மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 செப்டம்பர், 2015குறுந்தொடர்: பகுதி -1. கொலையாளி யார்?


'பாடி எங்க இருக்கு..?', 'யார் முதலில் பார்த்தது..?' என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் "அந்தப் பெண் என்ன சொல்றா?" என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன், போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரனுக்கே உரிய கடுமை கலந்திருந்தது.

"மேலதான் சார் இருக்கா?" என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடன் இருந்தார்.

"ம்... எதாவது சொன்னாளா?" கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.

பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி "அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் இல்லை..." என்றார்.

"உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?"

"அப்படித் தோணலை சார்... காலையில காபியோட போயிருக்கா... அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா..."

"ம்..." 

"அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு..."

"ம்..." என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே... கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்... தொழிலதிபர் தணிகாசலம்.

"என்ன வெறியோ தெரியலை... இப்படி கொன்னிருக்காங்க... இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா.... பிரான்சிக் ஆட்கள் எங்கே...?"

"ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்... பிரான்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்.."

"சரி... ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க... இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா?"

"சொல்லியாச்சு சார்..."

"கிளம்பிட்டாங்களாமா?"

"பையனும் பொண்ணுந்தான்... வந்துக்கிட்டு இருக்காங்க..."

"மனைவி...?"

"இல்லையாம் சார்..."

"இல்லைன்னா இறந்துட்டாங்களா... இல்ல...?"

"சரியான விவரம் தெரியலை சார்... இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்..."

"ம்... நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க... நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வாறேன்..." என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.

ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து சுவரோடு ஒண்டினாள். சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார். அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை... கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க...அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் சுதாரித்து கட்டுக்குள் வந்தார். அவரோட மனசுக்குள் இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்...? என்ற வினா எழும்ப 'சேச்சே.... சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது' என வீசிவிட்டு "இங்க வா..." என்றார்.

அருகே வந்து நின்றவள் அழுக ஆரம்பித்தாள். "எதுக்கு அழுகுறே...? அப்ப நீதான் கொன்னியா?" 

"இ....இல்லங்க... சார்..." பதறினாள்.

"அப்ப அழுகாம கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்... சரியா..?"

"ம்..." தலையாட்டினாள்.

"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே!! படிக்கு தூண்டுகிறது!!! தொடர்கிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. விறுவிறுப்பாக ஆரம்பித்திருக்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. ஆகா அருமை
  தொடர்கிறேன் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. கொஞ்சம் ராஜேஷ்குமார் சாயல் தென்படுகிறது! ஆனாலும் சிறப்பாய் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   ராஜேஷ்குமார் சாயலா? அது சரி... இது நம்ம சும்மா கிறுக்குறது...
   ஆரம்பிச்சாச்சு... அடுத்து என்ன பண்றதுன்னு குழம்பிங்கிட்டு இருக்கேங்கிறதுதான் உண்மை சகோ.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. அட! ஸ்வாரஸ்யமாகவும், விறு விறுப்பாகவும் இருக்கிறது தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. அட! ஸ்வாரஸ்யமாகவும், விறு விறுப்பாகவும் இருக்கிறது தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...