மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 4 நவம்பர், 2015

குறுந்தொடர்: பகுதி - 7. கொலையாளி யார்?

முன்கதை

தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வாட்ஸ்மேன் ரெத்தினத்தை விசாரித்துக் கொண்டிருக்கும் போது  தணிகாசலத்தின் மகனும் மகளும் வர அவர்களிடம் எதுவும் விவரம் கிடைக்குமா என விசாரித்தார்.

பகுதி -1 படிக்க கொலையாளி யார்?

பகுதி -2 படிக்க கொலையாளி யார்?

பகுதி -3 படிக்க கொலையாளி யார்?


பகுதி -6 படிக்க கொலையாளி யார்?

இனி...

"மறந்துட்டீங்களா...?"  வியப்பாய்க் கேட்டார் சுகுமாரன்.

"ஆமா.... மறந்துட்டோம்.... அப்படி ஒரு சொந்தம் இருப்பதையே மறந்துட்டோம்."

"ஏன்...?"

"ஏன்னா... நாங்க சின்னப்பிள்ளைங்களா இருக்கும் போதே அவங்க போயாச்சி..." தர்ஷிகாவைப் பார்த்தபடி சொன்னான் வருண். அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டு மூக்கை உறிஞ்சினாள். அழுகை கூடியிருக்கும் என்பதை உணர்ந்த வருண் அவள் தலையில் ஆறுதலாய்த் தடவினான். உடனே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"போயாச்சின்னா... எங்கே...?"

"அப்பாவைப் பிடிக்கலை... பிரிஞ்சு பொயிட்டாங்க..."

"பிரிஞ்சு பொயிட்டாங்கன்னா... அவங்களுக்கு எனி இம்மாரல் கனெக்சன்..."

"நோ... இன்ஸ்பெக்டர்... ஷி ஈஸ் பர்பெக்ட்லி ஜென்டில் உமன்..."

"தென்?"

"விவாகரத்து வாங்கிக்கிட்டு பொயிட்டாங்க..."

"விவாகாரத்தா...?"

"ஆமா..."

"ஏன்...?"

"எனக்குச் சரியான காரணம் தெரியலை... ஆனா காசு காசுன்னு அவங்களைக் கண்டுக்காத அப்பாவைப் பிடிக்காம பொயிட்டாங்கன்னு வீட்டுல உள்ளவங்க சொல்லிக் கேள்வி..."

"சரி பொயிட்டாங்க... ஆனா உங்க அம்மா உங்களைக் கூட நினைக்கலையா?"

அந்தச் சோகத்திலும் லேசாக சிரித்த வருண் "நினைச்சிருக்கலாம்... இப்பவும் நினைக்கலாம்... அவங்க பிரியும் போது நாங்க ரெண்டு பேரும் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கிட்டயும் மாறி மாறி இருக்கணும்ன்னு  கோர்ட்ல சொல்லியிருந்தாங்க... கொஞ்ச  நாள் அப்படி இருந்தோம்... அப்புறம் அவங்க எங்களை தன் கூட வச்சிக்க விரும்பலை...."

"இவ்வளவு விவராமாச் சொல்றீங்க...? எதுக்காக பிரிஞ்சாங்கன்னு மட்டும் தெரியலை..."

"எனக்கு நல்லா விவரம் தெரியும் சார்... இவ எனக்கு அப்புறம் மூணு வருசம் கழித்துப் பிறந்தவள்... இவளுக்கு ஆறு வயசாகும் போதுதான் அவங்ககூட இருந்த உறவு சுத்தமா முடிவுக்கு வந்துச்சு... எதுக்கு பிரிஞ்சாங்கன்னு உண்மையிலுமே தெரியாது சார்... அப்ப அதை தெரிஞ்சிக்கிற ஆர்வமும் இல்லை... கொஞ்ச நாள் அழுது ஆர்ப்பாட்டம்... அப்புறம் இந்த வாழ்க்கை பழகிடுச்சு... ஆனா இவதான் ரொம்ப நாள் அம்மா வேணும்ன்னு அழுதாள்"  வருண் லேசாக கண் கலங்கினான்.

"சரி... இப்ப எங்க இருக்காங்க....?"

"தெரியாது..."

