முன்கதை
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். அவளிடம் விசாரிக்கும் போது இரண்டு பேரைப் பற்றி அறிந்து அவர்கள் கொலை பண்ணியிருக்கலாமா என சந்தேகிக்கிறார்.
பகுதி -1 படிக்க கொலையாளி யார்?
பகுதி -2 படிக்க கொலையாளி யார்?
"சார்... ஐ ஆம் டாக்டர் சிவராமன்"
"ஓ... உங்களைப் பார்த்திருக்கிறேன்னு நினக்கிறேன்?" என்றார் சுகுமாரன்.
"பார்த்திருக்கலாம் சார்..."
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..?
"சொல்லுங்க..."
"உங்க நண்பர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்..."
"ம்... எதுக்காக சார் அவரைக் கொல்லணும்...?"
"ஐ டோண்ட் நோ டாக்டர்... பட்... திஸ் ஈஸ் மர்டர்..."
"அவருக்கு எதிரிங்கன்னு யாருமில்லையே..."
"ஏன் எதிரிங்கதான் பண்ணனுமா... பிரண்ட்சே கொலை பண்ணியிருக்கலாம் இல்லையா?" குதர்க்கமாய்க் கேட்டார்.
"சேச்சே... இங்க அவருக்கு பிரண்ட்ஸ் அதிகமில்லை சார்.. கொஞ்சப் பேர்தான்... அதுவும் சொசைட்டியில பெரிய ஆளுங்க... நான் மட்டும்தான் அடிக்கடி வருவேன். மத்தவங்க எப்பவாச்சும் வருவாங்க... அவரு வந்து தங்குறதே ரெண்டு மூணு நாள்தான்..."
"ஆமா... மாசத்துல மூணு நாள் இங்க வந்து தங்குறதுங்கிறது எதுக்காக... அந்த மூணு நாள்ல இங்க என்ன பண்றார்... ஒரு பிஸினெஸ்மேன் மாசத்துல மூணு நாள் ரெஸ்ட் எடுப்பாரா...? இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு இடிக்குது... உங்களை மாதிரி ஆளுங்க சொன்னாத்தான் தெரியும்... எதுக்காக இங்க வர்றாரு...?"
"சார்... எனக்கு நேட்டிவ் மதுரைதான்... ஸ்கூல் லைப்பெல்லாம் அங்கதான்... நானும் அவரும் கிளாஸ் மெட்ஸ்... திக் பிரண்ட்ஸ்... அப்புறம் அப்பா தொழில் சம்பந்தமா இங்க வந்து இங்கிட்டே செட்டிலாயிட்டாலும் எங்களுக்குள்ள நல்ல பிரண்ட்ஷிப்... அப்புறம் அவர் பெரிய பிஸினஸ்மேன்... நான் டாக்டர்ன்னு வாழ்க்கை எங்களை மேல கொண்டு போயி நிறுத்திருச்சு... இங்க ஒரு தோட்டம் வேணுமின்னு சொன்னப்போ அப்பாதான் அவருக்கு இந்த தோட்டத்தை வாங்கிக் கொடுத்தார். இந்த வீடு அவரே பாத்துப் பாத்து கட்டினார்... மூணு நாள் ரெஸ்ட்டுக்குத்தான் வர்றேன்னு சொல்வார்... வேற எதுவும் சொல்ல மாட்டார்... எப்பவும் பிஸினஸ்தான்... இங்க இருக்கும் போதும் போன்ல பேசிக்கிட்டேதான் இருப்பார்... அவரோட பிஸினஸ் பக்கம் எனக்கு எதுவும் ரொம்பத் தெரியாது சார்... என்னோட தொழிலை அவரும் அவரோட தொழிலை நானும் ரொம்ப ஆழமாத் தெரிஞ்சி வச்சிக்கலை..."
"ம்...சரி... ஆமா நீங்க நேத்து வந்தீங்களா?"
"இல்லை... சார்..."
"என்னங்க அடிக்கடி வர்ற ஆளு நேத்து மட்டும் ஏன் வரலை... முன் கூட்டியே உங்களுக்கு விவரம் தெரியுமா?"
"இன்ஸ்பெக்டர்... " என்று கத்தியவர் "நீங்க என்னைய சந்தேகப்படுறீங்களா?" என்றார் கோபமாய்.
"சார்... நீங்க செஞ்சீங்கன்னு சொல்லலை.... எங்களோட பார்வை எல்லார் மேலயும் ஒரே மாதிரித்தான் சார் பாயும்... அது எங்க தொழில்... எங்கயாவது நமக்குத் தேவையானது கிடைக்காதான்னு யோசிக்கிறதால வர்ற கேள்வி இது... இதுக்குப் பேர் சந்தேகம்ன்னா அப்படியே வச்சிக்கங்க..."
