மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஏப்ரல், 2013

தமிழ் சினிமா பாதிப்பால் பெற்றோரைக் கொலை செய்த மாணவர்கள்

குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இரட்டை கொலைக்கான ஐடியாக்களை அறிந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கொலையில் அவர்களது மகள் தக்ஸிகாவுக்கும் பங்குள்ளதாக கூறியுள்ளனர். 

சென்ற வாரம், 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். 

கொல்லப்பட்டவர்களது இளைய மகள் ரகு தக்ஸிகா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரை சந்தேக நபர்களாக கைது செய்துள்ளது போலீஸ். 

மட்டக்களப்பு - செங்கலடி நகரில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 


ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 அன்று தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தாராம். 

அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது. 

கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். 

இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள் உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடும்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. 

இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தக்ஸினாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலருக்கும் அவளின் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது. மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தக்ஸினா ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வெவ்வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக தெரிகிறது.. 


தக்ஸினா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு போலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்.. 

நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயை அடக்கி விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன்' , என தெரிவித்துள்ளார். 

கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் பிரம்பு புதருக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

-நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

'என் மகனைத் திரும்பக் கொடுங்கள்'- பேரறிவாளனின் தாய்


“எனக்கு கண் பார்வை இருப்பதற்குள், என் உடம்பில் சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்” என ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அந்த தாயின் கண்ணீரோடு கலந்த வார்த்தைகள் சில...

“எனக்கு பேரறிவாளன் ஒரே மகன். இரண்டு பெண்கள். மூவரும் நல்லா படிப்பாங்க. மற்றவர்கள் முகம் சுளிக்கக் கூடாது என்ற மன நிலைதான் எனது மகனுக்கு சிறிய வயதிலிருந்து இருந்தது.

1991 ஜுன் 10ம் திகதி இரவு எங்க வீட்டுக் கதவை சிபிஐ எல்லாம் வந்து தட்டினாங்கள். ஏதேதோ தேடினாங்க.

முதல்ல வந்தவர்களில் ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டி மேல இருந்த தம்பி பிரபாகரனின் போட்டோவை எடுத்து இன்னுமொருவரிடம் காட்டினார். கூட வந்த கங்காதரன் என்ற சிபிஐ அதிகாரி அதை அப்படியே வைக்குமாறு கூறினார்.

அதுக்கு பின்னர் குடும்ப விபரம் எல்லாவற்றையும் விசாரித்தார்கள். மகனைப் பற்றி கேள்வி கேட்டார்கள். மேல் படிப்பிற்றகாக சென்னையில் தங்கியிருக்கார் என்று கூறினேன். அவரையும் விசாரிக்க வேண்டும் பின்னர் மல்லிகை என்ற இடத்திற்கு மகனை அழைத்து வரச் செல்லியிருந்தார்கள்.


நானும் அழைத்துப் போனேன். விசாரித்து விட்டு விடுவதாக அனுப்புவதைக் சொன்னார்கள். நானும் மறுநாள் மகனைப் பார்க்கச் சென்றேன். மகனை பார்க்க விடவில்லை. வக்கீலை பார்க்க சொன்னார்கள். நான் கொண்டு சென்ற துணியை மட்டும் வாங்கி எடுத்தார்கள்.

பின்னர் 8 நாளைக்கு பின்னர் பேரறிவாளனை தேடி வலை வீசிப் பிடித்ததாக செய்தித்தாளில் வந்திருந்தது. எங்களுக்கு பயமாக இருந்தது.

எப்போது விசாரித்து அனுப்புவதாக அழைத்துச் சென்றார்களோ அன்றிலிருந்த கண்ணீரோ அலைந்து திரிகின்றேன். தனியாக எங்குமே போகாத நான். இப்போது எனது பையனுக்காக.... என்று வாய் விட்டு கதறியழுகிறார்...


-மின்னஞ்சலில் வந்தது...

-எழுதியவருக்கு நன்றி...

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

புழல் சிறையில் விஜயகாந்த் ஆவேசம்

நில அபகரிப்பு புகார் வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏவை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிறையில் தன்னை நடத்தப்படும் முறை பற்றி கண்ணீர் மல்க கூறினார் எம்.எம்.ஏ அருண் சுப்ரமணியன். 

திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மு.அருண்சுப்பிரமணியம். இவருக்கு சொந்தமாக வரதராஜ நகரில் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நகராட்சி இடத்தையும் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

ஜனாதிபதி தேர்தலில் தான் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. என்ற முறையில் வாக்களிக்க வேண்டும் என கூறி கோர்ட்டில் ஜாமீன் பெற்று அருண் சுப்பிரமணியம் வெளியே வந்தார். அவர் பொய்யான தகவல் கொடுத்து ஜாமீன் பெற்றதாகவும், எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 8ம் தேதி ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதையடுத்து தலைமறைவான அருண் சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. கடந்த 15ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண்சுப்ரமணியன் திருவள்ளூர் தே.மு.தி.க. மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அவரை அதிமுகவிற்கு இழுக்கவே கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 


டென்சனான விஜயகாந்த் 

இந்த நிலையில் எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தை சந்திக்க நேற்று காலை புழல் சிறைக்குச் சென்றார் விஜயகாந்த். ஆனால் அவரது வாகனத்தை சிறை வளாகத்திற்குள் செல்ல சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை இதனையடுத்து டென்சனான விஜயகாந்த் காரில் இருந்து இறங்கி நடந்தே சென்றார். அவருடன் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சேகர் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 

கண்ணீர் விட்ட எம்.எல்.ஏ 

அருண் சுப்ரமணியத்தை சந்தித்து 20 நிமிடங்கள் பேசிய விஜயகாந்த், ஆறுதல் கூறினார். அப்போது சிறையில் தன்னை நடத்தப்படும் விதம் குறித்து கண்ணீர் விட்டு அழுதாரம் அருண் சுப்ரமணியன். வெயிலுக்கு இதமாக தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழங்களை வாங்கிச் சென்ற எம்.எல்.ஏக்களை அதனை அருண் சுப்ரமணியத்திடம் கொடுத்துவிட்டு வந்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

நில அபகரிப்பு வழக்கில், அருண் சுப்ரமணியத்தை கைது செய்துள்ளனர். அவர், சட்டப்படி வழக்கை சந்தித்து வெளியில் வந்தால், மீண்டும் புது வழக்கு போடுவர். என் மீதும், 32 வழக்குகள் போட்டுள்ளனர். போலீசார் மக்களை காக்கும் பணி செய்யாமல், காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். நான் போகும் இடத்தில் எல்லாம் போலீசாரை குவிக்கின்றனர். எனக்கோ, மக்கள் பாதுகாப்பிற்கோ, அதை செய்யவில்லை. நான் என்ன பேசுகிறேன், என் மீது, இன்னும் எத்தனை வழக்குகள் போடலாம் என்பதற்காகவே இதை செய்கின்றனர். 


சிறையில் இருப்பவர்கள் அதிமுகவுக்கு சென்றுவிட்டால், வழக்குகள் எல்லாம் வாபஸ் ஆகிவிடும். அருண் சுப்ரமணியன் நிலத்தை அபகரித்து கட்டடம் கட்டியதாக வழக்கு போட்டிருக்கின்றனர். அப்படி இருந்தால், அந்த கட்டடத்தை இடித்து, அரசு தேவைக்கு பயன்படுத்த வேண்டியதுதானே? அருண் சுப்ரமணியம் அதிமுகவுக்கு சென்றுவிட்டால், திருவள்ளூர் மாவட்டமே அங்கு சென்று விடும் என்று நினைப்பது, முட்டாள்தனமானது. 

அவரை நானே அதிமுகவுக்கு அனுப்பி வைக்கிறேன்; வைத்துக் கொள்ளுங்கள். கூட்டணி பற்றி பேசணுமா? நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி அமைத்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியுமா? கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியாதா?. கூட்டணி பற்றி இப்போது எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கருணாநிதி பெரியவர் என்பதால், மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்க மாட்டார் என்றார்.

நன்றி : தமிழ் தினப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

அஞ்சலி படப்பிடிப்பில் உறவினர்களுக்கு தடை


நடிகை அஞ்சலி நடிக்கும், தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. காமெடி காட்சியில் நடித்தார். "படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, அஞ்சலி அனுமதியின்றி, உறவினர்கள் வரக்கூடாது என, தடை போடப்பட்டுள்ளது. 


சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற அஞ்சலி, கடந்த, 8ம் தேதி திடீரென மாயமானார். சென்னையில் உள்ள, சித்தி பாரதிதேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீதும் குறை கூறியிருந்தார். மாயமான அஞ்சலியை மீட்டுத்தரக் கோரி, சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனால், ஐந்து நாட்களுக்கு பிறகு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அஞ்சலிஆஜரானார். "என்னை யாரும் கடத்தவில்லை. மன வேதனையால் ஓட்டலை விட்டு வெளியேறினேன். இனி நான் என் இஷ்டத்திற்கு செயல்படுவேன். எனது வாழ்க்கையை நானே முடிவு செய்வேன் என, தெரிவித்திருந்தார். அதற்காக தனது குடுபத்தாருடன் சமாதானம் பேசியுள்ளார்.




