மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

கடிதம் - மட்டைக்காரனுக்கும் வேட்டைக்காரனுக்கும் ..!




விஜய் , தோனி

 சன் தொலைக்காட்சிக்கு, அய்யா... தமிழ்ல வர்ற எல்லா படத்தையும் நீங்கதான் வாங்குறீங்க. மொக்கைப் படத்தைக்கூட நீங்க பண்ணுற விளம்பரத்தால வெற்றிப்படமாக்கி விடுவீர்கள் என்பது இயக்குநரும் தயாரிப்புத்தரப்பும் உணரும் உண்மை. உங்களுக்கு போட்டியா கலைஞர் தொலைக்காட்சியும் குதித்திருப்பதாக கேள்வி. உண்மையா?. அப்ப ரெண்டு பேரும் உங்களோட விளம்பரத்துக்கு இடையே நிகழ்ச்சியை போடுவீங்கன்னு சொல்லுங்க. அடப்பாவி மக்கா, நாங்க ஏமாளிங்கதான்... ஆனா அதுக்காக இப்படியா, சன், சன் நியூஸ் செய்திகள்ல தலைப்புச் செய்தியில வேட்டைக்காரன் மிகப்பெரிய வெற்றியின்னு சொல்லி , ரசிகர் கூட்டத்தை காட்டி செய்தி போடுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா? நாட்டுல வேற செய்தியே இல்லையா?. சரிங்க, நீங்க பணம் போட்டுட்டிங்க அதனால விளம்பரம் பண்ணுறீங்க ஒத்துக்கிறோம்.  அதுக்காக செய்தி வரைக்கும்....... கேவலமாயில்லை.

நடிகர் விஜய்க்கு, ஆரம்பகாலத்துல உங்களை வளர்த்துவிட உங்கப்பா டப்பா படங்களா எடுத்தாரு. உங்க வளர்ச்சிக்கு முக்கிய காரணமா இருந்தவங்க..... சங்கவி, சுவாதி, யுவராணி இல்லீங்களாண்ணா. உங்க அப்பாகிட்ட இருந்து வெளிய வந்து நீங்க நடிச்ச படங்களில் 'பூவே உனக்காக', 'துள்ளாத மணமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'பிரண்ட்ஸ்', 'கில்லி'... (அடுக்கலாம்) உங்களுக்கு பேர் வாங்கிக் கொடுத்த நல்ல படங்கள்... ஏனுங்கண்ணா சரிதானுங்களே. அப்புறம் ஏண்ணா 'குருவி', 'வில்லு'... இப்படி கேவலமான படத்துல நடிச்சு பட்டது போதாதுன்னு இன்னும் அதே மாதிரியான படங்கள்ல நடிக்கிறிங்க.... வித்தியாசமான (உங்களுக்குத்தான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தாலும் வித்தியாசம் காட்டத் தெரியாதுங்களேண்ணா...) கதாபாத்திரத்தில் நடிங்கண்ணா. இன்னைக்கு வந்த நடிகர்களெல்லாம் என்னன்னமோ பண்ணுறாங்க (கோவணம் கூட கட்டிறாங்க) நீங்க இதுகூட பண்ண மாட்டீங்களா (எவ்வளவோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா?). சரிங்கண்ணா பாத்துப் பொழைங்க. இந்த பயபுள்ளைங்க செம்மறி ஆட்டு மந்தை மாதிரித்தான் இருக்கும்... ஆனா டப்புன்னு மாறிப்புடுங்க...

கிரிக்கெட் தலை தோனிக்கு, தலைவா... இந்த இலங்கைக்காரப் பயலுவ 1000 அடிச்சாலும் வெரட்டி வந்துடுவாங்க போலயிருக்கேன்னு ஆடிப் போயிட்டியா... பாவம் தலைவா நீ என்ன பண்ணுவா... பந்து வீசுறவங்க சரியில்லை. ஆமா தலைவா ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணுமின்னு நினைச்சேன்... நூறு கோடியில உனக்கும் , தேர்வுக்குழு தலைவருக்கும் நல்ல பயலுகளா ரெண்டு பேரு கிடைக்கலையா? நாட்டுல பந்து போடுறவங்களுக்கு அம்புட்டு பஞ்சமா?..... ம்.... என்னத்த சொல்ல ஜாகீரும், நெஹ்ராவும் கிழிச்ச கிழிக்கு ரெண்டு போட்டியில நீ  விளையாடக் கூடாதுன்னு உனக்கு ஆப்பு வச்சுப்புட்டாங்களே... இது அடுக்குமா...? பரவாயில்லை விடு... அப்படியே இந்த ஒருநாள் தொடரை  இலங்கை பயலுவ அள்ளிக்கிட்டு போனாலும் நான் ரெண்டு போட்டியில விளையாடாததுனால இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லிறலாம். உனக்கு இது என்ன புதுசா...? விடு... ஆனா இந்த தில்ஷன் வூடு கட்டி அடிக்கிறானே தலைவா... அதான் தாங்க முடியலை... சரி மனச தேத்திக்க... திறமையிருக்கு ஆடுறான். விட்டுத்தள்ளு .... பெர்முடாஸை வரச்சொல்லுவோம்.