"நேத்து எனக்கு ஒரு முக்கியமான ஆபரேசன்... டாக்டர் பாலமுரளி ஆஸ்பத்திரியில... அங்க பொயிட்டு மிட்நைட்டுத்தான் வீட்டுக்குப் போனேன்... அதனாலதான் இங்க வரலை..."
"ஆமா... நேத்து போன்ல பேசினீங்களா... இல்லையா?"
"ஆபரேசன் தியேட்டருக்குள்ள போறதுக்கு முன்னால பேசினேன்... எப்பவும் போல சந்தோஷமாப் பேசினார். இன்னைக்கு சாயந்தரம் வர்றேன்னு சொன்னேன்... ஆனா அதுக்குள்ள யாரோ கொன்னுட்டாங்கன்னு கேள்விப்பட்டு பதறி அடிச்சி ஓடியார மாதிரி ஆயிடுச்சு..."
"ஆமா கேக்க மறந்துட்டேன்... உங்களுக்கு யார் சொன்னா? வாட்ச்மேன்... வேலைக்காரப் பெண்..."
"என்ன இன்ஸ்பெக்டர்... நியூஸ் லோக்கல் சானல்ல வந்தாச்சு... இப்ப மீடியாதான் உடனே போட்டுடுறாங்களே... அதுல பார்த்துட்டுத்தான் ஓடியாந்தேன்... அப்பத்தான் வாட்ச்மேனும் கூப்பிட்டான்..."
"யாருய்யா... அதுக்குள்ள லோக்கல் சானலுக்கு நியூஸ் கொடுத்தது.?" பொன்னம்பலத்தைக் பார்த்துக் கோபமாய்க் கேட்டார்.
"சார் மீடியா ஆட்கள் வீட்டை வீட்டை சுத்தி வர்றாங்க... இன்னும் யாரையும் உள்ள விடலை... நாங்க யாரும் எதுவும் சொல்லலை... அவங்களா கொலைங்கிறதை வைச்சு செய்தி போட்டிருப்பாங்க.."
"ம்...பயங்கரக் கொலை.. கொடூரக்கொலை... சொத்துக்காக கொலை.. கள்ளத்தொடர்பில் கொலையின்னு ஆளாளுக்கு போடுவானுங்க... செத்தவன் செத்துட்டான்... இவனுகளால நமக்குத்தான்யா பிரஷர்..."
"சாரி சார்... இதை நாம கண்ட்ரோல் பண்ணுறதுங்கிறது கஷ்டம் சார்..."
"ம்... சரி... சரி... கொஞ்ச நேரம் அவங்களை யாரையும் உள்ள விடாதீங்க... பாடியை ஆஸ்பிடல் கொண்டு போக வேகமாக வேலையைப் பாருங்க..." என்று பொன்னம்பலத்திடம் சொன்னவர் டாக்டரிடம் திரும்பி "சரி டாக்டர்... தேவைப்படும் போது நீங்க ஸ்டேசனுக்கு வர்ற மாதிரி இருக்கும்..." என்றார்.
"ஷ்யூர் சார்... ஆமா சார் அவரோட வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா?"
"பண்ணியாச்சு... பசங்க வந்துக்கிட்டு இருக்காங்க..." என்றார் பொன்னம்பலம்.
"சார் நான் அவரைப் பாக்கலாமா?"
"ம்... எதையும் தொடாமப் பாருங்க... சீக்கிரம் பாத்துட்டு வாங்க..."
"தாங்க்யூ..." என்று டாக்டர் சிவராமன் நகர்ந்ததும் பொன்னம்பலத்திடம் "இந்தாளு மேல ஒரு கண் இருக்கட்டும்..." என்றார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
16 எண்ணங்கள்:
நானும் சந்தேகக் கண்ணோடு தொடர்கிறேன் நண்பரே
தமிழ் மணம் 2
வணக்கம்
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் த.த 3
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்கிறேன் நண்பரே!
தொடருங்கள் தொடர்கிறேன்.
தொடர்கின்றோம் நல்லா போகுது....
தொடர்கிறேன்....
சந்தேகம்
நம்பர் 1: வேலைக்காரப் பெண்,
நம்பர் 2: டாக்டர் சிவராமன்,
நம்பர் 3: ???
ஆமாம் எல்லார் மேலயும் கண் வைக்கணும். எழுத்து நடை அபாரம் குமார் . டாகடரின் விசாரணையை பிசிறில்லாமல் எழுதி இருக்கிங்க.. கொலைக்காக மோட்டிவ் என்ன.. கொலையாளி யாராயிருக்கும் எனும் ஆர்வம் அதிகமாகின்றது.
அதெல்லாம் சரி! உங்களுக்கு என்னச்சு? சில நாட்களாக ஆளையும் காணோம். சத்தமும் காணோம். உடல் நிலை மீண்டும் சரியில்லையோ?எதுவானாலும் கவனமாக இருங்க!
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
பாராட்டுக்கு நன்றி.
ஆர்வத்தோடு இருங்கள் அரைகுறையாக வருகிறேன்... ஹி... ஹி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக