மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

பிக்பாஸ் சீசன்-3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிக்பாஸ் சீசன்-3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 அக்டோபர், 2019

பிக்பாஸ் : 'வெற்றியாளன்' முகன்

(நீண்ட பதிவு... பொறுமையாய் வாசிக்கவும்)
Image result for bigg boss grand finale tamil

முகன்...

பிக்பாஸ் சீசன்-3 வெற்றியாளன்.

கவின் ஐந்து லட்சத்துடன் சென்ற பின் கவின் ஆர்மி + லாஸ்லியா ஆர்மி + விஜய் டிவி என மூன்றும் இணையும் போது லாஸ்லியாவே வெல்வார் என்று சொல்லப்பட்டது. என் மனசுக்குள்ளும் தர்ஷனை வெளியேற்றிய பின்னர் லாஸ்லியாவுக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றியது. எண்ணங்களைப் பொய்யாக்கி இருக்கிறது... எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்னும் வாசகம்.

சாண்டி, ஷெரின் வாங்க மாட்டார்கள் என்று நான் எழுதியும் இருந்தேன்... அதே நடந்தது... முகனா லாஸ்லியாவா என்ற தராசில் லாஸ்லியாவுக்குக் கொடுத்தால் இலங்கைக்காரி என்பதால் கொடுத்து விட்டார்கள் என அரசியல் பேசக்கூடும் என்பதால் முகனுக்குக் கொடுத்திருக்கலாம் என்றாலும் இம்முறை கிடைத்த வாக்குகளில் முகனே முன் நின்றான். மக்கள் எண்ணப்படி முகன் வென்றதாய்த்தான் தெரிகிறது.

முகன் வகுப்பில் கடைசிப் பெஞ்ச் மாணவன்... கெடா மாடு கணக்கா ஆட்டம் போடும் மாணவன் இல்லை என்றாலும் எதுக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இப்படியே உக்காந்திருப்போம்.... இங்கிட்டு சாண்டியும் அங்கிட்டு கவினும் இருக்காக... பின்ன என்ன வேணும் என்று இருந்தவன்தான் முகன்.

எதிலும் பற்றில்லாது... சண்டையோ சந்தோஷமோ அதிகம் கலந்து கொள்ளாது தனிமை விரும்பியாய்த்தான் அவன் ஆரம்ப நாட்களில் இருந்தான். இதற்குக் காரணம் அவன் வளர்ந்த நிலை... வளரும் பருவத்தில் நிகழ்ந்த வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவையாகத்தான் இருக்க வேண்டும்.

முகனின் மாற்றம் என்பது கமல் முகன் முன்னே வாங்க என்று சொன்ன தினத்தில் இருந்தெல்லாம் ஆரம்பிக்கவில்லை... தொடர்ந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்... அவனின் அம்மா, தங்கையின் வருகையின் பின்னரே.... யாருக்கும் விட்டுக் கொடுக்காதே... நீ நீயா விளையாடு என்ற அவர்களின் வார்த்தைகளே முகனை மெல்ல மெல்ல முன்வரிசை மாணவனாய் ஆக்கியது.

இன்னொரு விஷயம் கவனித்தீர்கள் என்றால் அபியின் வெளியேற்றமே முகனுக்கு மிகப்பெரிய, பரந்த இடத்தைக் கொடுக்க ஆரம்பித்தது என்பதை அறியலாம். ஆம் கவின் எப்படி லாஸ்லியாவைத் தன் பிடிக்குள் வைத்திருந்தானோ அப்படித்தான் அபியின் பிடிக்குள் முகன் இருந்தான். அவளுடன் பேசாதே... இவளுடன் பேசாதே... என்றும் எனக்காக நேரம் செலவிட முடியாதா உன்னால் என்றும் சொல்லிக் கொண்டே இருந்தார். லாஸ்லியாவின் நடவடிக்கைகள் கூட கவின் போனபின் ஆரம்ப நாட்களில் பார்த்ததைப் போல மாறியிருந்ததைக் கவனித்திருப்பீர்கள்.

அபி இருக்கும் போது மகிழ்வாக இருந்தாலும் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாதவனாய்த்தான் இருந்தான் முகன். அந்தக் கோபத்தின் அதீத வெளிப்பாடுதான் கட்டிலைக் கையால் குத்தி உடைத்தது... சேரை எடுத்து அடிக்கப் போனது எல்லாம்... அவன் சுதந்திரமாய் இருக்க முடியாமல் கட்டி வைத்ததில் அபிக்கும் பங்குண்டு. எனவே அபியின் வெளியேற்றம் என்பது முகனை முன்னோக்கி நகர வைத்தது என்று சொல்வதில் தப்பேயில்லை.

சேரன் வெண்டக்காய் வெட்டியதை மட்டுமே கேலியாகப் பேசும் நாம் முகன், சாண்டி, கவின் எந்தச் சண்டையில்... அதாவது வி ஆர் த பாய்ஸ் தவிர்த்து... மற்றவர்கள் சண்டையில் இடைபுகுந்து பேசியிருக்கிறார்கள்... தடுத்திருக்கிறார்கள்...என யோசித்தால் தர்ஷன் போல் இவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சாண்டி எப்பவும் என் பொண்டாட்டி சண்டை போட்டாலே போனை நோண்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்னு சொல்லிக் கடந்து விடுவார்... முகன் எதையும் கண்டு கொள்வதேயில்லை... கவினைப் பொறுத்தவரை அவன் சார்ந்த, அல்லது லாஸ்லியா சார்ந்த பிரச்சினைகளுக்கு மட்டுமே குரலை உயர்த்துவான்... அதுவும் வனிதா என்றால் அது இல்லக்கான்னு பக்கம் பக்கமாப் பேசிட்டு பதுங்கிருவான்... ஏன் லாஸ்லியா - சாக்சி சண்டையப்பக்கூட 'GEM' ஆகத்தான் அமர்ந்திருந்தான். எனவே சண்டைகளுக்குள் தன்னைக் கொடுக்காமல் கடைசி வரை இருந்ததில் இம்மூவரில் முகனை முதலாவதாய்ச் சொல்லலாம். ஷெரினை வனிதா தாக்கிய போது கூட தனியே போய் கேமராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

முன்னேற்றம் கண்டு முதல் பெஞ்சை நோக்கி நகர ஆரம்பித்த போது முகனை இழுத்து நிறுத்தக்கூடிய யாரும் அருகில் இல்லை... தர்ஷன் முகனை முன்னே கொண்டு வர தன்னாலான எல்லாக் காரியங்களையும் செய்தான்... இவர்களின் நட்பு ரொம்ப இறுக்கமான வாரங்கள் அவை. நெருக்கடியில்லாத சுதந்திரப் பறவையான பின் பாடல்கள், மகிழ்ச்சியின்னு தன்னை மாற்றி, கோபத்தைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் முகனின் வெற்றியை நோக்கிய பயணத்துக்கான புள்ளி தோன்றியது.

நீதானே... பாடல் முகனை இளவட்டங்கள் மத்தியில் கொண்டு நிறுத்தியது... அது கொடுத்த தாக்கம், மற்றவர்கள் மீது காட்டிய பரிவு என முகன் தன்னை மெல்ல மெல்ல மக்கள் விரும்பும் நாயகனாக மாற்றிக் கொண்டான். தர்ஷன் கூட ஷெரினில் விழத்தான் செய்தான்... ஆனால் முகன் தனக்கொரு காதலி இருக்கிறாள் என அபியை நல்ல தோழி எனத் தள்ளியே நிறுத்தினான். அபி தன் மீது பைத்தியமாக தான் இடம் கொடுத்ததை நினைத்து அழுதான்... எல்லாவற்றிற்கும் பொசுக்கென கண்ணீர் சிந்தும் அந்த முகம் சுலபமாக மக்கள் மனசுக்குள் நுழைந்து விட்டது.

கவின் வெளியேறியது... தர்ஷனை வெளியேற்றியது என இவ்விரண்டும் முகனுக்கு வெற்றியை நோக்கி நகர முக்கிய காரணிகளாய் அமைந்தது. தன் உழைப்பை ஆரம்பத்தில் கொடுக்கவில்லை என்றாலும் அம்பது நாட்களுக்குப் பிறகு மெல்ல மெல்லக் கொடுக்க ஆரம்பித்து... இறுதியில் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றிருக்கிறான் முகன்.

பிக்பாஸ் பல நேரங்களில் முரண்பட்டு நின்றாலும் இறுதி வெற்றியாளன் தேர்வில் மக்கள் மனசோடு ஒத்துப் போயிருக்கிறார். மகிழ்வும் வாழ்த்துக்களும் முகன்.

105வது நாள்...

கமலஹாசன் வந்தார்...

வெற்றியாளரை அறிவிக்கும் நாளல்லவா... நிறைய நிகழ்வுகள் இருக்கும்.. நால்வரில் இருவர் வெளியேற வேண்டும்.... இருவர் மேடை ஏற வேண்டும்.... நீண்டதொரு நிகழ்வாய் பிக்பாஸ் சீசன் - 3 ன் இறுதி நாள் அமைந்தது.

மக்களிடம் பேசி, லவ் யூ சொன்னவர்களுக்கு லவ் யூ டூ... லவ் யூ ஆல் சொல்லி... பிக்பாஸ் பார்ப்பது கேவலமானது எனப் பலர் சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் என ஆரம்பித்தார் கமல். 

அவர்கள் ஏற்பாடு பண்ணிய ஆட்கள் போலில்லை... மனதில்பட்டதைச் சொன்னார்கள்... அடுத்தவங்களைக் கேலி பண்ணினால் அவங்களுக்கு எப்படி வலிக்கும் என்பதை சாண்டி, மோகன் நிகழ்வைப் பார்த்து தன்னைத் திருத்திக் கொண்டதாய் ஒருவரும்... மகனைக் கணவனுக்கு காட்டமல் வைத்திருந்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைச் சாண்டியின் லாலா புலம்பல் மூலம் அறிந்து திருந்தியதாய் ஒரு குடும்பத் தலைவியும், லாஸ்லியாவின் அப்பா மகள் பாசம் பார்த்து தன் அப்பா திருந்தியதாய் ஒரு சிறுமியும் சொன்னது சிறப்பு.

கமல் வீட்டுக்குள் சென்றார். அவர்களுடன் பேசினார்... ஆளுக்கொரு கவிதையை வாசித்துப் பரிசளித்தார்.. அவர்களுடன் அமர்ந்து அவர்களைப் பற்றிய படங்களை அகம் டிவியில் ஓட விட்டார். முகனுக்கு ஸ்டுடியோ, நண்பர்கள்... சாண்டிக்கு ஸ்டுடியோ, மாணவர்கள்... ஷெரினுக்கு நாய்... லாஸ்லியாவுக்குப் பாட்டி, சர்ச், சொந்தங்கள் என மிக அழகான கவிதையான தொகுப்பு. எல்லாருக்கும் மகிழ்ச்சி.

சாண்டி சொன்னதைப் போல் கமலுடன் அருகே அமரும் அந்தத் தருணம் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லைதானே...? என்ன தவம் செய்திருக்க வேண்டும் இவர்கள் அவருடன் அமர, அணைத்துக் கொள்ள.... உங்க கூடவே வருவோம் சார் என சாண்டி அடம்பிடிக்க, பிக்பாஸோ அவரை விட்டுட்டு இன்னும் கொஞ்ச நேரம் வீட்டுல இருங்கடா... அவரு வெளியில கொஞ்சம் விளையடட்டும்ன்னு சொன்னதும் அவர் கைக்குள் தங்கள் கையைச் சிறையிட்டு சிவப்புக் கதவு வரைக்கும் வந்தார்கள். 

சாண்டி கமலின் கன்னத்தைக் கையால் வருடி முத்தமிட்டார். அந்த கையை பொக்கிஷமாய் சுமந்து திரிந்தார்.... இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்... ம்... அவர்களுக்கு அந்தக் கொடுப்பினை கிட்டியிருக்கிறது... நாம் பார்த்து ரசிப்போம்.

வெளியில் வந்தவர் மற்ற போட்டியாளர்களை எல்லாம் அழைத்து அவர்களுக்கெனப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். கஸ்தூரி தனியே வந்தார்... அவருக்கு அந்தியிலே வானம் பிஜிஎம் போடப்பட்டது... நாமும் தனியே வந்திருக்கலாமோ என வனிதா நினைத்தது கண்ணில் தெரிந்தது. 

மதுமிதா, சரவணன் மட்டும் அழைக்கப்படவில்லையா அல்லது அவர்கள் வர விருப்பப்படவில்லையா என்பது தெரியவில்லை. இருவரும் இல்லாதது ஒரு குறைதான்.

பிக்பாஸ் பரிசுடன் கொடுக்கப்படும் கோப்பையை சீசன்-2 வெற்றியாளினி ரித்விகா கொண்டு வந்தார். உள்ளே போய் கோப்பையைக் காட்டிட்டு ஒரு ஆளை இங்க கொண்டு வந்துருங்க என்று அனுப்பி வைத்த கமல், யார் வெல்வார் என சக போட்டியாளர்களிடம் கேட்க சேரன், அபி உள்ளிட்ட பெரும்பாலானோர் முகன் என்றார்கள். கவினும் வனிதாவும் லாஸ்லியாவைச் சொன்னார்கள். சாக்சி ஷெரினை சொல்ல, பாத்திமாபாபு, மீரா போன்றோர் சாண்டியைச் சொன்னார்கள். யார் என்ன நினைத்தாலும் மக்கள் முடிவுதானே வெல்லும் என்றார் கமல்.

நீங்கள் யாரைப் பார்க்கணும் எனகேட்டு அவர்கள் கேட்ட தர்ஷன், கவின், சாக்சியைக் காட்டினார்... அதேபோல் பார்வையாளர்களில் இருந்து சிலரை ஒவ்வொருவரிடமும் அன்பாய்ப் பேசவிட்டார். முகனிடம் பேசிய பெண் ரொம்பவே வழிந்தார். அவருக்காக முகன் ஒரு பாடலின் இரு வரிகளைப் பாடிய போது பாரதிராஜாவின் வெள்ளுடைத் தேவதைகள் தன்னைச் சுற்றி நிற்பதாய் நினைத்திருப்பார் போலும்... விண்ணிலிருந்து தரைக்கு வந்தபோது அருகே நான்கு தடிமாடுகள் எழுந்து நின்றன.

ரித்விகா உள்ளே போய் என்னங்கடா ஜாலியா இருக்கீங்க... உங்களுக்குப் பயமோ பதட்டமோ இல்லையான்னு கேட்க, என்ன பதட்டம்... என்ன பயம்ன்னு கேட்டுட்டு காபி போடுறோம் குடி.... பாட்டுப் பாடுறோம் கேளுன்னு சொல்லிட்டு அதையே செஞ்சானுங்க.... ரித்விகாவையும் ஆட வச்சானுங்க... அப்புறம் கோப்பையுடன் ஷெரினையும் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டார்... ஸோ ஷெரின் எவிக்டேட்... 105 நாட்களைக் கடந்து நான்காம் இடம் பிடித்தார்.

கமலுடன் பேசும் போது யாருடனும் சண்டையை வளர்த்ததில்லை நீங்க என்ற கமலின் கேள்விக்கு ஆமா சார்... அவங்க கூடத்தான் இருக்கப் போறோம்... பின்னே சண்டையைத் தூக்கிச் சொமந்து என்னாகப் போகுதுன்னு சொன்னார். அருமை... இதை நாமெல்லாம் பின்பற்றினால் வீட்டுக்குள் சண்டை வீம்பாய் நிற்காது. பதினாறு பேரில் பனிரெண்டு பேருடன் நட்பாய் இருந்ததாய்ச் சொன்னார். கிரேட்.

ஒரு சிறு பரிசளிப்பு 16ல் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு மட்டும்...

விளையாட்டை மாற்றியமைப்பவன் - கவின்...

வீரமும் விவேகமும் - வனிதா...

ரொம்ப ஒழுக்கமானவர் - சேரன்....

நட்புக்கு இலக்கணம் - ஷெரின்...

ஆல் ரவுண்டர் - தர்ஷன்....

