மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 செப்டம்பர், 2010

கிராமத்து நினைவுகள் : மடை திறந்து...


கிராமங்களின் அழகு நீர் நிறைந்த கண்மாயும் விளைந்து நிற்கும் வயல்களும்தான்.

கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய்க்கரையில் வயல்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காகவே மடைகள் (மதகு என்பார்கள்) கட்டப்பட்டிருக்கும். கரையில் பெரிய குழாய் பதித்து கண்மாயின் உள்வாயிலிலும் (உள்புறம்) வெளிப்பக்கத்திலும் திண்டுபோல் கட்டப்பட்டிருக்கும்.

எங்கள் கண்மாயிலும் நான் கு மடை உண்டு. பெரிய மடை, வெட்டுச்செய் மடை, காஞ்சிரம் மடை, ஐயனார் மடை என ஒவ்வொன்றிற்கும் பேர் உண்டு. இதில் விடுமுறை தினங்களில் மதிய நேரங்களில் எங்கள் பொழுது போக்கிடம் பெரியமடைதான்.

மதியம் சாப்பிட்டதும் எல்லாரும் மடையை நோக்கி கிளம்பிவிடுவோம். கர்ணனின் கவச குண்டலம் போல் எல்லாருடைய இடுப்பிலும் அண்ணாமலை ஸ்டைலில் குத்தாலம் துண்டு இறுக்கி கட்டப்பட்டிருக்கும். அண்ணாமலை பார்த்து கட்டவில்லை... அதற்குமுன்னரே கபடி, கோலிக்குண்டு, கிட்டி விளையாடும்போது தோளில் இருக்கும் துண்டை கீழே வைக்காமல் கட்டிப் பழகியது. அப்படியே பழகிவிட்டது.

மடையின் அருகில் வேப்பமரம் ஒன்று இருக்கும். அதனால் அருமையான காற்றும் குளுகுளு என்ற சில்லிப்பும் இருக்கும். அங்கு எங்கள் அரட்டைக் கச்சேரி ஆரம்பமாகும். சினிமா, பள்ளியில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அங்குதான் அலசி ஆராயப்படும். இடையில் லேசான தூக்கம் வேறு.

அந்த மடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவனை குறிவைத்து அனைவரும் சமிக்சை கொடுத்துக் கொள்வோம். அவ்வளவுதான் ஒருவன் அவன் தலையில் துண்டைப் போட மற்றவர்கள் அவன் தலையில் கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு ரவுண்ட் முடிந்து துண்டை நீக்குவதற்குள் அவனவன் அவனவன் இடத்தில் இருப்பார்கள். யார் அடித்தார் என்பதே தெரியாது. ஆனால் தினம் ஒருவர் அடி வாங்குவது உறுதி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு சிலர் கூடுதலாக வாங்கியிருந்தாலும் எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.

விவசாய காலத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச அடைத்திருக்கும் மடையை திறந்து விட்டுவிட்டு வேகவேகமாக புறமடைப்பக்கம் (கண்மாய்க்கு வெளியே) வந்து தண்ணீர் ஒடிவருவதைப் பார்த்து சந்தோஷம் அடைந்த அந்த தருணத்தை எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம்.

நாங்கள் படுத்து உறங்கி... பேசி மகிழ்ந்து... சண்டை போட்டு... பரிட்சை சமயத்தில் அதில் அமர்ந்து படித்து... உறவாடிய மடையை மீண்டும் புதுப்பித்து கட்ட எங்கள் உறவினர் ஒருவர் கான்ட்ராக்ட் எடுத்து, மடையை உடைத்து புதிதாக கட்டினார். அந்த வருடம் மழை வந்து கண்மாய் நிறைந்த போது அவர் அடித்த மீதத்தில் கட்டிய மடை பல இடங்களில் உடைப்பெடுத்து கண்மாய் தண்ணீர் வெளியாக ஆரம்பித்தது. நாங்கள் முடிந்தளவு அடைத்துப் பார்த்தோம். தண்ணீர் வெளியாவதை தடுக்க முடியவில்லை. கடைசியில் கையில் இருந்த கடப்பாறையால் உடைத்து அடைத்து விட்டோம்.

தான் கட்டிய மடையை சின்னப் பயக உடைத்து விட்டாங்களே என்று அன்று எங்களுடன் மோத ஆரம்பித்தவர் இன்று வரை எங்களுடன் மோதிக் கொண்டுதான் இருக்கிறார். உடைந்த மடையில்தான் வயலுக்கு நீர் பாய்ச்சி வந்தோம். மீண்டும் வேறொரு கான்ட்ராக்டர் எடுத்து கட்டிய மடைதான் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.

