மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 மே, 2010சுறா..!விஜயின் தோல்விப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் படம்தான் சுறா..!

வேட்டைக்காரன் காட்டுக்குள்ளே காணாமப் போயிட்டதால  கடலுக்குள்ள சுறாவை விட்டுருக்காங்க...

ஆரம்பிக்கும் போதே கடலுக்குள்ள போன மீனவர்கள் புயல் மழையால வீடு திரும்பததால் அரசாங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த, ஒருவழியாக எல்லோரும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படும் நேரத்தில் ஒருவர் மிஸ்ஸிங்...

அப்ப மக்கள் தப்பி வந்தவர்களிடம் எங்க சுறா என்று கேட்க, வரும்போது ஒரு படகு கவிழ்ந்து விட்டதாகவும் அதில் இருந்த எல்லாரும் காப்பாற்றப்பட்ட போதிலும் சுறாவை மட்டும் காணவில்லை என்றும் காதில் பெரிய பூவைச் சுற்ற, லாஜிக் இல்லா சுறாவின் பயணம் ஆரம்பிக்கிறது.

ஆட்சியரிடம் அவர் வேணும் என்று அடம்பிடிக்க, தேடலாம் என்று முடிவெடுக்கும் போது கேமரா கடலுக்குள் பயணிக்கிறது....

கைகளை உயரத்தூக்கி கும்பிட்டபடி (நம்மளைப் பார்த்து இந்த அலும்பை பொறுத்தருள்க என்பது போல் தோன்றியது) தண்ணிக்குள் இருந்து டால்பினாய் சுறா பறந்து வருகிறார்.

அதை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாலா பக்கத்திலும் இருந்து கேமராமேன் படம் பிடித்து தள்ளியுள்ளார். அதுதான் படத்தின் முதல் லாஜிக் இல்லா மேஜிக்.

அதவிட கொடுமை ஒடி வரும்போதே அவர் போட்டிருக்கும் சட்டையின் கலர் மாற, தண்ணிக்குள் மூழ்கி வந்த அவர் 'வங்கக்கடல் எல்லை...' என்று குதிக்கிறார்.

இதற்கு மேல் விமர்சிக்க வேண்டியதில்லை... அடுத்த இரண்டரை மணி நேரம் என்ன நடந்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே சுறாவை மறப்போம்... மன்னிப்போம்.

விஜய்க்கு மட்டுமான கேள்வி... பாடல்களிலும் நடனத்திலும் கவனம் செலுத்தும் நீங்கள் ஏன் கதையை மட்டும் கவனிப்பதில்லை. கிறுக்குப்பய புள்ளைக ரசிகர்களா இருக்குக எப்படியும் பார்த்துடுங்க என்றா...? அங்காடி தெரு பாருங்கள் அதில் அந்தப் பையனும் பொண்ணும் போட்டி போட்டி நடித்திருப்பதை... அய்யா... சாமி ... இந்தக் கொடுமையை இத்துடன் விடுங்க... கடலுக்குள்ள போன சுறா போகட்டும். அடுத்த படமாவது ரசிக்கும்படி இருக்கட்டும்.

சங்கிலி முருகனுக்கு... பாசில் - விஜய் கூட்டணியில் காதலுக்கு மரியாதை தந்த நீங்களா இப்படி ஒரு படத்தை... சை... கதைக்காக் எடுங்கள்... கதைநாயகனுக்கா எடுக்காதீர்கள்.

சன் பிக்ஸ்ர்க்கு... வேட்டைகாரன் வைத்த வெடி சுட்ட தடம் மறைவதற்குள் சுறா கடிச்சிருச்சேன்னு கவலைப்படாதீங்க... நல்ல கதையுள்ள படங்களா பார்த்து வெளியிடுங்கள்.
-'பரிவை' சே.குமார்.

6 கருத்துகள்:

 1. /* கிறுக்குப்பய புள்ளைக ரசிகர்களா இருக்குக எப்படியும் பார்த்துடுங்க என்றா...? */

  நல்ல கேள்வி...

  பதிலளிநீக்கு
 2. அந்த ஓப்பனிங் சீன் பார்த்ததோட டி.வி.டியை ஒடைச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டோமுல்ல.

  பதிலளிநீக்கு
 3. @ philosophy prabhakaran said...
  /* கிறுக்குப்பய புள்ளைக ரசிகர்களா இருக்குக எப்படியும் பார்த்துடுங்க என்றா...?
  நல்ல கேள்வி...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபாகரன்.

  பதிலளிநீக்கு
 4. @Chitra said...
  //ha,ha,ha,ha.... :-)//

  நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 5. @ செ.சரவணக்குமார் said...
  //அந்த ஓப்பனிங் சீன் பார்த்ததோட டி.வி.டியை ஒடைச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டோமுல்ல.//

  டிவிடி போச்சா சரவணன். ஏன் இந்த கொலைவெறி.
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...