வனிதா கமலிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டார், தன் பிள்ளைகளை அழைத்து கோப்பையைக் கொடுக்க வைத்தார். கவின் தான் முன்முடிவுடன் விளையாடியதாகச் சொன்னான். சேரன் நற்பண்புகளை மகாநதி படத்துக்கு வேலை செய்தபோது கமலிடம் கற்றுக் கொண்டதாய்ச் சொன்னார். அபியுடன் விருதைப் பகிர்ந்து கொண்டார் ஷெரின். மக்கள் தனக்காக கண்ணீர் விட்டது மிகப்பெரிய விருது என்றார் தர்ஷன்.

தர்ஷனைப் போட்டியின் வேகத்தைக் கூட்டவே பலி கொடுத்தார்கள் என்பதால் கமலின் மனசுக்குள் வருத்தம் இருந்திருக்கும் போல, அந்தக் காரணத்தை மனதில் வைத்து தனது ராஜ்கமல் பிலிம்ஸில் அவரை இணைத்துக் கொண்டார். போராட்ட குணம் கொண்ட தர்ஷன் சினிமாத்துறையில் வெல்லட்டும். அவரின் அம்மாவின் கண்ணீர் கஷ்டத்தால் வரவில்லை... மகிழ்வால் வந்தது... எல்லாருக்கும் நன்றி சொன்னார்.

அடுத்ததொரு வெளியேற்றம்... இம்முறை இல்லத்துக்குள் தன் மகள் ஸ்ருதியை அனுப்பினார்... அவரும் போய் ஆடிப்பாடி மகிழ்ந்து லாஸ்லியாவை அழைத்து வந்தார். கவின் உடைத்து போனான்... மகளுக்கு வெற்றி வாய்ப்பு போச்சேன்னு அம்மா சோகமாய் அமர்ந்திருந்தார். 

ஸ்ருதி பேசிச் சென்றதும் லாஸ்லியா பேசினார்... கவின் தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததைச் சொல்லி நன்றி சொன்னார். அம்மாவுக்கு நன்றி சொல்லி சுருக்கிட முடியாது என்பதால் லவ் யூம்மா என்றார். 

இடையிடையே அபி, சாக்சி, வனிதா, யாஷிகான்னு பலர் ஆடினாங்க... பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு சிறு நகைச்சுவை நிகழ்ச்சி...  ராஜேஷ் வைத்யாவோட வீணை இசையில் கமலின் பாடல்கள்... அருமை, அட்டகாசம்... 

என்ன மனுசன்யா இந்தாளு.... எப்பா... வீணையில் விளையாடுறார்... கமலும் ஒரு பாடல் பாடினார்... மோகன் வைத்யாவிடம் உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் பிறந்ததுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் கமல். அதுல நீயும் பிறந்திருக்கியே என்கிற உள்குத்து இருப்பதாய்த்தான் தெரிந்தது. 

பதினாறு பேர் இருந்த வீட்டுக்கள் இருவர் மட்டும்.... வீட்டையே சுற்றினார்கள்... பாட்டுப் பாடினார்கள்... எல்லாம் பண்ண, பிக்பாஸ் கடைசியாய் அவர்களுடன் பேசினார்.... இந்த முறை பிக்பாஸ் கண்டிப்பாய்ப் பேசியதுடன் கலாய்த்துப் பேசியதே அதிகம்... அது வசீகரக் குரல், எல்லோரையும் வசீகரிக்கும் குரல், மிஸ் யூ சிஸ்யா... ஜயா முகன்... என்ற போது பிக்பாஸ் உடைந்தார்... நமக்கும் எதையோ இழந்தது போல்தான் இருந்தது. மிஸ் யூ பிக்பாஸ்.

வெளியில வாங்க... வரும்போது விளக்கை அணைத்துவிட்டு வாங்கன்னு மெயின் சுவிட்சைக் காட்ட, அதை அணைக்கும்போது அதிலிருந்த கைபிடி உறை கழண்டு விழுந்தது. எடுத்து மாட்டினார்கள்... பிக்பாஸ் இல்லம் ஒவ்வொரு பகுதியாய் இருட்டுக்குள் போனது. பதினாறு பேரை தன்னுள் சுமந்து ஒரு ஜீவனுள்ள தாயாய் இருந்த இல்லம் தன்னை இழந்தது. ஒளியோடு பார்த்த இல்லத்தை ஒளியிழந்து பார்த்த போது வருத்தமே மிஞ்சியது.

வெளியே வந்தவர்களைக் கமல் நின்று அழைத்து சாரட் போன்று ஜோடிக்கப்பட்ட காரில் ஏற்றி, ராஜா கையை வச்சா பாடலுக்கு ஆடியபடி, இருபுறமும் பெண்கள் பூத்தூவ, செயற்கை விளக்கைச் சுமந்து நடக்க, ஆட்டமும் சிரிப்புமாய் சாரட்டில் மேடைக்கு அழைத்து வந்தார் கமல்... ஆஹா... இதுவே போதுமே... வேறென்ன வேண்டும்.

மேடையில் பிகிலு படப்பாடலை முகன் பாட, சாண்டி ஆடினார்... இது இப்பத்தானேய்யா வெளியிடப்பட்டது... உங்களுக்கு எப்படின்னு கமல் கேட்க, திருப்பள்ளி எழுச்சிக்குப் போட்டப்போ பாட்டுப் பிடிச்சுப் போக, மறுபடியும் பிக்பாஸ்கிட்ட நேயர் விருப்பம்ன்னு சொல்லி போடச் சொன்னோம்... அவரும் போட்டார்... அதான்... என்று விளக்கினார்கள்.

விஜய் டிவியின் முதலாளி மேடைக்கு வந்தார்... இந்தச் சீசன் மிகப்பெரிய வெற்றி என்றார்... இந்தச் சீசனில் மட்டும் 200 கோடி ஓட்டுக்கள் கிடைத்ததாகவும் இறுதிப் போட்டிக்கு மட்டும் 20 கோடி ஓட்டுக்கள் வந்திருக்கின்றன என்றும் சொன்னார். மிகப்பெரிய வெற்றிதானே இது... இதனால்தான் கடந்த இரண்டு சீசனைவிட இந்த சீசனின் இறுதிப் போட்டிக்காக பணம் தண்ணீராய்ச் செலவிடப்பட்டிருக்கிறது.

கொஞ்ச நேரம் விளையாண்ட கமல், முகனை வெற்றியாளர் என்றார்....

முகனின் குடும்பம் கொண்டாடியது... சாண்டியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது....

லாலாவை மேடைக்கு கொண்டு வந்தார் சாண்டி...

சாண்டியின் பரிசு சாண்டியிடமே இருக்கு என்ற கமல் வெற்றிக் கோப்பையை முகன் கையில் கொடுத்தார். காசோலை வடிவ அட்டையும் கொடுக்கப்பட்டது.

இந்த 105நாள் நல்லாயிருக்கு, நல்லாயில்லை, பித்தலாட்டம், ஏமாற்று வேலை என்றெல்லாம் மாற்றி மாற்றி எழுதியிருக்கிறேன்... இது 86வது பதிவு என்பது என்னால் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தினமும் இதற்கென நேரம் ஒதுக்கி எழுதுதல் என்பதே மிகப்பெரிய பணி... அதற்கான நேரமும் காலமும் அமைந்தால்தான் இது சாத்தியமானது. நிறைய உறவுகளையும் நட்புக்களையும் கொடுத்திருக்கு. உண்மையில் பிக்பாஸ் எழுதியதில் மனநிறைவே கிடைத்தது.

மிஸ் யூ பிக்பாஸ்...

மிஸ் யூ சாண்டி, முகன், சேரன், ஷெரின் மற்றும் அனைவரும்...

மிஸ் யூ கமல்...

என்ன கலைஞன்யா கமல்... அரசியல் விடுத்து இன்னும் சில காலம் நடிக்கலாம்... யோசியுங்கள் கமல்...

எத்தனை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறத் தகுதியானவருக்கே கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

வாழ்க்கை வளமாய் அமையட்டும் முகன்.

நன்றி அனைவருக்கும்.

உண்மையில் இந்தப் பதிவு எழுதி முடிக்கும் போது மனநிறைவை விட ஒரு இனம் புரியாத வேதனை மனசுக்குள்... ம்... விரைவில் வேறு ஒரு தொடருடன் சந்திப்போம்... மாற்றங்கள்தானே வாழ்க்கை.

பிக்பாஸ் நிறைவு பெற்றது.
-'பரிவை' சே.குமார். 

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பிக்பாஸ் : அரைச்ச மாவை அரைப்போமா...

Image result for bigg boss 104 day images

104ம் நாள்...

ஆண்டவரின் வருகை.

எப்பவும் கதவு திறந்ததும் கமல் உள்ளிருந்து வருவார். இன்று முதலில் உள்ளே ஆட்கள் கதவைத் தள்ளித் திறப்பதைக் காட்டினார்கள். சரி அப்பத் தலைவர் உழைப்பவர்கள் பற்றி ஒரு பெரும் கருத்துக் களமாடுவார் போலும் என நினைத்தால் அஃதே நிகழ்ந்தது.

இந்தக் கதவு தானியங்கி என்றுதான் நீங்கள் எல்லாம் நினைத்திருப்பீர்கள்... இது ஆட்களால் இயக்கப்படுவது... அவர்கள் தள்ளித் திறந்தால் மட்டுமே நான் அரங்குக்கு வரமுடியும்... அவங்க இல்லைன்னா நான் அங்கிட்டு நின்னுதான் பேசணும் என ஆரம்பித்து, அவர்களை அழைத்து அறிமுகம் செய்து, கதைவை இழுத்து மூடச் சொல்லி, இதற்கே ஆள் தேவையென்றால் பிக்பாஸ் வீட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள் என்பதை அடுக்கி நாடு வரைக்கும் நகர்ந்தார். 

இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது... இவர்கள் எல்லாம் நூறு நாள் வேலைக்காரர்கள் போல கம்மாய்கரையில் படுத்துக் கதை பேசிவிட்டு காசு வாங்கவில்லை 24 மணி நேரம் கடுமையாய் உழைத்து... அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை மனநிறைவுடன் பெறுகிறார்கள். இப்படிப் பலருக்கு வேலை கிடைப்பதாலேயே நான் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டிருக்கிறேன் என்றார்.

மேலும் உழைப்பாளிகள், விவசாயம், அரசு ஊழியர்கள் எனப் பேசி... கஜா புயலின் போது மின்சார வாரிய ஊழியர்கள் வேலை பார்த்த விதம் குறித்து, மேலே தொங்கிக் கொண்டு சாப்பிட்டதைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.

கஜாப் பாதிப்பை மற்றவர்கள் காரிலும் ஹெலிகாப்டரிலும் போய் பார்த்து வந்தார்கள். நான் மக்களோடு மக்களாகப் பயணித்து மின்சார ஊழியர்களுடன் பேசி, போட்டோ எடுத்து வந்தவன் என்றெல்லாம் மய்யமாய்ப் பேசினார். 

எதுவுமே இல்லாத இடத்தில் கமல் என்ன செய்ய முடியும்...? அரசியல்தான் பேச முடியும் இல்லையா...? அதைத்தான் செய்தார்... கொஞ்சம் அதிகமாகவே செய்தார்... அதான் நமது அம்மாவுல கமலுக்கு எதிராப் பொங்கியிருப்பானுக போல... காற்றுதான் பேனர் விழக் காரணம் அதைக் கைது செய்யுங்கள் எனச் சொல்லும் மகா மேதாவி அமைச்சர்களைப் பெற்ற தமிழகம் அல்லவா.?

என்னமோ பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டிகளும் பிரச்சினைகளும் நிறைந்து இருப்பது போல் வெள்ளிக்கிழமை நிகழ்வைப் பாருங்கள் என்று சொன்னார்... அங்க என்ன இருக்குப் பார்க்க... காலையில எப்பவும் போல விடிஞ்சி வெள்ளக்கோழி கூவி, வெள்ளாடு மேயப் போனதுக்குப் பின்னால, எழுந்து வர்ற கோவில் மாடு மாதிரி எட்டு மணிக்கு மேல பாட்டுப் போட்டானுங்க...

எங்கெங்கே கதவிருக்கோ அங்கங்க இருந்து ஆட்கள் வந்தார்கள்... இந்த ஆட்டம் எல்லாம் ஒத்திகை பார்த்ததுதான் போலும்... உள்ளிருக்கும் நால்வரும் வந்தவனுகளோட சேர்ந்து ஆடினார்கள். ரொம்ப நேரம் ஆடுனாங்க... அப்புறம் ஆளப் போறான் தமிழன் பாட்டுக்கு சாண்டியையும் முகனையும் தூக்கியும் ஷெரினையும் லாஸ்லியாவையும் கை பிடித்து அழைத்தும் கொண்டு வந்து சிகப்புக் கதவுக்கிட்ட நிறுத்திக் கைகாட்டினார்கள். என்ன சொன்னாங்கன்னு தெரியலை... இந்தக் கதவு என்னடா பாவம் பண்ணுச்சு... அதை படாதபாடு படுத்தி எடுத்து வச்சிட்டீங்களேடான்னு சொல்லாமல் சொன்னானுங்க போல.

ஆட்டம் முடிஞ்சதும் எப்பவும் போல அட்டகாசம் குருநாதா.. அதகளம் குருநாதா, நன்றி குருநாதா... நான் ஆப்பி... நீங்க ஆப்பியான்னு சாண்டி கேட்டுக்கிட்டு இருந்தார். அப்புறம் எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து அனுப்பினார்கள்... அதையும் தின்னானுங்க...

அப்புறம் வெள்ளைப் பனியனைக் கொடுத்து உங்க அன்பை, நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்துக்கங்கன்னு சொல்ல, பக்கம் பக்கமாக் கதை, கவிதை, கட்டுரையெல்லாம் மாற்றிமாற்றி எழுதிக் கொண்டார்கள். சில இடங்களில் படம் வரைந்து பாகமெல்லாம் குறித்தார்கள்.

அடுத்து கமல் வந்தார்... எல்லாரும் தனித்தனியாப் பிக்பாஸ்கிட்ட பேசியதில் சோகம், வருத்தம், மகிழ்ச்சி, நகைச்சுவை என எல்லாமே மிக்சர் மாதிரிக் கலந்து இருக்கு... அதையும் நீங்க கண்டிப்பாப் பார்க்கணும்ன்னு கண்ணடிச்சிட்டுப் போய்விட்டார்... 

ஆமா இப்பவும் அந்தக் கதவை மனிதர்கள்தான் திறந்தார்கள்... 

அகம் டிவி வழியே நாமும் அங்கிருந்த பார்வையாளர்களும் அகத்துக்குள் போய் அவனுக பேசினதைப் பார்க்க ஆரம்பித்தோம்.

இந்த 104 நாள்ல 101 தடவையாச்சும் கேட்கப்பட்ட கேள்விகள்... 

அதே பதில்கள்... 

ஒண்ணும் புதுமையில்லை...

ஒண்ணுமில்லாத வாய்க்கு பொரியரிசியை அள்ளிப் போட்டது மாதிரி...

'இந்த வீட்டில் எதைத் தவற விடுவீர்கள்..?'

'மீண்டும் முதலில் இருந்து விளையாண்டால் எதை மாற்ற நினைப்பீர்கள்..?'

'இங்கே இழந்ததும் பெற்றதும் என்ன..?'

'இந்த வீட்டிற்குச் சொல்ல நினைப்பது என்ன...?'

'கடைசியா மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?'

இப்படியான கேள்விகளை நால்வரிடமும் மாற்றி மாற்றிக் கேட்டார் பிக்பாஸ்... 

பதில்கள் பெரும்பாலும் ஒரே மாதியாகத்தான் இருந்தன... நாமினேசனுக்கு கவின் சொல்லிக் கொடுத்துச் சொன்ன கருத்துப் போல.

ஒவ்வொரு முறையும் நாமினேசன் பண்றதும் பின்னே அவங்ககிட்ட பேசுறதுமே கஷ்டமாயிருந்துச்சுன்னு சாண்டியும்... 

கோபத்தைக் குறைச்சிக்கிட்டேன், நிறைய நட்புக் கிடைத்ததுன்னு முகனும்... 