வலையுலக நண்பர்களுக்கு, இதை நான் வேண்டுகோளாத்தான் சொல்லுறேன். விஜய் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அவருக்கோ தயாரிப்பாளருக்கோ இயக்குநருக்கோ இல்லை சன் தொலைக்காட்சிக்கோ பாதிப்பு இல்லை. இந்த படம் எடுத்ததால பல குடும்பம் திரைக்குப்பின்னால வாழுதுங்கிறத மறுக்க முடியாது... அதனால அந்த ஜீவன்களுக்காகவாவது வேட்டைக்காரனை வேட்டையாடாமல் விடுங்க... வேட்டைக்காரனுக்காக பதிவு எழுதுவதை விடுத்து, உங்கள் எண்ணங்களை பதிவில் தாருங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.  செய்வீர்களா நண்பர்களே...?

-சே.குமார்

12 எண்ணங்கள்:

பூங்குன்றன்.வே சொன்னது…

//அதுக்காக செய்தி வரைக்கும்..... கேவலமாயில்லை.//

நெற்றியடி பாஸ்.

//இந்த பயபுள்ளைங்க செம்மறி ஆட்டு மந்தை மாதிரித்தான் இருக்கும்..//

திருந்தினா சரி.

//இந்த படம் எடுத்ததால பல குடும்பம் திரைக்குப்பின்னால வாழுதுங்கிறத மறுக்க முடியாது.//

உண்மைதான் நண்பா.
ஆதங்கம் புரிகிறது..

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி...

என்ன பூங்குன்றன் சார் இன்று விடுமுறையோ..?
உடனுக்குடன் பின்னூட்டம்...!

EKSAAR சொன்னது…

//கிரிக்கெட் தலை தோனிக்கு,//
ரொம்ப புடிச்சிருக்கு

வேட்டைக்காரனும் கவிக்கோ ரகுமானும்

http://eksaar.blogspot.com/2009/12/blog-post_19.html

ringtones சொன்னது…

ரெண்டாவது மாட்ஏன்யா ஒரு மாட்சுல ஆடலைன்னா உடனேயே இப்படி pesareenga...
அதான் டெஸ்ட் சீரீஸ்ல ஓட வுட்டு கோமனத்த அவுத்தாங்கல்ல...

ராஜ்கோட் ஒரு செகண்ட் பேட்டிங் பிட்ச்...அதனாலதான் சங்கக்காரா பீல்டிங் எடுத்தான்... அதுலயே நம்ம ஆளுங்க 414 ரன் எடுத்து கிழி கிழின்னு கிழுச்சாங்க....

செகண்ட் மாட்சுல அந்த நெஹ்ரா பொறம்போக்கு 49வது ஓவர்ல 13ரன் குடுக்கலன்னா ஈசியா ஜெயிச்சுருக்கலாம்....
சும்மா எங்க தலைவர் தோனிய குத்தம் சொல்லாதீங்க...
அவர் இல்லாட்டி போன மேட்ச் எப்படி 301 ரன் வந்து இருக்கும்???

vakeeson சொன்னது…

திரைப்பட தொழிலால் பல குடும்பங்கள் வாழ்வது என்னவோ உண்மைதான். அதற்காக மொக்கையான படங்களையும் (அதுவும் காசு கொடுத்து) பார்க்க வேண்டுமா? தமிழ் திரைப்படங்கள் எப்போது தான் தரமாக உயர்வது. கோடி கோடியாக விரயம் செய்து எடுத்து முதலாளிகள் தான் லாபம் சம்பாதிக்கிறார்கள். தொழிலாளிகளுக்கு எல்லா படத்திற்கும் ஒரே சம்பளம் தான். நல்ல படங்கள் வரட்டும், வரவேற்க காத்திருக்கிறோம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

முதல்முறை என் வலைக்குள் நீங்கள். அதற்கு நன்றி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி என்ன கொடும சார்

Unknown சொன்னது…

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

ரிங்க்டோன்ஸ் - முதல்முறை என் வலைக்குள் நீங்கள். அதற்கு நன்றி.

//சும்மா எங்க தலைவர் தோனிய குத்தம் சொல்லாதீங்க...
அவர் இல்லாட்டி போன மேட்ச் எப்படி 301 ரன் வந்து இருக்கும்???//

தொண்டர்கள் சரியில்லைன்னா தலைக்கு தானே வலி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வகீஷன் - முதல்முறை என் வலைக்குள் நீங்கள். அதற்கு நன்றி.

// நல்ல படங்கள் வரட்டும், வரவேற்க காத்திருக்கிறோம்.
//

கருத்துக்கு நன்றி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி தமிழினி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

Congrats!

Your story titled 'மனசு: கடிதம் - மட்டைக்காரனுக்கும் வேட்டைக்காரனுக்கும் ..!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th December 2009 11:00:16 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/156597

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நன்றி தமிழிஷ் மற்றும் வாசித்து வாக்களித்த நண்பர்களுக்கும்.

நட்புடன்,
சே.குமார்