"உண்மையாவே தெரியாதா... இல்லை சொல்ல வேண்டான்னு நினைக்கிறீங்களா..? நாங்க எப்படியும் அவங்களை இந்த வளையத்துக்குள்ள கொண்டாந்து விசாரிப்போம்... தெரிஞ்சா தெரியும்ன்னு சொல்லுங்க..."

"சத்தியமா எங்களுக்குத் தெரியாது சார்... அவங்களை மறந்துட்டோம் சார்... அப்பா இறந்த இந்த நேரத்துல அதைப் பற்றி பேசி எங்களை கஷ்டப்படுத்தாதீங்க சார்... ப்ளீஸ்.."

"ஓகே... மிஸ்டர் வருண்... இன்னும் கொஞ்சம் டீடெயில் மட்டும் உங்க அம்மா பற்றிக் கொடுங்க ப்ளீஸ்..."

"இனி என்ன சார் இருக்கு... அதான் சொல்லிட்டேன்ல்ல..."

"ப்ளீஸ்... எங்களுக்கு இந்தக் கொலையில எதாவது பிடி கிடைக்குமான்னு பார்க்கத்தான்..."

"சரி... கேளுங்க.."

"அவங்க சொந்தம்...  அதாவது உங்க தாத்தா, பாட்டி, மாமா இப்படி யாராச்சும்..."

"எல்லாரும் இருக்காங்க... மதுரையிலதான் இருங்காங்க... ஆனா நாங்க அங்க போறதில்லை..."

"தொடர்பே இல்லையா...?"

"எஸ்..."

"ஏன்... விவாகரத்துக்கு அப்புறம் உங்கம்மா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா..?"

"எஸ்... எங்களை அவங்க வச்சிக்காததுக்கு காரணமே செகண்ட் மேரேஜ்தான்...."

"அது சரி.... உங்க அப்பா...?"

"அவரு அதுக்கு அப்புறம் மேரேஜ் பண்ணலை... நாங்கதான் அவங்களுக்கு எல்லாமே..."

"சரி... சாரி... கேட்கக் கூடாதுதான் நினைச்சேன்... ஆனா விவரம் வேணுமே... உங்க அப்பாவுக்கு ஏதாவது இல்லீகல் தொடர்பு..."

"தெரியலை சார்... ஆனா இருக்க வாய்ப்பில்லை..." 

"ம்... அம்மாவை அதுக்கு அப்புறம் பார்க்கவே இல்லை... அவங்களோட  ரெண்டாவது வாழ்க்கை பற்றித் தெரியாது... அப்படித்தானே..."

"ஆமா சார்... "

"ஓக்கே..." என்று எழுந்தவர் தர்ஷிகாவைப் பார்த்தபடி "இவங்க எதுவுமே பேச மாட்டேங்கிறாங்க... எல்லாத்துக்கும் நீங்கதான் பதில் சொல்றீங்க..." என்றார். 

"அவ அப்பா இறந்ததுல அப்செட்டாயிட்டா சார்... அவ அப்பா செல்லம்..."

"ரெண்டு பேருமே ஒருத்தருக்குத்தானே செல்லம்... அதான் அம்மா இல்லையே... அப்புறம் அப்பா செல்லம்தானே..." என்று சொல்லி சுகுமாரன் முறைப்பது போல் பார்க்கவும் தலையைக் குனிந்து கொண்டார் பொன்னம்பலம்.

"இல்லை என்னை விட இவளைத்தான் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்..." பொன்னம்பலத்துக்கான பதிலைச் சொன்னான் வருண்.

"அதுசரி... ஆனா அழுதா அப்பா வந்திருவாரா...? உங்க அப்பாவைக் கொலை பண்ணினது யாரா இருந்தாலும் அவங்களைப் பிடிக்கணுமா இல்லையா..?"  தர்ஷிகாவைப் பார்த்துக் கேட்டார்.

"கண்டிப்பா இன்ஸ்பெக்டர்... அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்" என்றான் வருண். தர்ஷிகா எதுவும் பேசாமல் வழியும் கண்ணீரைத் துடைத்த கர்ச்சீப்பால் மூக்கையும் அழுத்தித் துடைத்தாள். அது இன்னும் சிவப்பானது.