மக்களோட கைதட்டலை இடையில் இழந்ததை நினைத்து வருந்தினேன் என ஷெரினும்... 

இங்க விளையாடத்தான் வந்தேன் ஆனா அதைவிட்டுட்டு வேற மாதிரி பொயிட்டேன்னு லாஸ்லியாவும் சொன்னாங்க.

ஆனாலும் ஒரு ரியாலிட்டி சோவுல எதுவுமே இல்லாம பத்துநாளை ஓட்டுறதுங்கிறது உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்... அதைத் திறம்படச் செய்யும் விஜய் டிவிக்கும் பிக்பாஸ் குழுவுக்கும் கமலுக்கும் வாழ்த்தை இப்பச் சொல்லலைன்னா பின்னே எப்பவும் சொல்ல முடியாது.

சென்ற சீசன்களில் இங்கு இருந்தவர்கள் எல்லாம் என்னடா கூத்தடிக்கிறானுங்க... நம்மளை வச்சிச் செஞ்சானுங்களேன்னு நினைச்சுச் சிரிக்கலாம்... சிரிக்கலாம்... சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்... ஆனா நாம பொறுமையாப் பார்க்க வேண்டிய கட்டாயாமாகிப் போச்சு... பின்னே இதை எழுதணுமே.. .கடுப்படிக்கிறானுங்க யுவர் ஆனர்.

எல்லாருக்கும் முடிச் சுத்தம், முகச் சுத்தம், நகச் சுத்தம், பாதச் சுத்தமெல்லாம் பண்ணி பளபளன்னு ஆக்கிட்டானுங்க... பவுடர் போட்டா பன்னிக்குட்டியும் பார்க்க நல்லாயிருக்கும்ன்னு சொல்ற மாதிரி, சும்மா எல்லாரும் ஜம்முன்னு இருந்தாங்க. அப்புறம் எல்லாரையும் புகைப்படம் எடுத்தார்கள். 

அவங்களுக்கு வெள்ளிக்கிழமை ரொம்ப மகிழ்வான பொழுதாய் நகர்ந்திருக்கும் போல, நமக்கு மலராத பொழுதுதான். அசுரன் பார்த்த மகிழ்ச்சி மனசுக்குள் இருந்ததால் தப்பித்தேன்.

மறுக்கா கமல் வந்தார்... அகம் டிவி வழியே உள்ளே போனார்... பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த நடிகர், நடிகைகள் மாதிரி நால்வரும் அமர்ந்திருந்தாங்க... 

கமல் குசலம் விசாரித்து என்னத்தைடா பேசுறது... எதாவது ஒரு கருமத்தைச் செஞ்சிருந்தா அதுல ஆரம்பிக்கலாம்... இவனுக தின்னுட்டுத் தூங்கியிருக்கானுங்க... பத்தாததுக்கு வெளியே போனவனெல்லாம் வந்து விருந்து சாப்பிட்டுப் போயிருக்கானுங்க... அவனுகளைப் பற்றிக் கேட்டா இவனுக கதை எழுத ஆரம்பிச்சிருவானுங்க... இப்ப என்ன செய்யலாம்ன்னு யோசிச்சி... பிக்பாஸ் கேட்ட கேள்விகளை மீண்டும் மாற்றிக் கேட்டார்.

லாஸ்லியாவை செய்தி வாசிம்மா... பிக்பாஸ் வீட்டு நிகழ்வை ஒரு செய்திச் சுருக்கமாத்தாம்மான்னு சொல்ல, அதுவும் ஒரு வழியாப் பேசிச்சு... அதுல மக்கள் மனசுல யார் இடம் பிடிக்கிறாகளோ அவங்க வெளியேற்றப்படுவாகன்னு சொன்னுச்சு... கமலும் கண்டுக்கலை... லாஸ்லியாவெல்லாம் மக்கள் மனசுல இடம் பிடிக்காமத்தானே இறுதிக்கு வந்திருக்கு. கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் சொன்னது சரிதான்.

லாஸ்லியா முடிச்சதும்... அய்... பாருங்க... இப்ப நியூஸ் வாசிக்கிறச்சொல்லோ கைகால் ஆட்டிக்கின்னு வாசிக்கலை பாருங்க... இப்பத்தான் அவங்க செரியா நீயூஸ் வாசிக்கிறாங்கோ... இத்துக்கு யார் காரணங்கிறே... அல்லாம் நம்ம பிக்பாஸ் வூடுதான் நைனான்னு கமல் பேசினார்.

அப்பறம் முகனை நீதானே பாட்டை நேயர் விருப்பமாய்ப் பாடச் சொன்னார்... அந்த வரிகளில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது. அதுவும் முகன் இரு மீன்கள் என உச்சஸ்தாயிக்குள் நுழையும் போது நம்மளை அறியாமல் பயபுள்ள கலக்குறான்னு சொல்லத் தோணுது. உங்க ஸ்டுடியோவை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன்... அதை அனுபவித்தவனுக்குத்தான் மிஸ் பண்ற வலி தெரியும்... நான் அனுபவித்திருக்கிறேன்னு கமல் சொன்னார்.

அடுத்து சாண்டி, நாலு பேர் இறுதியில் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றிருந்தால் எப்படிப் பேசியிருப்பார்கள்ன்னு வனிதா, சேரன், மோகன், மீராவை வைத்து காமெடி என்ற கண்றாவியைப் பண்ணினார். ஏன் தர்ஷன், கவின், அபிராமி, சாக்சியெல்லாம் சேர்த்திருக்கலாமே.... நட்புடா... பாசம்டா... நேசம்டா...

சேரன் சண்டைக்குப் பின் எடுத்துச் சொல்லி புரிய வைப்பேன் என்றதை இவர் காமெடி ஆக்கினார். சண்டைகளின் போது இவர் அங்கு போவதேயில்லை... கேட்டால் என் பொண்டாட்டி சண்டை போட்டாலே நான் விலகிப் போயிருவேன்னு சொல்வார்.... இங்கே சேரனைக் கிண்டலடித்தார்.

மற்ற மூவரையும் அப்படியே... இது தேவையில்லாத ஆணி... நான்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன்... மற்றவனெல்லாம் முட்டாள் என நினைக்கும் ரகம்... மற்றவர்களைக் கேலி செய்தே நூறு நாட்களை ஓட்டியவர் இறுதிப் போட்டியில் நிற்கிறார்... காரணம் அவரின் நகைச்சுவை என்றாலும் அடுத்தவரைக் கேலி செய்வது தவறான செயல் என்பதைச் சாண்டி இறுதிவரை புரிந்து கொள்ளவேயில்லை... 

அதை வெகுவாக ரசித்த கமலும் எடுத்துச் சொல்லவில்லை... இன்னும் சொல்லியிருக்கலாம் என்று வேறு சொன்னார்.

அடுத்து ஷெரினின் போட்டோக்கள்... வந்தபோதும் இப்போதும் இருக்கும் மாற்றங்களைக் காட்டும் விதமாக பகிரப்பட்டது... இது சில தினங்களுக்கு முன் இணையத்தில் கேலி பண்ணிக் கலக்கிய போட்டோ... அதைப் போட்டு எவ்வளவு மாறிட்டீங்க... அழகாயிட்டீங்க... சினிமாவுல மறு பிரவேசம் கண்டிப்பாக இருக்குன்னு சொல்ல, நானே இவ்வளவு ஒல்லியாயிட்டேங்கிறதை என்னோட படங்கள் போடும்போது உணர்ந்திருக்கிறேன் சார் என்றார் ஷெரின். 

ஆம் ஷெரின் அழகாய் மாறியிருக்கிறார்... லாஸ்லியா பெருத்திருக்கிறார்... இப்பச் ஷெரின் எல்லாருக்கும் டார்லிங்தான்... அப்ப லாஸ்லியா...? கவினுக்குத்தான் டார்லிங்... என்ன சரிதானே.

சென்ற சீசன்களில் எல்லாம் இருவர் மட்டுமே இறுதி நாட்களில் இருந்ததாய் ஞாபகம்... இப்போ நால்வர் இருக்கிறார்கள்... இவர்களில் ஒருவர் போகவேண்டும் அதை நாளை செய்வோமே... அதுவரை சந்தோஷமா இருங்களேன்னு சொல்லிட்டு கமல் போக, வீட்டுக்குச் சாப்பாடு வந்தது. சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்று மாலை ஆறு மணிக்காம்... எப்படியும் மூணு மணி நேர நிகழ்வாச்சும் இருக்கும்... நிறைய நிகழ்வுகள் இருக்கும்... நல்லாவும் இருக்கும்ன்னு நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

நாளைய பகிர்வே கடைசிப் பகிர்வு இந்தப் பிக்பாஸ் சீசன்-3க்கு... 

நாளையுடன் சேர்த்து மொத்தம் 86 பதிவுகள்... தொடர்கதைகள் பகிர்ந்தபோது, அதுவும் வாரம் ஒன்றென 80 பகுதிகள், 40 பகுதிகள் என எழுதியிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து 85 நாட்கள் எழுதியிருக்கிறேன் என்பது என்னளவில் மிகப்பெரிய விஷயம்... என்னைப் பதிவெழுத வைத்த அனைவருக்கும் நன்றி.

பிக்பாஸ் எழுதுவதை மிகப்பெரிய குற்றமென நட்புக்கள் சொன்ன போதும் , நான் எழுதிய ஒவ்வொரு பதிவும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் சிறப்பாய்த்தான் இருந்தது. 

என் எழுத்தில் நிறைய மாற்றங்களைச் செய்து பார்க்க முடிந்தது... 

நகைச்சுவையாய்... விமர்சனப் பார்வையாய்... நிகழ்வுடன் சமூகப்பார்வையும் சேர்த்து... என எல்லா விதமாகவும் எழுத முடிந்தது. 

என் வலைப்பூவில் திண்டுக்கல் தனபாலன் அண்ணன் தொடர்ந்து கருத்துச் சொல்லி ஊக்கப்படுத்தினார். சகோதரி நிலாமதியும் கருத்துச் சொல்லித் தொடரச் சொன்னார். ஸ்ரீராம் அண்ணன். ஜி.எம். பாலசுப்ரமண்யம் ஐயா, வெங்கட் நாகராஜ் அண்ணன் எனச் சிலரும் அவ்வப்போது கருத்துச் சொன்னார்கள். அனைவருக்கும் நன்றி.

அதேபோல் பிரதிலிபியில்தான் எனக்கு 150 புதிய நட்புக்கள் கிடைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி. இதை எப்போதும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை என்றாலும் பிக்பாஸ் எழுத ஆரம்பித்தபின் அதற்காகக் கிடைத்தது உண்மையில் பெரிய விஷயம்தான். 

பிரதிலிபியில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திய சகோதர, சகோதரிகள் டாக்டர் பிரணிதா, புவனா ராஜபாண்டி, சாரு, சிவா குட்டி, கண்மணி, சந்தியா அருண்குமார், சுந்தர் ஜி, சின்ன ராஜூ, ASivarun varun, Rajesh Sen, சுவாதி, அனாமிக்கா, மனோ அம்மா உள்ளிட்ட (இன்னும் சில பேர்களை மறந்திருக்கலாம் மன்னிக்கவும்) அனைவருக்கும் நன்றி.

என் மற்ற பதிவுகளிலும்... அதாவது இனிப் பிரதிலிபியில் பகிர்ந்து கொண்டால்.. ஹி...ஹி... உங்கள் கருத்துக்களை அன்போடு எதிர்ப்பார்ப்பேன்... மறக்காமல் வாங்க... என்றும் உறவோடும் நட்போடும் பயணிப்போம். 

நன்றி.

பிக்பாஸ் நாளை முடியும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 5 அக்டோபர், 2019

பிக்பாஸ் : காதலே... காதலே...

காதலே... காதலே...
தனிப் பெருந்துணையே...
கூட வா... கூட வா...
போதும்... போதும்...

Image result for காதலே காதலே 96 பாடல் வரிகள்

ந்தப் பாடலை கவின் உள்ளே வந்ததும் லாஸ்லியாவின் கண்கள் பாடியது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் 96 படம் வந்து ஓராண்டுகள் முடிந்திருந்தாலும் இந்தப் படம் கொடுத்த தாக்கம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது... போற்றினாலும் தூற்றினாலும் ஏதோ ஒரு விதத்தில் மனசுக்குள் உட்கார்ந்து இருக்கத்தான் செய்கிறது. ஒராண்டுகள் கடந்தும் மக்கள் மத்தியில் நின்ற படங்களில் சமீபமாக எதுவும் இல்லை 96த் தவிர... 

ஜானகி கணவனுக்குத் தெரியாமல் ராமுடன் சுற்றினாள் என்றோ... ஒரு வருடம் முடிந்து திவசம் வைக்கும் போதும் இதற்காக அழுகிறார்கள் என்றோ எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்... சாதாரணமாகக் கடந்து விடக் கூடிய படமே என்றாலும் மக்கள் மனதை விட்டுக் கடந்து செல்லாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருக்கக் கூடிய வகையில் படமெடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்... அப்படியே விஜய் சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் ராம்-ஜானுவாக வாழ்ந்ததற்க்கு...

இந்த ராம்- ஜானு. ஜானுவின் மகளை வைத்து நான் எழுதிய மூன்று பதிவுகளையும் மறுபடியும் வாசிக்க நினைத்தால் கீழே இருக்கிறது இணைப்பு... தமிழ் ஒன் இண்டியா தளத்தில் ராமின் கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்... (எல்லாம் ஒரு விளம்பரம்தான்).




வாங்க பிக்பாஸ் வீட்டுக்குள் 103 நாள் நிகழ்வுகளுக்குப் போவோம்...

Image result for biggboss-3 day 103 images

இந்த வாரம் பூராவுமே வெளியில இருந்து ஆட்களை வாடகைக்குப் பிடிச்சாந்துதான் ஆட விடுறானுங்க... இன்னைக்கும் அப்படியே... வந்தவனுகளோட இருக்கவனுக எல்லாரும் செமையா ஒரு ஆட்டம் போட்டானுங்க... வனிதாக்கா நேற்று தூங்கியதால் இன்னைக்கு ஆடணும்ன்னு சொல்லிட்டானுங்க போல அதுவும் தைய்யத் தக்கான்னு குதிச்சிச்சு... எல்லாருமா ஆடிட்டுப் போய் அவனவன் வேலையைப் பார்க்கப் பொயிட்டானுங்க...

கவின் இல்லாததால் கக்கூஸ்க்கும் சிவப்புக் கேட்டுக்கும் வேலையில்லை... நூறு நாள் வேலைக்கு லீவு விட்டுட்ட மாதிரி, வெயில் காலத்து வயல்வெளி மாதிரி காஞ்சி போயிக் கிடந்துச்சு.

போட்டியாளர்கள் நால்வரும் வீடியோ போன் பேசலாம்... பஸ்ஸர் டூ பஸ்ஸர் மட்டுமே... செயல்முறை அரங்குல போயித் தனியாப் பேசலாம்ன்னு பிக்பாஸ் சொல்லி வச்சாரு... முதல்ல போனது ஷெரின், அம்மாக்கிட்ட பேசினாங்க... சேரன் சார் வாங்கி வந்த சேலைன்னு கட்டியிருந்த சேலையைக் காட்டினாங்க... நல்லாயிருந்தது... நாயைப் பற்றியே பேசிக்கிட்டு இருந்தாங்க... நேரம் முடிந்தது லவ் யூம்மான்னு சொன்னாங்க.

ஒரு இசை... ஆஹா அடுத்து ஒரு கூட்டத்தை அனுப்பப் போறானுங்க போலன்னு நினைக்கும் போதே, ஏய் ஏதோ ஒரு கூட்டத்தை அனுப்பிட்டான் பிக்பாஸ்... வாடின்னு வனிதாக்கா சொல்லிக்கிட்டு இருந்தாங்க... வீட்டுக்குப் போனவங்களை மறுபடியும் விடாமப் பிடிச்சாந்துட்டாரு பிக்பாஸ்... ஆமா மோகன், சாக்சி, மீரா, பாத்திமா பாபுன்னு மறு வரவு... இப்பவும் கட்டிக் கட்டிப் புடிச்சானுங்க... நேற்றுக் கொடுத்துட்டுப் போன முத்த ஈரமே காய்ந்திருக்காது... அது மேலயே முத்தம் கொடுத்தானுங்க.