நாங்கள் மடையுடன் உறவாடியது போல் இன்று உறவாட யாரும் இல்லை. இந்த முறை ஊருக்கு சென்ற போது பெரிய மடை அருகில் சென்ற சமயங்களில் பழசு மனசுக்குள் வந்து சென்றது.

-'பரிவை' சே.குமார்

40 எண்ணங்கள்:

Madumitha சொன்னது…

உங்கள் கிராமத்தைப் போலவே
உங்கள் நினைவுகளும் பசுமையாய்
இருக்கின்றன. கொஞ்சம் பொறாமையாத்
தானிருக்கிறது. கிராமமும் இல்லாமல்
நகரமும் இல்லாத ஊரில் வசிக்கும் எனக்கு கொஞ்சம் பொறாமையாத்தானிருக்கிறது.

Chitra சொன்னது…

அந்த மடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவனை குறிவைத்து அனைவரும் சமிக்சை கொடுத்துக் கொள்வோம். அவ்வளவுதான் ஒருவன் அவன் தலையில் துண்டைப் போட மற்றவர்கள் அவன் தலையில் கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு ரவுண்ட் முடிந்து துண்டை நீக்குவதற்குள் அவனவன் அவனவன் இடத்தில் இருப்பார்கள். யார் அடித்தார் என்பதே தெரியாது. ஆனால் தினம் ஒருவர் அடி வாங்குவது உறுதி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு சிலர் கூடுதலாக வாங்கியிருந்தாலும் எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.


..... வாசிக்கும் போதே, அந்த கலகலப்பும் குதூகலமும் எங்களையும் தொத்திக் கொள்கிறது.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பசுமையான கிராமத்து நினைவுகள்.... அருமை..

பின்னோக்கி சொன்னது…

கிராமத்துத் தென்றல் தழுவிப்போனது போல இருந்தது.

RVS சொன்னது…

மனசு கம்மாக் கரை ஓரமா சுத்தி வந்திருக்கு... நல்ல இருக்கு... :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Asiya Omar சொன்னது…

மலரும் பசுமையான நினைவுகள் அருமை.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

vasu balaji சொன்னது…

கிராமத்து வாசம் கொணரும் நனவோடை. தமிழ்மணம் பட்டியை இண்ட்லி அருகில் இணையுங்கள். வாக்களிக்க முடியவில்லை:)

கண்ணகி சொன்னது…

மலரும் நினைவுகள் நல்லா இருக்கு...கொடுத்துவைத்தவர் சார் நீங்கள்..

ம.தி.சுதா சொன்னது…

பழைய நினைவுகளைக் கிழறிவிட்டீர்கள்... அதுக்காக 3,4 வாக்க போடலாம் என்றால் ஒருமுறை தானெ குத்த விடுகிறாங்கள். (கள்ள ஓட்டுப் போட்டுப் பழகீட்டுது)

கமலேஷ் சொன்னது…

ம்ம்..பசுமையான நினைவுகள்.

Menaga Sathia சொன்னது…

பசுமையான கிராமத்து நினைவுகள்.... அருமை..

vanathy சொன்னது…

சூப்பர் நினைவுகள். அந்த நாட்கள் திரும்பி வராது என்பது உண்மை.

r.v.saravanan சொன்னது…

பசுமையான கிராமத்து நினைவுகள் மீண்டும் எனக்குள் தோன்றுகிறது நன்றி குமார் அசத்துங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மதுமிதா...
நகரத்து வாழ்க்கையைவிட கிராமத்து வாழ்க்கையின் பசுமைகள் பொறாமைப்படத்தான் வைக்கும் நண்பரே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
கலகலப்பும் குதூகலமும் தொத்திக் கொண்டது என்று நீங்கள் சொல்லியிருப்பது சந்தோஷமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பின்னோக்கி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க RVS...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க asiya அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ்மணம் பட்டியை இணைத்திருக்கிறேன். எனது வலைப்பூவில் தெரியவில்லை. பார்த்துச் சொல்லுங்க>
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கண்ணகி மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ம.தி.சுதா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்களாவது ஒரு ஓட்டாவது போடுகிறீர்கள். எனக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை யாருக்குமே வாக்களிக்க முடியவில்லை. வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்களிக்க முடியாதோ...?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கமலேஷ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமா, ரொம்ப நாளா ஆளையே காணோம் என்னாச்சு..?


