மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 20 மே, 2010

ஊருக்குப் போறேன்..!

அன்பான நட்புககு

இன்று மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல்.

இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டச் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் அடிக்கடி வலைக்குள் வருவேன் என்பது இயலாத காரியம். வலைக்குள் வரும் பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.

அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.



பாசங்களுடன்,

சே.குமார்.

வெள்ளி, 14 மே, 2010

தோனியிடம் கலக்கல் பேட்டி



20வது ஓவர் உலகக் கோப்பை 2010 போட்டியில் இருந்து சந்தோஷமாக (?) வெளியேறி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி அவர்களிடம் ஒரு எக்கச்சக்க பேட்டி...

பேட்டி எடுப்பவர் எல்லா இடங்களிலும் சிறப்பாக பேட்டி எடுத்து வரும் திரு. இந்தியன். இனி பேட்டிக்கு செல்லலாம்.

இந்தியன் : வணக்கம் தோனி அவர்களே.

தோனி: வணக்கம் இந்தியன். (சென்னை கிங்க்ஸிற்காக விளையாடியதால் நன்றாக தமிழ் பேசுகிறார்)

இந்தியன் : 2010 டுவெண்டி20 கோப்பை போட்டியில் இருந்து வெளிவந்தது குறித்து உங்கள் கருத்து..?

தோனி: ம்... உங்க ரஜினி என்ன சொன்னாரு ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்லலை. அது மாதிரி ஒரு தடவை கோப்பை வென்றால் நூறு தடவை வென்ற மாதிரி.

இந்தியன்: அடங் கொக்கா மக்கா, தலைவரு படத்துல புலோவுக்காக பேசினாரு. அது உமக்கு வேத வாக்கா...?

தோனி : போட்டிய இந்தியாவுல வச்சிருக்கணும்... ஏன்னா நாம் ஐபிஎல்ல வெளாண்டு பயிற்சி எடுத்து இருக்கோமுல்ல... அதவிட்டுட்டு வெஸ்ட் இண்டீஸ்ல வச்சா நாம என்ன செய்யிறது.

இந்தியன்: அது சரி... ஆமா சூப்பர் எட்டுல ஒரு போட்டியில கூட ஜெயிக்கலையே அது ஏன்..?

தோனி: அதுவா பெர்முடாஸோ, அயர்லாந்தோ வந்திருக்கணும். வந்திருந்தா ஒரு போட்டியாவது ஜெயித்திருக்கலாம்.

இந்தியன்: ஆமால்ல... உண்மைதான் நாம் அடிமாடுன்னா... அதுக அறுபட்ட மாடுகள். சரி நம்ம வீரர்கள் பற்றி...?

தோனி : ஹா... ஹா...ஹா... ஜோக்கடிக்காதீங்க இந்தியன்... சொல்றதுக்கு என்ன இருக்கு.

ரெய்னாகிட்ட இங்கயே சொன்னேன்... உயிரைக் கொடுத்து விளையாடாதே... போட்டி போனா மயிரே போச்சுன்னு... அவன் கேக்கலை... அதிகம் ரிஸ்க் எடுக்கிறான். போற போக்கைப்பார்த்தால் நம்ம இடத்தை பிடிச்சிடுவான் போல...

இந்தியன்: அப்படியா... ஆமா சேவாக்கை கவித்த மாதிரி திட்டம் எதாவது போட வேண்டியதுதானே...

தோனி: பார்க்கலாம்... அடுத்த சீரிஸ்லயும் அடங்கலைன்னா அதுதான். நாம வாழணுமில்ல.

இந்தியன்: சரி ஹர்பஜன்...?

தோனி: அதுவா... இங்க வெளாடும்போது நம்ம விக்கெட்டை எடுத்துட்டு முன்னாடி வந்து குதிக்கும். ரொம்ப கடுப்புல இருந்தேன். இலங்கை கூட அது போர் போரா கொடுத்தப்ப முன்னால போயி குதிச்சு நம்ம கடுப்பை தீர்த்துட்டமுல்ல.

இந்தியன்: நெஹ்ரான்னு ஒரு கிழடை கொண்டு போனிங்களே... அதுக்கு இன்னும் வாய்ப்பிருக்கா..?

தோனி: இல்லாம பின்ன... எத்தனை சிக்ஸ் அடிச்சாலும் மணிப்பர்ஸ் வாயை திறந்து சிரிச்சுக்கிட்டே பந்து வீசுமில்ல... டேன்சனை குறைக்க அவரு கண்டிப்பா வேணும்.

இந்தியன்: யூசுப் பதான் ஐபிஎல் ஹீரோல்ல...

தோனி: ஆமா... இங்க காசு குவிஞ்சது எல்லாரும் ஹீரோ ஆனோம். அதுக்காக எல்லா இடத்துலயும் ஹீரோ ஆகமுடியுமா? அவனை கண்ணாடிய கழட்டிட்டு வெளாடுடான்னு சொன்னா... பைத்தியக்காரனாட்டம் பொம்மை கண்ணாடி போட்டுக்கிட்டு கேவலமா விளையாண்டான்.