சாப்பாடு வந்தது... வச்சிச் சாப்பிட்டானுங்க... இந்த ஒரு வாரமாக் கூட்டம் கூட்டமா ஆள் அனுப்பிக்கிட்டு இருக்காரு பிக்பாஸ்... ஒரு வேலை இல்லை... உணர்ச்சிகரமான படங்களையும் வீடியோவையும் வச்சி ஓட்டுறானுங்க... பிக்பாஸ் படுத்துக்கிச்சுன்னு நல்லாவே தெரியுது... இன்னும் ரெண்டு நாளுத்தான்னு முடிஞ்சளவு தள்ளிக்கிட்டே போறானுங்க கரகாட்டகாரன் காரு மாதிரி.

அடுத்து ஒரு இசை... பிரண்டப் போல யாரு மச்சான்னு போட்டானுங்க... அப்ப யாரு வருவான்னு தெரியாதா என்ன... பிக்பாஸ்க்கு காதல் எபிசோட் கொடுத்த கவினும் தர்ஷனும் வந்தாங்க.... கவினைச் சாண்டி தூக்க, தர்ஷனை முகன் தூக்க.... லாஸ்லியாவின் கண்கள் 'கண்ணாளனே... எனது கண்ணை நேற்றோடு காணவில்லை' என கவினையே தேடின... அந்த க் கண்ணுக்குள்ளதான் எத்தனை காதல்... கண்களால் காதலை பிக்பாஸ் வீடெங்கும் பரவ விட்டபடி நின்றார்.

நீங்க ரெண்டு பேரும் பேசுங்கன்னு எல்லாரும் காதல் ஜோடியைத் தனியே விட்டுட்டுப் போக,  காதல் வானிலே... காதல் வானிலேன்னு பறக்க ஆரம்பிச்சிட்டாங்க... ரொம்ப நல்லா விளையாடுறீங்க... இருந்த 16ல நாம ரெண்டு பேர் மட்டுமே உண்மையா இருந்திருக்கோம். மத்தவங்க எல்லாருமே பொய்... பித்தலாட்டம்... எல்லாம் செஞ்சவனுங்கன்னு கவின் அள்ளி விட்டாரு... நீ எதை வேணுமின்னாலும் சொல்லு நான் உன்னை மட்டும் பருகிக்கிறேன்னு சிரித்தபடியே கண்களால் கவினைப் பருகிக் கொண்டிருந்தார் லாஸ்லியா.

போன் பேச முகன் சென்றார்... அவருக்குப் பிடித்த அண்ணனுடன் பேசினார்... இந்தப்பய பொசுக்குப் பொசுக்குன்னு அழுதுடுறான்... பாசக்காரப் பய போல... மலேசிய, தமிழக மக்களுக்கு நன்றி சொன்னான்.... வெளியில வந்து அண்ணனுடன் பேசியதைச் சொன்னான்... பிக்பாஸ்க்கு நன்றி சொன்னான்... சேரனை கட்டி அணைத்தான்.

ஷெரினிடம் ஏன் அழுதுக்கிட்டு இருக்கே... நான் போனதுக்கு நீ காரணமில்லை... அதுக்கு காரணம் நானுமில்லை... லாஸ்லியாவுக்காக பிக்பாஸ் என்னைப் பலியாக்கினான். அதனாலதான் சேரன் அண்ணனிடம் வரலைன்னு சொன்னேன்... அப்புறம் வனிதா உன்னைய அழ வச்சதைப் பார்த்து ரெண்டு வாங்கிட்டுப் போகலாம்ன்னுதான் வந்தேன் அப்படின்னு சொல்லி ஷெரினுக்கு உற்சாகமூட்டினான்.

சாண்டி பேசப் போனார்... சாண்டியோட டிரேட் மார்க் என்னன்னு நமக்குத் தெரியாதா...? அதே... மகளைப் பார்த்ததும் விஸ்வாசம் அஜீத் மாதிரி 'ஏஞ்ச்ச்ச்சாமி'ன்னு அழ ஆரம்பிச்சாச்சு... அப்புறம் பொண்டாட்டிக்கிட்ட பேசும் போது முகத்தைத் தள்ளி வையி... பயமா இருக்குன்னு சொன்னதும் உங்களால நாங்க ரொம்பப் பெருமையா (proud) உணர்றோம்ப்பான்னு மனைவி சொன்னதும் என்னது பவுடரா... ஆமாமா முகத்துல அதிகமாத்தான் இருக்குன்னு சொன்னது ரசிக்க வைத்தது என்றாலும் இப்படி அழுது சீன் போடுவதைத் தவிர்த்தல் நலம்... இன்னும் ஒரு நாள் இவனுக தவிர்த்தா என்ன தவிர்க்காட்டி என்ன... சீசன்  4லை எல்லாரும் தவிர்த்திருவாங்கங்கிறது மட்டும் நிச்சயம்.

எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கும் போது கவின் லாஸ்லியாவைக் காணோம்... அட விடுங்கப்பா பிரிந்தவர் கூடினால்... அதே... பேசிட்டுப் போகட்டும். அவங்களைக் காட்டி நம்மளைப் படுத்தாமல் இருந்தாலே போதும்.

லாஸ்லியா அப்பாக்கிட்ட பேசினார்... மரியநேசன் நான் சொன்ன மாதிரி இரு... இப்ப இருக்க மாதிரி இரு... விளையாடிட்டு வா... அப்படின்னு பேச, அப்ப மத்தவங்களை விடுங்க... நான் வெளியில் வந்து எல்லாம் சொல்றேன்... என்னைப் பற்றித் தெரியும்ல்லன்னு சொல்ல, என்னைப் பற்றி உனக்கும் தெரியும்ன்னு சொன்னார். மரியநேசன் இன்னும் மனமின்றி இருக்கிறார்... மரியநேசனின் மகளோ எப்படியும் மனதை மாற்றுவேன் என இருக்கிறார். வெளியில் போனதும் அப்பனுக்கும் மகளுக்கும் நீயா நானா இருக்கும்... ஜெயிக்கப் போவது யாரு..? அப்படின்னு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், குறிப்பாக யூடியுப் சேனல்கள் விவாதங்கள் நடத்தலாம்... கூடவே கவினையும் இருத்தலாம்.

சரி உங்களுடைய அழுகாச்சி காவியத்தைப் பாருங்கன்னு சொல்லி அழற சீனையெல்லாம் அழகா எடுத்து ஒட்டி ஒரு வீடியோ போட்டார் பிக்பாஸ்... ஆளாளுக்கு அழுதானுங்க... கவின் லாஸ்லியா கையை விடவே இல்லை... ஆறுதலாய் இருக்காராமாம்... வீடியோ முடிஞ்சதும் ஆளாளுக்கு கட்டிப்புடிச்சி அழுதாங்க... ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க... அபிராமி அதிகமா உணர்ச்சி வசப்பட்டு அழுதாங்க... எல்லாரும் தேற்றினார்கள்.

தனித்தனியாப் பார்க்கிறவங்களுக்கு இந்த உணர்ச்சிகள் புரியாது... ஒண்ணா இப்படிப் பார்க்கும் போது அந்த வலி, உணர்ச்சி எல்லாம் புரியும்ன்னு வனிதாக்கா சொன்னாங்க... தனித்தனியாப் பார்த்து நொந்து போயிக் கிடக்குறது பத்தாதுன்னு உங்க ஓவர் சீனை எல்லாம் ஒண்ணாக் காமிச்சது பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தத்தான் என்றாலும் எங்களுக்கு ஐயா சாமி எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுகாச்சிக் காவியம் வாசிப்பே... இந்த வாரம் முழுவதும் இதையே செஞ்சிக்கிட்டு இருக்கியேன்னுதான் தோணுச்சு.

தர்ஷனைக் கட்டிப் பிடித்த வனிதா சாரி... அப்படின்னு சொல்லி லவ்வி, கடவுள் உனக்கு அருள்புரிவாராகன்னு ஆசிர்வாதமெல்லாம் பண்ணுச்சு... எங்க ஷெரின் விஷயத்தைக் கையில் எடுத்துருவானோன்னு பயந்துக்கிட்டே இருந்திருக்கும் போல... ஒருவழியாச் சமாதானம் ஆயிருச்சு. இன்னொன்னு கவனிச்சுப் பார்த்தீங்கன்னா லாஸ்லியா-கவின் காதலுக்கு அக்கா இப்ப பச்சைக் கொடியை பலமாக் காட்ட ஆரம்பிச்சிருப்பது புரியும். லாஸ்லியாவை இழுத்துப் பக்கத்துல உக்கார வச்சிக்கிது... ஆதரவுக் கரம் வலுவா இருக்கும் போல.

எல்லாரையும் கிளம்புங்க... வீட்டுக்குப் பொயிட்டு குளிச்சிக் கிளிச்சிட்டு தூங்கி எந்திரிச்சி நாளைக்கு வந்துருங்க... ஆண்டவர் தரிசனமே.... உங்களுக்கு ஆனந்த தரிசனமேன்னு சொல்லி பிக்பாஸ் போகச் சொல்ல. சேரனிடம் அப்பாடான்னு சொல்லி சேரன் ஆசிர்வதிக்க, சார் ஏதோ ஒரு நினைப்புல சொல்லிட்டேன்... அதைப் புடிச்சிக்கிட்டீங்களான்னு சொல்ல, இப்ப மட்டுமேன்னு ஆசிர்வதித்தார். அதேபோல் லாஸ்லியாவிடம் தெரிந்தோ தெரியாமலோ எதாவது செய்திருந்தால், சொல்லியிருந்தால் மன்னிச்சிக்கம்மான்னும் சொன்னார் சேரன்.

மறுபடியும் கட்டிப்பிடி.. கண் கலங்கல் காட்சிகள்... நிறைய சிவாஜி படம் பார்த்த மாதிரி இருந்தது. லாஸ்லியா யார்க்கிட்ட போய் நின்னாலும் நம்ம வீட்டுல வளக்குற நாய் நம்ம பின்னால வாலாட்டிக்கிட்டு நிக்கிற மாதிரியே கவின் நின்னான். கவினுக்கிட்ட வெளியில எல்லாம் ஓகேயா... வந்த உடனே நேர கபாலீஸ்வரர் கோவில்ல போயி தாலி கட்டிக்கிட்டு இலங்கை போக எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா... அப்படின்னு எல்லாம் கேட்டாங்க லாஸ்லியா... நீ வெளிய வா... எல்லாம் பக்காவா இருக்குன்னு சொன்னான் கவின்.

ஒரு வழியா எல்லாரும் பொயிட்டாங்க... மறுபடியும் பிக்பாஸ் வீடு அமைதியாயிருச்சு... கக்கூஸ் கேமராக்கிட்ட லாஸ்லியா கதை அளந்துக்கிட்டு நின்னாங்க...

பிக்பாஸ் இன்னும் இரு தினங்கள் மட்டுமே...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

பிக்பாஸ் : நட்பு... நட்பு மட்டுமே...

Image result for biggboss-3 day 102 images
102ம் நாள் காலை 'ஆலுமா டோலுமா' பாடலுடன் விடிந்தது. இன்னைக்கும் வெளியில இருந்து ஒரு குழு வந்து வீட்டுக்குள்ள வந்து ஆடுனானுங்க... நாளைக்கு கக்கூஸ்ல போயி ஆடுவானுங்க போல... எல்லாரும் வந்து அவங்க கூட ஆட, வனிதா மட்டும் அடப்போங்கடா... நீங்களும் உங்க டான்ஸூம் அப்படின்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குச்சு.

கக்கூஸ்ல 'நீயெல்லாம் இறுதிப் போட்டியில் இருப்பதை ஜீரணிக்க முடியலை' என ஷெரினை வம்பிழுத்துக் கொண்டிருந்தார் சேரன். சாக்சியும் சேர்ந்து கொண்டார். உன்னை நாமினேசன் எல்லாம் பண்ணினேன் எனச் சேரன் சொல்ல, உன்னை இல்லை என்னைத்தான் நாமினேசன் பண்ணியிருக்கார்... அதுவும் காரணம் சரியானதுதான்னு சாக்சி சொல்ல, வெளியில வந்து பாரு தெரியும்... நான் நீ இறுதிப் போட்டிக்குப் போகணும்ன்னு சொல்லியிருக்கேன் தெரியுமா..? எனச் சேரன் கேட்டதும் தாங்க்யூ சேரன் சார் அப்படின்னு கன்னத்தோட கன்னம் வைத்து முத்தம் கொடுத்தார்.

அடுத்து ஒரு டாஸ்க்... நடந்த நிகழ்வு ஒளியில்லாமல் ஒலியாய் மட்டுமே பகிரப்பட, அது எந்த இடத்தில் நிகழ்ந்தது யாரெல்லாம் இருந்தார்கள் என்பதைப் பேப்பரில் எழுதி, அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதில் ஷெரின் 5 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்து என்ன செய்யணும் என்ற கேள்வி எழுந்த போது சாண்டி காத்திருங்கள் குருநாதர் கலாய்ப்பார்ன்னு சொன்னதும் வனிதா போய் வேலையைப் பாருங்க என்றார். உடனே பிக்பாஸ் எல்லாரும் வனிதா சொல்வதைக் கேளுங்கன்னு சொன்னதும் அம்புட்டுப் பேரும் கெக்கப் பிக்கன்னு சிரிச்சானுங்க.

அடுத்து ஒரு பஸ்ஸர் அடிக்கும் அப்ப யார் வந்தாலும் கண்டுக்காதீங்கன்னு சொல்லி. அடுத்த பஸ்ஸர் அடிக்கும் வரை அப்படித்தான் இருக்கணும்ன்னு சொல்லிட்டார்.  சாண்டியும் முகனும் சிகப்புக் கதவுக்கிட்ட இருக்க, அபிராமி அங்கிட்டு நடந்துக்கிட்டு இருந்தார். திடீர்ன்னு இசையும்  அதன் பின்னே பாலாஜி, ம.கா.ப., ரக்சன், ரியோ, பிரியங்கான்னு தன்னுடைய தொகுப்பாளர்களை தொகுத்து அனுப்பினானுங்க.

உள்ள நுழைந்ததும் எல்லாருடைய டார்க்கெட்டும் சாண்டிதான்... தூக்கி, அடிச்சின்னு ஆட்டம் போட்டானுங்க... வந்தது முதல் ஓட்டைப் பானைக்குள்ள நண்டை விட்ட மாதிரி ஒரே சப்தம்...  யாரு என்ன பேசினாங்கன்னு எல்லாம் தெரியாது... எல்லாரும் பேசினாங்க... எல்லாரும் சிரிச்சாங்க... கக்கூஸ்ல வச்சி லாஸ்லியாவைக் கலாச்சாங்க... சாண்டியை மித்திச்சாங்க... ஷெரினுக்கு கை கழுவி விட்டாங்க...  ஒரே ஆட்டமாப் போட்டானுங்க... ஆனா அவங்க தொகுக்குற நிகழ்ச்சி மாதிரியே எதுவும் புரியலை.

பிக்பாஸ் முடிஞ்சதும் அடுத்து சனி, ஞாயிறுகளில் பிரியங்காவும் மா.க.பவும் தொகுக்கும் இந்தியாவில் முதல்முறையாக, ஆசியாவிலேயே மிகப்பெரிய கேம் நிகழ்ச்சியான 'தி வால்' அபடிங்கிற நிகழ்ச்சியோட புரோமோ போட்டானுங்க... கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லிட்டா ஏதோ பாலைத் தூக்கிப் போடணுமாம். சரியான பச்சைபால் விழுந்தா விழுறதுல  என்ன தொகையோ அது கிடைக்குமாம்... சிவப்புன்னா அதுவரை ஜெயித்ததுல இருந்து குறையுமாம்... மொத்தம் 2.5 கோடியாம்... விபரமாச் சொன்னானுங்க. 

சாக்சிக்கு எதுவும் புரியலை... சேரன் விபரமாய்க் கேட்டார்... அவங்கள்லாம் திரும்பத் திரும்பக் கேட்டதைப் பார்த்தால் 2.5 கோடிக்கான போட்டியில் கலந்துக்குவாங்க போல... அந்தப் பந்து ஜப்பான்ல இருந்து வருதுன்னு சொன்னானுங்க. 

