மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூன், 2021

சினிமா : மலையாளமும் தமிழும்

மீபமாய் சில மலையாளப் படங்கள் பார்த்தேன். தமிழில் தற்போது நல்ல படங்கள் வெளியாகவில்லை, காரணம் தியேட்டரில் வெளியிட்டு ஆயிரம் ஐநூறென டிக்கெட்டுக்கு காசுபார்க்காமல் படம் வெளியிடும் எண்ணம் நம் தமிழர்களுக்கு (கவனிக்க : 'நாம்' இல்லை) எப்போதும் இருப்பதில்லை. கொரோனா உச்சத்தில் கூட தியேட்டரில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுங்கள் என அரசிடம் கேட்டவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் தளபதிகள்தானே நாம்.

வியாழன், 13 மே, 2021

நாயாட்டும் ஜாதி அரசியலும்

நாயாட்டு...

காவலர்களால் பாதிக்கப்பட்டவர்களைத்தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்... அதேபோல் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்ட காவலர்களை மிஞ்சிமிஞ்சிப் போனால் வேறொரு துறைக்கு மாற்றுவார்கள்... அதையும் பார்த்திருக்கிறோம்... மற்றபடி காவல்துறையில் இருக்கிறார் என்றால் அவர்களின் அடாவடிச் செயல்களை வைத்து மிகப்பெரிய பலம் பொருந்திய மனிதர்களாகத்தான் நாம் நினைத்திருக்கிறோம்.. இதில் சாதி அரசியலுக்குப் பழியாகும் மூன்று காவலர்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஆடை ஒரு குப்பைக் கதை


Image result for ஆடை படத்தின் ஸ்டில்ஸ்
தொலைக்காட்சிகளில் பிராங்க்... அதாங்க குறும்பு செய்யும் நிகழ்ச்சிகள் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம்... வெளிநாடுகளில் ரொம்ப அதிகமாக... மோசமாக ஒருவரைப் பிராங்க் செய்யும் நிகழ்ச்சிகள் அதிகம்... இது இப்போ நம்ம ஊர் தொலைக்காட்சிகள், யூடியுப் சேனல்களில் அதிகம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. 

ஒருவரின் மனநிலை என்ன... என்ன நிலமையில் அவர் இருக்கிறார் என்பதெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் தங்கள் நிகழ்ச்சிக்காக அவர்களைப் படுத்தியெடுத்து வைத்து இறுதியில் கேமரா பாருங்கள்... சிரியுங்கள்... என்று சொல்லும் மனநிலை என்ன மனநிலையோ... அந்த பிராங்க் (தொப்பி... தொப்பி...) நிகழ்ச்சியை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் 'ஆடை'.

எதற்கெடுத்தாலும் பெட் கட்டும் கதாபாத்திரம் அமலாபாலுக்கு... அவரே இந்தத் தொப்பி தொப்பி நிகழ்ச்சியின் முக்கியமானவர்... நிறையப் பேரை பிராங்க் செய்கிறார். இவரின் இந்த வேலை அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.... செய்தி வாசிப்பாளராய் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை... செய்தி வாசிப்பாளரான தோழியுடன் ஏற்படும் ஒரு சிறு காரசார விவாதத்தின் முடிவில் வெளி நாட்டில் செய்தி வாசிக்கும் போது ஒவ்வொரு ஆடையாக கழற்றி வீசிவிட்டு செய்து வாசிப்பார்கள் என்ற பேச்சு வரும்போது தன்னால் அதைச் செய்ய முடியும் என பெட் கட்டுகிறார். அன்றே தோழியை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட்டு அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு... அம்மாவிடமும் சபதம் செய்திருக்கிறார் என்பதால் செய்தி வாசிக்கிறார். 

இதேபோல் தன்னைக் காதலிப்பதாகச் சொல்லும் தன் குழுவில் இருக்கும் நண்பனைத் திட்டிவிட்டு குழுவில் இருக்கும் இன்னொருவனை விரும்ப ஆரம்பிக்கிறார்.

அலுவலகம் மாற்றப்படும் நாளின் இரவில் காலியான அலுவலகத்தில் எல்லாருமாய் சரக்கடிக்கும் நாளில் இந்தப் பிரச்சினைகள் பெரிதாக, மறுநாள் யாருமற்ற அலுவலகத்தில் ஆடையின்றிக் கிடக்கிறார் அமலாபால்.

அதன் பின்னான கதை அமலாபாலைச் சுற்றியே நகர்கிறது... உடம்பில் துணியில்லாது அவர் அந்த வீட்டுக்குள் ஓடி ஓடி அலைவதும்... அதற்குள் ஒரு கொலை... போலீஸ் வரவு... என எல்லாமும் அந்த அலுவலகத்துக்குள்தான்... நகர்கிறது.... இறுதியில் யார் இதைச் செய்தது... காதலைச் சொல்லி ஏமாந்தவனா...? செய்தி வாசிக்கும் தோழியா...? இல்லை ப்ராங்கால் பாதிக்கப்பட்ட பொது ஜனமா...? யார் என்ற முடிச்சையும் அமலாபால் திருந்தினாரா என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு படத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தில் ஆடையில்லாமல் (தோலின் நிற ஆடை அணிந்து) நடித்த அமலாபாலைப் பாராட்டலாம். நல்லதொரு கருத்தை எடுத்துச் சொன்ன படம் என்றாலும் முடிவு இழுவைதான்... அட்வைஸ் வேறு.... படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும்... கெட்ட வார்த்தைப் பிரயோகமும் அதிகமே... கேட்டால் இன்றைய தலைமுறை இப்படித்தான் என்று சொல்வார்கள்.

'ஆடை' ஒருமுறை அணியலாம்.

Image result for ஒரு குப்பைக் கதை

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் மனிஷா யாதவ் நடித்திருக்கும்  படம். 2018-ல் வந்த படம்தான் என்றாலும் இப்போதுதான் நல்ல பிரிண்ட்டில் பார்க்கக் கிடைத்தது.

கணவனை விடுத்து மற்றவனை நம்பி ஓடி, அதனால் துன்பத்தை அனுபவிக்கும் சராசரி பெண்ணின் கதைதான்... இதேபோல் ஆயிரம் கதைகள் தமிழில் வந்துவிட்டன என்றாலும் அதைத் சொல்லியிருக்கும் விதத்தில் படம் நம்மை ஈர்க்கிறது. 

குப்பை அள்ளும் தினேஷ்... கூவம் அருகில் அம்மாவுடன் வாழ்கிறார்... அந்த வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நாம் அறிவோம்... அவர் திருமணம் செய்து வரும் பெண் குப்பையே பிடிக்காதவர். மாப்பிள்ளை கிளார்க் வேலை பார்ப்பதாய்ச் சொல்லித்தான் கட்டி வருகிறார்கள். ஏன் அவ்வளவு தூரம் போய் பெண் பார்த்தார்கள்... ஜாதி, மதமெல்லாம் பார்க்காமல் எப்படி கவுண்டர் பொண்ணைக் கொடுத்தார் என்ற லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது.

உண்மை தெரியவர... பிரிவு... குழந்தை பிறந்தும் கணவன் வீடு வர மறுத்தல்... மனைவிக்காக தனி வீடு பார்த்தல்... அங்குதான் கள்ளக்காதலின் தொடக்கம்... குழந்தையுடன் ஓடிப்போதல்... நாயகன் குடிகாரனாய் ரோட்டில் கிடக்கிறான்... மகனின் நிலைகண்டு அம்மா மரித்துப் போகிறாள்... 

கூட்டிப் போனவன் மனைவியாக்கி வைத்திருக்கிறான்... வீட்டில் தெரிய வர... அவளை திருப்பி அனுப்பச் சொல்லி அவனுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார்கள்... அவனின் நண்பன்தான் இவர்களுக்கு ஆரம்பத்தில் துணை நிற்கிறான்... அவளுக்கு அண்ணாவாகவும் ஆகிறான்... அவனே நீ கல்யாணம் பண்ணிக்க மாப்ள... நான் இவளை வச்சிக்கிறேன்... வேணும்ன்னா நீயும் அப்பப்ப வந்துட்டுப் போன்னு சொல்லி இவளை அடைய நினைக்கிறான்.

படிதாண்டி சென்றதால் அவள் படும் கஷ்டங்கள்... அவளை வெட்டிப் போட இருக்கும் இடம்  தேடிச் செல்லும் தினேஷ்... மனைவியைக் கொன்றானா...? அல்லது குழந்தையை மட்டும் வாங்கிக் கொண்டு அவளை நண்பனின் நண்பனிடமே விட்டுவிட்டு வந்தானா...? இல்லை அவனிடமிருந்து காப்பாற்றினானா..? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள். 

ஒரு குப்பைக் கதை - பலமுறை பார்த்த கதைதான் என்றாலும் பார்க்கலாம் போரடிக்கவில்லை.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 6 மார்ச், 2017

சினிமா : பார்த்ததில் வென்றது..?

பார்த்த சினிமாக்களைப் பற்றி பகிர்ந்து ரொம்ப நாளாச்சு. இப்போதெல்லாம் எழுத நினைத்தாலும் பிரச்சினைகள் சூழ் மனசுக்குள் அதற்கான உந்துதலே இல்லை... சனிக்கிழமை காலையில் 'சேரன் செல்வி'யை ஆரம்பித்து எழுதுவோம்... எழுதுவோம்... எனத் தள்ளிப்போட்டுப் போட்டு இரவில்தான் எழுதி முடித்தேன். மனம் ஒருநிலையில் இருந்தால்தான் எழுத்தும் வரமாகும்... உறவுகளின் எழுத்தை வாசித்து விடுகிறேன்... கருத்து இடுவதில் அயற்சி... இணையத்தில் நிறைய சினிமா பார்க்க முடிகிறது... மற்றவற்றில் மனம் ஒட்டவில்லை. இதுவும் கடந்து போகுமென்பதால் பார்த்த சினிமாக்கள் குறித்து விமர்சனமாக இல்லாமல் சும்மா கிறுக்கலாம்... இப்படியாச்சும் பகிர்வு எழுதுவோமே.

Image result for துருவங்கள் பதினாறு

குமான் நடிப்பில் வந்த 'துருவங்கள் பதினாறு' நல்லவனாக காட்டப்பட்டவன்தான் வில்லனாவான் என்ற தமிழ் சினிமா வழக்கப்படி என்றாலும்... அடுத்தது என்ன...  அடுத்தது என்ன என ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலை வாசிப்பது போல நகரும் காட்சி அமைப்புக்கள் நம்மை படத்தோட இணைந்து பயணிக்க வைக்கிறது. ஒரு மழை இரவு... விபத்து... காணாமல் போகும் பெண்... போலீஸ் விசாரணை... என விறுவிறு க்ரைம் திரில்லர்... ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் பார்த்தால் படம் புரியும்படியான காட்சி அமைப்புக்கள் அருமை... மிகச் சிறப்பான ஒரு புலனாய்வுக் கதையைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன். பின்னணி இசையே படத்துக்குப் பெரும் பலம்.

Image result for குற்றம் 23

ருண் விஜய் நடிப்பில் அரவிந்தன் இயக்கத்தில் வந்திருக்கும் 'குற்றம் 23', ராஜேஸ்குமார் அவர்களின் க்ரைம் நாவலை மையமாகக் கொண்ட கதை. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணும் கொடுத்த பாதிரியாரும் கொலை செய்யப்பட, அதை துப்புத் துலக்கப் போய்... செயற்கை கருத்தரிப்பு, அதனால் கர்ப்பிணிப் பெண்களில் மரணம்... என கதை விறுவிறுப்பாய் பயணிக்கிறது. ஆரம்பம் முதல் வேகமெடுக்கும் கதையில் காதல், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. இறுதியில் சினிமாத்தனமான காட்சிகளால் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட அரசுப் பேருந்து போல் ஆனாலும் அருண் விஜய், மஹிமா, அபிராமி நடிப்பும் கதையின் போக்கும் கவர்கிறது. குற்றம் 23 அருமையான க்ரைம் திரில்லர். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Image result for முப்பரிமாணம்

திரைக்கதை சித்தர் பாக்யராஜ் மைந்தன் சாந்தனு நடிப்பில் வந்திருக்கும் படம் 'முப்பரிமாணம்'. ஆரம்பக்காட்சியில் திருமண மண்டபத்திலிருந்து மணப்பென் சிருஷ்டி டாங்கேயை கடத்திச் செல்கிறார் சாந்தனு... வில்லனும் போலீசும் விரட்ட, காரில் பயணிக்கும் போதே முன்கதை நாயகன் கண்ணில் விரிகிறது. சின்னச் சின்ன லாஜிக் சொதப்பல் இருந்தாலும் அழகான காதல் கதைக்குள் போகும் கதை, அதனால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், இழப்புக்களில் நீந்தி, இடைவேளைக்குப் பின்னர் வேறொரு பாதையில் வித்தியாசமாய் பயணிக்கிறது.  இடைவேளைக்குப் பிறகு காதலியை திருமண நேரத்தில் கடத்தி வந்ததற்கான முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்க்கப்படும் போது விறுவிறுப்புக் கூடுகிறது. விறுவிறுப்பான கதைக்கு காமெடி தேவையில்லை என்பதால் நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்குப் பஞ்சம். சாந்தனு நடிப்பு மிகச் சிறப்பு. சிருஷ்டிதான் கதையின் நாயகி... இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இயக்குநர் அதிரூபனின் கிளைமேக்ஸ் எல்லாரையும் கவரும். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை நன்று. இடைவேளைக்குப் பின் நாயகன் நாயகி பரிமாணம் மாறிய பின் அசத்தல்.