"ஓகே... மிஸ்டர் வருண், சம் போலீஸ் பார்மாலிட்டீஸ் முடிஞ்சி இன்னைக்கு ஈவ்னிங உங்க அப்பாவோட பாடியை வாங்கிக்கலாம்... இன்னும் ஒரு வாரத்துல கொலையாளியை பிடிச்சிடலாம்ன்னு நினைக்கிறேன்... பாக்கலாம்... ஏதாவது தேவைப்பட்டா கூப்பிடுறேன்... உங்க மொபைல் நம்பர் சொல்லிட்டுப் போங்க... "

"ஷ்யூர் சார்..." என்றபடி பொன்னம்பலத்திடம் மொபைல் நம்பரைக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பியதும் ஒரு டீ வாங்கி வரச்சொல்லிக் குடித்துக் கொண்டே 'என்னய்யா... எப்பக் கூப்பிட்டாலும் இங்க வரணும் சரியா... போ...' என்று ரெத்தினத்தை போகச் சொல்லிவிட்டு  "அம்மா இவரைக் கொலை பண்ணியிருக்கலாமோன்னு லேசா சந்தேகம் வந்தாலும் அந்தப் பொண்ணு மேல எனக்கென்னவோ டவுட்டா இருக்குய்யா... அழுகுறது கூட ஆக்டிங்கா இருக்குமோன்னு தோணுது" என்றார் பொன்னம்பலத்திடம்.

"சேச்சே... அப்படித் தெரியலை சார்... அது உண்மையிலேயே அப்செட் ஆயிருக்கு சார்..."

"பொண்ணுங்கன்னா ரொம்ப சப்போர்ட் பண்ணுவீங்களே... ஒண்ணு கவனிச்சீங்களா பொன்னம்பலம்... அப்பாவை கொன்னவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணுமா வேண்டாமான்னு அவகிட்டதான் நான் கேட்டேன்... ஆனா அவ பேசலை.... அப்பா மேல அதிகம் பாசமுள்ள பொண்ணு.... கண்டிப்பாக பதில் சொல்லியிருக்கணுமா இல்லையா... ஆனா பேசாமத்தானே இருந்தா...."

"ஆமா சார்... இதை நான் யோசிக்கலை சார்...."

"சரி... ஆடு புலி ஆட்டம் ஆட ஆரம்பிச்சிருக்கோம்.... யார் அந்த கொலையாளின்னு கண்டுபிடிச்சி ஜெயிக்கிறோமான்னு பாப்போம்... " என்றபடி வட்டமிட்டு எழுதி வைத்திருந்த பேப்பரில் வினாக்குறி இட்ட இடத்தில் வருண், தர்ஷிகா, அம்மா என எழுதியவர் தர்ஷிகாவை மட்டும் அழுத்தமாக எழுதினார்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விறுவிறுப்பு
தொடர்கிறேன் நண்பரே
தம +1

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தேடுவோம்! தொடர்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம் அட விறு விறுப்பு சஸ்பென்ஸ் என்று அட்டகாசமாய் போகின்றது கதை. தொடர்கின்றோம்...அடுத்த பகுதி எப்போ குமார்..பேசாம அடுத்தடுத்து போட்டுருங்க்ளேன்...எங்க தலை குடையாம இருக்கும் அதான்....

KILLERGEE Devakottai சொன்னது…

நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது கதை தொடர்கிறேன் நண்பரே..
தமிழ் மணம் 4

சென்னை பித்தன் சொன்னது…

பழைய பதிவுகளை எல்லாம் படித்த பின் வருகிறேன்!

S.P.SENTHIL KUMAR சொன்னது…

முழுதாக எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு வருகிறேன்.
த ம 5

நிஷா சொன்னது…

என்னால் துப்பறியும் க்ரைம் கதை எழுத முடியாது. ஓடபோறேன்னு சொன்ன மாதிரி ருந்தது. அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமோ குமார்? அந்த பெண்ணையும் விடல்லையா..அதிகமா அழுதாலும் சந்தேகப்படுவிங்களா? அம்மாடியோவ் இனி அழும் போதும் கவனமா லீட்டர் கணக்கு பார்த்து அழணுமோ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பெற்ற பெண்ணையும் சந்தேகப் படும் காவல் துறை!.... தொடர்கிறேன் உண்மையான கொலையாளியைத் தெரிந்து கொள்ள.....