அடுத்து பிக்பாஸ் வீட்டுக்கு வந்தால் நல்ல ஒரு போட்டியாளராக இருப்பது எப்படின்னு நால்வரும் சொல்ல வேண்டும்ன்னு சொன்னானுங்க... சாண்டி எதோ ஆரம்பித்து எங்கயோ போயி ஒண்ணும் புரியலையில்ல... அப்படி இருந்தாப் போதும்ன்னு சொன்னார்... முகன், லாஸ்லியாவெல்லாம் ஏதோ பேசினாங்க. ஷெரின் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மா.க.ப குழு கை தட்டினார்கள். அது பொறுக்காத வனிதா, நான் கமல் சார்க்கிட்ட பேசும் போது மக்கள் கைதட்டினது என் மேல இருக்க அன்பினாலதானான்னு சொல்லிச் சிரிச்சாங்க... அது அன்பினால் இல்லை நீ பண்ணுற வம்பினால் அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டானுங்க.

அப்புறம் அந்தக் குருப்பை எல்லாம் வாங்கன்னு சொன்ன பிக்பாஸ், எனக்குச் செலவு வைக்காமல் நான் அகற்ற வேண்டிய சோபாவை செலவில்லாமல் உடைச்சதுக்கு நன்றி பிரியங்கான்னு சொன்னாரு பாருங்க... மறுபடியும் எல்லாரும் கெக்கப்பிக்கே... வனிதா உக்கார்ந்தே உடையாத சோபா நான் உக்கார்ந்ததும் உடைஞ்சிருச்சே... யாரோ சூனியம் வச்சிட்டாங்க... எவ்வளவு தொகையோ அதை நான் தந்திடுறேன் அப்படின்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க.

அப்புறம் போட்டியாளர் நால்வருக்கும் நிறைய பரிசுப் பொருட்கள் வந்தன... மற்றவர்கள் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்க, இவங்க நால்வரும் தாங்க்யூ பிக்கின்னு சொல்லிட்டு அந்தந்த கம்பெனிக்காரனுக்கும் தாங்க்யூ சொன்னாங்க.

அப்புறம் எம் பிரண்டைப் போல யாரு மச்சான்னு சொல்லிட்டு ஒரு வீடியோ போட்டாங்க... அந்தச் சூட்டோட சூடா, எல்லாரையும் செயல்முறைப் பகுதிக்கு வரச் சொல்லி, நட்புப் போட்டோக்களைக் கண்காட்சியாக்கி, பார்த்துட்டுப் பேசுங்கடான்னு சொல்ல, எல்லாரும் பேசினாங்க... அபிராமி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு அழுதார்... வனிதாவும் லாஸ்லியாவும் போய் அணைத்துக் கொண்டார்கள். 

ஷெரின் என்னோட நட்புன்னா அது வனிதான்னு சொன்னதுதான் நேற்றைய நிகழ்வின் தொகுப்பில் மிகச் சிறப்பானது.  ஏன் ஷெரின் இப்படிப் பேசினார்ன்னு யோசிக்க வேண்டியதில்லை... இருக்கும் நாலு நாள்ல இவ ஏழரையைக் கூட்டிப் பேரைக் கெடுத்து வச்சிருவாளே... அதுக்கு இவ நல்லவள்ன்னு சொல்லிட்டா தப்பிச்சிக்கலாம்லன்னு யோசிச்சிருக்கலாம். சரி விடுங்க.

அப்புறம் சேரன், சாக்சி, ஷெரின் பேசிக்கிட்டு இருக்காங்க... லைட்டை அமத்திட்டு நிகழ்ச்சியையும் முடிச்சிட்டாங்க.

ஒண்ணுமே இல்லாத ஒரு நிகழ்ச்சியை இப்படிப் பக்கம் பக்கமா எழுதுற மாதிரி ஆயிருச்சே... இறுதி நாட்கள் ரொம்பவும் பாடாய்ப் படுத்தும் போலவே.

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 3 அக்டோபர், 2019

பிக்பாஸ் : வனிதா பெண்ணல்ல... சுனாமி

Image result for biggboss-3 101 day images

101ம் நாள் காலை திருப்பள்ளி எழுச்சியாய் மெர்சல் அரசன் பாட்டு... ஷெரின் மட்டுமே தூக்கக் கலக்கத்தில் இருப்பதாய் தெரிந்தது. மற்றவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

இந்த வாரம் வெளியில் இருந்து ஆட்கள் வந்து ஆடும் வாரம் என்பதால் மூணு அஞ்சாகி... இன்னைக்கு பத்துப் பேருக்கிட்ட உள்ள வந்து ஆடுனானுங்க... எல்லாருமாய் முதல் நாளே ஒத்திகை பார்த்திருப்பார்கள் போல... போட்டியாளர்களும் அவர்களை ஒத்தே ஆடினார்கள்... அங்க... இங்க... நடுவேன்னு எல்லா இடத்திலும் ஆடுனாங்க... புல்வெளியில் படுத்து உடற்பயிற்சியெல்லாம் பண்ணுனாங்க... அதுல ஒரு தாடிக்காரனுக்குப் பக்கத்துல ஷெரின் ஆட, தாடியைத் தாண்டித் தெரிந்தது ஜொள்ளும் சிரிப்பு. நீண்ட பாடலை நிறுத்தினார் பிக்பாஸ்.

அடுத்து பிக்பாஸ் இல்லத்தில் முதல் முறையாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு...

நாலு பேரும் நச்சின்னு உடையணிந்து சிக்குன்னு உக்கார்ந்திருந்தாங்க...

வேறு வேறு பத்திரிக்கை சார்ந்த எட்டுப் பேர் வந்திருந்தாங்க...

தினமலர், இண்டியன் எக்ஸ்பிரஸ்காரனெல்லாம் மொக்கைத்தனமாக் கேள்வி கேட்டாங்க... நல்ல கேள்விகளை... இதுவரை அவர்கள் ஆயிரெத்து எட்டுத்தடவை பதில் சொன்ன கேள்விகளை விடுத்து இந்த நூறு நாளில் நாம் பார்த்ததை வைத்துக் கேட்க வேண்டிய கேள்விகளை... கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறும்படியான கேள்விகளைக் கேட்கக் கூடிய ஆட்கள் எந்தப் பத்திரிக்கையிலும் இல்லையா என்ன..?

பலமுறை அவங்களே சொன்ன பதிலுக்கான கேள்விகள்... நீ திட்டமிட்டே விளையாடுகிறாயா..? வெளிய போய் எங்கே போவே..? உங்களுக்குள்ள முன்னாடி நட்பு இல்லை இப்ப நட்பாயிருக்கீங்களே அதைப்பற்றி..? நீங்க எதை இழந்தீர்கள்..? இந்த நட்பு வெளியில் போயும் தொடருமா..? இப்படியான கேள்விகள்... மொக்கைத்தனமான பதில்கள்... பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பல்லிளித்தது.

லாஸ்லியா குடும்பம் கஷ்டப்பட்ட போது அவர் சார்ந்த சமூகம் கை தூக்கி விடலையாம்.. இப்ப மட்டும் தன் காதலுக்கு எதிராய் நிற்கிறதாம். மரியநேசன்கிற மனுசன் என் அப்பாதானே... எல்லா விஷயத்துலயும் எங்கிட்ட கேட்டுத்தான் முடிவெடுப்பார்... கவின் விஷயத்துல நான் முடிவெடுத்துட்டு அவர்க்கிட்ட கேட்கப் போறேன். அம்புட்டுத்தான்... அவர் என்னை மீறியெல்லாம் ஒரு வெங்காயத்தையும் புடுங்க முடியாது... கவின்தான் என் காதலன்... கவின்தான் என் கணவன்... கவின்தான் என் நாயகன்... கவின்தான் என் அப்பனுக்கு மாப்பிள்ளை... கவின்தான் என் தங்கைகளுக்கு மாமா... இது போதுமான்னு கேட்டுச்சு.

எதையும் தொலைத்துத் தொலைக்க என்ன இருக்கு... என்னால பிக்பாஸ் தொலைத்ததுதான் அதிகம்... அபி என்னோட காதலைத் தொலைக்கப் பார்த்தா... நல்லவேளை பிக்பாஸ் அவளைத் தொறத்திட்டாரு... ரேஷ்மா என்னைய அனாதையின்னு சொன்னா... நானும் அப்பா பிரச்சினை... அம்மா பிரச்சினையின்னு சொல்லி வச்சிருந்தேன்... எங்கப்பன் வீடியோவுல பேசினாரு... எங்கம்மா நேர்ல வந்தாங்க... எனக்கு குடும்பம் இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு... ஆனா ரேஷ்மாவுக்கு மட்டும் இன்னும் தெரியலை... நான் தொலைக்க நினைப்பது அனாதைங்கிற வார்த்தையை... இங்க யாரும் அனாதையில்லை... என்றான் முகன்.

நான் எப்பவும் இப்படித்தான் ரொம்ப ஜாலியா இருப்பேன்... என்னோட இருக்கவங்களை ஜாலியா வச்சிக்கணும்ன்னு நினைப்பேன்... அதைத்தான் இங்க செஞ்சேன்... ஆனா எங்க வீட்டுல மட்டும் செய்ய மாட்டேன்... அதான் என் பொண்டாட்டி கோபப்படுவா... ஊருக்கே வடிவேலா இருக்கே ஆனா ஊட்டுக்கு மட்டும் ரகுவரனா இருக்கியேம்ப்பா... அதான் நீங்க பாத்திருப்பீங்களே... இங்க வந்தப்பக் கூட லாலா... லாலான்னு நான் அழுதபோது போலான்னு சொல்லிட்டுத்தானே போனா... பிள்ளைக்கு கொடுத்த முத்தம் தவறி எனக்கு வந்திட்டது... அதை வச்சி அவ என்னை லவ்வுறா... கவ்வுறான்னு எல்லாம் எழுதிடாதீங்க... நான் வெளையாடுறதுக்கு சாட்டர்ஜி, மோடிஜி, எடப்பாடிஜி, கமல்ஜி, விமல்ஜின்னு எதையாவது பேரா வச்சிக்கங்க.. நான் இப்படித்தான்... ஈதோசை சுடுவேன்... குப்பைமல்லித்தளை சட்னி பண்ணுவேன்... கழுவாத கையால சாப்பாடு ஊட்டுவேன்... என்றார் சாண்டி.

எனக்கும் லாஸ்லியாவுக்கும் அவ்வளவு நெருக்கமெல்லாம் இல்லை... ஏன்னா அவ நெருங்கிக் கிடந்தது கவினோட... நெருங்கிங்கிறதை விட கவிழ்ந்துன்னு சொன்னா ரைமிங்கா இருக்கும்ல்ல... நான் சேரன் சார்க்கிட்ட எல்லாம் சொல்லுவேன்... தர்ஷ்க்கிட்ட எல்லாம் கொடுப்பேன்... அதாவது திங்கிறது எல்லாம்... ஏன்னா அவன் தீனிக்கு அலையிற தேனீ... வனிதா என்னைப் பார்த்து அப்பையர் ஆண்டின்னு சொன்னப்போ அழுதன்.. அழுதன்... அங்க படுத்து அழுதன்... இங்க படுத்து அழுதன்... கக்கூஸ்ல அழுதன்... எல்லாப் பக்கமும் அழுதன்... அதேதான் தர்ஷ் போனப்போ... அழுதன்... அழுதன்... அழுதுக்கிட்டே கிடந்தன்... கவின் காசெடுத்துக்கிட்டு ஓடினப்போ லாஸ்லியாவுக்கு எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க... சொன்னோம்... ஆனா தர்ஷ் போனப்போ நான் அனாதையானேன்... ஆறுதல் சொல்ல ஒரு பக்கியும் இல்லை... அதனால நான் அழுதன்... அழுதன்... அங்க அழுதன்... இங்க அழுதன்.... என்றார் ஷெரின்.

'மச்சி ஓபன் த பாட்டில்'ன்னு அலற விட்டு சேரன், கஸ்தூரி, சாக்சி, வனிதாவை அனுப்பினார் பிக்பாஸ். வனிதாவைப் பார்த்ததும் ரெண்டு நாளா ஆடல் பாடல்ன்னு சந்தோஷமாக இருந்தானுங்க... இனி அழ வைப்பானுங்களேன்னு தோணுச்சு... வனிதாவும் புன்னகைக்குள் வெடிகுண்டை வச்சிக்கிட்டுத்தான் வந்திருக்கு... பிக்பாஸ் அங்கயே பத்தவச்சித்தான் அனுப்பியிருக்காருன்னு நல்லாவே தெரிந்தது.

எல்லாரையும் உக்கார வச்சி நீங்க அடிச்சிக்கிட்டதை எல்லாம் பாருங்கன்னு சொல்லி, படம் ஓட்டினார் பிக்பாஸ்... பார்த்துக்கிட்டு இருந்தவங்க மூஞ்சியெல்லாம் தாமரைப் பூவில் இருந்து வாழைப்பூவாய் சுருங்க.... ஆஹா அடிதடி ஆரம்பம்ன்னு பிக்பாஸ் நாற்காலியில் நல்லா நிமிர்ந்து உட்கார, நாம இப்படி அடிச்சிக்கலைன்னா இந்த பிக்பாஸே இல்லை தெரியுமோன்னோ... பேஷா கை தட்டுவேளா அதை விட்டுட்டு இப்படி எழவு விழுந்த மாதிரி உக்காந்திருக்கேளே... சவங்களா... கை தட்டுங்கோன்னு அக்கா சொல்ல, அக்கா சொல்லுக்கு மறு பேச்சேதுன்னு எல்லாப்பயலும் தட்டிப்புட்டாங்க கையை.

அட என்னடா இந்த லூசை அடிச்சாடச் சொல்லி அனுப்பினா வெளிநாட்டுக் கிரவுண்டுல வெக்கமே இல்லாம கட்டை வச்சிக்கிட்டு கால் நூற்றாண்டுக்கு நிக்கிற ரோஹித் மாதிரி இருக்கா... ஆஹா இது சரிவராது... இந்தியக் கிரவுண்டுல ஆடுற ரோஹித் மாதிரி ஆட வைக்க வேற வழி பண்ணுவோம்ன்னு வாங்கடா செயல்முறை அரங்குக்கு... பாருங்கடா அடிச்சிக்கிற போட்டாவை... இப்பப் பேசுங்கடா... ரத்த ஆறு ஓடாம வெளியே போயிருவீங்களான்னு பார்ப்போம்ன்னு பிக்பாஸ் ஆட்டையை ஆரம்பிச்சி வச்சாரு.

லாஸ்லியா, முகன், சாண்டி, ஷெரின் என எல்லாரும் கறை நல்லது என்பது போல சண்டை நல்லது... அதன் பின்னே நல்ல உறவுகள் கிடைத்ததுன்னு பாச மழை பொழிஞ்சாங்க... பாலைவனத்துல மழையா..? பாவக்காயில இனிப்பா..? என்னங்கடா அடிச்சி ஆடாம இங்கயும் டக் வக்கிறீங்க.... வனிதாவை இறக்குங்கடா... வத்திக்குச்சியாச்சும் பத்தவைக்குதான்னு பார்ப்போம்ன்னு பிக்பாஸ் புலம்ப, களமிறங்கினார் வனிதா.

வனிதா...

பிரச்சினைகளை உருவாக்கவே பிறந்தவர் போலும்...

எப்படி இவருடன் குடும்பத்தாரால் ஒத்துப் போக முடியும்..?

அதனால்தான் பெற்ற மகன் கூட பிரிந்தே இருக்கிறான்..?

தாய்மை... பெண்மை... பொறுமை... என்ற புகழ்ச்சியெல்லாம் இந்த எருமைக்கு தேவையேயில்லை போலும்.

நல்லாயிருக்க குடும்பத்தை நாசமாக்கத் தொலைக்காட்சி சீரியல்கள் தேவையில்லை.... வனிதா ஒரு பத்து நிமிடம் வந்துட்டுப் போனாப் போதும்.

