மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 19 ஜூலை, 2016

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)


போலீஸ்காரர்கள் இருவர் பயிற்சி காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கீரியும் பாம்புமாக இருக்கிறார்கள். மேலதிகாரியின் உத்தரவின் பேரில் கீரியும் பாம்பும் இரண்டு கைதிகளை கன்னூரில் இருந்து திருவனந்தபுர சிறைக்கு மாற்றுவதற்காக இரயில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அழைத்துச் செல்கிறார்கள். மரங்கள் நிறைந்த அழகான பாதையில்... வளைந்து நெளிந்து பயணிக்கும் பாதையில்... ஆறுகள், ஏரிகள் மீதான நீண்ட பாலங்களில்... இரயில் பயணிப்பது போல படமும் அழகாய் பயணிக்கிறது.

இரண்டு கைதிகளில் ஒருவரான செம்பான் வினோத் ஜோஸ், கோவிலில் நகையைத் திருடி, தனது வளர்ப்புத்தாய்... அட நம்ம பரவை முனியம்மா... கையில் கொடுக்க, அவர் அது கோவிலில் திருடியது என்பதை அறியாது கழுத்து... காது... கால் என எல்லா இடத்திலும் போட்டுக் கொண்டு அதே கோவிலுக்குப் போக... அப்புறம் என்ன திருடருக்கு ஜெயில்ல சாப்பாடு.

இரண்டாவது கைதி வினித் சீனிவாசன்... படிப்பு ஏறாததால் டீக்கடையில் வேலை... கூடப்படித்து நல்ல மார்க் எடுத்து வெளியூரில் படிக்கச் சென்ற பெண் மீது காதல்... ஆனால் அது ஓகே ஆனதா என்பதை கடைசி வரை காட்டவில்லை என்பது வேறு விஷயம். அளவில்லா பாசம் கொண்ட அக்கா... அக்காவும் தம்பியும் ஒரு தாய் மக்கள் என்றாலும் அப்பா வேறு... ஆம் முதல் கணவனின் மறைவுக்குப் பின்னர் மேஸ்திரி நெடுமுடி வேணு அவர்களை அழைத்து வந்து குடும்பம் நடத்தி பிறந்தவர்தான் வினீத். வேணுவுக்கோ தன் மனைவியின் மகள் மீது மோகம்... அவளை அடையத் துடிக்கிறார். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த கேவலமான எண்ணத்துக்கு மனைவி எதிரியாகிறாள். அக்காவை அந்த காமுகனிடம் இருந்து காப்பாற்ற கொலை செய்யத் திட்டமிடுகிறான் மகன். அந்த திட்டத்தை அறிந்த வேணுவோ அதில் மனைவியை பலி கொடுக்கிறார். அம்மாவைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு அடைக்கப்படுகிறான்.


இரயிலில் இருந்து தப்பி அப்பாவைத் தேடிச் செல்லும் வினீத்தை தேடி இரண்டு போலீஸ்காரர்களும் முதல் கைதியும் அலைவது சுவராஸ்யம்... அந்த விசாரணையில்தான் நாயகனின் கதை விரிகிறது. அக்காவுடன் வேறு ஊரில் இருக்கும் அப்பாவை கண்டுபிடித்தானா...? அக்காவை காப்பாற்றினானா...? போலீஸ் அவனைப் பிடித்ததா..? இரண்டு போலீஸ்காரர்களுக்குமான பிரச்சினை தீர்ந்ததா...? இரண்டாவது கைதி அவர்களோடு பயணித்தானா இல்லையா...? என்பதுதான் மீதிக்கதை.

