மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 11 மார்ச், 2016

மனசின் பக்கம் : வசந்தங்களும் வருத்தங்களும்

மார்ச் மாத அகல் மின்னிதழில் எனது 'வெளிநாட்டு வாழ்க்கை' கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளி வந்திருக்கிறது. அகல் மின்னிதழுக்கு என தனி இணைய தளம் தொடங்கியிருக்கிறார்கள். என்னிடம் கட்டுரை வாங்கி வெளியிட்ட அகல் மின்னிதழ் நிர்வாகி சத்யா ஜி அவர்களுக்கு நன்றி.



சென்ற வார பாக்யாவில் எனது நொடிக்கதை வெளியாகியிருக்கிறது. அவர்கள் கொடுக்கும் ஒரு கருவுக்கு எழுதவேண்டும். இது இரண்டாம் முயற்சி. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. கதையை தேர்வு செய்த பாக்யராஜ் சாருக்கும், பூங்கதிர் சாருக்கும் நன்றி.
விஞர் மிகச் சிறந்த எழுத்தாளர், இளமதி அக்கா அவர்களின் கணவர் மறைவு செய்தி கில்லர்ஜி அண்ணாவின் தளத்தில் பார்த்து வருந்தினேன். பல வருடங்களாக கோமாவில் இருந்த கணவரை குழந்தையைப் போல் பார்த்து வந்த, குடும்ப கஷ்டங்களை எல்லாம் தன் தோளில் அல்ல... தலையில் சுமந்த இளமதி அக்கா குறித்து அவருடனான முகநூல் உரையாடல்களில் அறிந்திருக்கிறேன். கோமாவில் இருந்தாலும் தனக்கு துணையாக இருந்த கணவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது... அவருக்கு நம்மால் ஆறுதல் மட்டுமே கூற முடியும்... இதிலிருந்து வெளிவரும் மன உறுதியை இறைவன் கொடுக்கட்டும். அவரின் கணவரின் ஆத்மா சாந்தியடையவும் இனி வரும் காலங்களில் அக்கா, மறக்கமுடியாத இந்நிகழ்வை மறந்து எழுத்துலகில் சாதிக்கவும் இறைவன் அருள் புரியட்டும்.

Image result for rest in peace

டுத்ததாக என்னை ரொம்பப் பாதித்த மரணம் கலாபவன் மணி அவர்களுடையது... மனோ அண்ணா முகநூலில் பகிர்ந்ததைப் பார்த்து நம்பிக்கையின்றி செய்திகளில் வந்திருக்கிறதா என்று தேடிக் கிடைக்காமல் இது தவறான செய்தியாக இருக்குமோ என்று நினைக்கையில் கேரள ஆங்கில இணைய இதழில் தற்போதைய செய்தியாக வெளியாகியிருந்தது. எப்படிப்பட்ட கலைஞன்... என் வாழ்க்கை இதுதான்... இதைக் கடந்துதான் வந்தேன் என்பதைச் சொல்ல யோசிப்போர் நிறைந்த உலகில் நான் எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போதே ஆட்டோ ஓட்டினேன் என்றும் குடும்ப வறுமை குறித்து சொல்லியும் நான் இப்படித்தான் வாழ்ந்தேன்... இந்தப் பாதையில்தான் வந்தேன் என்பதை மேடைக்கு மேடை சொல்லும் கலைஞன்... பந்தா இல்லாத மனிதன்... கஷ்டப்படுறவனுக்கு தன்னாலான உதவியை அப்போதே செய்யும் கலைஞன்.. கொலையா.... தற்கொலையா... என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தாலும் ஒரு நல்ல மனிதனை இன்னும் சில காலம் வாழ விடாமல் அழைத்துக் கொண்டு விட்டானே என்ற வருத்தம் வாட்டுகிறது. நல்ல மனசுக்காரனான அந்த மனிதனின் ஆத்மா சாந்தியடையட்டும்.


னது புத்தக வெளியீட்டிற்காக ஊருக்குச் சென்றிருந்த கனவுப் பிரியன் அண்ணா, விழாவுக்கு முதல்நாள் இரவு பைக்கில் இருந்து விழுந்து கை கால்களில் சிராய்ப்புக்களுடந்தான் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். சென்ற வாரமே இங்கு வரவேண்டியவர் காயங்களால் வரவில்லை. இப்போது உடல்நலம் பரவாயில்லை என திரு.ரெத்தினவேல் ஐயா பகிர்ந்திருந்தார். அண்ணாச்சி விரைவில் நலமடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.


பிரதிலிபி போட்டியில் இருக்கும் எனது 'நேசம் சுமந்த வானம்பாடி' சிறுகதை இதுவரை பதினோரு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. இன்னும் மதிப்பெண் அளிக்காத நட்புக்கள் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் மதிப்பெண் கொடுங்கள்... வாக்களிக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. முகநூல் கணக்கின் மூலம் வாக்களிக்கலாம்.

நேசம் சுமந்த வானம்பாடி

புதாபியில் புதன் அன்று பெய்த காற்றுடன் கூடிய மழை, நிறைய மரங்களை வேரோடு சாய்த்திருக்கிறது, இந்த காற்றும் மழையும் இன்னுமொரு அரை மணி நேரம் நீடித்திருந்தால் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருக்கும் போல, காரணம் வெயில் மட்டுமே அடிக்கும் என்று நினைப்பில் மழை நீர் வடிவதற்கான முறையான வசதி இல்லாமல் ரோடெல்லாம் வெள்ளக்காடாக மாறி, மரங்கள் விழுந்து, கட்டிடங்களில் இருக்கும் கண்ணாடி சன்னல்கள் விழுந்து உடைந்து கால் மணி நேர மழை கண்டபடி நாறடிச்சிட்டுப் போயிருச்சு. நேற்றும் மழை வரும் என பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டுட்டாங்க... வெயில் பின்னி எடுத்துருச்சு... இங்கயும் ஒரு ரமணன் இருக்கார் போல...


றாது சினம் பார்க்கும் போது ஆரம்பத்தில் எதுவும் தோன்றவில்லை, ஆனால் கல்லூரிப் பெண்கள் பலி வாங்கும் படலத்தை ஆரம்பிக்கும் போது இதே கதையில் வேற ஒரு படம் பார்த்திருக்கிறோமே அப்படின்னு ரொம்ப நேர யோசனைக்குப் பிறகு மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த மெமோரிஸ் படத்தின் கதைதான் என்பது நினைவில் வந்தது. பின்னர்தான் அந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். அருமையாக செய்திருந்தார்கள். உதயநிதிக்கு அருள்நிதி நல்லா நடிக்கிறார். பெங்களூர் டேஸ் மாதிரி காலை வாராமல் ஆறாது சினம் விறுவிறுப்பா நகர்கிறது. போலி சான்றிதழ்களை மையமாக வைத்து அதர்வா நடிப்பில் வெளிவந்த கணிதனும் நல்லாயிருந்தது.

நேற்று ஸ்கைப்பில் பேசும்போது விஷால் அவன் அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். 'இவனைப் பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம்' என்று மனைவி என்னிடம் சொல்லவும் அவன் ஏதோ பதிலடி கொடுத்தான். என்ன பேச்சு பேசுது பாருங்க... 'பேசாம ஆஸ்பத்ரியில யாருக்காச்சும் கொடுத்திருக்கலாம்' என்றார். உடனே அவன் 'ஏன் ஆஸ்ரமத்துல கொடுத்திருக்கலாமே நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பேன்' என்றான். 'வாயைப் பாரு... இரு யாருக்கிட்டயாச்சும் கொடுத்துடுறோம்' என்று சொல்ல இருவருக்கும் வாக்கு வாதம் தொடர்ந்தது. நான் ரசித்துக் கொண்டிருந்தேன்... கடைசியாக அவன்  'சோறு வெள்ளையா இருந்தாத்தான் மோரு வெள்ளையா இருக்கும்'ன்னு சொல்லிட்டுப் படுத்துட்டான். எதுக்கு அதைச் சொன்னான்... இதை யாரு அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான்னு தெரியலை. ஆனா அதை நினைச்சி நினைச்சி நேற்று முழுவதும் சிரித்தேன்.
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

பாக்யாவில் வெளி வந்ததற்கு பாராட்டுகள்.

மெமொரீஸ்கும் ஒரு ஒரிஜினல் படம் இருந்ததாக ஏதோ ஒரு விமர்சனத்தில் படித்த நினைவு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கலாபவன் மணி'யின் மரணம், இப்போ வரை நம்ப மறுக்குது மனசு.

வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுத்து சென்றிருக்கும் மழை, இனியாவது டிரெயினேஜ் கண்டிப்பாக அமைக்க வேண்டும், காலநிலைகள் இனி மாறி மாறி வரும் என்பதை அவர்கள் உணர்ந்தால் நன்று.

துரை செல்வராஜூ சொன்னது…

விஷாலின் குறும்பு மொழி கண்டு வியந்தேன்..

வாழ்க நலம்..

சாரதா சமையல் சொன்னது…

இந்த பதிவில் விசாலின் குறும்புத்தனத்தை ரசித்தேன்.

நிஷா சொன்னது…

பாக்யாவில் குட்டிக்கதை வெளி வந்ததையிட்டு மகிழ்ச்சியும் பாராட்டுகளும் குமார்!உங்க பதிவுகள் சில இன்னும் படிக்காமல் இருக்கின்றது! படித்து கருத்து போடும் வரை திட்டாதீர்கள்.

விஷாலிடமே கேளுங்கள் ஏன்பா அப்படி சொன்னே என! அவன் சொன்னது எனக்கு புரிந்து போனது! உங்களுக்கு ஏன் புரியவில்லை என எனக்கும் புரியவில்லையே!

த.ம

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சகோ

கட்டுரை வெளிவருவதற்கு வாழ்த்துக்கள் இளமதி அவர்களின் கணவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாக்யாவில் வந்தமைக்கு வாழ்த்துகள்...

விஷால் : ரசித்தேன்...

Yarlpavanan சொன்னது…

வாழ்த்துகள்
தொடரட்டும் தங்கள் பணி

வைசாலி செல்வம் சொன்னது…

வாழ்த்துகள் ஐயா.தொடருங்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பாக்யாவில் உங்கள் கதை வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் குமார்!

விஷாலின் குறும்பு சூப்பர்! ரசித்தோம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விஷாலின் குறும்பை ரசித்தேன்.....

பிரதிலிபி - வெற்றி பெற வாழ்த்துகள்