ஊருக்கே உபதேசம் பண்ணுற நாட்டாமை பொண்ணு... ஊரு உலகத்துல ஒரு நல்லாயிருக்கக் கூடாதுன்னு நினைக்கிற மண்ணு...

தர்ஷன் போனதுக்கு நீதான்டி காரணம்ன்னு நெய் விளக்கு ஏத்திவச்சி அதுல மிளகாய் நாலை போட்டு வச்சிருச்சி... என்னென்ன சொல்லணுமோ அதையெல்லாம் சொல்லிட்டு வெளிய வா... வச்சிருக்கிறேன் லெவலுக்கு வந்து வெளிய வா பேசிக்குவோம்ன்னு முடிச்சி, கட்டிப் பிடிச்சி... பிரச்சனையை அவுத்து விட்டிருச்சு.

ஷெரின் எதிர்த்துப் பேச, டூ பி ஹானஸ்ட்... நான் என்ன சொல்றேன்னா... குறுக்க பேசாதே... உனக்கென்ன தெரியும்... இப்படித் தன்னோட பிரத்யேக வார்த்தைகளை உபயோகித்து உப்புச் சப்பில்லாத காரணத்தை பிரியாணி லெவலுக்கு கொண்டு வந்திருச்சு.

அடுத்துப் பேசப்போன சேரன், வனிதா பேசியது தவறென ஆரம்பிக்க... யோவ் உனக்கென்னய்யா தெரியும்... டூ பி ஹானஸ்ட்... நான் இங்க வடிச்சிப் போட்டிருக்கேன்.. அதை நீயும் தின்னிருக்கே... எனக்கு எதிராப் பேசுவியா... உன்னைப் பேச விட்டுருவேனா... அப்படின்னு எகிற, வனிதா நீ சொல்றது சரி... ஆனா அதைக் காட்டலையில்ல பின்ன என்ன வந்துச்சு... இப்பப் பேசன்னு சேரன் சொல்ல, காட்டலைன்னா நான் பார்த்தேனுல்ல... அதைப் பத்தவச்சா நீ ஏன் அணைக்கப் பார்க்கிறேன்னு எகிற, நானும் இருந்திருக்கேன் தெரியுமான்னு சேரன் கேட்க, இருந்தியா உன்னைய நான் பார்த்ததே இல்லைன்னு பட்டுன்னு சொல்லிருச்சு.

நீங்க என்ன பேசுறீங்க... எதை வேணுமின்னாலும் பேசலாமா... நீங்க சொல்றதால உண்மை பொய்யாகிடாது... பொய் உண்மையாகிடாது... புரிஞ்சிக்கங்க... இப்ப அவ இறுதிப் போட்டிக்கு வந்துட்டா... இப்பப் பேச என்ன இருக்குன்னு சாக்சி வர, உனக்கென்னடி தெரியும்... டூ பி ஹானஸ்ட்... உன் வாயை மூடு... எங்கிட்ட பேச வந்தே உன்னோட வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளத்துல ஏத்திருவேன்... டூ பி ஹானஸ்ட்... அப்பால போ சாத்தானேன்னு விரட்டிருச்சு.

கக்கூஸ்ல போயி அழுத ஷெரினை கஸ்தூரியும் சாக்சியும் சமாதானப்படுத்த, இங்க பேனைப் பெருமாளாக்கி... பெருமாளை அத்திவரதராக்கி... அத்திவரதரை அம்பானியாக்கி... அம்பானியை வனிதாவாக்குவாங்கங்கிறது தெரியாதா... அவ அப்படித்தான் பிரச்சினையை உடையா உடுத்துறவ... அடுத்தவ உடையிறதப் பார்த்து ரசிக்கிறவ... அந்தியில வானம்ன்னு சொன்னா... ஆத்துக்குள்ள பொணம்ன்னு வந்து நிக்கிறவ... விட்டுட்டு வேலையைப் பாருன்னு சொன்னாங்க கஸ்தூரி.

உள்ளே மற்ற நால்வரிடமும் தர்ஷன் போனதுக்கு அவதான் காரணம்... வெளியில பெரிய பிரச்சினை ஓடுது தெரியுமா... எடப்பாடி ஏழுநாள் துக்கம் அனுசரிக்கச் சொல்லியிருக்கார்... பன்னீரு பந்த் பண்ணினார்... எழுபது பஸ்ஸை எரிச்சிருக்காங்க... எழனூறு பஸ் கண்ணாடியை ஒடச்சிருக்காங்க... ஏழாயிரம் கடைகளை உடைச்சிட்டாங்க... மோடி நேரில் வந்து தர்ஷனுக்கு ஆறுதல் சொல்லியிருக்கார்... பாரத் ரத்னா தர்ஷனுக்கு கொடுக்கணும்ன்னு ஸ்டாலின் பரிந்துரை பண்ணியிருக்கார்... என் இனம் வஞ்சிக்கப்பட்டு விட்டதுன்னு சீமான் சீறிக்கிட்டு இருக்கார்... 

எம்புட்டு பிரச்சினை தெரியுமா...? எல்லாத்துக்கும் காரணம் இவதான்... இவ விஷச்செடி... வீரியமுள்ள பாம்பு... நீங்க என்னடான்னா ஷெரினோடு அறுவரானோம்ன்னு பேசுறீங்க... இன்னும் மூணு நாள்தான் அவளை வச்சிச் செய்யுங்கடான்னு முடிஞ்சளவுக்கு சாண்டி, முகன், லாஸ்லியாவை ஏத்திவிட்டுச்சு வனிதா என்னும் சூனியக்காரி.

மறுக்கா உக்காந்து பேச, கஸ்தூரி அங்கிட்டு வர, ஏலே இது தனிப்பட்ட கூட்டம்... கொஞ்சம் எங்களுக்குள்ள தனிமையில பேச வேண்டிய பேச்சு இது... நீ வெளியே போன்னு வனிதா சொல்ல, போறேன்டி வாத்துன்னு அது போக, இவளை எதுக்கு உள்ள கூட்டியாந்தான் இந்த பிக்பாஸ் அப்படின்னு சொல்ல, உள்ள போற ரவுடியால பாதிக்கப்பட்டவங்களுக்கு வைத்தியம் பாக்கத்தான் நான் வந்திருக்கேன் வாத்துன்னு கஸ்தூரி சொல்ல... ஆமாமா இவுக பாத்துட்டாலும் அப்படின்னு வனிதாக்கா சொல்ல, எதுனாச்சும் பேசுனே உன் மண்டையைப் பேத்து வைத்தியம் பார்த்துடுவேன்... ஜாக்கிரதையின்னு கஸ்தூரி சொல்ல, வனிதாக்கா வாயை மூடிக் கொண்டார்.

எப்பவுமே எதிரியின் குரல் உயர்ந்தால் அக்கா அடங்கிரும்... உயர விடாமல் பார்த்துக்க முயற்சிக்கும்... ஒரு கட்டத்துல உயர்த்திட்டாங்கன்னா ஒன்னு சமாதானமாகும் இல்லேன்னா நானா சண்டையான்னு பேசாம உக்காந்திரும்... கஸ்தூரி கொடுத்த அடியில அக்கா அடங்கிருச்சு... கஸ்தூரி இதை உள்ளிருக்கும் போதே செய்திருக்கலாம்... அக்கா அடங்கித் தொலைஞ்சிருக்கும்..

மறுபடியும் சேரன், வனிதா செய்தது தவறென விளக்க, யோவ் உன்னைய என்ன சொன்னேன்... மகளோட போயி 'கண்ணான கண்ணே...' இல்லைன்னா 'ஆனந்தயாழை...' பாடிக்கிட்டு இருன்னுதானே சொன்னேன்... எனக்குப் புத்தி சொல்ல வர்றியா... டூ பி ஹானஸ்ட் எங்கப்பனே எங்கிட்ட பேசமுடியாம எங்காத்தா சேலைக்குப் பின்னால ஒளிஞ்சிருவாரு... எங்கண்ணன் என்னைப் பார்த்தா ஒண்ணுக்குப் போயிருவான்... நீ என்னடான்னா எதிரே நின்னு தப்புன்னு சொல்றே... இப்ப நீ போகலைன்னா மீரா விஷயத்துல நீ தப்புப் பண்ணினேன்னு ஒரு புதுக்கதையை எழுதிருவேன்னு மிரட்ட, உன்னை ஒரு பெண்ணா நினைச்சிப் பேசினது என் தப்புத்தான் என்னை மன்னிச்சிடு தாயின்னு சேரன் வேகமாக சேரன் எக்ஸ்பிரஸைப் பிடிக்கப் போய்விட்டார்.

வனிதா என்னென்ன சொல்லியிருக்கா தெரியுமா...? அதெல்லாம் அவுத்து விட்டேன்னு வையி மவளே அவ காலின்னு ஷெரின் வயித்துவலி வந்த வாங்கோழி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு நடந்துக்கிட்டு இருந்தார். ஏய் அதெல்லாம் வேண்டாம்... பொறுமைதான் முக்கியம்... நான் கொஞ்சம் பொறுத்துப் போகாததாலதான் கவினை லாஸ்லியா பொறுக்கிக்கிட்டா... அந்தப் பொறுக்கியும் என்னை போலின்னு சொல்லிட்டான்... வெற்றிதான் உனக்கு லட்சியம்... வனிதாவை தூக்கிக் கடாசிட்டு அம்பது லெட்சத்தை வாங்கப்பாருன்னு சாக்சி சொன்னாங்க.

படுக்கப் போகும் போது டூ பி ஹானஸ்ட்... இப்பவும் நீ என் பிரண்ட்.... நான் உன்னையக் கழுவிக் கழுவி ஊத்துவேன்... மூணாவது மனுசன் எதுக்கு உம்மேல நல்ல தண்ணி ஊத்தணும்... விட்டுடுவேனா... நானும் நீயும் பேசலாம்... சண்டை போடலாம்... கட்டிப் பிடிக்கலாம்... கன்னத்துல முத்தம் கொடுக்கலாம்... டூ பி ஹானஸ்ட்... நான் உன் பிரண்ட்... நீ என் பிரண்ட்... நான் உன்னைப் பிராண்டினாலும் நீ என்னைப் பிராண்டாமல் ஏத்துக்கணும்... உனக்கு நல்லது சொல்ல சேரன் யாருங்கிறேன்...? சாக்சிக்கு என்ன வந்துச்சுங்கிறேன்...? அப்படின்னு ஆரம்பித்தார்.

முதல்ல நீ படுங்கிறேன்... பிக்பாஸ் இந்த லூசைக்  கூப்பிட்டுத் தொலைங்கிறேன்னு ஷெரின் சொல்லிட்டார்.

முன்னதாக எடப்பாடியும் ஸ்டாலினும் கட்டியணைத்துக் கொண்டது போல் சாக்சியும் லாஸ்லியாவும் கட்டி அணைத்துக் கொண்டு சாரி சொல்லிக் கொண்டார்கள். லாஸ்லியாவுக்காக சாக்சி பரிசுப்பொருள் கொண்டு வந்திருந்தார். இந்த வள்ளி தெய்வானை அன்புப் பரிமாற்றத்தைக் காண முருகன்... ச்சை... கவின் இல்லாமல் போய்விட்டானே.... என் செய்வேன்..

முகன் நல்ல பாடகன்... நல்லா பாட்டெழுதுவான்... மத்தவங்க மேல அளவில்லா அன்பு வைப்பான்... நட்புக்கு மரியாதை கொடுப்பான்... என எல்லாமே இருந்தாலும் சண்டையின்னு வந்துட்டா ஓரமா உக்காந்து மிக்சர் சாப்பிட ஆரம்பிச்சிடுவான். வனிதா - ஷெரின் பிரச்சினையில் எப்பவுமே சண்டையின்னா ஒதுங்கிப் போற சாண்டி, லாஸ்லியாவெல்லாம் பேசினாங்க... இவன் பேசவேயில்லை. இது தன்னோட இடத்தை யாருடைய கோபத்துக்கும் ஆளாகாமல் தக்க வைக்கும் முயற்சி... இது சரியல்ல முகன்... முறுக்கி விட்ட மீசைக்கு அழகும் அல்ல.

இவ்வளவு பிரச்சினைக்கும் இடையில் பிக்பாஸ் அடுத்த நிகழ்வுக்கு புது உடைகள் அனுப்புறார்... தினம் தினம் தீபாவளிதான் போல... அதை எடுக்கப் போன முகன், வனிதாக்கிட்ட பேசாம பிக்பாஸ்க்கிட்ட புலம்பிக்கிட்டு நிக்கிறான்... அதுவும் மத்த கேமரான்னா யாரும் பார்த்துடுவாங்கன்னு பிக்பாஸ் அனுப்பும் பொருட்கள் வைக்கப்படும் அறைக்குள் நின்னு பேசுறான்... அங்க வர்றாங்க அபி... அதெப்படி சரியாத் தேடி வந்தாங்கன்னு தெரியலை... அப்புறம் பிக்பாஸ் அந்தக் கேமராவுக்கு ஓய்வு கொடுத்துட்டு வெளியில நடக்குறதைப் பாருங்கன்னு சொல்லிட்டார்.  

ஷெரின்தான் தர்ஷனை வெளியேற்றக் காரணம் என்ற வனிதாவின் வார்த்தைகள் ஷெரினுக்கு ஆதரவாகுமா..? எதிராகுமா...?ன்னு பட்டிமன்றம், நேருக்கு நேர், நீயா நானா...?, நேர்படப் பேசு என எல்லாத் தொலைக்காட்சிகளும் விவாதிக்கலாம்... வனிதா இன்றும் வாதிக்கலாம்... ஷெரின் இன்னும் வதைபடலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 2 அக்டோபர், 2019

பிக்பாஸ் : முகனின் 'இரு மீன்கள் ஒரு ஓடையில்...'

Image result for bigg boss day-100 images

100 வது நாள் காலை...
'ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா...

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
பயர் பத்திக்கிருச்சா...'

என்ற மாரி-2 படப் பாடல் ஒலிபரப்பப்பட, வெளியில் இருந்து ஆட்கள் வந்து ஆட, உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் விருந்தாளிகளாய் வந்திருக்கும் வெளியே போன போட்டியாளர்களும் ஆடினார்கள். நைனா மோகன் நயமாய் ஆடினார்.

உலகத்துலயே சோபாவுல உக்கார்ந்து யோகா பண்ணும் ஒரே ஒருத்தியான மீரா மிகவும் சிரத்தையோடு யோகாவில் எதையோ உருட்டித் திரட்டி மனசுக்குள் தள்ளிக் கொண்டிருந்தார். சாண்டியும் முகனும் அவர் உருட்டித் திரட்டியது போல் அவருக்கு நெருக்கமாய்ச் சென்று உருட்டினார்கள். விழித்துப் பார்த்தவர் அதிர்ந்தார்.

அவர் உருட்டித் திரட்டும் போது அவரைச் சுற்றி ஒரு அதிர்வு இருக்குமாம்... அதைக் கெடுத்துட்டீங்கன்னு கத்துச்சு... அதன் பின் பாத்ரூம் கழுவும் ஹார்பிக்கை எடுத்து வா மீரா இதை வச்சி பல் விளக்கு கக்கூஸே சுத்தமாகும் போது உன் வாய் சுத்தமாகாதான்னு சாண்டி மீராவை விரட்டிக் கலாய்த்துக் கொண்டிருந்தார். ஆமா இதெல்லாம் என்ன டிரஸ்ங்க மீரா...

சரி வெட்டியா இருக்கானுங்களே ஏதாவது கொடுப்போம்ன்னு டம்மி கடிகாரத்தை வச்சி ஒரு மணி நேரத்தைச் சரியாக் கணிங்கடா... ரெண்டு பேர் ஒரே நேரத்தில் நேரத்தைக் கணிக்கலாம்... மற்ற இருவர் அதைக் கெடுக்கலாம்ன்னு செம டப்பான டாஸ்க் கொடுத்தாரு... லாஸ்லியாவும் ஷெரினும் முகனைப் படாதபாடு படுத்தினாங்க... அவருதான் 53 நிமிசத்துல ஒரு மணி நேரத்தைக் கணக்கிட்டாராம். அவரே வெற்றியாளர்.

