேன் நல்லா விளையாடலைன்னு சொன்னீங்க... அப்ப நீங்க...?

தோனி: என்ன இப்படி கேக்குறீங்க... நான் கேப்டன்.

இந்தியன்: விஜயகாந்தா... அவரு ஒரு ஆளா தீவிரவாதிய விரட்டுறவரு தெரியுமில்ல...

தோனி: அய்யோ... நான் அரசியல் பேசலை. நான் அணித்தலைவர்... அதனால எப்படி வேணுமின்னாலும் விளையாடலாம்.

இந்தியன்: அப்படியா... தோத்து வந்ததுல கவலையில்லையா...?

தோனி: என்ன கவலை இருக்கு... ரெண்டு விளம்பரத்துல நடிக்கலாமுல்ல...
இந்தியன்: உங்களை தெய்வமா நினைக்கிற ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க..?

தோனி: அவனவன் அவனவன் வேலையை பார்த்துக்கிட்டு பொழுது போக்குக்காக கிரிக்கெட் பாருங்க. அதைவிட்டுட்டு நாங்களே சீரியஸா விளையாடாதப்ப நீங்க சீரியஸா பார்த்துட்டு எங்க மேல தயவு செய்து கோபப்படாதீங்க.

இந்தியன்: தோனி, உங்க ரசிகர் ஒருத்தர் போன்ல இருக்கார். பேசமுடியுமா?

தோனி: கொடுங்க... கண்டிப்பா...

எதிர்முனை : யாரது தோனியா... நல்லாயிருக்கியாப்பா... உனகென்ன நல்லாயிருப்பே... நாங்கதானே ராப்பூரம் கண் முழிச்சி இலங்கையோட விளையாண்டதை பார்த்தோம். ஆமா, 11 ஓவருக்கு 100 ரன் எடுத்த நம்ம பயலுக அப்புறம் அடிக்கலையே ஏன்.? காசு எதுவும் வாங்கிட்டிங்களோ... அப்புறம் நீ ஏன் முன்னாடியே இறங்கி கழுத்தறுத்தே... தோக்குற போட்டியெல்லாம் நீ முன்னாடி இறங்கிடுறே... என்ன காரணம்..? நீ தறுதலைகளை கொண்டு போனதுக்கு தல (அஜித் இல்லை) சச்சின் தலையில் சேவாக், அஸ்வின், உத்தப்பா, திவாரி, சுமன், பாண்டே இப்படி ஒரு அணியை கொண்டு போயிருந்த வெற்றி இந்தியா வசமாயிருக்கும். சரி வுடுப்பா... அடுத்த வருஷம் பாக்கலாம். ஆமா... எங்க ஸ்ரீகாந்த் நல்லா செலக்ட் பண்றாரு போல.... அடுத்த தோல்விப் போட்டி எப்ப... ஏண்டா... நாதாரி.... கேப்மாறி... முள்ளமாறி... நாட்டுல வேற ஆளே கிடைக்கலையா உனக்கும் ஸ்ரீகாந்துக்கும்...? பழைய பண்ணாடைகளையே ஊர் சுத்த கூட்டிப் போறே... நா......."

வார்த்தைகள் மோசமாக, தோனி போனை கட் செய்கிறார்.

இந்தியன் : நன்றி தோனி, மோசமான வார்த்தைகள் உங்களை பாதித்ததற்கு வருந்துகிறோம். தொடரும் போட்டிகளில் உங்கள் தொல்விப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

 1. ரொம்பவும் அருமை!

  நம் வீரர்கள் மண்னைக் கவ்விய எரிச்சல் இன்னும் அடங்கவில்லை. அதையும் மீறி சிரிப்பு பீரிட்டுக்கொண்டு வந்தது.
  சிரிக்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி!

  சச்சின் இல்லாததால் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை இவற்றைப் பார்க்க. ஆனால் என் கணவரும் மகனும் விழுந்து விழுந்து பார்த்தார்கள். வேலைகள் கெட்டதுதான் மிச்சம்!

  பதிலளிநீக்கு
 2. //அவனவன் அவனவன் வேலையை பார்த்துக்கிட்டு பொழுது போக்குக்காக கிரிக்கெட் பாருங்க. அதைவிட்டுட்டு நாங்களே சீரியஸா விளையாடாதப்ப நீங்க சீரியஸா பார்த்துட்டு எங்க மேல தயவு செய்து கோபப்படாதீங்க.//....சரியான பதில்.

  பேட்டி நல்லா இருக்கு!

  பதிலளிநீக்கு
 3. பொதுவா நான் கிரிக்கெட் பக்கம் தலைசாய்க்கறதில்ல... பட்..உங்களோட இடுகையின் கலகலப்புக்காகவே ரசிக்கிறேன்....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...