வாங்க மேனகா அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
நாம் தொலைத்த நாட்களில் அந்த இளம்பிள்ளை நாட்கள் திரும்ப வந்தால் சந்தோஷமே... அது கிட்டாது என்பது தெரிந்துதானே மீண்டும் மீண்டும் அசை போடுகிறோம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

சகோதரம் நல்லவைக்கு வாக்கிடுதல் என்பது பதிவர்களின் கட்டாய கடமையாகும்.. யாரும் மலம் கழித்து விட்டு அப்படியே போவார்களா அது போல் தான் இதுவும்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பர் ம.தி.சுதாவிற்கு...
தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் சொன்னதை தாங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நான் வாக்களிக்க நினைத்தாலும் 'service unavailable' என்ற error வருகின்றது. எனது கணிப்பொறியில் எதாவது பிரச்சினையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு சில நேரங்களில் வாக்கு விழுகின்றது. பல நேரங்களில் இந்த பிரச்சினை. சில நேரங்களில் இன்லியில் like? கிளிக்கினால் தொடர்புடைய இடுகை இல்லையென்றே வருகின்றது. என்னவென்று தெரியவில்லை இதைதான் சொல்லியிருந்தேன். உங்கள் புரிதல் தவறென்று நினைக்கிறேன்.

ம.தி.சுதா சொன்னது…

///...தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் சொன்னதை தாங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை.../// சகோதரா இவ்வளவு நாள் பழகீட்டு இன்னும் என்னை புரியலியே... நான் தங்களைச் சொல்லவில்லை... ///...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்களாவது ஒரு ஓட்டாவது போடுகிறீர்கள்.../// என்று நீங்க போட்டீர்களே... அதற்காக மற்றவரக்க ஒரு தூண்டதலுக்காகத் தான் பச்சையாகச் சொன்னேன் (ஏன் நீலமாகச் சொன்னால் விளங்காதா..?) மற்றும் படி என் சாதரண குசும்பு ஊட்டம் தான் அது... எனக்கு விளங்குது சகோதரா எழுத்துகள் பேசுகையில் இப்படித்தான் இலகுவில் விளங்கிக் கொள்வது கடினம்.. இப்ப சரி தானே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
புரிகிறது நண்பா... நன்றி.

velji சொன்னது…

மடையிலும்,ஊற்றிலும் குளித்த பழைய நினைவுகளை கிளப்பிவிடும் ஈரமான பதிவு!

ஹேமா சொன்னது…

குமார்....நினைவலைகள் மடையாய்த் திறந்து ஓடுகிறது.அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.

சுசி சொன்னது…

பசுமையான நினைவுகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க Velji...
நீங்களும் நம்ம ஆளுதானா (கிராமத்தானான்னு கேக்காம டீசண்டா கேட்டோம்... அம்புட்டுத்தான்) அந்த சந்தோஷம் என்றும் மனசுக்குள் மணி அடித்துக் கொண்டுதான் இருக்கும் நண்பரே...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி ஹேமா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சுசி மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

மோகன்ஜி சொன்னது…

கொஞ்ச நேரம் எங்கயோ கூட்டிகிட்டு போயிட்டீங்க. படிக்கும் போதே,நீரின் சலசலப்பும்,வைக்கோல் மணமுமாய்.. கிராமம் கிராமம் தாங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய சார்...
தொடர் பதிவா... பார்க்கலாங்க....
என்ன வரலாறா... அய்யோ.... ரொம்ப நாளாகும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மோகன்ஜி...
கிராமத்து வாழ்க்கையின் சந்தோஷம் இப்ப இருக்கும் நகரத்து வாழ்வில் தொலைந்து விட்டது நண்பரே... வருடம் ஒருமுறை ஊருக்குப் போகும் போது அந்த ஒரு மாதம் களத்துமேடு , கம்மாக்கரை, கோவில் திருவிழா என்று சுற்றி வருவது சந்தோஷமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sriakila சொன்னது…

மடை திறந்து பாயும் நதி அலை தான்..

பாட்டுப் பாட வேண்டும் போல் இருந்தது பதிவைப் படித்தவுடன்.

ராமலக்ஷ்மி சொன்னது…

எல்லோருக்குமே பழைய நினைவுகளை மலரச் செய்து விடும் உங்கள் பதிவு. அருமை குமார்.

மாதேவி சொன்னது…

"நாங்கள் படுத்து உறங்கி... பேசி மகிழ்ந்து... சண்டை போட்டு... பரிட்சை சமயத்தில் அதில் அமர்ந்து படித்து... உறவாடிய மடை"

மனக்கண்முன் வந்து செல்கிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு சிலர் கூடுதலாக வாங்கியிருந்தாலும் எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.///

ஹா ஹா ஹா.. இது உண்மையில் நினச்சு சிரிச்சேங்க.. (நாங்க அடி வாங்கினா உனக்கு சிரிப்பா வருதாக்கும்னு கேக்காதீங்க...) நீங்க சொன்ன விதமே சூப்பர்.. :-))

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீஅகிலா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராமலெஷ்மி மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மாதேவி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆனந்தி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.