எல்லாரும் வெளியில உக்காந்து கதை பேசிக்கிட்டு இருந்தாங்க... அப்ப பிக்பாஸ் முகன் உங்க சேரை மீராவுக்குப் பக்கத்தில் போட்டு உக்காருங்கன்னு சொன்னதும் அதன்படி செய்தார்கள்... அடுத்து சாண்டி நீங்க எழுந்து முகன் பின்னால நில்லுங்கன்னு சொல்ல, சாண்டியும் எழுந்து போய் நின்னார். பாத்திமா இப்ப வெளிய போகும் அளவு இடமிருக்கான்னு கேக்க, அவரும் இருக்கு பிக்பாஸ் என்றதும் அப்பப் போயி மைக்கை எடுத்து மாட்டிக்கிட்டு வாங்கன்னு சிரிக்காமச் சொன்னார். நான் ரொம்ப நேரம் சிரிச்சேன்.

பிக்பாஸ் அடித்த நகைச்சுவையில் இந்தச் சுவையே அதிகம் இனித்தது. செம.... எல்லாரும் கெக்கேபிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க.. நானுந்தான்.

முதல் நாள் அழுகாச்சி காவியம் படைத்த பிக்பாஸ், நீங்க உங்களை மறந்து சிரித்த காட்சிகள்ன்னு அகம் டிவியில் ஓட்டினார் பிக்பாஸ்.... ஒவ்வொரு பிரேமுக்கும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஷெரினின் கெவுனைப் போட்டுக் கொண்டு வள்ளி திருமண நாடகத்தில் வரும் முருகனைப் போல் திரிந்த கவினைப் பார்த்து ஷெரின் கண்ணீர் வரச் சிரித்தார்.

அப்புறம் எல்லாரையும் செயல்முறை அரங்கு வரச்சொல்லி அங்கிருக்கும் மகிழ்வான தருணங்களின் போட்டோக்களைப் பார்த்து உங்கள் மனதின் எண்ணங்களைச் சொல்லுங்கன்னு பிக்பாஸ் சொல்ல, பேசிய எல்லாருமே சாண்டியே இங்கே வடிவேலாய்... எங்களை எல்லா நேரத்திலும் சிரிக்க வைத்தார்ன்னு சாண்டி புகழ் பாடினாங்க.

உண்மைதான்... அதிரடி டாஸ்க் இல்லாத மொக்கைத்தனமான பிக்பாஸ் வீட்டில் லாலா... லாலான்னு அப்பப்ப புலம்பிக் கடுப்படித்தாலும் பெரும்பாலான நேரங்களில் மகிழ்வாய் நகர்த்த பிக்பாஸ்க்குப் பெரிதும் உதவியவர் சாண்டிதான். அவர் இல்லையேல் சீசன்-3 கவிழ்ந்தடிச்சிப் படுத்திருக்கும்... எத்தனைநாள் கவினின் கண்றாவிக் காதல்களைப் பார்த்திருக்க முடியும். சொல்லுங்கள்...

இந்த நூல் வெளியீடுகளில் எல்லாரும் பேசிய பின்னர் எழுதியவர் ஏற்புரையை எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு வழங்குவாரோ அப்படியான சூழலில் சாண்டி... கண் கலங்கி, வார்த்தைகள் வராது தவித்து முகினை அணைத்துப் பின் எல்லாரையும் அணைத்து தன் மகிழ்வை ஆனந்தக் கண்ணீரோடு வெளிக்காட்டினார் சாண்டி... தமிழ்ச் சினிமாவில் சரியானதொரு வாய்ப்புக் கிடைத்தால் போதும்.. வடிவேலு இடத்தில் சாண்டி சாதிப்பார்.

எல்லாரும் கல்யாணத்துக்குப் போற மாதிரி புதிய உடைகள் அணிந்து காத்திருந்தார்கள். பெண்கள் கூந்தலை விதவிதமாய் அலங்கரித்திருந்தார்கள். லாஸ்லியாவின் சிகை அலங்காரம் ஆஹா... என்ன அழகு... நல்லாயிருக்க தெருவுல பைப் போட வெட்டிட்டு மூடுன மாதிரி... சரி விடுங்க... எல்லாரும் காத்திருந்தார்கள்.

வெளியில உங்களுக்காக ஒரு பார்ட்டி இருக்கு.. நீங்க தயாரான்னு பிக்பாஸ் கேட்க, எல்லாரும் ஆமெனச் சொல்ல, கேக்கலை சத்தமாச் சொல்லுங்கன்னு ஒண்ணாப்பு ஆசிரியர் பிள்ளைங்களைக் கத்தச் சொல்ற மாதிரிக் கத்தவிட்டார் பிக்பாஸ்.

வெளியே...

திவாகர், பிரியங்கா உள்ளிட்ட சூப்பர் சிங்கர் பாடகர்கள் வந்திருந்தார்கள் சிறிய இசைக்குழுவுடன்... இவர்கள் அங்க போய் எல்லாரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அன்பைப் பறிமாறிப் பின்னர் பாடல்கள் பாட ஆரம்பித்தார்கள்... அருமையாய், அழகாய், ஆனந்தமாய் நகர்ந்தது அந்த நிமிடங்கள்.

திவாகர் என்னப்பா இப்படிக் குண்டாயிட்டே... ரொம்பப் பூரிப்பு போல...

பிரியங்கா இளைத்துக் கொண்டே போனாலும் ஸ்வர்ணலதா மாதிரி அந்தக் குரல் மட்டும் எல்லாரையும் ஈர்க்கத்தான் செய்கிறது.

முகனின் பாடலான 'நீதான்... நீதான்... நீதானே எனக்குள்ளே...' பாடலைப் பாடிய பாடகி, முகனை ரொம்பவே விரும்பினார்... அபி இல்லாத தைரியத்தில் அணைத்தும் கொண்டார். அப்போது அவர் கண்ணுக்குள் நூறு நிலவு.

முகனின் பாடல் முதல் முறை இசையில்லாமல் அவர் பாடும்போதே என்னை ஈர்த்தது. மறுமுறை கவின், சாண்டியின் இசையுடன் பாடிய போது இன்னும் ஈர்த்தது. நேற்று சேர்ந்த இசையுடன் கேட்க்கும் போது ஆஹா... தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு மெகா ஹிட் பாடல் கிடைத்திருக்கிறது என்றே ரசிக்க வைத்தது.

'நீதான்... நீதான்... நீதான்டி எனக்குள்ளே...
நாந்தான்.... நாந்தான்... நாந்தானே உனக்குள்ளே...
குழிதான் உன் கன்னத்துல விழுகுதடி...
நீ சிரிக்கயிலே வலிதான் என் நெஞ்சுக்குள்ள எழுகுதடி...
...
...
சத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆளைக் கொல்லுதடி...
...
...
இரு மீன் ஒரு ஓடையில்
கண்ணீரில் தன்னை இழக்க...
...
...
என்னை மறந்தே...
என்னை மறந்தே...'

என முகன் அந்தப் பாடலைப் பாடும் போது அவரைக் கட்டிப் பிடித்து 'லவ் யூ டா'ன்னு சொல்லணும் போல இருந்தது. பாடலைப் பாடும் போது 'இரு கண்கள் ஒரு ஓடையில்' என்ற வரிகளை முகன் உச்சஸ்தாயியில் பாட, அருகிலிருந்த பாடகர்கள் கத்தி ஆர்ப்பரித்தார்கள். முகனைத் தவிர இவ்வளவு ஆழமாய்ப் பீல் பண்ணி பாடுவது மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.... செமை... நீ நல்லா வருவேடா. 

பிரியங்கா 'மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்' என சின்னச் சின்ன வண்ணக்குயிலை ஆரம்பித்து,

'மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்... 
மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்...' 

என தன் காந்தக் குரலில் பாடிய போது எனை மறந்தேன்... இந்தப் பெண்ணுக்குத்தான் என்ன வசீகரமான குரல். உடம்பையும் பார்க்கணும் பிரியங்கா... அப்பத்தான் இந்தக் குரலை இன்னும் இன்னுமாய் நாங்கள் ரசிக்க முடியும்.

அதன் பின் சாண்டிக்காக லாலாவை நினைத்து 'கண்ணான கண்ணே ...' பாட ஆரம்பித்து...
'நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்

போர்வைகள் போத்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ'
என நம்மைக் கண்ணீரில் நனைய விட்டார் திவாகர்.

பாட ஆரம்பித்ததும் முகனை விட்டு லாலா போட்டோ ஒட்டிய தலையணையை எடுத்து வர வைத்து அதைக் குழந்தையாகப் பாவித்து சாண்டி நடனமாடினார்... உணர்ச்சிப்பூர்வமான நடனமும் பாடலுமாய் கண்ணான கண்ணே கண் கலங்க வைத்தது. நெகிழ்ச்சி...

பிக்பாஸ் போதும்டான்னு சொன்னதும் எல்லாரும் சேர்ந்து ஒரு குத்துப் போட்டுக்கிறோம்ன்னு கெஞ்ச, இப்பவும் எல்லாரும் சொல்லுங்க, சத்தமாச் சொல்லுங்கன்னு ஒண்ணாப்பு ஆசிரியராய் ஆன பிக்பாஸ் ஒரு பாட்டுத்தான் சொல்லி ஆட விட்டார்.

அப்புறம் நாலு பேரையும் விட்டுட்டு எல்லாரும் ஓடியாந்திருங்கன்னு சொல்லிட்டார்.... ரேஷ்மா இப்பவாச்சும் நான் அழகி... பேரழிகின்னு சொல்லுங்க பிக்பாஸ்ன்னு கெஞ்சிக்கிட்டு இருந்துச்சு... அவரு சொன்னாரான்னு தெரியலை... நமக்குக் காட்டலை.

ராத்திரி ஒரு மணிக்கு பாத்ரூம்ல லாஸ்லியா இருக்க, அங்கிட்டுப் போன சாண்டி, கதவைத் தட்டி பயத்தை கூட்டிவிட்டு ஒளிந்து கொள்ள, கதவைத் திறந்து வந்து வெளியில் தேடி யாருமில்லைன்னு பக்கத்துப் பாத்ரூம் கதவைத் தள்ள, உள்ளே சாண்டி... லாஸ்லியா அரண்டு போய் முகம் மூடி அமர, நான் இங்கதான் ரொம்ப நேரமாச் சுத்திக்கிட்டு இருக்கேன்னு சொல்லிச் சிரித்தார் பிக்பாஸ் இல்ல வடிவேலு சாண்டி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் டாஸ்க் இல்லைன்னாலும் செமையான ஒரு நாளாக 100வது நாள். 

முகனின் பாடல் மனசுக்குள் சுற்றிச் சுற்றி அடிக்குது... என்ன வரிகள்... மறுபடியும் வாழ்த்துக்கள்டா.

இன்னைக்கு சொர்ணாக்காக்களை இறக்கிவிட்டு ஷெரினைப் பதம் பார்க்கிறார்கள் போல. எங்க முடிவு லாஸ்லியாதான் என்பதால் மற்றவர்களை நாங்க அடிச்சித்தான் துவைப்போம்ன்னு விஜய் டிவி சொன்னாலும் ஷெரினைத் தாக்குவதால் அவருக்கு இன்னும் நல்ல பேரும் அதற்கான ஓட்டும் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. பிக்பாஸ் சொந்தக்காசில் சூனியம் வச்சிக்கிற மாதிரித்தான் தோணுது... பார்க்கலாம்.


டிஸ்கி : வேலை அதிகமிருந்தாலும் தொழில்ல கவனமாயிருக்கணும் என்பதால் அவசர அடிதான்... பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க... 

நன்றி.

82 பதிவுகள் எழுதும் வாய்ப்பைக் கொடுத்த, வாசித்துக் கருத்துச் சொல்லும் அனைவருக்கும் நன்றி... 

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பிக்பாஸ் : சாப்பாடு... சாப்பாடு...

Image result for bigg boss-3 images day-99
99ம் நாள் காலை 'மரண மாஸ்' பாடலுடன் விடிந்தது.

சிவப்புக் கேட்டுக்கு அந்தப் பக்கமிருந்து மூணு பேரு வந்து குதிச்சிக் குதிச்சி ஆடுனாங்க... நாங்கூட பிக்பாஸ் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் நூறாவது நாள் கொண்டாட்டம் போலன்னு நினைச்சேன். இது பிறந்தநாளை நாலஞ்சி நாள் கொண்டாடும் அரசியல்வாதிகளைப் போல நூறாவது நாளுக்கு முந்தின நாள் கொண்டாட்டம் போல...  அதுவும் இல்லைன்னா ஆட ஆளில்லைன்னு அனுப்பியிருப்பானுங்க போல.

வந்தவனுக ஆடுனானுங்க... இருக்கவனுங்க மெல்ல எழுந்து வந்து சேர்ந்துக்கின்னானுங்க... அதுக்காகவே பிக்பாஸ் கொஞ்ச நேரம் பாட்டை நீடிச்சாரு.. பின்னே என்ன இருக்கு அங்க... தொகுத்து ஒரு மணி நேரத்துக்கு ஓட்டுறதுக்கு... ஆடிக்களைத்து அமரப் பொயிட்டானுங்க... ஒண்ணுமில்லை சமைக்கிறதையாச்சும் காட்டுவோம்ன்னா இவனுகளுக்குச் சமைக்கவும் தெரியாது. நாமதான் சாப்பாடே அனுப்புறோம்... என்னத்தைக் காட்டுறதுன்னு பிக்பாஸ்க்கு ஒரே குழப்பம்.

அந்த நேரத்துல நம்ம சாண்டிக்கு ஒரு ஆசை... அதாவது பிள்ளையில்லாத வீட்டுல கெழம் துள்ளி விளையாடுதுன்னு சொல்ற மாதிரி தர்ஷன் இல்லாத வீட்டுல... தர்ஷன் போனப்போ பிக்பாஸ் இது தப்பு... டேய் என்ன நினைச்சிக்கிட்டே... அப்படின்னு எல்லாம் சீனைப் போட்ட சாண்டியோட கண்ணில் அப்பாடா தொலைஞ்சான்டா அப்படிங்கிற நிம்மதி தெரிந்ததை எத்தனை பேர் கவனித்தீர்கள்..? சரி கதைக்கு வருவோம்... வாங்க...

அதாகப்பட்டது பிள்ளை இல்லாத வீட்டுல கெழம் துள்ளி விளையாடுற மாதிரி, ஷெரினோட கெவுனைப் போட்டுக்கிட்டு, தலையில ஹேர்பின்னெல்லாம் குத்தி, லிப்ஸ்டிக் போட்டு சாண்டி 'ஆண்ட்டி' ஆனாரு... ஆண்டியில்லங்க... உடனே பிக்பாஸ்க்கு குதூகலம் கூத்தாடுச்சு போல... சந்தியா... சாண்டிக்குப் பெண்பால் சந்தியாவாம்.... என்ன அருமையான கண்டுபிடிப்பு... சந்தியா உங்க மைக்கைப் போடுங்கன்னு சொன்னதும் எப்பவும் போல காணாதவன் கஞ்சியைக் கண்டதுபோல, நகைச்சுவை இல்லாத நரகத்தில் இதுவும் நகைச்சுவையே என வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

முகன் பாட, லாஸ் கை தட்ட, ஷெரின் உற்சாகமூட்ட சாண்டி ஆடினார்... ஒரு படத்துல வடிவேலு எங்கப்பா வாசிக்க, எங்கண்ணன் இசைக்க, எங்கம்மா ஆட, நான் பார்த்துக்கிட்டு இருப்பேன்னு சொல்வாரே... அப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி அது... சாண்டியைப் பார்க்க கரகாட்டத்துல குறத்தி வேசம் போடுற கணபதி மாதிரியே இருந்துச்சு... அதுவும் ஷெரின் எப்படி ஆடுவார்ன்னு செஞ்சி காட்டியதெல்லாம் மரண மாஸ்.