Image result for முத்துராமலிங்கம்

வரச நாயகன்  கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் 'முத்துராமலிங்கம்'. சிலம்பம் பற்றி சொல்லும் கதை என்றார்கள்... கார்த்திக் நாயகனாக நடிக்கும் போது கூட இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததில்லை... நாயகி வயிற்றில் கேப்டன் பம்பரம் விட்டார்... சுப்ரீம் ஸ்டார் தேன் ஊற்றினார்... அதெல்லாம் 90க்கு முன்னால ஆனா 2017-ல் குப்புற கிடக்கும் நாயகியை திருப்பினால் வெற்றி என்ற போட்டியில் களம் இறங்கியிருக்கிறார் கௌதம்... கம்புச் சண்டையே பிரதானம் என்பதால் கம்பைத் தூக்கிக்கிட்டே திரியுறானுங்க... மொத்தத்தில் முத்துராமலிங்கம் வீரமாய் வர வேண்டியது படு மொக்கையாய்... இசை இளையராஜாவாம்...90களுக்கு முன் வந்த கதைகளைப் போன்ற படத்தில் 90களின் ராஜா கூட ஜெயிக்கவில்லை.

Image result for அதே கண்கள்

'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேசனின் முதல் படம். அறிவழகன்,ஜனனி,ஷிவதா நடிப்பில் வித்தியாசமான  ஒரு கதைக்களம். கண்பார்வை அற்றவர்களில் தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் காதலிப்பதாக மயக்கி பணம் பறிக்கும் கும்பல், அறிவழகனையும் ஏமாற்ற... அவர்களைத் தேடி சென்று எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே மிகவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதுவும் நாயகியை (ஷிவதா) மையமாகக் கொண்டு நகரும் கதை. கண்டிப்பாக பார்க்கலாம்.

Image result for போகன்

'போகன்' மெஸ்மரிசத்தின் மூலம் மற்றொருவரின் உடம்பில் புகுந்து பணத்தைத் திருடி, சுகபோகமாய் வாழும் ஒருவனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. ஜெயம் ரவி நாயகன்... அரவிந்த்சாமி வில்லன். நாயகனை மிஞ்சுகிறார் வில்லன். இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி அரவிந்த்சாமியும்... அரவிந்த்சாமிக்குள் ஜெயம்ரவியுமாய் விறுவிறுப்பாய்... போகன் பார்க்கலாம்... ஜெயம் ரவியைவிட அரவிந்த்சாமி அசல்ட்டாய் அப்ளாஸ் பெறுகிறார்.

Image result for ரம்

'ரம்' அப்படின்னு ஒரு பேய்ப்படம்... எத்தனை காலத்துக்குத்தான் ஆவி பலி வாங்குமோ தெரியலை... டிஜிட்டல் இந்தியான்னு மோடிஜி சொல்லிக்கிட்டு கார்ப்பரேட்டை வளக்குறாரு... நாம் இன்னமும் பேய்ப்படங்கள்ன்னு சொல்லி விட்டாலாச்சாரியா காலத்துலயே இருக்கோம். போதுமய்யா இயக்குநர்களே புதுமைக்கு வாங்க. ஆங்கிலத்தில் வரும் பேய்ப்படங்கள் நம்மை உறைய வைக்கும் என்றால் தமிழில் வரும் பேய்ப்படங்கள் சிரிப்பைத்தான் கொடுக்கின்றன.

இதில் பச்சை கலர் கொடுக்கப்பட்ட படங்களை பார்க்கலாம்.. சிவப்புக்கலர், அந்தப் பக்கமே போகாதீங்கன்னு அர்த்தம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 7 நவம்பர், 2016

கமல் என்னும் கலைஞன்

இன்று  ஒளிச் சிதறல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற நம் தமிழக் இயற்பியல் விஞ்ஞானி  சந்திர சேகர வெங்கட் ராமன்... அதாங்க நம்ம சர்.சி.வி ராமன் அவர்களின் பிறந்த நாள்... இந்நாளில் அவரை நாம் மனதில் நிறுத்துவோம்.

*****


Image result for கமல்

கமல்...

இன்று தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே உலகளவில் உயர்ந்து நிற்கக் காரணமானவர்களில் முக்கியமானவர். படத்துக்குப் படம் தன்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் முன்னிறுத்தும் நடிப்பை நேசிக்கும் நடிகர்களில் முதன்மையானவர். களத்தூர் கண்ணம்மாவில் 'அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என்று பாடி... சினிமாவை அம்மா... அப்பாவாகப் பாவித்து படத்துக்குப் படம் விஸ்வரூபம் எடுத்தவர். 

கமல்... என்னை மிகவும் கவர்ந்த சொல்... படிக்கும் காலத்தில் கமலின் மீது தீராக் காதல்.... கமலின் ரசிகனாய்... விசிலடிச்சான் குஞ்சாய்... பாலாபிஷேகம் பண்ணும் அளவுக்கு எல்லாம் இருக்கவில்லை என்றாலும் கமலின் படங்களை கட் பண்ணி வைத்து, கமல் படம் போட்ட பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி யாருக்கும் அனுப்பாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் மீது... அவரின் நடிப்பு மீது காதல்... கமலை மட்டும் காதலிக்கவில்லை.... இளையராஜா... பாலசந்தர்... பாலு மகேந்திரா... பாரதிராஜா... என நிறையப் பேரைக் காதலித்திருக்கிறேன்.

கமலை விரும்பியது போல் அதீத விருப்பம் இயக்குநர் பாக்யராஜ் மீது... அவரின் கதைகளுக்காகவும் இறுதிக் காட்சியில் வைக்கும் டுவிஸ்ட்டுகளுக்காகவுமே எல்லாப் படங்களையும் விரும்பிப் பார்ப்பதுண்டு.... சுந்தர காண்டம் இன்று வரை அடிக்கடி பார்க்கும் படம்... தூறல் நின்னு போச்சு படம் பார்த்த அடுத்த நாள் பள்ளியில் கை ஓடிய, கட்டுக் கட்ட குன்றக்குடி செல்ல,  8.30 மணிக்கு கண்டதேவிக்கு வரும் கே.எஸ்.எஸ். பஸ்ஸிற்கு கிளம்பும் சமயத்தில் 'ஏரிக்கரை பூங்காற்றே...' என ரேடியோவில் பாட்டுப் போட. அம்மா நீ போ பின்னால வாறேன் என்று சொல்லி பாடல் கேட்டு திட்டு வாங்கியதெல்லாம் இன்னும் பசுமையாய்...

இவர்கள் மீது எவ்வளவு காதலோ அந்தளவு டவுசர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜன் மீதும்... எனக்கென்னவோ கிராமத்துக் கதைக்களத்தில் மாமன் மச்சான் உறவை மிக அழகாக கொடுத்தவர் இராமராஜன் என்ற எண்ணம் அப்போதும் இப்போதும் உண்டு. அவரின் படங்களில் சிகரெட், தண்ணி இருக்காது... அது போக அவர் படங்கள் கவர் முக்கிய காரணம் ராஜாவின் பாடல்கள்... ஆஹா... என்ன ஒரு பாடல்கள் அவை. இன்றும் என்னிடம் ராஜாக்களின் காம்பினேசன் பாடல்கள் ஒரு தொகுப்பே இருக்கு. இதே போல் கார்த்திக், மோகன் படங்கள் பாடல்களுக்காகவே பிடிக்கும் 'என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி' பாடலை அல்பாயுசுல மறைந்து போன மோனிஷாவின் துள்ளல் நடனத்துடன் இன்றும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்... சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நானொரு சினிமாப் பைத்தியம்... 90-களின் பாடல்கள் மீது அலாதி பிரியம்... நிறையப் பாடல்கள் வைத்திருக்கிறேன்.

மூன்றாம் பிறை படத்தில் பிரதாப் போத்தனைத்தான் நடிக்க வைக்க மணிரத்தினம் முயற்சி செய்தார் என முகநூலில் வாசித்தேன். யோசித்துப் பாருங்கள் அப்படி பிரதாப் போத்தான் சுப்பிரமணி ஆகியிருந்தால் 'கண்ணே கலைமானே...' என்ற கண்ணதாசனின் கடைசிப் பாடல் இருந்திருக்குமா...? அது இருந்திருந்தாலும் சில்க் ஸ்மிதாவுடனா ' பொன்மேனி உருகுதே...' பாடல் கண்டிப்பாக இருந்திருக்காது... என்ன ஒரு நடனம் அது... கதைக்காகவோ... ஸ்ரீதேவிக்காகவோ படம் வெற்றி பெற்றிருக்கும் என்றெல்லாம் யாருக்காவது தோணுமா...? அதில் கமல் என்னும் பிம்பம் இணைந்ததே வெற்றிக்கான காரணி.... இறுதிக் காட்சியில் இரயில் நிலையத்தில் அவர் நடித்திருப்பதை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவோமா?

ஒன்றா இரண்டா... எல்லாப் படங்களும் ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமான படங்கள்தான்... படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நடிக்க அடித்தளம் இட்டது பதினாறு வயதினிலே சப்பாணியின் கோவணம்தானே... அவருக்கு பாலசந்தர் வாய்ப்புக்களை அள்ளி வழங்கினார் என்றாலும் திறமை இருந்த ஒரு காரணத்தால்தானே, படத்துக்கு படம் நடிப்பில் வித்தியாசம் காட்டி... உருவத்தில் வித்தியாசம் காட்டி... நடிக்கத் தெரிந்த நடிகன் என்பதால்தானே வாய்ப்புக் கொடுத்தார். ரஜினியும் கமலும் என் குழந்தைகள் என்று அவர் சொல்லக் காரணம் அவர்கள் மீது கொண்ட அன்பினால் மட்டுமல்ல... அவர்கள் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று நம்பிக்கை கொண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்றதால்தானே. ரஜினி என்னும் நல்ல நடிகனை நாம் முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி என நிறையப் படங்களில் பார்த்திருப்போம். அவரை ஸ்டைல் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து கல்லாக் கட்டிய இயக்குநர்களால்தான் அவரின் நடிப்பு காணாமல் போனது என்பது உண்மைதானே... கபாலியில் பழைய ரஜினியைப் பார்த்தோம்... ஆனால் அதில் மற்ற விஷயங்களைச் சேர்த்து வேறு மாதிரி ஆக்கிவிட்டார்கள். ரஜினி கூட கமலின் இடத்தை என்னால் தொட முடியாது என்று சொல்லியிருக்கிறார். இது நட்பின் தன்னடக்கம்.

குருதிப் புனலில் கதை சொன்ன விதம்... ஹேராமில் கதை சொன்ன விதம்... மகாநதி... குணா... புன்னகை மன்னன்... சிற்பிக்குள் முத்து... சலங்கை ஒலி... வாழ்வேமாயம்... என வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம் அவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களை... இதற்கெல்லாம் மகுடமாய் (சண்டியர் என்ற) விருமாண்டி... இரு விதமான பார்வையில் கதையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார். ஒரு கலைஞனாய்... நல்ல நடிகனாய் இன்று வரை நான் ரசிப்பது கமலை என்பதால்தானோ என்னவோ தனுஷ் மீதும் ஒரு பற்றுதல்... எல்லோரும் சிவகார்த்திகேயனைக் கொண்டாட எனக்குப் பிடித்தவராய் விஜய் சேதுபதி... நடிப்பால் கவர்பவர்கள் மட்டுமே என்னையும் கவர்கிறார்கள்... ஆனால் அஜீத் இதில் விதிவிலக்கு... நல்ல மனிதனாய் கவர்ந்துவிட்டார்.

