மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 20 நவம்பர், 2015

மனசின் பக்கம் : பொய்யின்றி மெய்யோடு

கார்த்திகை பிறந்து விட்டது... இனி பழனி, ஐயப்பன் என மலைகளுக்குச் செல்லும் சாமிகள் எங்கு பார்த்தாலும் காவி வேஷ்டிகளில் காட்சி தர ஆரம்பித்து விடுவார்கள். நானும்  ஆறு வருடம் பழனிக்கும் நாலு முறை சபரி மலைக்கும் ஒரு முறை திருப்பரங்குன்றத்துக்கும் நடந்திருக்கிறேன். அந்த நாட்கள் மிகவும் சந்தோஷமான சுவராஸ்யமான நாட்கள்... அதையெல்லாம் பதிவாக்கணும்... பார்க்கலாம்.  இப்ப மனசுல ஒரு ஆசை மீண்டும் சபரிமலை செல்ல வேண்டும்... அந்த ஐந்து மலைக்குள் காட்சி தரும் ஐயப்பனை தரிசித்து பஸ்மக் குளத்தில் ஆசை தீர குளித்து வரவேண்டும். மீண்டும் அந்த வாய்ப்பை ஐயன் தருகிறானா என்று  பார்க்கலாம். ஐயப்ப பக்தர்களுக்காக இந்தப்பாடல்... இதே பாடலை யேசுதாஸ் அவர்கள் பாடியிருப்பார்... அது வெண்கலக்குரல்... கேட்டுக்கேட்டு மனதில் பதித்த குரல்... இங்கே ஓரு சிறுமி... எங்க ஸ்ருதி போல... என்ன அழகாப் பாடியிருக்கு பாருங்க... அப்படியே நாமும் ஐயனின் முன்னால் மனம் உருகி நிற்பதைப் போல் இருக்கிறது... அழகான குரல்... அருமையான பாடல்... நீங்களும் கேளுங்கள்... 


***
சென்னை மழை நீரில் மிதக்கிறது... மக்களின் நிலை வருத்தப்பட வைத்தாலும் இதற்கு யார் காரணம்...? கண்மாய்களையும் குளங்களையும் பட்டாப் போட்டு வித்த அரசும்... நம்ம வீட்டை ஓட்டிப் போற சாக்கடையில குப்பைகளைப் போட்டு அடைச்ச நாமளும்தான்... சரியான சாக்கடைக் கால்வாய்கள் இருந்து முறையாக பராமரிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காதுதானே... மக்களைக் குறை சொல்லும் அரசு அலுவலர்கள் அந்த இடத்துக்கு பட்டா கொடுத்து வீட்டு வரி வசூலித்துத்தானே வந்திருக்கிறார்கள். அம்மாவை ஐயாவும்... ஐயாவை அம்மாவும் மாறி மாறி வசைபாடுவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யலாம்... இனிமேல் இதுபோன்ற பாதிப்பு வராமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் நல்லாயிருக்கும். 

***
விஜயகாந்த் காமெடியன் ஆக்கப்பட்டாலும்... அவரும் அரசியல் ஆதாயம் தேட நினைத்தாலும் நமக்கு நாமேன்னு சொல்லிக்கிட்டும் மாற்றம் முன்னேற்றமுன்னு சொல்லிக்கிட்டும் தண்ணீர் கிடக்கும் இடங்களுக்குள் போகாமல் ரோட்டில் பாதுகாப்பாய் செல்லும் அரசியல்வாதிகளைப் போலில்லாமல் மடித்துக்கட்டி வேஷ்டியில் முழங்கால் தண்ணீருக்குள் நடந்து சென்று விசாரித்து பொருட்களைக் கொடுக்கிறார். அதிலும் எகத்தாளமாய்... நாங்க நிவாரணத்துக்கு ஐந்து லெட்சம் கொடுத்திருக்கிறோம்... எல்லா மாவட்டத்துலயும் கட்சிகாரங்க முடிந்ததை செய்யிறாங்க... நாங்க கொடுக்கிறதெல்லாம் எங்க சொந்தக்காசு... உழைத்த காசு... மத்தவங்க மாதிரி நோட்டைத் தூக்கிக்கிட்டு போகலை... என்றாரே பார்க்கலாம். காமெடியனாக இருந்தாலும் விஜயகாந்த்... கிரேட்தான் போங்க... என்ன சின்னச் சின்ன வீடியோ கிளிப்பிங்கா போட்டு 'வாராரு வாராரு அழகர் வாராரு'ன்னு அவரோட கட்சிக்கான முகநூல் பக்கத்தில் போடுறதுதான் முகம் சுழிக்க வைக்கிறது.
***

