மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்





'எருமை மாடே...'
எட்டாப்பு சாரும்

'களவாணிப்பயலே...'
கணக்கு வாத்தியாரும்

'மூதேவி...'
முத்துராமன் ஐயாவும்

'முண்டம்...'
ராமசாமி வாத்தியாரும்

'தண்டம்...'
தனசேகரன் சாரும்

'மரமண்டை...'
இங்கிலீஷ் வாத்தியாரும்

இப்படி பலபேரில் அழைத்து
பட்டை தீட்டிய
பிரமாக்கள் எத்தனையோ..?

அத்தனையிலும் தனியாய்
அழுத கண்ணும்...
ஒழுத மூக்குமாய்...

அம்மா முந்தானைக்குள்
ஒளிந்தவனை வாரி அணைத்து

'அ... ஆ...' கற்றுக் கொடுத்த
ஒண்ணாப்பு டீச்சர்
மனசுக்குள் உசரமாய்..!


(என் ஆசிரியர்களுக்கும், நல் ஆசிரியர்களுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்த்துக்கள்.)

-'பரிவை' சே.குமார்.

30 எண்ணங்கள்:

dheva சொன்னது…

வேகமாய் எழுகிறது பழைய நினைவுகள்...பாஸ்!

ஆமாம் நீங்க தேவகோட்டைன்னு கேள்விபட்டேன்...தேவகோட்டைதானா இல்லா பக்கமா?

dheva சொன்னது…

வேகமாய் எழுகிறது பழைய நினைவுகள்...பாஸ்!

ஆமாம் நீங்க தேவகோட்டைன்னு கேள்விபட்டேன்...தேவகோட்டைதானா இல்லா பக்கமா?

பத்மா சொன்னது…

nice

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அண்ணா சூப்பர்...

எனது சார்பாகவும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

vasu balaji சொன்னது…

அழகான குரு வணக்கம்.

Unknown சொன்னது…

very nice

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

அழகான குரு வணக்கம் - திட்டினாலும் நமமைச் செதுக்கியவர்கள் அவர்கள் - ஆசிரியப் பெருமக்கள் - ஆசிரியர் தினத்தன்று அவர்களை நினைவு கூறுவோம்.

நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேவா...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
நான் தேவகோட்டைக்கு அருகில் சிறு கிராமம். தேவகோட்டையில்தான் எல்லாம்.
இப்ப அபுதாபியில் இருக்கிறேன்.
நீங்க தேவகோட்டையா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பத்மாக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெறும்பய சார்....
வருக்கைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கலாநேசன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீனா சார்...
கண்டிப்பாக அவர்கள் இல்லையென்றால் இதுபோன்ற நட்பு கிடைத்திருக்குமா?
நானும் சில காலம் கல்லூரி ஆசிரியராகவும் கணினி மையத்தில் பயிற்றுனராகவும் பணிபுரிந்திருக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

எங்க வாத்தியார்களும் மனசுக்குள்ள வந்துட்டு போனாங்க...நினைவு கூர்ந்தமைக்கு நன்றி..

சுசி சொன்னது…

என் வணக்கங்களும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க படைப்பாளி...
நினைவுகள் என்றும் சுகமானவைதானே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சுசி மேடம்...
வணக்கத்திற்கும் வணக்கம் சொல்ல வந்தமைக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

நகைச்சுவை இழையோடும் அருமையான குரு வணக்கம்!!
தொடர்ந்து மலரும் நினைவுகளை அவரவர் மனசுக்குள் மலர வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்!!

கோமதி அரசு சொன்னது…

// அ..ஆ கற்றுக் கொடுத்த
ஒண்ணாப்பு டீச்சர்
மனசுக்குள் உசரமாய்!//

அருமையான குரு வணக்கம்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அம்மா...
உங்கள் மலரும் நினைவுகளை மலரச் செய்ததில் சந்தோஷமே.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோமதி அரசு...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

r.v.saravanan சொன்னது…

சூப்பர் kumar
எனது சார்பாகவும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் சொன்னது…

அருமையான குரு வணக்கம்.. வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஆசிரியர்கள் என்றும் ஆசிரியர்களே.

ஆசிரியர் தின வாழ்த்துகள்.

இலா சொன்னது…

ரொம்ப ரசிக்கும்படி நகைச்சுவையா எழுதி இருக்கீங்க??

ராமலக்ஷ்மி சொன்னது…

திட்டியவரும் பட்டை தீட்டியவர் என ஒத்துக் கொண்டீர்களே:)! அருமையான குரு வணக்கம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க மதுரை சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க அக்பர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இலா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


வாங்க ராமலெட்சுமி மேடம்...
உண்மைதானே... அவர்கள் பட்டை தீட்டவில்லை என்றால் இன்று நாம் ஒளிரமுடியுமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அப்பாதுரை சொன்னது…

beautiful!

'பரிவை' சே.குமார் சொன்னது…

Thanks appaadurai

ஷைலஜா சொன்னது…

நல்ல இடுகை குமார்! முன்னே அனுப்பிய பின்னூட்டம் போனதா தெரியவில்லை ஆகவே மறுபடி!

Raja சொன்னது…

அட்டகாசமா இருக்குங்க...

Raja சொன்னது…

அட்டகாசமா இருக்குங்க...