வாணி..  சரிகா... கவுதமி... இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனையோ என்று சிலர் கருத்துக்களோடு வரலாம்... கமல் என்னும் நடிகனைத்தான் ரசித்தேனே ஒழிய கமல் என்னும் மனிதனின் வாழ்க்கை முறை எனக்குத் தேவையில்லை... அது குறித்து கருத்துக்கள் வேண்டாம்... வாழ்க்கையில் அவர் தவறு செய்திருக்கலாம்... இனியும் செய்யலாம்... என்னைப் போல் நீயும் வாழ் என்று யாருக்கும் சொல்லவில்லை... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு மூணு குடும்பம் இருக்கு... இதெல்லாம் வெளியில் தெரிவதில்லைதானே... மீடியா வெளிச்சம் படுபவர்களின் வாழ்க்கை மட்டுமே வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவையில்லை... நல்ல நடிகனாய் எனக்குப் பிடிக்கும்... ஆனாலும் இனிமேலாவது கமல் யோசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மூன்று பேரும் பிரிந்து செல்லக் காரணம் கமலின் பக்கம்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது. என்ன இருந்தாலும் தன் மகளுக்காக என கவுதமி சொல்லியிருக்கத் தேவையில்லை... பதிமூணு வருசத்துக்கு முன்னர் மகள் இருப்பது தெரியவில்லையா..? வேறு காரணம் சொல்லியிருக்கலாம்... ம்ம்ம்ம்.... சரி விடுங்க... நடிகனாய் எனக்கு கமல் பிடிக்கும் அவ்வளவே.

எந்த நடிகருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் பார்ப்பது கிடையாது. நம்மை எல்லாம் சிரிக்க வைத்த ஆயிரம் படங்களில் நடித்த மனோரமா அவர்களை கடவுள் வாழ்க்கையில் சிரிக்கவே விடவில்லை... எத்தனை துன்பத்தைக் கொடுத்தான் தெரியுமா என சிவக்குமார் அவர்கள் அடுக்கிக் கொண்டே போகும் காணொளியைப் பார்க்க நேர்ந்தது. என்னை அறியாமல் கண்ணீர் வந்தது... அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் யாரேனும் அறிந்திருப்போமா...? நம்மைச் சிரிக்க வைக்கும் கோவை சரளா திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது தெரிந்து அதை நாம் ஆராய்ந்தோமா..? அதேபோல் கமலின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாம் ஆராய வேண்டாம்... நம் தமிழ் சினிமாவை உயரத்தில் ஏற்றி வைத்து 'செவாலியே'வாக உயர்ந்து நிற்கும் கமலை ஒரு கலைஞனாய் வாழ்த்துவோம்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் ஜி.

*****
வாரியார் சுவாமிகளையும் நினைவில் நிறுத்துவோம்...


-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தேர்தல் அலப்பறைகள்


நாட்டுல தேர்தல் வந்தாலே இந்த அரசியல்வாதிங்க முதற்கொண்டு அல்லக்கைகள் வரை பண்ற அலப்பறை இருக்கே அது சொல்லி மாளாது. அதுவும் இப்போ நாமெல்லாம் காசுக்கு அடிமையான பின்னாடி இவனுக பண்ணுற கூத்து... அப்பப்பா... ஐந்து வருட கொள்ளைக்காக எப்படியெல்லாம் பணம் கொடுத்து பாஸாகப் பார்க்கிறார்கள் என்பதை சென்ற தேர்தல் அப்பட்டமாகக் காட்டியது. பஞ்சாயத்து தேர்தல்ல இருந்து பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் ஓட்டுப் போடும் வரை ராஜ உபச்சாரம்தான். அதற்கு அப்புறம்...?

சரி விடுங்க... கேடுகெட்ட அரசியல் நமெக்கெதுக்கு... அதனால நாம இப்போ சினிமாக்காரனுங்க தேர்தலைப் பற்றி பேசலாம் வாங்க... இன்னைக்கு நடிகர் சங்க தேர்தல்தான் தமிழகத்தின் மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது. வாத்தியார் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததால் செத்தாலென்ன... குடும்பத்தை நிர்வாணமாக்கி குதூகலித்தாலென்ன... சிறுமியை அப்பன், அண்ணன், காவல்துறை என பங்கு போட்டு கெடுத்தாலென்ன... அதெல்லாம் தேவையில்லை... நடிகனுங்க அடிச்சிகிறதுதான் தலைப்புச் செய்தியாக வர வேண்டும். என்னா நாமதான் கட் அவுட் வச்சி அதுக்கு பாலாபிஷேகமும் பண்ணுவோமுல்ல... பக்கத்து வீட்டுப் பெண்ணை கெடுத்துக் கொன்னுட்டானுங்க என்றாலும் ம்... அப்படியா.... ஐய்யோ பாவம் என கடந்து போகத் தெரிந்தவர்கள்தானே நாம்... சரி... இன்னைக்கு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் செய்திகளை வாரி வழங்குகின்றன. இவன் அவனைத் திட்டினான்... அவன் இவனைத் திட்டினான் என்று சொல்லி பரபரப்புச் செய்திகளை கொடுப்பதில் யார் முதல் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.


பல வருடங்களாக இருக்கும்தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல தலைவர்கள் வந்து சென்ற போதும்... நடிகர் சங்கம் கடனில் கிடக்கு... அப்படி இருக்கு... இப்படியிருக்கு என்று புலம்பிக் கொண்டே இருந்தார்களே ஒழிய முன்னணிகள் எல்லாம் அதைத் தீர்த்து வைப்பதற்கு முன் வரவில்லை. விஜயகாந்த் பொறுப்பேற்ற பின்னர்தான் நடிகர்களை ஒருங்கிணைத்து கலைவிழா நடத்தி கடனில் இருந்து மீட்டார். அதன் பின் அவர் அரசியல்வாதி ஆகிவிட அரசியல் செய்பவர்கள் நடிகர் சங்க தலைவராக இருக்கக்கூடாதென தற்போதைய தலைவர் சரத்குமாரும் இன்னும் சிலரும் அவரை வெளியேற்றினர். அதன்பின் சரத்குமார் தலைவரானார். சரத்குமார் அரசியல்வாதியாக இல்லையான்னு கேக்கப்படாது... ஏன்னா ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை அம்மா வாழ்கன்னு எழுதுறாராம்... இந்தச் சங்கம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்ததுன்னு நினைக்கிறேன்... ஏன்னா பத்து வருசமா தேர்தல் வைக்காமல் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள்... ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து வண்டி ஓட்டினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமையோ தலைகீழா இருக்கு...

சரத்குமார் அணி என்றும்  விஷால் அணி என்றும் கபடிக் களத்தில் வீரர்கள் மோதலுக்கு தயாராய் நிற்பது போல் நிற்கிறார்கள். நாசர் தனக்கு நண்பன் என்பதால் கமல், நாசர் தலைவராக போட்டியிடும் விஷால் அணிக்கு ஆதரவாய்ப் பேசியிருப்பார் போல, அவருக்கு நான் அந்த சமயத்தில் உதவினேன்... இந்த சமயத்தில் உதவினேன்னு சொல்லி கமல் தூண்டிவிடுகிறார் என சரத்குமார் அறிக்கை விடுகிறார். உதவி செய்ததை சொல்வது என்ன வகை என்று தெரியவில்லை. அந்தப்பக்கம் விஷாலுக்கு ஆதரவாக பேசும் வடிவேலு கிணற்றைக் காணோமுன்னு ஒரு படத்துல நான் சொன்னேன்... இங்க நடிகர் சங்கத்தையே காணோமய்யான்னு சாதிகளை கடைவிரிக்கிறார். நாம சட்டசபைத் தேர்தல்ல தேவையில்லாமப் பேசித்தான் நமக்குன்னு இருந்த இடத்தை விட்டுவிட்டு வீட்டில் கிடக்கிறோம். இப்போ இங்க வேற வந்து கூவி நமக்கான ஆப்பை நாமே சரியாக செதுக்கி வைத்துக் கொள்கிறார்.

விஷாலுக்கும் சரத்குமாருக்கும் பிரச்சினை... சொந்தப் பிரச்சினையை நடிகர்களுக்குள் கொண்டு வந்து பிரிக்கிறார் என்று ஒரு பக்க வாதம்... அப்படி என்னய்யா சொத்துப் பிரச்சினை என்றால் அதுதான் இல்லை... பொண்ணு பிரச்சினை... யாரு... சரத்குமார் மகள்... அதுவா... ஆமா... அதேதான்யா... சிம்பு கூட ஒரு படத்துல நடிச்சிச்சே... படம் பேரு கூட போடாபோடி... ரசிகர்கள் கூட போடியின்னு சொன்னாங்களே... ஆமா...அதுக்குத்தான்... மாமன் மாப்பிள்ளை சண்டை அப்படின்னு சொல்றாங்க... இல்லை கிரிக்கெட் விளையாடப் போனப்போ... பிரச்சினையின்னும் சொல்றாங்க... எது எப்படியோ இது அவங்க குடும்பப் பிரச்சினை... இதுல எதுக்குய்யா எல்லாரையும் பிரிக்கிறீங்கன்னு தெரியலை.

பல தரப்பட்ட பிரச்சினைகளைக் கடந்து வாலு கொடுத்த சந்தோஷத்தில் இருந்த சிம்புவை ஏத்திவிட்டு பேச விட்டுருக்காங்க சரத்குமார் அணியினர்... ராஜேந்தர் மகனுக்கா பேசச் சொல்லிக் கொடுக்கணும்... சும்மா நான் என் குடும்பத்தை பிரிக்ககூடாதுன்னு நினைக்கிறேன்... எல்லோரும் என் சொந்தங்கள் என்று சொல்லிக்கொண்டே அடேய்... உடேய்... அவனே... இவனேன்னு சும்மா போட்டுத் தாக்கிப்புட்டாப்லயில்ல... அதுவும் பாருங்க... என்னவோ ஒரு வார்த்தை... அது... ஆமா... intention... அதேதான்... எனக்குத் தெரிந்த ஒருவர் குடித்து விட்டால் ஆக்சுவலி... அக்சுவலின்னு கொன்னு எடுத்துடுவாரு... சிம்பு பேசினதில் அதிகமாக சொன்னது இந்த intention. ஆனா அளு சும்மா வடிவேலு மாதிரி எல்லாம் பேசலை... ரொம்ப விபரமாப் பேசினாரு... நிறைய விஷயங்களை எடுத்து வைத்தாரு... இடையில் தனுஷ் என்னோட போட்டியாளந்தான்... அவன் கூட எப்படியாச்சும் சேர்த்து வைக்கணும்ன்னு சொல்றான்னு சொன்னார். எல்லாம் சரிதான்.... ஆனால் எதுக்காக இவ்வளவு கோபமான பேச்சு... அப்பா புலி...புலின்னு சும்மா உறுமி... உசுப்பேத்தி... தளபதிய குதிச்சு வர வச்சி... இன்னைக்கு அது எலியாயிப் போயிக்கிடக்கு... இதுல புள்ள ஆய்... ஊயின்னு பேசி.... ம்... சரத்குமாரு ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாரு... பாவம் சிம்பு... இன்னும் உலகம் அறியாதவராய் இருக்கிறார்.


இளைஞர்கள் கையில் கொடுங்கன்னு விஷால் குதிக்கிறாரு... சரித்தான்... என்னைக்குமே நம்மளை ஆளுறவன் எல்லாமே வேற மாநிலத்துக்காரனுங்கதானே.... தமிழன் தமிழனை ஆள்வதில்லையே... விஷாலுக்கும் ஆசை.... ஆளட்டும்... நாளைக்கு அரசியலுக்கும் வரலாம்... நாமும் ஓட்டுப் போட்டு மேலே ஏற்றிப் பார்ப்போம்... நகைக்கடை, சினிமா, அரசியல், பைனான்ஸ் என எல்லாவற்றிலும் நமக்கு முன்னால் பக்கத்து மாநிலத்துகாரனுங்கதானே இருக்கானுங்க... ஆனா அரசியல் பண்ணுவதற்காகவே பிரச்சினைகளை ஊதிப் பெரிசாக்கும் வேலையை விஷால் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது.