இந்தியன்: ஒருவேளை கண்ணாடியோட பாத்து பேட்ஸ்மேன் பேடியாகலமுன்னு நினைச்சிருக்கலாமுல்ல.

தோனி: ஆமா கிழிச்சான்.

இந்தியன்: தோற்கிற போட்டிகளிலெல்லாம் நீங்க பேட்ஸ்மேன் நல்லா விளையாடலைன்னு சொன்னீங்க... அப்ப நீங்க...?

தோனி: என்ன இப்படி கேக்குறீங்க... நான் கேப்டன்.

இந்தியன்: விஜயகாந்தா... அவரு ஒரு ஆளா தீவிரவாதிய விரட்டுறவரு தெரியுமில்ல...

தோனி: அய்யோ... நான் அரசியல் பேசலை. நான் அணித்தலைவர்... அதனால எப்படி வேணுமின்னாலும் விளையாடலாம்.

இந்தியன்: அப்படியா... தோத்து வந்ததுல கவலையில்லையா...?

தோனி: என்ன கவலை இருக்கு... ரெண்டு விளம்பரத்துல நடிக்கலாமுல்ல...




இந்தியன்: உங்களை தெய்வமா நினைக்கிற ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க..?

தோனி: அவனவன் அவனவன் வேலையை பார்த்துக்கிட்டு பொழுது போக்குக்காக கிரிக்கெட் பாருங்க. அதைவிட்டுட்டு நாங்களே சீரியஸா விளையாடாதப்ப நீங்க சீரியஸா பார்த்துட்டு எங்க மேல தயவு செய்து கோபப்படாதீங்க.

இந்தியன்: தோனி, உங்க ரசிகர் ஒருத்தர் போன்ல இருக்கார். பேசமுடியுமா?

தோனி: கொடுங்க... கண்டிப்பா...

எதிர்முனை : யாரது தோனியா... நல்லாயிருக்கியாப்பா... உனகென்ன நல்லாயிருப்பே... நாங்கதானே ராப்பூரம் கண் முழிச்சி இலங்கையோட விளையாண்டதை பார்த்தோம். ஆமா, 11 ஓவருக்கு 100 ரன் எடுத்த நம்ம பயலுக அப்புறம் அடிக்கலையே ஏன்.? காசு எதுவும் வாங்கிட்டிங்களோ... அப்புறம் நீ ஏன் முன்னாடியே இறங்கி கழுத்தறுத்தே... தோக்குற போட்டியெல்லாம் நீ முன்னாடி இறங்கிடுறே... என்ன காரணம்..? நீ தறுதலைகளை கொண்டு போனதுக்கு தல (அஜித் இல்லை) சச்சின் தலையில் சேவாக், அஸ்வின், உத்தப்பா, திவாரி, சுமன், பாண்டே இப்படி ஒரு அணியை கொண்டு போயிருந்த வெற்றி இந்தியா வசமாயிருக்கும். சரி வுடுப்பா... அடுத்த வருஷம் பாக்கலாம். ஆமா... எங்க ஸ்ரீகாந்த் நல்லா செலக்ட் பண்றாரு போல.... அடுத்த தோல்விப் போட்டி எப்ப... ஏண்டா... நாதாரி.... கேப்மாறி... முள்ளமாறி... நாட்டுல வேற ஆளே கிடைக்கலையா உனக்கும் ஸ்ரீகாந்துக்கும்...? பழைய பண்ணாடைகளையே ஊர் சுத்த கூட்டிப் போறே... நா......."

வார்த்தைகள் மோசமாக, தோனி போனை கட் செய்கிறார்.

இந்தியன் : நன்றி தோனி, மோசமான வார்த்தைகள் உங்களை பாதித்ததற்கு வருந்துகிறோம். தொடரும் போட்டிகளில் உங்கள் தொல்விப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.





ஞாயிறு, 9 மே, 2010

சுறா..!



விஜயின் தோல்விப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் படம்தான் சுறா..!

வேட்டைக்காரன் காட்டுக்குள்ளே காணாமப் போயிட்டதால  கடலுக்குள்ள சுறாவை விட்டுருக்காங்க...

ஆரம்பிக்கும் போதே கடலுக்குள்ள போன மீனவர்கள் புயல் மழையால வீடு திரும்பததால் அரசாங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த, ஒருவழியாக எல்லோரும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படும் நேரத்தில் ஒருவர் மிஸ்ஸிங்...

அப்ப மக்கள் தப்பி வந்தவர்களிடம் எங்க சுறா என்று கேட்க, வரும்போது ஒரு படகு கவிழ்ந்து விட்டதாகவும் அதில் இருந்த எல்லாரும் காப்பாற்றப்பட்ட போதிலும் சுறாவை மட்டும் காணவில்லை என்றும் காதில் பெரிய பூவைச் சுற்ற, லாஜிக் இல்லா சுறாவின் பயணம் ஆரம்பிக்கிறது.