படம் வந்து ஒரு வருசத்துக்கு மேலாச்சு... இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்த்திருக்கிறது. இந்தப் படத்தில் பள்ளி விழாவில் படிக்கும் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அக்கா நிக்கி கல்ராணிக்கும் தம்பி வினீத் ஸ்ரீனிவாசனுக்கும் இடையிலான வயசு வித்தியாசம் அதிகமில்லை என்பது உறுத்தல், அப்படியிருக்கு நிக்கி சின்ன குழந்தையாக இருக்கும் போதே அவரின் அம்மாவை மனைவியாக்கிக் கொள்ளும்  நெடுமுடி வேணு 'உன்னைய விரும்பிக் கட்டலை... அன்னைக்கே உம்மவ என்னையக் கவர்ந்துட்டா... என்னைக்கா இருந்தாலும் அவளை அடையணும்ன்னுதான் கூட்டியாந்தேன்' என்று சொல்லும் போது  பொறுத்தமில்லாமல் தோன்றுகிறது.


வினித் சீனிவாசன் படங்கள் அதிகம் பார்த்ததில்லை... காமெடிகலந்த திரில்லர் படம் என்பதால் நடிப்பு பரவாயில்லைதான்... அக்காவாக வரும் நிக்கி கல்ராணி அழகு... வினித் விரும்பும் பெண்ணாக வரும்  அபர்ணா பாலமுரளிக்கு அதிக வேலை இல்லை... கொஞ்ச நேரமே வருகிறார். நெடுமுடி வேணுவின் வில்லத்தனம் சூப்பர். போலீஸ்காரர்களின் மோதலும்... அவர்களோடு வினீத்தை தேடி பயணிக்கும் கைதி வினோத்தின் நடிப்பும் கலக்கல். 

செகண்ட் கிளாஸ் யாத்ரா ஒரு சுகமான பயணம்.


-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யமான கதையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆரம்பத்தைப் படித்ததும் வானவில் என்கிற அர்ஜுன்-பிரகாஷ்ராஜ் படம் நினைவுக்கு வந்தது. இதையும் அதுபோல ஒருநாள் தமிழில் எடுக்கலாம்!

Mrs.Mano Saminathan சொன்னது…

அழகிய விமர்சனம்!

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் நன்று எனக்கு செலவு மிச்சம் நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம். பார்த்துவிட்டோம்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஸ்வாரஸ்யம்.

ஒரு சின்ன டௌட்.... இந்தப் படங்கள் எப்படி, எங்கே பார்க்கறீங்க? DVD? இல்லை YOUTUBE?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
அதில் இருவருக்கும் ஒரு பெண்ணின் மீது காதல்... அதற்கான சண்டை...

இதிலோ அப்பா - வளர்ப்பு மகளை அடையத் துடிப்பதுதான் பிரதானக் கதை...

நல்ல படம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தாங்கள்தான் சினிமா பார்க்க மாட்டீர்களே... பின்ன என்ன செலவு?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
நல்லாயிருக்கீங்களா..?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
இங்கு திரையரங்கம் செல்லும் வாய்ப்பு இல்லை... அதற்கு நேரமும் பணமும் வேண்டும்.
டிவிடி எல்லாம் வாங்குவதில்லை....

பெரும்பாலும் நல்லபடங்கள் என்றால் விமர்சனம் மற்றும் மலையாள நண்பரின் கருத்தையும் கேட்டு வைத்துக் கொள்வேன்.

தமிழ்ராக்கர்ஸில் நல்ல பிரிண்ட் வரும்வரை வெயிட் பண்ணி டவுன்லோட் செய்து கொண்டு பார்ப்பேன்...

ரொம்ப பிடித்த படம் என்றால் எனது ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துக் கொள்வேன்...

அன்னாவும் ரசூலிலும் ஆரம்பித்தது மகேஷிண்டே பிரதிகாரம் வரை சேமிப்பில் இருக்கு... இதில் அன்னா பலமுறை பார்த்திருக்கிறேன்... அனார்கலி ரெண்டு முறை பார்த்தேன்... அந்தமானின் அழகுக்காகவும்... கதை மற்றும் பாடலுக்காக...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.