நாங்கள் வந்தால்.... ஏய் நாங்கள் வந்தால்... என அரசியல்வாதிகள் போல அறிக்கைகள் விடுகிறார்கள். இவர்கள் சொல்வதை எல்லாம் செய்வார்களா? குறிப்பாக நாடகக் கலைஞர்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் எனச் சொல்கிறார்கள்... செய்வார்களா? இல்லை இதெல்லாம் தேர்தல் நேரத்து அறிக்கைதானா..? என்பதை திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில்... இந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைவிட மோசமான பேச்சுக்கள், ஜாதியை இழுக்கும் அநாகரீக வார்த்தைப் பிரயோகம் என விறுவிறுப்பாய் இருக்கிறது. இதில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் உடைந்த சங்கம் இனி ஒன்றாய் கூடுமா என்பது சந்தேகமே... இவர்கள் எல்லாரும் பேசுவதைப் பார்த்தால் சாதாரண மனிதர்களாய்ப் பேசவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. எல்லோர் மனதிலும் சினிமாக் ஹீரோயிசம்தான் தெரிகிறது. அது கற்பனை வாழ்க்கை என்பதை மறந்து பேசுகிறார்கள்... எது எப்படியோ நடிகர்களுக்காக அடித்துக் கொள்ளும் ரசிகர்களை வைத்து பிழைப்பை நடத்தும் நடிகர்கள் இன்று காரசாரமாக அரசியல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்... வெல்பவர் நாளை முதல்வராகக் கூட நம்மால் உட்கார வைக்கப்படலாம்... கூத்துக் கட்டுறவன் கூடி நின்னா சந்தோஷமே... தெருவுக்கு தெரு தனித்தனியா கூத்துக்கட்டினா... யாருக்கு நஷ்டம்?

சரிங்க... புதுக்கோட்டை விழாவுக்கு இன்னும் ஒருநாள்தான் இருக்கு... எல்லாரும் கண்டிப்பாக கலந்துக்கங்க...

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஜிப்பா ஜிமிக்கி

முதல்லயே சொல்லிக்கிறேன்... ஒரு படத்தோட பாடலுக்காக நான் பதிவெல்லாம் இதுவரை எழுதியதில்லை. சினிமா விமர்சனமே எப்பவாவது என்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே எழுதுவேன். ஒரு சினிமாவை பிரிச்சி மேயும் அளவுக்கு எனக்கு அதிம் ஞானம் இல்லை... அப்படியிருக்க பாட்டுக்காக பதிவெழுதி... அந்த வரியை இப்படி மாற்றியிருக்கலாம்... இந்த இடத்தில் கிட்டாருக்குப் பதில் ட்ரம்ஸே போட்டிருக்கலாம்ன்னு எல்லாம் கருத்துச் சொல்லும் அளவுக்கு நமக்கு இசை ஞானம் இல்லை...

சேனைத்தமிழ் உலா

அப்புறம் எதுக்குய்யா இப்ப எழுதுறேன்னு நீங்க கேட்கலாம்... சேனைத்தமிழ் உலான்னு ஒர் இணையப் பக்கம் இருக்கு, அந்தப் பக்கமா நான் ஒதுங்குனது ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தப்போ காயத்ரி அக்கா சொல்லித்தான்... ஒதுங்கினேன்... பரிசும் வாங்கினேன்... அதெல்லாம் மேட்டர் இல்லை... என்ன மேட்டர்ன்னா.... அங்க ஒரு நட்பு வட்டம்... மிகச் சிறந்த உறவுகளின் உன்னத இணைப்பு அந்த உலா... 

அங்க போற வரைக்கும் நிஷா(ந்தி) அக்காவைத் தெரியது. அவர் பதிவரும் இல்லை...  ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர்... அவரது கருத்துக்களே ஒரு பெரிய பதிவாகத்தான் இருக்கும்... அங்கு வரும் எல்லோரையும் கருத்துக்களால் கவர்பவர் அவர். எனது பதிவுகளைப் பலர் வாசித்தாலும் வரும் பத்துப் பதினைந்து கருத்துக்களை எழுதுபவர்களை மட்டுமே அறிவேன். சேனையில் வாசிக்கும் நண்பர்களை எல்லாம் நான் அறியேன். அங்கு சென்றதும் அவர் எனது எழுத்துக்களின் ரொம்ப நாள் வாசகி என்பதை அறிந்த போது இரட்டிப்புச் சந்தோஷம் எனக்கு... இப்போ எனக்கு ஒரு அன்பான அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் பாருங்கள்.... அப்படி ஒரு அழகான உறவுகளைக் கொடுக்கும் இடம்தான் சேனைத்தமிழ் உலா.

இயக்குநர் ரா,ராஜசேகர்
சரி என்ன சொல்ல வாறேன்னுதானே கேக்குறீங்க... சேனையின் உறுப்பினர் ரா.ராஜசேகர்தான் நான் சொல்லப் போற ஜிப்பா ஜிமிக்கி படத்தின் இயக்குநராம்... இவருக்கு இது முதல் படம்... அந்தப் படத்தின் பாடல்கள் வெளியானதும் நிஷா அக்கா அதன் யூடிப் இணைப்பை பகிர்ந்து சேனையில் பாடல்களைக் கேட்டு கருத்திடும்படி செய்திருந்தார். நானும் சென்றேன்... அங்க கொஞ்சம்... இங்க கொஞ்சமாப் பாட்டைக் கேட்டுட்டு வாழ்த்துக்கள்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். எனக்கு அப்ப அவர் அங்கு உறுப்பினர் என்றெல்லாம் தெரியாது. அக்காவுடன் முகநூல் அரட்டையில் இருந்த போது தம்பி ஜிப்பா ஜிமிக்கி படத்தோட இயக்குநர் நம்ம சேனை உறுப்பினர், அவரோட படப்பாடல்கள் குறித்து உனக்கிட்ட இருந்து ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன் என்றார். எல்லாம் எழுதுறோம்... நட்புக்காக... நானும் அவரும் இதுவரை ஒரு வரி கருத்துக்கூட இட்டுக் கொண்டதில்லை என்றாலும் சேனையின் உறுப்பினர் என்ற போது நமக்கும் நட்புத்தானே என்பதால் சரி அக்கா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.

ஜிப்பா ஜிமிக்கின்னு டைட்டில் வச்சிட்டு கீழே 'ஜிகுஜிகுன்னு' அப்படின்னு போட்டிருக்காரு... ஜிப்பாங்கிறது ஆண்கள் போடுறது... கிராமங்களில் ஜிப்பா போட்டுக்கிட்டு போனா ஏய் ஜிப்பா போட்ட மைனருன்னு கேலி கூட பண்ணுவாங்க... ஜிமிக்கி பொண்ணுங்க போடுவாங்க... ரெண்டுமே ஜிகுஜிகுன்னுதான் இருக்கும்... அதுவும் திருவிழா நேரங்களில் பாவாடை தாவணியில் பெண்கள் ஜிமிக்கி போட்டு வரும் அழகே தனிதான்...  அதைப் பார்த்தால் ஐய்யோ.. ஐய்யோன்னு மனசு பரவசப்படும்... ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம்.  இப்ப பாவாடை தாவணியே இல்லை... கொஞ்ச நாள் கழித்து பாவாடை தாவணியில் பார்த்த உருவமான்னு பாட்டு பாடுனா பாவாடை தாவணின்னா என்னன்னு கேப்பாங்க... பிளாஸ்டிக் கம்மல் வந்து ஜிமிக்கியும் போயே போச்சு...


ஜிப்பா ஜிமிக்கி ஒரு வித்தியாசமான காதல் கதை என்பதை இதன் பாடல்கள் சொல்லாமல் சொல்கின்றன. படத்தின் பாடல் வெளியீட்டில் படத்தின் கதை குறித்து இயக்குநர் ராஜசேகர் சொல்லும் போது 'மிக நெருங்கிய இரண்டு நண்பர்கள் தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் இது அவர்களின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே இருவரும் ஒரு பயணம் மேற்கொண்டு திருமணம் செய்யாமல் தப்பிக்க ஒரு காரணத்தை கண்டு பிடிக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி மேற்கொண்ட பயணத்தில் பிரிந்தார்களா... அல்லது சேர்ந்தார்களா...' என்பதை  படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

அவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஒரு கட்டத்தில் காதலாகி... பின்னர் பிரிவாகி... மீண்டும் இணையும் போல்தான் பாடல்கள் இருக்கின்றன. இப்ப படத்தின் கதை குறித்து பேச, படம் இன்னும் வெளியாகவில்லை என்பதால் பாடல்கள் குறித்துப் பார்க்கலாம். படத்தின் பாடல்களுக்கு இசை ரனிப் என்ற புதிய இசை அமைப்பாளர். நமக்கெல்லாம் அறிமுகமான இசையமைப்பாளர் தீனாவின் சகோதரர் இவர் என்பது கூடுதல் செய்தி. படத்தின் இயக்குநரும் சேனையின் உறுப்பினருமான ரா.ராஜசேகர் அவர்கள் மாலை முரசு பத்திரிக்கையில் பணியாற்றியவர் என்பதும் கூடுதல் செய்திதான். நானும் தினமணியில் இருந்தவன்தான்... அப்ப சினிமாவுக்கு வருவியான்னு கேக்ககூடாது... வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வர்றதுக்கே அரபிக்கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு... இதுல சினிமாவுக்கா... சரித்தான் போங்க...

படத்தில் பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருப்பது மிகச் சிறப்பு... பாடல் வரிகளை எழுதியிருப்பவர் மோகன்ராஜன், இவர் சினிமாவுக்கு புதியவர் போல தெரிகிறது. என்னோட நண்பன் தமிழ்க்காதல்ன்னு ஒருத்தன் இருக்கான். நல்ல கவிஞன்... ரெண்டு மூணு பேருக்கிட்ட பாட்டெழுதிக் காட்டி அவங்க ரசனைக்கு எழுத மறுத்து வாய்ப்புக்கள் இழந்தவன்... அவனுக்கும் இதுபோல் வாய்ப்பு வந்தால் நல்ல பாடல்களைக் கேட்கலாம்... வருமா?. 


அடித்து நொறுக்கி காதுகளைக் கிழிக்காத இசையும், வரிகளில் வரும் வார்த்தைகளை எல்லாம் கேட்கும்படி எழுதப்பட்ட பாடல்களும், நல்ல உச்சரிப்போடு பிசிறில்லாமல் பாடிய பாடகர்களும்  என முக்கனிச் சுவையும் ஒன்றாக கிடைப்பதென்பது இன்றைய தமிழ்ச்சினிமாவில் அரிதாகிவிட்டது. இசை இருந்தால் வரிகள் சொதப்பல்... வரிகள் நல்லா இருந்தால் பாடியவர் பாதி எழுத்தை மென்று முணுங்கி துப்பும் பரிதாபம்... இல்லையென்றால் வரியும் பாடியவரும் கலக்கலாய் செய்ய இசை ரணகளமாகிவிடும். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை முக்கனிச் சுவையையும் சரி சமமாகக் கொடுத்து கேட்கும் காதுகளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறாரகள்.

'வண்டாள மரத்துக்காடு...' என்று ஆரம்பிக்கும் முதல் பாடல்  ஆட்டம் போட வைக்கும் வரிகளை அள்ளிக் கொண்டு வருகிறது. 

'ஏ சிப்பா போட்ட மைனரு... 
சிமிக்கி போட்ட பெண்டிரு...
சேர்ந்து நின்னா கலக்குது... 
ஜிகுஜிகுன்னு ஜொலிக்குது...' 
என்று சும்மா கலக்கலாக இருக்கிறது. 

அடுத்து வரும் பாடலின் வரிகளை வைத்தே இது காதல் பாடல்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். பாடலின் வரிகள் அழகிய கவிதையைக் கொடுத்து நம்மையும் பரவசப்பட வைக்கிறதே தவிர, இசையும் பாடகர்களும் நம்மை படுகொலை செய்யவில்லை... அழகான வரிகள்... பாடலே ஒரு கவிதையாய்.... இது ஆண் பெண் இருவரும் பாடும் பாடல்... 'கண்கள் நுனியில் காதல் வந்து மோதிச் சாய்க்கிறதே...' என்ற வரிதான் எத்தனை கவித்துவமாய் இருக்கிறது... இதே போல் எல்லா வரிகளும்....

'ஹையோ... ஹையோ...
பரவசப் படுகொலையே...
இது பரவசப் படுகொலையே...
கண்கள் திறக்கலை
தேகம் அசையலை
பேசத் தெரியலை அன்பே...'