த்துக்குட்டி படம் விவசாயிகளின் பிரச்சினையைப் பேசியிருக்கிறது. மீத்தேன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்பதை விவரமாக பேசுகிறார்கள். விவசாயம், விவசாயியின் சாவு போன்றவற்றை கேவலப்படுத்தி செய்தி வெளியிடுவது குறித்தும் பேசுகிறார்கள். நரேன், சூரி மற்றும் அவர்களின் நண்பர்களின் நகைச்சுவையும் படம் முழுக்க பரவிக் கிடப்பதால் ரசித்துக் கொண்டே விவசாயியின் பிரச்சினையை பார்க்க முடிகிறது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மீத்தேன் குறித்து அரசியல் பயமின்றி விரிவாகப் பேசிய இயக்குநருக்கு வாழ்த்துக்கள். மாஸ் ஹீரோக்களுக்கான இயக்குநர்கள் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுப்பதில்லை... புதியவர்களே எடுக்கிறார்கள்... அதில் வெற்றியும் பெறுகிறார்கள்... அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

***
ருத்தரை வேண்டாம் என்று ஒதுங்கி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவரும் இங்குதான் இருக்கிறார் என்றாலும் அவரை சந்திக்க விரும்புவதுமில்லை... சந்திக்கவும் இல்லை. சில வாரங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் ஒருவர் என்னைக் கூப்பிட்டு அவர் வந்திருக்காரு... நீ இப்ப அறைக்கு வராதே என்றார். அவர் எங்கள் அறைக்கு வருவதில்லை... இப்போது வர ஆரம்பித்திருக்கிறான்... எல்லாம் பிரச்சினைக்கு விதை போடலாம் என்ற எண்ணத்தோடுதான். தீபாவளிக்கு முதல்நாள் நானும் மச்சானும் டிரஸ் எடுக்கலாம் என கடைக்கு போய்விட்டு வந்தால் அவுக எங்க அறையில் இருந்தாக. என்னமோ நம்மளை எடுத்துப்புடுற மாதிரி பார்த்தாக... நான் கண்டுக்கவே இல்லை... நான் பாட்டுக்கு உட்கார்ந்து மனைவியுடன் சாட் பண்ணிக் கொண்டிருந்தேன். அம்புட்டுப் பேரையும் கூட்டியாந்து ஆளாக்குனேன்... இன்னைக்கு எதுத்துக்கிட்டு நிக்கிறானுங்க... நாந்தான் நடுத்தெருவுல நிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாக... எனக்குச் சிரிப்பு... ஆனா அந்த இடத்தில் சிரிக்கத்தான் முடியலை... கூட்டியாந்தாய்... உதவி செய்தாய்... அதை மறக்கவில்லை... மறப்பவன் மனிதனும் அல்ல... கூட்டியாந்தவர்களிடம் எல்லாம் செய்த செலவைவிட கூடுதலாகத்தானே பெற்றுக் கொண்டாய்... அப்புறம் எதுக்கு நடுத்தெருவுல நிக்கிறேன்னு கேக்க நினைத்து அடக்கிக் கொண்டேன். 

என் மனைவியின் தங்கை கணவர் போன வாரம் ஊருக்குப் போனார். அவர் சொல்லவில்லையாம்... உடனே அந்தச் சின்ன நாய் சொல்லாமப் போயிருச்சுன்னாங்க... அப்ப பெரிய நாய்... அட நாந்தானுங்க அது... நாய் நன்றியுள்ளதுதான்... அதுக்கிட்ட எப்படி நடந்துக்கிறோமோ அப்படித்தான் கடிக்கிறதும்... விளையாடுறதும்... நாங்க நாயாவே இருக்கோம்... நீ நரியில்ல... அதுவும் குள்ளநரியில்லன்னு மனசுல தோணுச்சு... ஆனா சொல்லத்தான் நினைக்கலை... சாட்டிங்கில் மனைவி நீங்க எதுவும் பேச வேண்டாம் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்... மேலும் நரியோட நாய்க்கு என்ன பேச்சுன்னு பேசாம இருந்தா... வீடு வாசலைக் கட்டி நல்லா இருங்கடான்னு வேற சொல்லிட்டுப் போனார்... அவர் போனதும் அடக்கி வச்சதை எல்லாம் சிரிப்பா சிரிச்சிக்கிட்டேன். உத்தமன் வர்றான் செம்பை எடுத்து உள்ள வையிங்கிற கதைதான் அவனைப் பார்த்தால் ஞாபகம் வரும். அப்படிப்பட்ட உத்தமன் ஊருக்குள்ளே நான் ஒருத்தன்தான் உத்தமன்னு கத்திக்கிட்டு கிடக்கார். என்ன செய்யிறது... நரிகள் எல்லாம் கூப்பாடு போடுது... நாமதான் ஒதுங்கிப் போக வேண்டியிருக்கு.