என்ன டாஸ்க்குடா கொடுக்கிறது என்பது இந்த சீசன் ஆரம்பத்துல இருந்தே பிக்பாஸ்க்குப் பிடிபடாத ஒன்றாகிப் போய்விட்டது... மொக்கையான டாஸ்க்குள்... மொத்தமாய் நல்லா விளையாண்டவர்களின் வெளியேற்றம் என பிக்பாஸ் சகதிக்குள் சிக்கிய கொக்கு மாதிரி தையத்தக்கா போட வேண்டிய நிலை... காரை அறிமுகப்படுத்து... ஸ்டூலை அறிமுகப்படுத்துன்னு அவரும் கம்பெனிக்காரனுக்கிட்ட காசு வாங்கி கல்லாக்கட்டிக்கிட்டு இருக்காரு... பின்னே இவனுக திங்கிற தீனிக்கி அந்தாளு தனியாச் சம்பாதிக்கணும்.

ஏய் எல்லாரும் இங்க வா... வரிசையில நில்லுன்னு பருத்தி வீரன் கார்த்தி மாதிரி எல்லாரையும் கூப்பிட்டு நூறாவது நாளுக்கிட்ட நெருங்கிட்டீங்க... இப்ப வரைக்கும் ஒண்ணுமே பண்ணாத உங்களைக் கரம் பிடித்து இழுத்தாரும் மக்களுக்கு (மக்கள் எங்கய்யா இழுத்தாங்க) என்ன சொல்ல விரும்புறீங்க... பிளாஸ்மா முன்னால ஒவ்வொருத்தரா வந்து நின்னு சொல்லுங்கன்னு சொன்ன பிக்பாஸ் சுவராஸ்யத்துக்காக அங்கங்கே மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்டுக்கங்கன்னு சொன்னார்.

எல்லாப் பயலும் சொல்லி வச்சி நாமினேசன் பண்ணுன மாதிரி நாங்க இந்த இடத்துக்கு வருவோம்ன்னோ... இறுதிப் போட்டிக்குப் போவோம்ன்னோ நினைக்கலைன்னு சொன்னானுங்க... நாங்களும்தான் நினைக்கலை... விஜய் டிவிதானேடா உங்களைப் பொறுக்கி பொறுக்கித்தனம் பண்ணினான். இல்லேன்னா நல்லா விளையாண்ட தர்ஷனுமில்ல இங்க உக்காந்திருப்பான்னு நாம கத்தினாலும் அவனுகளுக்காக் கேக்கப் போவுது. பிக்பாஸ் சொல்லிக் கொடுத்த மாதிரி மானே... தேனே... பொன்மானேல்லாம் மறக்காம போட்டு... அரச்சிச் சேர்த்த மசாலா போட்டு நாட்டுக்கோழி குழம்பு வச்ச மாதிரி கும்முன்னு மக்கள் மனசுல பாசம் என்னும் வாசனையை பக்குவமா ஏத்துனானுங்க.

இங்கே சகோதரி லாஸ்லியாவைப் பற்றிச் சொல்லணும்... கவின் போன பின்னே தான் கலகலப்பாக இருப்பதாய் காட்டிக் கொள்ள இவர் படும் பாடு... அப்பப்பா சொல்லி மாளாது.... அவனோட நட்புத்தான்டான்னு எல்லாரையும் நம்ப வைக்க எதுக்கு இத்தனை பிரயத்தனம் பண்றாங்கன்னுதான் தெரியலை... அவன்தான் ஐயாம் வெயிட்டிங்க்ன்னு சொல்லிட்டானே... கமலும் தேங்காய் பழத்துடன் சம்மந்தம் பேசத் தயாரா இருக்கார்... விஜய் டிவிகாரன் நம்ம வீட்டுக் கல்யாணம்ன்னு மண்டபமெல்லாம் புக் பண்ணி வச்சிட்டான்... பின்னே என்ன நட்பு... சீப்புன்னுக்கிட்டு.... இது ஊரை ஏமாத்தும் வேலை பெண்ணே...

சொல்ல வந்ததை விட்டுட்டேன் பாருங்க... பேசும் போது 'ஈஈஈஈஈ' அப்புறம் புல்லாக் குடிச்சிட்டு வாந்தியெடுக்கிறவன் மாதிரி 'ஊவ்வா'... பின்னே எட்டுக்கால் பூச்சி மாதிரி காலைக் கையை ஆட்டுறதுன்னு யாருக்குமே பிடிக்காத ஒன்றைச் செய்கிறார். இதெல்லாம் எதுக்கு..? எவனாச்சும் இப்படிப் பண்றது நல்லாயிருக்குன்னு சொல்லித் தொலஞ்சிட்டானுங்களா..?

இதெல்லாம் நீயூஸ் வாசிக்கிறேன்னு வேற சொல்லுது... 'ஈழத்தில் தமிழர்கள் ஈஈஈஈஈ வாழும் பகுதிகளில் ஊவ்வே இன்னும் பாதுகாப்பின்மைதான் ஈஈஈஈ' அப்படின்னு கையைக் காலை ஆட்டி வாசித்தால் எப்படியிருக்கும்...? பார்க்கிறவன் என்ன நினைப்பான்...? ஆத்தா அகிலாண்டேஸ்வரி நல்லாயிருப்பே இந்த 'ஈ', 'ஊ' எல்லாத்தையும் இன்னும் ஒரு வாரத்துக்கு தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே வீசிரு... பார்க்க சகிக்கலை... பார்க்க முடியலை.

அடுத்து சொமோட்டோ டாஸ்க்... சாண்டி, ஷெரின் மற்றும் லாஸ்லியா,முகன் என இரு அணி... இவர்கள் தங்களுக்கு வேண்டிய சொமோட்டோ உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும்... அதுக்கப்புறம் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வண்ணம் அதைப்பற்றி ஆஹா ஓஹோன்னு பேசணும். சாண்டி மட்டும்தான் நம்ம பய... கொத்துப் புரோட்டா வேணும்ன்னு சொன்னார்... மத்தவங்கள்ல்லாம் என்னமோ பேர் சொன்னாங்க... எதுவுமே புரியலை...

ஒவ்வொரு அணிக்கும் 'ZOMFORKS' மற்றும் 'ZOMSPOONS' அப்படின்னு ஒரு கோடு வேற கொடுத்தாங்க... இந்தக் கோடைப் பயன்படுத்தி நாம சொமோட்டோ உணவுகளை வாங்கினால் அவங்களுக்கு அவங்க ஆர்டர் பண்ணுன உணவு கொடுக்கப்படும்... இதுக்குப் பேர்தான் பிச்சைங்கிறது இல்லையா... யப்பா நீங்க அதை வாங்கினாத்தான் எனக்குச் சாப்பாடு கிடைக்கும்ன்னு நாலு பேரும் நாயாக் கத்துனாங்க... இதுவும் ஒரு டாஸ்க்கே என்று நம்புங்கள் நண்பர்களே... 

ஆரம்பமே அதிரடின்னு பாட்டப் போட்டு பாத்திமா பாபு, மீரா, ரேஷ்மா, மோகன் வைத்யாவை வீட்டுக்குள் அனுப்புனானுங்க... கை நிறைய பரிசுப் பொருட்களுடன் உள்ள வந்தாங்க... 

ரேஷ்மாவுக்கு இந்த உடைகள் எல்லாம் எங்க இருந்து கிடைக்குதுன்னு தெரியலை... கண்றாவி. 

பிரிந்தவர் கூடினால்.... ஆமா அதேதான்... பார்த்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். பரிசுப் பொருட்களைப் பார்த்ததும் வந்தவங்களை மறந்துட்டானுங்க உள்ள இருக்கவனுங்க... சோத்தைப் பார்த்த சொறிநாய் மாதிரி... மீரா முகனுக்கு ஒரு சட்டையைக் கொடுத்துட்டு அட்டை போடாத அரைக்குயர் நோட்டுல எழுதுனதை வாசிக்க ஆரம்பிச்சிருச்சு. சாண்டிக்கு ஒரு கோட் கொடுத்தானுங்க... அப்படியே எல்லாருக்கும்.

சரி சொந்தமெல்லாம் வந்திருக்காக... பரிசுப் பொருட்கள் எல்லாம் கொண்டாந்திருக்காக... சும்மாவே பேசிக்கிட்டு இருந்தா எப்படி... வாங்க... பேசலாம்... அழலாம்... ஆனந்தக் கூத்தாடலாம்ன்னு பிக்பாஸ் கூப்பிட்டாப்புல... செயல்பாட்டுப் பகுதிக்கு... புரியலையோ... அதாங்க ACTIVITY AREAவுக்கு வரச்சொல்லி, இவங்க போகுமுன்னே எப்பப்போ அழுகாச்சிக் காவியம் நிகழ்த்தப்பட்டதோ அதையெல்லாம் போட்டாவா மாற்றி மாட்டி வச்சிருந்தாரு பிக்பாஸ்.

எல்லாரும் கண்ணீர்க் கண்காட்சியை ஒரு முறை பார்த்துடுங்க... பின்னே கண்ணுல கண்ணீரைத் தேக்கி வச்சிக்கங்க... ஒவ்வொருவராத் தங்களைப் பாதித்த படத்தைப் பற்றிப் பேசுங்கன்னு மக்களோட உணர்ச்சியைத் தட்டிவிடுற ஒரு செமையான டாஸ்க்கைக் கொடுத்தார்.

பாத்திமாபாபு லாஸ்லியா அப்பாவின் கோபத்தையும் லாஸ்லியாவின் மனநிலையையும் பற்றிப் பேசினார். ரேஷ்மா 'என் மகனே... என் மகனே'ன்னு முகன் தனக்காக அழுவதையும், அவனே என் முன்ஜென்ம மகன் என்றும் பேசினார். 

ரேஷ்மாவோட உடையில மயங்கிட்டாரு போல நைனா, அவரும் முகன் அழுதா நான் கக்கூஸ்ல போயி அழுவேன்னு சொன்னார். ஆமாமா இருக்கும்போது சாக்சி, ஷெரின், அபி, மீரா, வனிதா, ரேஷ்மான்னு கடிப்பிடிச்சி அழுததெல்லாம் முகனுக்காகத்தான்னு நாம பார்த்தோமே. 

சேரன் தன் இடுப்பைக் கிள்ளினார் எனச் சொன்ன நொடியில் சேரனின் அழுகையையும் நான் அப்போது கொஞ்சம் யோசித்துப் பேசியிருந்தால் அந்தப் பிரச்சினை இப்படியாகி இருக்காது என்பதையும் மீரா சொன்னார்.

ஷெரின், சாண்டி, முகன், லாஸ்லியாவெல்லாம் பேசினாங்க... முகன் தர்ஷனின் அதிரடி வெளியேற்றம் பற்றிப் பேசினான்... கவின் போனதைப் பற்றிப் பேசினான்... உடனே லாஸ்லியாவுக்கு கேமரா வர, கண்ணுக்குள் நூறு நிலவு. 

லாஸ்லியா 'ஈஈஈஈ', 'ஊவ்வே' போட்டு பொம்மைக்கு அழும் பிள்ளை மாதிரி கைகால் ஆட்டி மனசு சொல்றதைத்தான் நான் பண்ணுவேன்னு பேசுச்சு... அதான் பார்த்தோமே... அப்பனுக்காகத்தான் என்னை மாற்றி விளையாண்டேன்னும் சொன்னுச்சு... ஆமா அப்படி என்ன விளையாண்டுச்சுன்னு நேத்துல இருந்தே யோசிக்கிறேன்.. கவினுடனான காதல் தவிர வேறொன்னும் கண்ணுக்குள்ள வரலை... உங்களுக்குத் தெரிஞ்சாச் சொல்லுங்க.

இன்னொன்னும் சொல்லணும் முகனைப் பார்த்து நீ அநாதையில்லை... இந்த உலகம் உனக்கானது... அங்கே உனக்கு ஆயிரமாயிரம் உறவுகள் இருக்குன்னு ரேஷ்மா சொன்னாங்க... முகன் அநாதை இல்லத்தில் வளர்ந்தவனா..? அப்படியிருந்தால் எப்படி பிக்பாஸ் வீட்டில் அவனுக்கு இடம் கிடைத்திருக்கும்..? அப்ப அவனைப் பார்க்க வந்த அம்மா, தங்கச்சியெல்லாம் அநாதை இல்லத்தைச் சேர்ந்தவங்களா..? 

அட லூசுப் பக்கி நீ அவனை அநாதை... அநாதையின்னு சொல்றே... அதைப் பார்த்து பாத்திமா, மோகன் என எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க... அவனுக்கு அப்பன், ஆத்தா, தங்கச்சி, தம்பியின்னு ஒரு அழகான குடும்பம் இருக்கு... மலேசியா தமிழ் பத்திரிக்கையில பிக்பாஸ் வெற்றியாளன் முகன்னு போட்டோ போட்டு போன வாரமே செய்தி போட்டுட்டானுங்க... நீ என்னடான்னா அவனை அநாதையின்னு சொல்லிகிட்டுத் திரியிறே... உங்க பாசத்துக்கு அளவேயில்லையா... கொஞ்சமாச்சும் வெளி உலகம் தெரிஞ்சி பேசுங்க... அன்புக்கு ஏங்கியவன்னு சொன்னாலும் ஓகே... ஒரேயடியா அநாதையின்னு சொல்லிட்டீங்களே..

ஒரு வழியா இந்த அருமையான... பொறுமையான... மிகவும் கடினமான டாஸ்க்கை முடித்து வெளியில் வந்தால் ஆடல் பாடல் நடக்க இருப்பது போல் ஒரு மேடை, எதிரே விருந்துண்ண பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் போடப்பட்டிருக்கும் நாற்காலி, விளக்குகள் என அருமையான செட்டிங்... சும்மா சொல்லக் கூடாது... பிக்பாஸ் போட்டியாளர்களை வேலை வாங்க முடியலைன்னாலும் தன்னோட குழுவை மிகச் சிறப்பாக வேலை வாங்குகிறார். அருமையாக இருந்தது.

எல்லாருக்கும் புதிய உடைகள் கொடுக்கப்பட, மேடையில் ஆடல்பாடல் இருக்கும்... திண்டுக்கல் ரீட்டாவைக் கொண்டாந்து ஆட விடுவானுங்கன்னு பார்த்தா.... காலையில கையைக் காலை ஆட்டுற மாதிரி இந்தப் பக்கிகதான் ஆடுச்சுக... பிக்பாஸ் வேற ரொம்பச் சிரத்தையுடன் பாடல்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கிட்டு இருந்தார்.

அப்புறம் சாப்பாட்டைக் கொண்டாந்து வைக்கவும் எல்லாரும் பிரியாணிச் சட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெள்ளிக்கிழமை தண்ணியடிக்காத அமீரகவாசியைப் போல காத்திருந்தார்கள். எங்கே எடுத்துச் சாப்பிட்டா உங்களை யார் எடுக்கச் சொன்னதுன்னு பிக்பாஸ் கட்டையைப் போடுவாரோன்னு பயத்துல உக்கார்ந்திருந்தார்கள். 

'என்ன எல்லாரும் டயட்ல இருக்கீகளா..?'ன்னு பிக்பாஸ் கேட்க, நோ பிக்பாஸ்ன்னு சொன்னானுங்க... அப்புறம் என்ன மூதேவிகளா... டாஸ்க்கா வச்சிருக்கேன்.... விளையாடாம யோசிக்கிறதுக்கு... தின்னுட்டுப் போயித் தூங்குங்கன்னு சொல்ல, அடிச்சித் துவைக்க ஆரம்பித்தார்கள்.

ஆடல் பாடல் மேடை அநாதையாய் இருந்தது... 

100வது நாள் அன்னைக்காச்சும் ரீட்டாவோட ஆட்டமோ அல்லது தஞ்சை சத்யாவோட கரகாட்டமோ இருக்கும்ன்னு நம்புவோம்.

அடுத்த சீசனுக்கு நாமளும் முட்டி மோதிப் பார்த்துட வேண்டியதுதான்... இந்த முறையே பாதிநாள் சாப்பாடு போட்ட மகராஜா, அடுத்த முறை எல்லா நாளும் சாப்பாடு போட மாட்டாரா என்ன... பேர் தெரியாததையெல்லாம் ஒரு கை பார்க்கலாம்தானே... இப்பவே பிக்பாஸ்க்கு ஒரு லெட்டர் போட்டு இடத்தைப் புடிச்சி வச்சிக்க வேண்டியதுதான்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.