அடுத்த பாடல் குத்துப் பாடல் வகை... தியேட்டரில் ஆட வைக்கும் பாடல்... தமிழ் சினிமாவில் புதிதாக வரும் இயக்குநர்கள் கூட குத்துப்பாடல்  என்னும் வலைக்குள் விழத்தான் செய்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாடல் இது. புதியவர்கள் இன்னும் சிறப்பாய் சிந்திக்க வேண்டும்... குத்துப்பாடல் என்னும் வட்டத்தை உடைத்து வர வேண்டும். மலையாளத்தில் நல்ல கதைகளுடன் இளையவர்கள் வர ஆரம்பித்திருக்கும் வேலையில் வித்தியாசமாய்ப் பண்ணினாலும் அடுத்தவனைப் போல் அதே குத்துப்பாடல் நாலு சண்டை என்ற வட்டத்துக்குள் தமிழக இளம் இயக்குநர்கள் விழுவது வருத்தமான விஷயம்..குத்துப் பாடல்தான் ஆனாலும் வரிகள் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கும் பிடிக்கும்.

'அல்லாடும் வாழ்க்கையிலே
பொல்லாத சோகமில்லை...
........
டோலாரே டோலாரே
டோலாக்கு டோலுடா...
.......
ஏய்... ஐலே... ஐலே... ஐலலலே...லே...'


அடுத்த பாடலும் நல்லா இருக்கு... இது கொஞ்சம் அடிகலந்த பாடல்...  இது ஒரு விழாவில் பாடுவது போல் இருக்கிறது. ஒருவேளை திருமண நிச்சயமாகக்கூட இருக்கலாம்.. இதிலும் வரிகள் நல்லா இருக்கு. என்னடா இப்படி எல்லாத்தையும் ஆஹா ஓஹோன்னு சொல்றானேன்னு நினைக்காதீங்க... இது சும்மா சொல்வது இல்லை... வெறும் வாய் வார்த்தை இல்லை... இந்தப் பதிவை எழுதி முடிக்கும் வரை இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன்... உண்மையிலேயே வரிகள் அருமை... கவிஞருக்கு மனசின் வாழ்த்துக்கள்.

'தணனனான... தணனனான
தண்னனான... தாணானன்னா...
.................
வெண்ணிலா போல் ஒரு
தேவதைக் கண்கள்...
ஆஆஆஆயிரம் பேசியதே...'

இது நம்ம ஏ.ஆர்.ரகுமான் வகைப்பாடல் மெதுவான வரிகளும் பரபரப்பான வரிகளும் கலந்த பாடல் வித்தியாசமான ராப் வகை... ஆரம்பத்தில் சொல்லும் வார்த்தைகளை என்னால் புரிஞ்சிக்க முடியலை வாய், கழுத்து, கண்ணு, காதுன்னு எல்லாம் சொல்றாங்க... ரொம்ப வேகமா பாடுறாங்க... 

'ரசவாச்சியே... ரசவாச்சியே...
ரசவாச்சியே... ரசவாச்சியே வாச்சியே...
இருவாச்சியே... இருவாச்சியே
இருவாச்சியே... இருவாச்சியே... வாச்சியே...'


அடுத்தது பிரிவின் வலி சொல்லும் பாடல், நாயகன் நாயகி பிரிவைப் பற்றி ஒருவர் வருத்தமுற்று பாடுவதுபோல் தெரிகிறது பாடலின் வரிகளைக் கேட்கும் போது... நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

'ஐய்யோ... ஐய்யோ... ஐய்ய்ய்யோஓஓஓஓஓ....
நெஞ்சு கொதிக்குதே...
விம்மி வெதும்புதே
செஞ்ச பாவம் என்னதானோ...'

அடுத்ததும் ஒரு குத்துப் பாடல் ரகம்தான்... மியூசிக்கும் அடித்து ஆடுகிறது... கேட்கும் நமக்கும் பரபரன்னு இருக்கு என்பதே உண்மை. இதுவும் ஆட வைக்கும்.

'பரபரன்னு இழுக்குதய்யா...
பளபளன்னு சிரிக்கிதய்யா...
சிலுசிலுன்னு சிலுக்குதய்யா...
ஏங் கிளையில் வந்து இலை பறிக்கிறியே...
தேன் தேன் துளியா நீ மழை அடிக்கிறியே...'

அப்புறம் இன்னொரு பாட்டு, அதுவும் கேட்க நல்லாத்தான் இருக்கு. இது காதல் டூயட்டா அல்லது வேறு மாதிரியான்னு தெரியலை. ஆனா உறுத்தாத இசையால நல்லாயிருக்கு.

என்னானதோ எல்லாம் இங்கே...
கொண்டாடுதோ நெஞ்சம் இங்கே... 


ஜி.வி. திவாகர் தயாரித்திருக்கிறார். அவரோட மகன் கிரிஷ் திவாகரே கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  நாயகியாக குஷ்பு பிரசாத் என்பவரை அறிமுகம் செய்கிறார்கள்.  ஆடுகளம் நரேன், மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல் நடராஜனிடம் உதவியாளராக இருந்த சரவணன் நடராஜன் இதில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கலக்கலாகச் செய்திருக்கிறார் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தளவுக்கு உண்மை என்பது படம் வந்தால்தான் தெரியும்.

பாடல்கள் அருமையா வந்திருக்கு... இவனுக்கு இவள் அல்லது இவளுக்கு இவன்னு சொந்தங்களில் பேசி வைத்து கட்டுவது இன்னும் எங்கள் பக்கமெல்லாம் வழக்கத்தில்தான் இருக்கு, அது போல ஒரு கதைதான்... அதில் இருந்து விடுபட ஒரு பயணம்... காதல்.... மோதல்... மீண்டும் சேரல் என்பது போல்தான் கதை இருக்கும் என்று தெரிகிறது. இது தமிழ் சினிமாவின் டிரேட் மார்க் ரகம்தான்.  புதிய முயற்சிகளோடு இறங்கலாம். எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது.

பெரும்பாலும் பாடல்கள் கேட்கும் போது அருமையாக இருந்தால் காட்சிப் படுத்துதலில் சொதப்பி விடுவார்கள். இங்கே புதிய இயக்குநர் எப்படிச் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. சேரனைப் போல் படத்தின் கதையோடு பாடல்களையும், பாடல் காட்சிகள் கூட கதை சொல்லும் வித்தையையும் புதியவர்கள் யாருமே பயன்படுத்துவதில்லை. எல்லோருமே அந்தப் பக்கம் போக பயப்படுகிறார்கள். சேனையின் உறவு, நண்பர் புதிய இயக்குநர் அதிலிருந்து மாறுபட்டு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை... பிடிப்பாரா பார்க்கலாம். ஜிப்பா ஜிமிக்கி ஜெயித்தால் ரா.ராஜசேகர் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். பார்ப்போம்.



பாடல்களை நீங்களும் கேளுங்கள்... உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பரை வாழ்த்துங்கள்.... அவரும் வளரட்டும்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சினிமா: ஆவி முதல் தாமரை வரை

காதல் போயின் காதல்

ண்பர் கோவை ஆவி அவர்களின் முதல் குறும்படம் காதல் போயின் காதல், 10 நிமிட படத்திற்கான கதைத் தேர்வு சிறப்பு. கடந்த காலம் மற்றும் நிகழ்கால காட்சி எடிட்டிங்கில் கலக்கியிருக்கிறார்கள். வலை நட்புக்களால் ஷைனிங் ஸ்டார் என பட்டம் பெற்ற நாயகன் சீனுவுக்கு இரண்டு விதமான கெட்டப்புக்கள்... தனுஷ் பாணி அமுல் பேபியாய் காதலன்... வாழ்வே மாயம் கமல் போல் தாடியுடன் இன்றைய நாயகனாய்... இரண்டிலும் நன்றாகச் செய்திருக்கிறார். பாவம் நாயகி சாக்லெட் சாப்பிடும் போது இவருக்கும் கொடுத்திருக்கலாம். அமுல்பேபி அல்லவா... அதனால் பரிதாபமாய் அமர்ந்திருக்கிறார். 

நாயகி மதுவந்தி நல்ல தேர்வு. முகத்தில் உணர்ச்சிகளை அழகாகக் காட்டுகிறார். ஷைனிங்கை ஓவர்டேக் பண்ணி முதலிடத்தில் அமர்ந்து விடுகிறார் என்பதை சொல்லாமல் விடமுடியாது. நம்ம குடந்தை சரவணன் அண்ணன் காரில் வந்து கோபமாய் பேசுகிறார்... மனசருக்குள் இம்புட்டுக் கோபம் இருக்கா என்று நினைக்கத் தோன்றியது. அப்புறம் துளசிதரன் சார்... பார்க்கில் டீக்கடை வைத்திருப்பவராக... நன்றாகச் செய்திருக்கிறார்... மற்றும் அரசன் உள்ளிட்ட நண்பர்கள் ஆரம்பக் காட்சியில் வருகிறார்கள். படம் முழுவதும் வரும் ஸ்கூல்பையனின் மகன் கடைசியில் ஒரு வரி வசனம்  பேசினாலும் நச். 

ஆரம்பக் காட்சியில் நண்பர்களின் பேச்சு செயற்கையாக இருந்தது. மற்றபடி குறையொன்றும் சொல்ல முடியாத அளவுக்கு கதை நகர்த்தல் அருமை. சரவண அண்ணனின் முதல் குறும்படத்தில் இணைந்த இந்தக் குழு அதில் கொஞ்சம் சறுக்கியிருந்தது. இதில் தங்கள் தவறுகளைச் சரி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயக்குநராய் ஜெயித்திருக்கும் ஆவிக்கு இன்னும் நிறைய வெற்றிகள் குவிய வாழ்த்துக்கள். சொல்ல மறந்துட்டேன்... படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் பாடலை ஆவியும் கீதா மேடமும் பாடியிருக்கிறார்கள்... அருமையான பாடல்...படத்திற்கான இணைப்பு கீழே... கண்டிப்பாக பாருங்கள்... ரசிப்பீர்கள். 



சண்டமாருதம்

வில்லன், கதாநாயகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். சரத்தின் கதைக்கு க்ரைம் நாவல் நாயகர் ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுதியதால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஓவியா, மீரா நந்தன் என இரண்டு நாயகிகள். நாயகனின் நண்பனாக, போலீஸ் ஆபிசராக வந்து வில்லனிடம் குத்துப்பட்டு சாகும் சமுத்திரக்கனி வீணடிக்கப் பட்டுள்ளார். இசை நாயகன் எஸ்.ஜே.சூர்யாவை பைத்தியம் ஆக்குவதற்காக நடக்கும் நாடகங்கள் போல இவரை ஏமாற்ற வில்லனின் நாடகங்கள். அரதப் பழசானவை. வில்லனின் நண்பனாக ராதாரவி  மற்றும் டெல்லிகணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி என நடிகர் கூட்டம். 

அட்டகாசம் செய்யும் வில்லனின் தீவிரவாத செயலை போலீஸ் அதிகாரியான நாயகன் எப்படி முறியடிக்கிறார் என்ற அரதப்பழசான கதையினை ராஜேஷ் குமாரின் அறிவியல் யுக்திகளோடும் பகவத் கீதையினை நுழைத்து ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க நினைத்து பழைய படம் பார்ப்பது போன்ற உணர்வை மாற்றமுடியாமல் தோற்றிருக்கிறார்கள். போலீஸாக வரும் ஓவியாவுக்கு சரத்குமாருடன் படுகவர்ச்சியாக ஒரு பாட்டு மட்டுமே... 


படம் வெளிவருமுன்னர் சரத்குமாருடன் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறீர்களே என்று ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது. அதற்கு வில்லன் சரத்குமாரைப் பிடிக்கும் போலீஸ் ஆபீசராக நடிப்பதால் அவருடன் கவர்ச்சியாக ஒரு டான்ஸ், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் படத்தில் திருமணம் நிச்சயம் ஆன போலீஸ் ஆபீசர் சரத்குமாருடன் இவர் ஆடுவதாக காமெடியன் இமான் அண்ணாச்சி கனவு காண்கிறார். இங்கே எங்கே வில்லனைப் பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரதப்பழசான கதையாக இருந்தாலும் கொஞ்சம் நகைச்சுவை, எனது ஆதர்ஷ எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திரைக்கதை என படம் ஒருமுறை பார்க்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அனேகன்

ந்தப் படத்தை அனேகமாக எல்லோரும் பார்த்திருப்பீங்க... முன் ஜென்மக் கதைகளுடன் நிகழ்கால கதையை இணைத்து அருமையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கு நாலு விதமான கதாபாத்திரம்... அதில் 'டங்கா மாரி ஊதாரி...' காளியின் கதாபாத்திரமே முதலிடத்தில்.... மனுசன் புகுந்து விளையாண்டிருக்கிறார். நாயகியைச் சுற்றி கதை பயணிப்பது போல் படங்கள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வருவதில்லை. பெரும்பாலும் நாயகிகள் ஊறுகாயாக மட்டுமே வருவார்கள். ஆனால் இதில் கதை நாயகி அமைராவைச் சுற்றியே நகர்கிறது. ஆரம்பத்தில் இவருக்குப் பதிலாக வேறு நடிகையைப் போட்டிருக்கலாமோ என்று தோன்றினாலும் போகப்போக சரியான தேர்வுதான் என்று சொல்ல வைத்துவிடுகிறார். இவருக்கும் காளியின் காதலியாக வரும் ஐயராத்துப் பொண்ணு கதாபாத்திரம்தான் முதலிடம் பிடிக்கிறது. 