***

ருத்ரமாதேவி மிகப்பிரமாண்டமாய் வந்திருக்கும் வரலாற்றுப் படம். அனுஷ்காவின் நடிப்பு செம... அதுவும் பெண்ணாய் பிறந்து தான் பெண் என்பதே அறியாமல் ருத்ரதேவனாய் வாழும் காட்சிகளிலும் பெண் என்று அறிந்ததும் துவண்டு போவதும்... பின்னர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஆணாய் தொடரும் காட்சிகளிலும்  கலக்கியிருக்கிறார். பாகுபலி அளவுக்கு கிராபிக்ஸில் மிரட்டலைன்னாலும் படம் பாகுபலியைவிட சிறப்பாகவே இருக்கிறது. ராணா, அல்லு அர்ஜூன், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் என எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் போரடிக்கவில்லை.

***
சென்ற வாரம் நண்பனிடம் பேசும் போது சில்க் சாரீஸ் எக்ஸ்போர்ட் பண்ணும்வோம்டா... அங்க விசாரி என்றான். உடனே நான்  என்னது சில்க் சாரியா..? என்றேன். அதற்கு அவர் விளக்கம் சொல்றாராமாம்... அடேய் சில்க் சாரியின்னா பட்டுச் சேலைடா என்று உலகமகா விளக்கம் கொடுத்தார். அட நாதரிப்பயலே... சில்க் சாரியின்னா பட்டுச் சேலையின்னு தெரியாத கூமுட்டையா நானு... இங்க அதெல்லாம் போகுமான்னு கேட்டா... இப்பத்தான் புதுமையா விளக்கம் கொடுக்கிறே என்றதும் ஹி.. ஹி... யின்னு சிரிப்பு வேற. அப்புறம் அவன் ஏதோ கேட்க, நான் அவன் சொன்னது போல் பதில் சொன்னதும் அப்பா ஆரம்பிச்சிட்டியா...? முதல்ல வையின்னு சொல்லிச் சிரித்தான்.
***
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது வெற்றிக்கொடியை நட்ட தேவா, கானாப்பாடல்களுக்கு  பிரபலம் என்பதை எல்லாரும் அறிவோம். 'வந்தேன்டா பால்காரன்...' என்று ரஜினியின் மனதில் இடம் பிடித்து பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர். சூப்பர் ஸ்டார் என்று வரும் அந்த ஒற்றை ஒற்றை எழுத்தையும் அதற்கான அதிரும் பின்னணியையும் அண்ணாமலையில் தேவாதான் அறிமுகம் செய்தார் என்று நினைக்கிறேன்.  இன்று அவரின் பிறந்தநாள்...  எனக்கு ரொம்ப நாளா சோலையம்மா படத்துக்கு தேவாதான் இசையமைத்தார் என்று தெரியாது. இந்தப்படப் பாடல்கள் எல்லாம் இளையராஜாவின் இசையை ஒத்தே இருக்கும்... அருமையான பாடல்கள்... 'கூவுற குயிலு' என்ன சொல்லுதுன்னு நீங்களும் கேளுங்கள்.


மனசின் பக்கம் புதிய செய்திகளுடன் அடுத்த வெள்ளி வரும்...
-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

எல்லா விடயமும் கலந்த மசாலாக் கலவை... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கலையன்பன் சொன்னது…

அடுத்த வெள்ளி வரும் என்பதை
சொல்லி வைத்தமைக்கு நன்றி!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
வெள்ளிக்கிழமைகளில் எழுத உத்தேசம்... பார்க்கலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆஹா... எப்ப எழுதப் போறீங்க... எழுதிட்டு சொல்லுங்க...

தனிமரம் சொன்னது…

நெய்கொண்டு போகும் பயணமே தனிச்சுகம்தான் அண்ணாச்சி தொடர்ந்து ஆன்மீக யாத்திரை பற்றி எழுதுங்கள். தேவா வின் சில மெல்லிசைகள் பலர் அறியாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல)))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அங்கும் தொல்லை தானா...? ஒதுங்குவது நல்லது தான்... சுவாமியே சரணம் ஐயப்பா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அனைத்துமே அருமை. அதிலும் ஆன்மிக பயண அனுபவங்கள் பற்றிய முதல் பத்தி. சிறப்பு. நானும் சபரிமலை சென்று வந்த பயண அனுபவத்தை பதிவாக எழுதியிருக்கிறேன். முடிந்தால் படித்து கருத்திடுங்கள்.

http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post_25.html

கத்துக்குட்டியும், ருத்ரமாதேவியும் இனிதான் பார்க்கவேண்டும்.
த ம 4

மீரா செல்வக்குமார் சொன்னது…

செய்திகளால் ஒரு மாலை... ஐயப்பன் மாலையில் தொடங்கி தேவாவில் முடிகிறது...
அருமையான தொகுப்பு

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நேசன்...
ஆன்மீக பயணம் எழுதணும்... எழுதுவோம்.
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
இங்கும் தொல்லைதான்... என்ன செய்வது... ஒதுங்கித்தான் போக வேண்டியிருக்கு...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கண்டிப்பாக அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக வாசிக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான பகிர்வு! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல கலந்து கட்டிய ஒரு கதம்பம்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.