மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 29 ஜூன், 2010

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

என்ன எல்லாரும் நல்லாயிருக்கீங்களா...? பார்த்து பல நாளாச்சு..? எப்படியிருக்கீங்க..? ஊருக்குப் பொயிட்டு வந்து ரெண்டு நாள் ஆயாச்சு... வேலைக்குப் போனாலும் வேலை ஓடலைங்க... மனைவி, குழந்தைகளின் கஷ்டம் போனிலும்... மனக்கண்ணிலும்...

பிளாக்கில் எழுதவோ, உங்கள் எழுத்துக்களை படிக்கவோ நினைக்கும் மனநிலை எனக்குள் இன்னும் வரவில்லை. இருந்தும் ஒரு சிலரின் எழுத்துக்களை படித்து பின்னூட்டமிட்டேன். பலரை படிக்கவில்லை.

மன ஓட்டத்தை காரைக்குடியில் இருந்து அபுதாபிக்கு மாற்ற சில நாட்கள் ஆகலாம். நான் வரும்போது என்னிடம் அழுத மனைவியையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறிய என் மகளும்... இன்று மாலை கூட அப்பா... வா...ப்பா என்று மழலையாய் போனில் அழைக்கும் என் ஒன்றரை வயது மகனின் குரலும் எனக்குள் தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் என்னையே நினைத்து இருக்கும் மூன்று ஜீவன் களுக்கும் என் பேச்சு மட்டுமே ஆறுதல்...

அவர்களின் பாரம் கரையும் நேரத்தில் எனக்கு ஓராண்டு முடிந்து மீண்டும் விடுமுறை கிடைக்கும்.

ஓகே நண்பர்களே... நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் நண்பரே... அப்புறம் இன்னொன்னு இப்ப எங்க புராஜெக்ட் அரசு அலுவலகத்தில்.

எனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மாலை ஆறுமணிக்கு வரும்போது சோர்வும் கூட வருகிறது.

நான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணத்தை எனக்கு பின்னூட்டமிடவும். தொடரும் நாட்களில் தொடரும் என் எழுத்து... நன்றிகள் பல...

நட்புடன்

சே.குமார்.

7 எண்ணங்கள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

இணையும்போது சந்தோஷிப்பதும் பிரியும்போது தவித்திருப்பதும்தானே வாழ்க்கை! அதுவும் இந்த பாலைவனத்தில் உங்களைப் போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு மனதினுள் இந்த சோகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது!
மனைவியின் பிரிவைக்கூட தாங்கிக்கொள்ளலாம். குழந்தையின் பிரிவை கொஞ்சம்கூட தாங்க முடியாது. மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். வலைத்தளங்கள் உங்களுக்கு நிச்சயம் மன மாறுதலை அளிக்கும்!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஊரிலிருந்து வந்து இங்கு செட்டாக சில நாட்கள் பிடிக்கும். இதுக்குத்தான் ஊருக்கு செல்லவே பயமாக இருக்கிறது. என்ன செய்ய நம்ம பொழப்பு இங்கேதான்னு ஆயிபோச்சி.

நான்கு ப்ளாக்கையும் ஒன்றாக ஆக்குவதுதான் சிறந்த வழி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

மனைவி, குழந்தைகள் ஞாபகம்
இப்படித்தான், ஊரிலிருந்து பணிக்கு
வந்ததும் மிக இடைஞ்சல் செய்யும்.
ஆனால் அந்த ஞாபகங்கள் சுகமான
இடைஞ்சல்தான், அதுவும் அவசியம்
வேண்டும்தான். தற்காலத்தில்
செல்பேச்சு, பார்த்து உரையாடுதல்
என்பதெல்லாம் நமக்கு கிடைத்த
அற்புதங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

வாங்க வாங்க.. விடுமுறை எல்லாம் சிறப்பா?
உங்கள் உள்ளம் புரிகிறது.. குழந்தையை விட்டு விட்டு
வருவது...ரொம்ப கடினம் தான்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

thanks to all

அன்புடன் மலிக்கா சொன்னது…

வந்தாச்சா குமார். எப்படியிருக்கீங்க ஊரில் அனைவரும் நலமா? குட்டிப்பாப்பா எப்படியிருக்கு.

வாழ்க்கையிதுதான்னு ஆனபிறகு அதனோடு சேர்ந்து ஓடுவதுதானே நம் பிழைப்பாகிவிட்டது. எல்லாம் நன்மைக்கே..

போய்வந்த கலைப்பு தீர்ந்து கலகலன்னு கவிதையெழுதுங்க.