வில்லனாக கார்த்திக், அடாவடி வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் நன்றாக செய்திருக்கிறார். கடைசிக் காட்சியில் தனுஷ் இவரை இமிடேட் பண்ணி வசனம்  பேசும்போது மனுசன் உண்மையிலேயே சிரிச்சிக்கிட்டு ரசிச்சிட்டாரு போல... வில்லத்தனத்துக்கு ஒரு குரூரம் வேண்டாம்... சிரிக்கிற கார்த்திக்கைப் பார்த்ததும் நமக்கு 90களின் கதாநாயகன் கார்த்திக் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறார். நானும் நகைச்சுவை நடிகன்தான் எனச் சொல்லிக் கொள்ளும் ஜெகன், வெறுப்பேற்றுகிறார். பாடல்கள் அனைத்தும் அருமை. வித்தியாசமான கதைக்களத்தில் எல்லாக் கதைகளையும் இணைத்து  இரண்டாம் உலகத்தில் செல்வ ராகவன் சொல்லத் தவறியதை எல்லாரும் புரியும்படியாகச் சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த். அனேகன் அருமையான படம். தனுஷூக்கு அமர்க்களமான வெற்றி.

இசை

ரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான யுத்தமே படம். ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தாலும் கதை கொஞ்சம் வித்தியாசமாகப் பயணிப்பதால் இசை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது. குஷி, வாலி கொடுத்த எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக தொடரும் பட்சத்தில் நல்ல படங்களைக் கொடுக்கலாம். இனியும் நாயகன் முயற்சி வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. தகடு தகடு, அல்வா அமாவாசை கதாபாத்திரங்களில் வில்லத்தனம் செய்த சத்தியராஜ்க்கு இதில் அந்தளவுக்கு வில்லத்தனம் இல்லை என்றாலும் தனக்கான இடத்தை அழகாக நிரப்பியிருக்கிறார். அதுவும் கஞ்சா கருப்பிடம் இவர் செய்யும் காமெடி கலந்த வில்லத்தனம் அருமை. நாயகி நல்ல தேர்வு. படமும் போரடிக்காமல் போகிறது.

ஷமிதாப்

மிதாப் - தனுஷ் நடிப்பில் வந்த படம் 'ஷமிதாப்'. சிறுவயது முதலே சினிமாவில் நடித்து பெரியாளாக வரவேண்டும் என்ற வெறியோடு இருக்கும் வாய் முடியாத இளைஞன், அதில் வெற்றி பெற்றானா? எப்படி வெற்றி பெற்றான்? என்பதுதான் படத்தின் கதைக்களம். படம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப கதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா படத்துக்கு விமர்சனம் எப்ப எழுதுறான் பாருங்கிற விமர்சனம் வரும். இதில் வாய் பேச முடியாத தனுஷூக்கு குரல் கொடுப்பவராக அமிதாப். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு ஈடுபாட்டோடு நடிக்கும் நடிகன் தனுஷ், இதில் அமிதாப்பின் குரலுக்கு அழகான முகபாவனையோடு அவர் வாய் அசைக்கும் போது ஆரம்பத்தில் தனுஷின் குரல் இல்லாமல் வித்தியாசமாகத் தெரிய, பின்னர் அந்தக் குரலும் தனுஷின் நடிப்பும் இணைந்துவிட கலக்கல்தான்... 


அமிதாப் - பரட்டைத் தலையுடனும் அழுக்கு உடையுடனும் சுடுகாட்டில் படுத்திருக்கும் மனிதர், குரல் கொடுக்க வந்து தன்னோட குரலால் அவனுக்கு பணமும் புகழும் கூடுதே.. என்னோட குரல் இல்லை என்றால்... என மனசுக்குள் புழுங்கி, தண்ணி, விஸ்கி பற்றி பேசி... பிரிந்து... மீண்டும் சேருகிறார். மனுசன் நடிப்பில் கலக்கியிருக்கிறார். அதுவும் இறுதிக் காட்சியில் சூப்பர்... அமிதாப்போட்டு போட்டி போட்டு நடித்திருக்கிறார் தனுஷ்... அமிதாப்பை மிஞ்சிவிட்டார் தனுஷ்... என்றெல்லாம் படம் வெளியானபோது விமர்சனங்கள் வந்தன. என்னைப் பொறுத்தவரை அனுபவஸ்தன் அமிதாப் தனது அருமையான நடிப்பால் தனுஷை பின்னுக்குத் தள்ளிவிட்டுட்டார். என்ன நடிப்பு... மனுசனுக்கு அந்த கரகரப்பான குரல்தான் பிளஸ்பாயிண்ட். 

அமிதாப், தனுஷ் என்ற நடிப்புச் சிகரங்களுக்கு இடையே கேபிள் சங்கர் அண்ணா எழுதியது போல நம்ம நடிப்புக்காரன் மகள் தனக்கான வாய்ப்பில் தோணியின் ஹெலிகாப்டர் ஷாட் விட்டிருக்கிறார். இறுதிக் காட்சியில் அமிதாப்பின் தண்ணி, விஸ்கி வசனத்தைப் பேசி அவரைத் திட்டுமிடத்தில் நன்றாகச் செய்திருக்கிறார். பின்னணி இசையில் என்றும் ராசா நம்ம இளையராஜா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.  தமிழரான பால்கியின் இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளிவந்த ஷமிதாப் அருமையான படம்.

கவிஞர் தாமரை

ன்னை அறிந்தால் படத்தில் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தாலும் என்னை கவர்ந்த இரண்டு பாடல்கள் 'மழை வரப் போகுதே....' மற்றும் 'உனக்கென்ன வேண்டும் சொல்லு...'. வரிகளுக்கு இடையே புரியாத வார்த்தைகளோ அர்த்தமற்ற வார்த்தைகளோ இன்றி அழகான கவிதை வரிகளைக் கொடுப்பதில் கவிஞர் தாமரைக்கு நிகர் தாமரைதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். கவிஞர் தாமரையை வாழ்த்துவோம்.


-சினிமா செய்திகள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

மனசின் பக்கம் : இதிகாச லிங்கா



லிங்கா பார்த்தாச்சு... ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காத படம்தான் என்பது உண்மை. எங்கயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என அவர் நடிப்பாற்றலை கொண்டு வந்த படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரஜினி என்றால் பஞ்ச் டயலாக்கும், பவர்புல்லான நடையும் என்ற நிலைக்கு அவரை சினிமா மாற்றி ரொம்ப நாளாச்சு. இந்நிலையில் அப்படி ஒரு படம்... இது பேசப்படும் படமாக அமைய வேண்டியது... ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததால் மிகவும் மோசமாக பேசப்படும் படமாக அமைந்து விட்டது. 

படத்தின் கிளைமேக்ஸை சின்னப்புள்ளத்தனமாக இயக்கியிருப்பது ரவிக்குமார்தானா என யோசிக்க வைத்தது. குருவியில டாக்டர்... இன்றைய சூப்பர்ஸ்டார் விஜய் பறந்ததை மறக்காத நம்மால் 64 வயதில் ரஜினி பறப்பதைப் பார்க்கும் போது அவர் மீது பரிதாபப்பட வைத்தது. ரஜினி சார்... டூயெட்டெல்லாம் வேண்டாம்... வயசுக்கு தகுந்த கதாபாத்திரமா தேர்ந்தெடுத்து நடிங்கன்னு சொல்லணும் போல இருந்தது... நாயகிகளை மையப்படுத்தும் கேமரா முன்னால் ரஜினி கையைக் காலை ஆட்டி (வேகம் இல்லை) நடனமாடியபோது. இருப்பினும் ஒரு வித்தியாசமான நாம் அறிந்த கதைக்களம்.  


ரஜினியின் நடிப்பில் பந்தாக்கள் இல்லாத ஒரு நல்ல படம்... அவசர கிளைமேக்ஸ்... இழுவையான காட்சி நகர்த்துதலால் மோசமான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. ரஜினி தன் ரசிகர்களுக்காக பண்ணிய படம் என்றார்கள் ஆனால் ரசிகர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்கள்... என்ன உலகமடா இது...  லிங்கா... மலிங்கா வேகத்தில் வந்திருந்தால் கங்குலி சிக்ஸர்தான்... இப்ப... ஹர்பஜன் சிக்ஸர் அடிச்சாலும் பலூனாய் பறக்கும் கடைசிக் காட்சியில் இந்திய அணி போல் ஆரம்பத்திலிருந்து கொண்டு வந்த கதை பொலபொலவென்று சரிகிறது. மேலும்... அட அப்பா... இதுக்கு மேல ஏதாவது பேசினா அக்கவுண்டை முடக்கிருவாங்களாமே... ஸோ லிங்காவை விமர்சிக்கவில்லை என்பதை லிங்கா மீது ஆணையாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
-----------------------------------
திகாசா... என்னைக் கவர்ந்த மலையாளப் படம். ஹாலிவுட் படமான 'The Hot Chick' என்ற படத்தின் தழுவல்தான் கதை. ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறுவதை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே இரண்டு மோதிரங்கள் பற்றி சின்ன வரலாற்றுக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மோதிரங்களை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி விற்க சிலர் முயலும் போது அது நாயகன் மற்றும் அவனது நண்பன் கையில் கிடைக்க, அவர்கள் அதை விற்க நினைக்கிறார்கள். அது எதிர்பார்த்த விலைபோகாததால் எதற்கு என நாயகனின் நண்பன் தன்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை கடற்கரையில் வீச,. மற்றொன்று நாயகன் வசம் இருக்கிறது. ஒரு தருணத்தில் கடலில் வீசிய மோதிரம் கிடைக்கப் பெற்ற சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் நாயகியும் திருடனான நாயகனும் மோதிரத்தை விரலில் மாட்டுகிறார்கள். அதன் பின் இவர் அவராகவும் அவர் இவராகவும் மாற விபரீதம் ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன பெண் உருவில் ஆணும் ஆண் உருவில் பெண்ணுமாக ஒரே கலக்கல்தான் போங்க. 


இருவரும் போட்டி போட்டுச் செய்திருந்தாலும் பெண் உருவில் திருடனின் நடை உடை பேச்சு என கலந்து கட்டி ஆட்டம் போட்டிருக்கும் அனுஸ்ரீ பெண்ணாக நளினம் காட்டும் ஷைன் டாம் ஷாக்கோவை (சரியான தமிழ்தானா தெரியலை) பின்னுக்கு தள்ளி விடுகிறார். பெரும்பாலும் இவருக்கான காட்சிகள்தான் அதிகம்... அடாவடி, சண்டை, நண்பனை மிரட்டுதல், ஷாக்கோவை அரட்டுதல் என பின்னிப் பெடலெடுக்கிறார். இருவரும் சந்திக்கும் போது இடைவேளை... பின்னரும் படம் சுவராஸ்யமாய் போகிறது. 


-----------------------------------

ஞானக்கிறுக்கன்னு ஒரு படம் பார்த்தோம்... ஆரம்பத்தில் டேனியல் பாலாஜி பயங்காட்ட படமும் கிராமத்து வாசனையோடு அழகாய் நகர்வது போல் இருந்தது. நாயகன் வீட்டில் பிரச்சினையுடன் திருச்சி போய் வந்து... மீண்டும் திருச்சி போக... டேனியல் பாலாஜி, கிராமம், நாயகனின் அம்மா, சகோதரிகள், காதலித்த பெண் என எல்லாரையும் தஞ்சாவூர்ல இறக்கிவிட்டுட்டு... திருச்சியிலயும் பிரச்சினைன்னு சொல்லி நம்ம ஹீரோவை சென்னைக்கு அனுப்புனானுங்க... அப்பத்தான் இடைவேளை வந்துச்சு... திருச்சியில இருந்து சென்னைக்கு 320 கிமி அப்படின்னு போட்டானுங்க... 

