லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமனா நடிப்பில் வெளிவந்து பரபரப்பாக (!????) ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பையா'.
* காரில் பயணிக்கும் கதையில் அவ்வளவாக சுவராசியம் இல்லை.
* பல இடங்களில் அதே ரோடுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன விக்கிரமன் படப்பாடல் போல.
* தமிழ் படத்திற்கே உரிய லாஜிக் இல்லா காட்சிகள் அதிகம்.
* நீண்ட சண்டைக் காட்சிகள் அலுப்பைத் தருகின்றன.
* இரண்டு வில்லன் குரூப் இருந்தும் விறுவிறுப்பு குறைவு.
* படம் பெங்களூரில் தொடங்கி மும்பை போகிறது. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் படத்தின் பெயர் பையா என்று ஏன் வைக்கப்பட்டது?. தமனா மும்பையில் இரண்டு தடவை 'பையா' என்ற வார்த்தையை பயன்படுத்துவார் அதனால இருக்குமோ?.
* தமிழில் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' என்று ஒரு படம் உண்டு அதுபோல் 'பெங்களூரு டூ மும்பை' என வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்கிறது மனசு.
இயக்குநர்:
* நல்ல கதைகளை கொடுக்கும் புதிய இயக்குநர்கள் மத்தியில் இன்னும் சில லிங்குசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
* ரன்னும் சண்டைக் கோழியும் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிக்கவைத்தன. பீமா???
* காரில் துரத்துவதும் புழுதி கிளம்ப பல மைல்தூரம் கடப்பதும் இன்னும் எத்தனை இயக்குநர்கள் மனதில் இருக்கின்றனவோ தெரியவில்லை.
* லிங்குசாமி படம் என்றாலே சண்டைக்காட்சிகள் நீண்ட நேரம் இழுக்கப்படுவது எல்லாருக்கும் தெரியும் இதில் இன்னும் கொஞ்சம் அதிகம்.
* லிங்குசாமியிடம் இருந்து வரும் அடுத்த படமாவது அரைத்த மாவை அரைக்காமல்
மலிக்கா,
மேனகாஸாதிகா போல் புதிய மாவை அரைக்கட்டும்.
கார்த்தி:
* அழகாக உயரமாக கம்பீரமாக இருக்கிறார். ஆனால் நடிப்பு பருத்தி வீரன். ஆயிரத்தில் ஒருவன் படங்களோடு ஒப்பிடுகையில் அரைக்கிணறு கூட தாண்டவில்லை.
* இன்னும் நடனம் கற்க வேண்டும். அசைவுகள் வராததால் காதல் பாடல்களிலும் நடனம் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
* உங்களால் பாடல் காட்சிகளில் தமிழர்களின் தற்போதைய கனவுக்கன்னி தமனாவும் வீணடிக்கப்பட்டுள்ளதாக
துபாய்ராஜா,
பனித்துளி சங்கர் போன்றவர்கள் அதிக வருத்தத்தில் இருப்பதாய் தகவல்.
* பல இடங்களில் பருத்திவீரனை ஞாபகப்படுத்துகிறது உங்கள் நடிப்பு.
* சண்டைக் காட்சிகளில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்கும் உங்கள் நடிப்பு விசிலடிக்கச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்படியில்லை. இனி இது போன்ற கதைகளை தவிர்க்கவும்.
தமனா:
* தமிழகத்தின் தற்போதை புயல் அழகுப் பதுமை தமனா, பையாவில் ஏனோ ஒரு பிரயாணியாக பயணித்திருக்கிறாரே தவிர மனதில் ஒட்டவில்லை.
* பாடல் காட்சிகளில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை. அவருக்காக தனிப்பாடல் கொடுத்து இருக்கலாம் என்று
நாடோடி இலக்கியன் புலம்பித் தள்ளுகிறார்.
* அழகான அருவிப் பிண்ணனியில் (செட்டாமே!!!!!!!!!) தமனா இன்னும் அழகாய்....
* சாப்பிடும் காட்சியில் தனக்கே உரிய பாணியில் நல்லா பண்ணியிருக்கிறார்.
*
தேனம்மை,
சத்ரியன் ,
விக்னேஷ்வரியின் கவிதையைப் போல் அழகாய் இருந்தாலும் இன்னும் நல்லா நடிக்க வாய்ப்பு கிடைக்கும் படத்தில் நடிக்க முயலுங்கள்.
இசை:
* யுவனின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக ''அடடா மழைத்துளி'' பாடல் ரம்மியம்.
* பிண்ணனி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
* உங்களிடமிருந்து
பா.ரா,
திவ்யா ஹரி ஆகியோரின் அழகிய கவிதைகள் போல் இன்னும் அழகான அருமையான பாடல்களை எதிர்பார்க்கிறோம்.
சண்டைக்காட்சிகள்:
* முப்பது பேர் கையில் கத்தி, கட்டைகளுடன் சுற்றி வர அனைவரையும் கதாநாயகன் அடித்து நொறுக்குவது என்பது சினிமா கலாச்சரம் போலும். இதிலும் கலாச்சாரம் மீறப்படவில்லை.
* வில்லன் ஒரு அடியில் வீழ்ந்தாலும் பல அடிகள் வாங்கி ரத்தம் கக்கி கிடக்கும் நாயகன் மறுபடியும் எழுந்து அனாயாசமாக ஐம்பது பேரை அடிக்கிறார். இது எப்படி சாத்தியம் யோசிக்க மாட்டார்களா?
* ஆமா, எதிரி நூறு பேர் வந்தாலும் கதாநாயகன் கிட்ட மோதும்போது ஒவ்வொருத்தர வாராகளே அது ஏன்னே தெரியலை... எல்லாருமா சேர்ந்து தூக்கிப் போட்டு மி..........
இதுக்கு மேல இதுல சொல்ல ஒண்ணுமில்ல.
ஒளிப்பதிவு:
* படத்துக்கு அழகு மதியின் ஒளிப்பதிவு. படமுழுவதும் அவரது கைவண்ணம் அழகாய் இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில்...
பாடல்களுக்காகவும் ஒளிப்பதிவுக்காகவும் பையாவை ஒருமுறை திரையரங்கில் பார்க்கலாம்.
---------------------
எங்க வீட்டு செல்லக்குட்டி இப்ப விடுமுறைக்காக மதுரைக்கு போயாச்சாம். அவங்க முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களாம். முழுஆண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் 90க்கு மேலாம். பள்ளியில் நடந்த பேஷன் ஷோவிலும் நடனத்திலும் இரண்டாவது பரிசாம். இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....
-'பரிவை' சே.குமார்