மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 8 மே, 2014தேவகோட்டையில் நான்,,,

ஊருக்கு வந்தது முதல் மழை அடித்துப் பெய்கிறது. எங்கும் செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டைச் சுற்றி கண்மாய் போல் தண்ணீர் நிற்கிறது. இன்னும் மழை விட்டபாடில்லை... அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்கும் நாளில் நல்ல மழை என்பது சந்தோஷமே. இன்னும் யாருக்கும் போன் பண்ணவில்லை.  வீட்டைச் சுற்றி தவளை கத்துவது அடை மழை காலத்தில் எங்களது கிராமத்தில் இருப்பது போன்றதொரு எண்ணத்தைத் தருகிறது.

விமானத்தில் வரும்போது பணிப்பெண் சிரித்துச் சிரித்துப் பேசினாள். சரக்குக் கொடுத்துக் கொண்டு வரும்போது என்ன சார் வேண்டும் என்றாள். ஆப்பிள் ஜூஸ் என்றதும் சார் டைகர் பீர் சூப்பரா இருக்கும்... குடிச்சிப் பாருங்க... என்று கிண்டலாய் சொன்னாள். சுதாரித்து இருக்க வேண்டும். சரி பேசிட்டுப் போறா என்று நினைத்தபடி ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் குடித்தேன். யாருக்கோ தண்ணீர் ஊற்றியவள் கை தவறி நான் அமர்ந்திருந்த இருக்கையில் ஊற்றி என்னையும் நனைத்து விட்டாள். நல்லவேளை சரக்கு அபிஷேகம் பண்ணவில்லை. அதன் பிறகு ரொம்பச் சிரித்தாள். சுதாரிச்சிருக்கணும் சூனாப் பானான்னு சொல்லிக்கிட்டே தல படம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

சென்னை வந்திறங்கி அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் வர, எனக்காக மனைவி, மகள், மகன் எல்லோரும் விமான நிலைய வாசலில் காத்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு துள்ளியது. அவர்களுடன் பேசியபடி காரில் தேவகோட்டை நோக்கிப் பயணம்... ஊருக்கும் வந்தாச்சு. இன்னும் எந்த வேலையும் பார்க்கவில்லை... மனைவியின் மயக்கும் காபியை உறிஞ்சியபடி... மழையை ரசித்துக் கொண்டிருக்கிறேன்...

அனைவரிடமும் பேச வேண்டும்... விரைவில் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. நண்பரே வணக்கம். ஊருக்கு வந்திருக்கிறீர்களா? எத்தனை நாள் இங்கு இருப்பீர்கள்? புதுக்கோட்டைக்கு ஒருநாள் வரவேண்டுகிறேன். 11-05-14 ஓர் இலக்கிய நிகழ்வு “வீதி“ கூட்டம். 17,18 வலைப்பக்கப் பயிற்சிமுகாம். இரண்டுக்கும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன். முடிந்தால் குழந்தைகளையும் அழைத்து வருக. எனது எண்-9443193293.

  பதிலளிநீக்கு
 2. அட, ஊருக்கு வந்ததுமே மழையைக் கொண்டு வந்துட்டீங்களே குமார்...

  பதிலளிநீக்கு
 3. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் ஒவ்வொரு நொடியையும் செலவிடுங்கள்
  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. விடுமுறையில் வந்தீர்களா! விடுமுறை இனிமையாக கழிய வாழ்த்து!குமார்

  பதிலளிநீக்கு
 5. நல்லபடியாக ஊர் சென்றமைக்கு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 6. வீட்டிற்கு வருவதில் ஒரு ஆனந்தம் இருக்கத் தான் செய்கிறது குமார். நானும் ஐந்து நாட்களாக திருச்சி வாசம்.....

  பேசுவோம்....

  பதிலளிநீக்கு
 7. நல்லபடியா ஊர் போய் சேர்ந்தது மகிழ்ச்சி!////பணிப்பெண்;சார் டைகர் பீர் சூப்பரா இருக்கும்... குடிச்சிப் பாருங்க...////நான்:மனைவியின் மயக்கும் காபியை உறிஞ்சியபடி...மனசுக்குள், அடிப் போடி(பணிப்பெண்) இவளே!ஹ!ஹ!!ஹா!!!

  பதிலளிநீக்கு
 8. இனிய விடுமுறை தின வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 9. ஆஹா மழைதானா, அன்புமழையும் சேர்ந்து தேவகோட்டையில் குமார் கனவுத் தொடரை மறந்துவிட்டார் வாங்க காத்து இருக்கின்றேன்!!ஹீ

  பதிலளிநீக்கு
 10. இந்திய எப்படி இருக்கு ..?
  வருகைக்கு வாழ்த்துக்கள் ...
  நன்முறையில் கொண்டாடுங்கள் ...விடுமுறையை

  பதிலளிநீக்கு
 11. இந்திய எப்படி இருக்கு ..?
  வருகைக்கு வாழ்த்துக்கள் ...
  நன்முறையில் கொண்டாடுங்கள் ...விடுமுறையை

  பதிலளிநீக்கு

 12. குமார் அவர்களுக்கு நானும் தேவகோட்டைகாரன்தான் அபுதாபி வந்ததும் தொடர்பு கொள்ளவும்
  அன்புடன்
  KILLERGEE
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
 13. மழையோடு வந்த உங்கள் வருகை குளிர்ச்சியாக இருக்கட்டும் அண்ணா! அண்ணி, குழந்தைகள் நலமா ?

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...