சரி படம் தஞ்சாவூர்ல ஆரம்பிச்சி... திருச்சி வந்து... இப்ப சென்னை போகுதுன்னு பார்த்தா திருச்சியில இருந்து அரசுப் பேருந்தை சென்னைக்கு 35 கிமி வேகத்தில் ஓட்டும்... மன்னிக்கவும் உருட்டும் டிரைவரைப் போல உருட்ட ஆரம்பிச்சிட்டானுங்க... என்ன கதை... எங்கே பயணிக்குதுன்னு இல்லாம... எப்படியெப்படி எல்லாமோ சொல்லி அங்க ஒரு பாதிக்கப்பட்ட பொண்ணைக் காப்பாத்தி... அவளை ஊருக்கு அனுப்பச் சொன்னானுங்க... எங்கடான்னு கேட்டா.. காரைக்குடியின்னு சொல்லி அங்கயும் பஸ்ஸ விட்டானுங்க... சிராவயல் பொட்டல்ல புள்ளய தனியா விட்டுட்டு மீண்டும் பய சென்னைக்கு வந்துடுறான். 

ஒரு நாள் பாத்தா அந்தப் புள்ள பைத்தியமாட்டம் சென்னை மெயின் ரோட்டுல போக அப்புறம் என்ன பய நாந்தேன் உனக்குப் புருஷன்னு ரோட்டுல நின்னு கத்தி அவளை கூட்டிக்கிட்டுப் போறான்... இப்ப நாஞ்சொன்னது எதாவது புரிஞ்சிச்சா... இப்படித்தான் ஞானக் கிறுக்கன்னு சொல்லி பாத்த நம்மளை... இல்லை இல்லை... எங்களை கேனக் கிறுக்கனாக்கிட்டானுங்க... அப்பா சாமிகளா படத்தை எடுத்து ஒரு தடவை போட்டுப் பாப்பீங்களா இல்லையா...? மிடியலை சாமி.
--------------------------------

ஹத் பாசிலின் நடிப்பில் வெளியான மணி ரத்னம் நல்லா இருந்துச்சு. பஹத்தின் நடிப்பு எப்பவுமே நல்லா இருக்கும். மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் சுமார்தான். 

----------------------------------


விதார்த் நடித்த காடு, பார்க்க வேண்டிய படம். நல்லா பண்ணியிருக்காங்க... சமுத்திரக்கனி போராளியாக நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எல்லாம் நறுக் வசனங்கள். படமும் நல்லாயிருக்கு... காட்டை அழிக்காதீங்கன்னு சொல்றாங்க... ஒரு முறை பார்க்கலாமே...

சினிமா சம்பந்தமான பதிவுகளைத் தவிர் என்று நண்பன் திட்டினாலும் கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பதிவு.. நண்பா மன்னிச்சு....
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

பார்த்தவை... ரசித்தவை... இனியவை...

நோன்பு துவங்கியதில் இருந்து காலையில் அலுவலக நேரம் மாறியிருப்பதால் ஐந்து மணிக்கு அலறி அடித்து எழுந்து குளிக்க ஓடும் நிலமை இல்லாமல் இந்த பதினைந்து நாள் கழிந்து விட்டது. இன்னும் பதினைந்து நாளைக்கு இந்தச் சுகம். மீண்டும் காலை ஐந்து மணிக்கு கிளம்ப வேண்டும். சரி விஷயத்துக்கு வருவோம். இந்த நாட்களில் சில படங்களைப் பார்த்தேன்... இருங்க ஓடிடாதீங்க நாஞ்சில் மனோ அண்ணன் மாதிரி பழைய படமா தேடிப்பிடித்துப் பார்க்கலை... சில மலையாளப் படங்கள்... சில தமிழ்ப்படங்கள்... முதலில் தமிழ்ப்படங்களை கவர்ந்த வரிசையில் பார்க்கலாம்.


முண்டாசுப்பட்டி :  போட்டோ எடுத்தால் செத்துப் போவோம் என்ற மூடநம்பிக்கை கொண்ட கிராமத்துக்குள் செத்தவரை போட்டோ எடுக்கப் போகும் நாயகன் அங்கு காதலில் விழுந்து தான் செய்யும் ஒரு காரியத்தால் அங்கு அடிமையாக வேலை பார்த்து காதலையும் தொடர்கிறார். படம் முழுவதும் நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவை... எனவெ லாஜிக் எல்லாம் பாக்காமல் கதையோடு பயணிக்க முடிகிறது. முனீஸ்காந்த்... சான்ஸே இல்லை.... மனுசன் சிரிக்க வைத்தே கொல்கிறார்... கதையையோ... சதையையோ எதிர்பார்க்காமல் சிரித்து வரவேண்டும் என்றால் முண்டாசுப்பாட்டிக்கு தயங்காமல் ஒரு விசிட் அடிக்கலாம்.

உன் சமையல் அறையில் : என்னைப் பொறுத்தவரை பிரகாஷ்ராஜ் படங்கள் என்றால் பார்த்து விடுவது வழக்கம். ஒரு சிறிய கதையை எடுத்துக் கொண்டு அதை தொய்வில்லாமல் கொண்டு போவதில் அவர் கில்லாடி. சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகன், தவறாக சாப்பாடு ஆர்டர் கொடுக்க போன் செய்த பெண்ணிடம் போனில் பேசி பழகி நேரில் சந்திக்கும் நாள் வரும்போது தன்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என இருவரும் தங்களுக்கு மாற்றாக ஒருவரை அனுப்ப, அதன் பின்னான நிகழ்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறார். சிநேகா நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முகத்தில் எப்பவும் இருக்கும் சிரிப்பில் கொஞ்சம் கம்மிதான். ஊர்வசி நன்றாக நடித்திருக்கிறார்... இளங்காதலர்கள் இருவரும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். தம்பி ராமையா சிரிப்பு வெடி வெடிக்கிறார்.

சைவம் :  எங்கள் ஊர்ப்பக்கம் எடுத்திருக்கிறார்கள். ஒரு சேவலையும் குழந்தையையும் வைத்து நகர்கிறது கதை. இடையில் அத்தை பெண்ணை விரட்டி விரட்டி லவ் பண்ணும் பையன், வீட்டுப் பெரியவரான தாத்தா, வேலைக்காரன், அவனது மனைவி மற்றும் திருவிழாவுக்கு வரும் ஒட்டு மொத்தக் குடும்பம் என கதை ஒரு வீட்டுக்குள் நகர்கிறது. ஒரு ஏரியா பேச்சு வழக்கை எடுக்கும் போது சின்னச் சின்ன வார்த்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பது இயக்குநருக்கு தெரியவில்லையோ என்னவோ... நிறைய வார்த்தைகள் சிவகங்கை மாவட்ட வழக்கில் இல்லாதது... வெடக்கோழி என்பது முட்டையிடும் பருவத்தில் உள்ள கோழி, வெடக்கோழி ரசம் உடம்பு வலியைப் போக்கும்... இந்தப்படத்தில் சேவலை விடக்கோழி என்று சொல்லும் போது சிரிப்புத்தான் வந்தது. இயக்குநர் விஜய் கொடுத்த படத்தில் இது சொந்தக் சரக்கு என்பதால் கதையின் போக்கு பிடித்திருந்தது.

மேலும் அமரா, அன்றும் இன்றும், கல்பனா ஹவுஸ் என சில படங்களையும் பார்த்தேன். சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எங்கள் அறை நண்பர் அமரா பாக்கும் போது இதென்ன படம் என்றார். அமரா என்றதும் அப்படி ஒரு படம் வந்திருக்கா.. நீ எப்படிய்யா இப்படி எல்லாம் படம் பாக்குறே என்று கேட்டார். இப்படிப்பட்ட படங்களில்தான் எப்படி இந்தப் படத்தை எடுத்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்க முடியும் என்று சிரிக்கவும்... உனக்கு ரொம்ப பொறுமைதான் என்று சொல்லி பேர் தெரியாத படமெல்லாம் பார்க்க இங்க நீ இருக்கேன்னு அந்த டைரக்டருக்கு தெரியும் போல என்று சொல்லி இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டார்.

தமிழ்ப்படங்கள் தவிர சில மலையாளப் படங்கள் பார்த்தேன். இந்த மலையாள இயக்குநர்களுக்கு எப்படித்தான் இப்படியான கதைகள் கிடைக்கின்றனவோ... எல்லாமே அருமையான படங்கள்... அதில் சில கவர்ந்த வரிசையில்...


த்ரிஷ்யம் : மோகன்லால் நடிப்பில் கலக்கலான ஒரு கிரைம் படம். மகளை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டியவனை மகளும் மனைவியும் கொன்று புதைக்க அவர்களைக் காப்பாற்ற மோகன்லால் எடுக்கும் நடவடிக்கைகள்... அதற்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கொடுக்கும் ஒத்துழைப்பு என படம் அமர்க்களமாய் நகரும். இங்கு கூட ஒரு ஒரு காட்சியாக ஓட்டி 100 நாட்கள் ஓட்டினார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

1983 : கிரிக்கெட்டில் பெரியாளாக வரவேண்டும் என்ற தனது கனவுக்காக படிப்பு கெட்டு காதல் விட்டு அதை அடைய முடியாமல் குடும்ப வாழ்க்கைக்குள் செல்பவன் தன் மகனை கிரிக்கெட்டில் பெரிய ஆளாக்க போராடும் கதை. கிரிக்கெட்தான் களம் என்றாலும் ஒரு அருமையான படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.

லா பாயிண்ட் : குஞ்சக்கோபோவன், நமீதா ப்ரமோத் நடித்த படம். காதலித்தவன் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்ட பெண்ணின் தந்தை கோர்ட்டில் வழக்கு தொடர்வதும் அந்த வழக்கை முடித்துக் கொள்ள பையனின் தந்தை பணம் கொடுப்பதற்காக வக்கீலான நாயகனிடம் வருகிறார். அதன் பின் நகரும் கதை ஒரு நீண்ட தூரப் பயணமாக நாயகனும் நாயகியும் செல்வதில் இருந்து நம்மையும் அழைத்துச் செல்கிறது.

லைப் : நம்ம ஊரு கலாபக்காதலன் படத்தை கொஞ்சம் உல்டாவாக்கி இருக்கிறார்களோ எனத் தோன்றும் கதை. தனது அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு உடம்பு முடியாத ஒரு சூழலில் அவர்களின் இளவயதுப் பெண்ணை தன் வீட்டில் கொண்டு வைத்து வைத்துக் கொள்கிறார்கள் முதலாளியும் அவரது மனைவியும்.. இந்த நட்பு தொடர, எதேச்சையான தொடல்கள் எல்லாம் பருவ வயதுப் பெண்ணுக்குள் மாற்றத்தைக் கொண்டு வர, தன்னை மகளாகப் பாவிக்கும் நாயகியின் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். நாயகியின் கணவனும் அவள் பின்னே சுற்ற கடைசியில் என்ன ஆகிறது என்பதை அழகான திரைக்கதையில் நகர்த்தியிருக்கிறார்கள். நாயகி சாவித்திரியாக புதுமுகம் ஸ்டெப்பிகிரேஸ் என்பவர் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

திரா : ஷோபனாவின் நடிப்பில் வந்து வெற்றி பெற்ற படம், பருவப் பெண்களைக் கடத்தும் கும்பல் டாக்டரான ஷோபனாவின் ஆதரவில் இருக்கும் பெண்களைக் கடத்த அவர்களைத் தேடி அலையும் போது தங்கையை அதே கும்பலிடம் தொலைத்தவனும் இணைய இருவருமாக எப்படி அவர்களை மீட்கிறார்கள் என்பதுதான் கதை.

டைமண்ட் நெக்லஸ் : இந்த பகத்பாசிலுக்கு எப்படித்தான் எல்லாக் கதாபாத்திரமும் பொருந்துகிறதோ தெரியவில்லை... துபாயில் டாக்டராக பணிபுரியும் பகத், தனது தாந்தோன்றித்தனமான பகட்டான வாழ்க்கைக்காக கிரெடிட் கார்டில் லோன் வாங்கி அதனால் படும் கஷ்டங்கள், இடையில் தமிழ் பெண்ணுடன் காதல், ஊரில் பணக்காரப் பெண்ணுடன் திருமணம், கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணுடனான உறவு, அந்தப் பெண்ணிடம் திருடும் வைர நெக்லஸ் அதன் பின்னான நிகழ்வுகள் என மனிதர் கலந்து கட்டி ஆடியிருக்கிறார். படமும் போரடிக்காமல் போகிறது.