ஆட்சியரிடம் அவர் வேணும் என்று அடம்பிடிக்க, தேடலாம் என்று முடிவெடுக்கும் போது கேமரா கடலுக்குள் பயணிக்கிறது....

கைகளை உயரத்தூக்கி கும்பிட்டபடி (நம்மளைப் பார்த்து இந்த அலும்பை பொறுத்தருள்க என்பது போல் தோன்றியது) தண்ணிக்குள் இருந்து டால்பினாய் சுறா பறந்து வருகிறார்.

அதை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாலா பக்கத்திலும் இருந்து கேமராமேன் படம் பிடித்து தள்ளியுள்ளார். அதுதான் படத்தின் முதல் லாஜிக் இல்லா மேஜிக்.

அதவிட கொடுமை ஒடி வரும்போதே அவர் போட்டிருக்கும் சட்டையின் கலர் மாற, தண்ணிக்குள் மூழ்கி வந்த அவர் 'வங்கக்கடல் எல்லை...' என்று குதிக்கிறார்.

இதற்கு மேல் விமர்சிக்க வேண்டியதில்லை... அடுத்த இரண்டரை மணி நேரம் என்ன நடந்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே சுறாவை மறப்போம்... மன்னிப்போம்.

விஜய்க்கு மட்டுமான கேள்வி... பாடல்களிலும் நடனத்திலும் கவனம் செலுத்தும் நீங்கள் ஏன் கதையை மட்டும் கவனிப்பதில்லை. கிறுக்குப்பய புள்ளைக ரசிகர்களா இருக்குக எப்படியும் பார்த்துடுங்க என்றா...? அங்காடி தெரு பாருங்கள் அதில் அந்தப் பையனும் பொண்ணும் போட்டி போட்டி நடித்திருப்பதை... அய்யா... சாமி ... இந்தக் கொடுமையை இத்துடன் விடுங்க... கடலுக்குள்ள போன சுறா போகட்டும். அடுத்த படமாவது ரசிக்கும்படி இருக்கட்டும்.

சங்கிலி முருகனுக்கு... பாசில் - விஜய் கூட்டணியில் காதலுக்கு மரியாதை தந்த நீங்களா இப்படி ஒரு படத்தை... சை... கதைக்காக் எடுங்கள்... கதைநாயகனுக்கா எடுக்காதீர்கள்.

சன் பிக்ஸ்ர்க்கு... வேட்டைகாரன் வைத்த வெடி சுட்ட தடம் மறைவதற்குள் சுறா கடிச்சிருச்சேன்னு கவலைப்படாதீங்க... நல்ல கதையுள்ள படங்களா பார்த்து வெளியிடுங்கள்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 2 மே, 2010

மங்கையர் சிகரம் + மெயிலில் வந்த மொக்கை

கடந்த ஒரு வாரமாக வலையில் சிறு பிரச்சினை, அதனால் பதிவிடவோ, பின்னூட்டமிடவோ முடியாத சூழ்நிலை. இன்று சரியாகிவிட்டது.

எனது சிறுகதைகள் வலைப்பூவில் பதிவிடப்பட்ட 'மனசு' சிறுகதை புதிதாக தொடங்கப்பட்டுள்ள மங்கையர் சிகரம்  என்ற பத்திரிக்கையின் முதல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அதற்கு காரணமான பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் சிகரம் வலைத்தளத்திற்கும் நன்றிகள்.


பெண்களுக்கான பத்திரிக்கையாக வலம் வர இருக்கும் மங்கையர் சிகரத்திற்கு தங்கள் ஆக்கங்களை அனுப்ப விரும்பும் அனைவரும் இந்த முகவரியில் அனுப்பலாம்.

admin@tamilsigaram.com

  tamilsigaram@yahoo.com


மே- 1 பிறந்த நாள் கொண்டாடிய 'தல' அஜீத்துக்கு கடந்த கால கசப்புகள் கரைந்து வரும் நாட்கள் வசந்தமாக வாழ்த்துக்கள்.


சென்னை அனி வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்ற அன்று நீண்ட கட்டுரை எழுதி, படங்கள் எல்லாம் சேகரித்து பதிவிட முடியாமல் போய்விட்டது. காரணம் வலையில் பிரச்சினை. அதை இனி பதிவிட்டால் வறண்ட கண்மாயில் மீன் பிடிப்பது போல் ஆகிவிடும். அதனால தோனி தலைமையில் களம் கண்ட தமிழக வீரர்கள், எங்கள் நாயகன் ரெய்னா உள்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மெயிலில் வந்த மொக்கை

பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? (what a pity)

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?........... 
 
-'பரிவை' சே.குமார்.