படங்கள் ஒரு பக்கம் இருக்க பார்க்க வேண்டும் என்று நினைத்த சில உறவுகளில் இருவருடன் பேசவாவது செய்தேன் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான் போங்க... ஒருவர் குடந்தை சரவணன் அண்ணா, இரண்டு மூன்று முறை பேசியாச்சு... மிகவும் பாசமான பேச்சு. மற்றொருவர் திண்டுக்கல் தனபாலன் சார்... நேற்று பேசினேன்... ஊருக்கு வந்தும் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தோடு ஆரம்பித்தார். பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு என பதிவுலகம் பற்றியே பேசினார். உண்மையில் நீண்ட நாள் பழகியது போல் ஒரு அருமையான... அன்பான பேச்சு.... என்னுடன் பேசிய இருவருக்கும் மனசு நிறைந்த நன்றி.... இந்த உறவு இனித் தொடரும்...

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

வடிவேலுவை மிரட்டினால்... : சீமான் எச்சரிக்கை


டிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. 

இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க் கலைஞனை அவனுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் உண்மையாகவே தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால் அதனை முறைப்படி சொல்லி தகுந்த விதத்தில் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, படத்தில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்பதே தெரியாமல் அடிப்போம் உதைப்போம் என ஆவேசம் பாடுவது எந்த விதத்தில் நியாயம்? 

கிருஷ்ண தேவராயர் பாத்திரம் குறித்து குரல் எழுப்புபவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். உண்மையிலேயே கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுபவர்களுக்குப் பக்க பலமாக நாங்களும் நிற்போம். எந்த இனத்தவர்களின் மனதையும் புண்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடையாது. 

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கபடவில்லை என்றும், கற்பனைக் கதையாகவே படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படத் தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், அதைக் காது கொடுத்துக் கேட்காமல் வடிவேலுவுக்கு எதிராக கொந்தளிப்பு கிளப்புவது ஒரு கலைஞனை புண்படுத்தும் செயல். 


ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்பு செயல்கள் நடக்கிறபோது அம்மாநிலக் கலைஞர்கள் எவரையேனும் எதிர்த்து அங்கு பெருமளவில் வாழும் தமிழர்கள் ஒருமித்து திரண்டுவிட முடியுமா? அங்கிருக்கும் ஒரு கலைஞனுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலும், அது எத்தகைய விளைவுகளை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தும்? 

ஆனால், மண்ணின் மைந்தனாக பல கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வடிவேலுவை சில அமைப்புகள் இங்கே மிரட்டுவது, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுகிற செயல். தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல். 

தமிழினத்தின் பெருமைமிகுந்த கலைஞன் வடிவேலு. அவரை எவ்வித இக்கட்டும் சூழாதபடி காப்பாற்ற வேண்டியது நம் இனத்தின் கடமை. திரையில் வேண்டுமானால் வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகராக இருக்கலாம்; ஆனால், உண்மையில் எங்கள் இனத்தின் கதாநாயகன் வடிவேலு. 

பலகோடி தமிழ் மக்களின் பெருமைமிகு கலைஞனாக இருக்கும் வடிவேலுவை அவ்வளவு சீக்கிரத்தில் அச்சுறுத்திவிட முடியும் என யாரும் கனவு காணக்கூடாது. தற்போதைய அரசியல் சூழலில் வடிவேலுக்கு ஆதரவாக யாரும் இல்லை என எண்ணி, சிலர் அவரை மிரட்டி உருட்டி பணிய வைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். 

மொத்த தமிழ்ச் சமூகமும் இந்த விவகாரத்தில் வடிவேலுவின் பின்னால் நிற்கும் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி கொஞ்சமும் தயங்காது. 

நன்றி : தட்ஸ் தமிழ் இணைய இதழ்
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

வீடியோ : பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள்

தமிழ்த் திரையுலகில் இமயத்துக்கும் சிகரத்துக்கும் இடையில் தனது கேமிராவால் காதல் காவியங்களை கண்ணுக்கு விருந்தாக்கி காலத்தால் அழியாத பல படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா.  இவரின் படங்களில் ஓளியும் ஓலியும் பேசினாலும் நமது வாழ்வோடு ஒன்றிய கதைகளை திரையில் கொடுத்து நம்மைக் கட்டிப் போட்டவர் இந்த கேமிராக் கவிஞன். அழியாத கோலங்கள், வீடு, மூன்றாம் பிறை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தலைமுறைகளில் நடித்த பாலு மகேந்திரா அவர்கள் தனது கனவாக தமிழ் திரைப்படங்களின் ஆவணக் காப்பகம் அமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார் ஆனால் அவரது இந்தக் கனவு நனவாகுமா என்பது தெரியாமலேயே இயற்கை எய்திவிட்டார்.

இந்த மகா கலைஞனை தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைக்காமல் பெருமை தேடிக்கொண்டவர் தற்போதைய தமிழக முதல்வர் என்ற போதிலும் மதியாதார் தலைவாசல் மிதிக்காத மேதையே உண்மையில் வென்றவர். 

இங்கு அவரின் படங்களில் இருந்து சில பாடல்களை பகிர்ந்து இருக்கிறேன்... கேளுங்கள்... மகா கலைஞனை நினைவில் கொள்வோம்.

படம் : அழியாத கோலங்கள்
பாடல் : நான் எண்ணும் பொழுது...



படம் : அழியாத கோலங்கள்
பாடல் : பூவண்ணம் போல நெஞ்சம்...




படம் : மூடுபனி
பாடல் : என் இனிய பொன் நிலாவே...



படம்: நீங்கள் கேட்டவை
பாடல் : பிள்ளை நிலா இரண்டும்... 



படம் : உன் கண்ணில் நீர் வழிந்தால்
பாடல் : கண்ணில் என்ன கார்காலம்...



படம் : ரெட்டைவால் குருவி
பாடல் : ராஜராஜ சோழன் நான்...



படம் : வண்ண வண்ணப் பூக்கள்
பாடல் : கண்ணம்மா காதல் என்னும்...



படம் : மறுபடியும்
பாடல் : எல்லோரும் சொல்லும் பாட்டு...



படம் : ராமன் அப்துல்லா
பாடல் : உன் மதமா என் மதமா...



பாலு மகேந்திராவின் மேதின பேட்டியில் இருந்து கொஞ்சமாய்....



திரு. பாலுமகேந்திரா அவர்களின் ஆக்கங்கள் இவ்வுலகம் இருக்கும் வரை வரும் இளம் இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அவரின் பாடல்களைச் சுமந்து தாலாட்டும் இந்தப் பகிர்வை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பார்த்த சினிமாக்கள்

சென்ற வாரத்தில் அறை மாற்றியதால் இணைய இணைப்பு கிடைக்க ஒரு வாரம் ஆனது. அந்த நேரத்தில் சில படங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி கொஞ்சமாய் சில

கோலிசோடா:

கோயம்பேடு மார்க்கெட்டில் அனாதைகளாய்... படுக்க இடமின்றி... மார்க்கெட்டில் சின்னச்சின்ன வேலைகளைப் பார்த்து வயிற்றைக் கழுவும் எத்தனையோ பேரில் இயக்குநர் நான்கு சிறுவர்களின் கதையை கோலிசோடாவாக ஆக்கியிருக்கிறார். பசங்க படத்தில் சிறுவர்களாக வந்தவர்கள் இதில் பதின்ம வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் அநாதையாக இருக்கும் ஏக்கமும் பள்ளிக்கூட பெண்களை சைட் அடிக்கும் அந்த வயதிற்கே உரிய செயல்களும் இருக்கிறதை ஆரம்பக் காட்சிகளில் காட்டுகிறார். அவர்களும் எதாவது ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து அதற்காக மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் பெரிய மனிதரின் கடையைப் பிடித்து ஆச்சி மெஸ் வைத்து வரவு செலவுகளைப் பார்த்து அவர்களை தனது பையன்களாகப் பார்க்கிறார் ஆச்சி. 

ஆச்சியின் மகளுடன் ஒருவனுக்கு காதல்... ஆரம்பத்தில் காமெடிப் பாத்திரம் போல் காட்டப்பட்டு படத்தின் போக்கில் முக்கிய கதாபாத்திரமாக மாறும் எடிஎம் என்ற அந்த நாயகி லட்சணங்கள் அற்ற பெண்... அவள் மனம் பார்த்து விரும்பும் பையன் என போகும் கதையில் வில்லனின் வேலைகள் ஆரம்பமாக சூடு பிடிக்கும் படம் அடிதடி... ஊர் விட்டு ஊர் கொண்டு சென்று பிரித்தல்... மீண்டு சேர்ந்து போராட்டம் எனப் போய் சுபத்தில் முடிகிறது.


சிறுவர்கள் காதல்... வில்லனின் ஆட்கள்  இடைவேளைக்குப் பின்னர் அடிக்கடி அவர்களைத் துவைத்து எடுக்கும் காட்சிகள் என சில தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் அண்ணாச்சியின் நகைச்சுவையும் கதையின் ஓட்டமும்.... ஆச்சியின் அருமையான நடிப்பும் படத்தை மிக அழகாக நகர்த்துகிறது.

கானா பாடல் ஒன்று ஆரம்பத்தில் நீண்ட நேரம் கதையோடு பயணிக்கிறது. சிறுவர்களின் கதையை எடுத்த இயக்குநர் அவர்களை மட்டுமே கதைக்களத்தில் உலவ விட்டிருக்கிறார். கோயம்பேடு மார்க்கெட்டும் அதில் இதுபோல் இருக்கும் மற்ற மனிதர்களும் தனித்து விடப்பட்டுவிட்டனர். நல்லதொரு கதை அம்சம் கொண்ட படமாக அமைந்ததால் ரசித்துப் பார்க்க முடிகிறது.

என்றென்றும் புன்னகை:

தனது அம்மா சிறுவயதிலேயே ஏமாற்றிவிட்டுப் போனதால் பெண்களை வெறுக்கும் ஜீவா, தனது நண்பர்களான வினய், சந்தானம் இருவரோடு சேர்ந்து திருமணம் செய்வதில்லை என்று சபதம் ஏற்கிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் சபதத்தை மீறி திருமணம் செய்து கொள்ள அவர்களை வெறுக்கும் ஜீவா, எப்படி திரிஷாவுடன் காதலில் விழுகிறார்... அவர்களுக்குள் ஏற்படும் பிரிவினையில் இருந்து மீண்டு இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.


எப்பவும் இரட்டை அர்த்த வசனங்களும் சிரிக்க முடியாத வசனங்களும் பேசிக் கொல்லும் சந்தானம் வீரம், என்றென்றும் புன்னகையில் சில ஒன் லைன் நகைச்சுவையில் சிரிக்க வைத்திருக்கிறார். எங்க வீட்டு நாய் செத்துப் போச்சு அதை அம்மாவால சீரணிக்க முடியலை என்றும் அவர் மனைவி சொல்லும் போது உங்கம்மா ஏன் செத்த நாயை சாப்பிட்டாங்க என்று கேட்பார். இப்படி நிறைய இடங்களில் சிரிக்க வைத்தார்.

பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆண்ட்ரியா மழைப் பாடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். நாசர் அப்பாவாக வந்து நிறைவாய் செய்திருக்கிறார். ஒரு முறை பார்க்கலாம்.

நீல ஆகாசம் பச்சக் கடல் சுவர்ண பூமி:

மலையாளப் படமான இதில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்திருந்தார். தனது காதலியைத் தேடி நண்பனுடன் பைக்கில் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்... அவர்களின் நிலை என எல்லாவற்றையும் அழகான படமாகத் தந்திருக்கிறார்கள். 


படம் ஆரம்பித்து நண்பர்கள் இருவரும் பயணிக்க ஆரம்பிக்கும் போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே பயணப்பட ஆரம்பித்து விடுகிறோம். அவ்வளவு நேர்த்தியான திரைக்கதை அமைப்பு... மலையாளத்தில் எவ்வளவு அருமையான கதைகளை படமாக ஆக்குகிறார்கள். நாமோ இன்னும் டாஸ்மார்க்கில்தான் கிடக்கிறோம் என்று நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. இது போன்ற நல்ல கதைகள் தமிழிலும் வர வேண்டும்.

-'பரிவை' சே.குமார்.