இதையொட்டி, அவர் நடிக்கும், "போல் பச்சன் போல் தெலுங்கு "ரீ மேக் படத்தின் படப்பிடிப்பில், மூன்று நாட்களாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள, பஞ்சாக்னி என்ற இடத்தில் நடந்து வருகிறது. காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஞ்சலிக்கு, தனி கேரவன் வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கி, படப்பிடிப்பிற்கு சென்று வருகிறார்.



அஞ்சலி விரும்பினால் அன்றி, அவரை யாரும் தனியாக சந்தித்து பேச, படப்பிடிப்பு நிர்வாகி அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு முடியும் வரை, அஞ்சலியை, உறவினர், நண்பர்கள் என சொல்லிக்கொண்டு யாரும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அஞ்சலியின் சம்மதத்துடன் தான் எடுக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படப்பிடிப்பு, நாளை, 24ம் தேதி வரை நடக்கிறது. அதன் பிறகு படப்பிடிப்பு நிர்வாகியின், அடுத்த முடிவையொட்டி, அஞ்சலி சென்னை வந்து, கோர்ட்டில் ஆஜராகலாம் என கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து அஞ்சலி தரப்பில், இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.


நன்றி: தினமலர்
-'பரிவை' சே.குமார்

இளையராஜா இல்லாமல் படம் எடுக்க மாட்டேன்! - ஆர்.சுந்தரராஜன்


அழகான, அபூர்வமான உணர்வுகளுக்கு நம்ம ரசிகர்கள் எப்போதுமே கை கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் மூலம் நான் எடுத்து வைக்கும் விஷயங்களும் அப்படித்தான். எனக்கு எந்த டிரெண்டுக்கும் ஏற்றால் போல் திரைக்கதை செய்யும் வித்தை தெரியும். அதன் மூலம் இந்த காலத்து ரசிகர்களையும் எனக்கு கவர தெரியும்.' ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் கலந்து பேசுகிறார் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மறக்க முடியாத வெற்றிப்படங்களை கொடுத்த இவர் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் "சித்திரையில் நிலாச்சோறு' படத்தின் மூலம் இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறார்...



அதென்ன 'சித்திரையில் நிலாச்சோறு'...?

"பர்கர்', "பீட்சா'ன்னு நம்ம உணவு முறைகள் வழி மாறி போய் விட்டது. மாம்பலத்துக்கு வழி கேட்டா, இண்டர்நெட் திறந்து சென்னை மேப் பார்க்கிற தலைமுறை உருவாகி விட்டது. ஒரு விதத்தில் இவர்களை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் புத்தி சொல்லி, திருத்தி வழி முறைகள் சொல்லி தருகிற தலைமுறையும் இப்போது இல்லை.

அன்பும் அரவணைப்பும் இப்போது பலரிடம் இல்லை. இது மாதிரியான காலக் கட்டத்துக்கான படமாக என் படம் இருக்கும். சித்திரை மாதத்து பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சாப்பிடும் சோற்றுக்கு நிலாச்சோறு என்று பெயர். இப்போதும் பழமை மாறாத சில கிராமங்களில் நிலாச்சோறு சாப்பிடும் மக்களை பார்க்கலாம். அது மாதிரியான ஒரு சித்திரை பௌர்ணமியில் நடக்கும் ஒரு சம்பவம்தான் இந்த கதை. அந்த சம்பவம், அதை தொடர்ந்து போகும் பரபரப்பு மிகுந்த திரைக்கதை என படத்தை எடுத்திருக்கிறேன். பணம் பாசத்தையும் தோற்கடிக்கும் என்பதுதான் படத்தின் ஒன் லைன். அம்மா இல்லாமல் வளரும் குழந்தையை அம்மாவாகவும் மாறி பார்த்துக் கொள்ளும் ஒரு தந்தையின் கண்ணீர். அந்த கண்ணீருக்கு அன்பை மட்டுமே கொடுத்து அப்பாவியாக நிற்கும் குழந்தையென சில உன்னத தருணங்கள் இதில் இருக்கிறது. புதுமுக ஹீரோ பிரகாஷ், வசுந்தரா, குழந்தை சாரா, பூமிகா, அபிதான்னு நிறைய நடிகர்கள் இதற்கு பக்க பலம்.

12 வருடங்களுக்குப் பின் சினிமா இயக்கும் வேலை கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்குமே... இத்தனை வருட இடைவெளிக்கு காரணம்....?

எல்லாவற்றுக்கும் காரணம் இருப்பதை போல, இதற்கும் காரணம் இருக்கிறது. ரசனை மிக்க படங்களை ரசிகர்களுக்கு தந்த பெருமிதம் எப்போதுமே எனக்கு உண்டு. படத்துக்கு படம் காமெடியை பலமாக வைத்திருப்பேன். காமெடி நடிகர் யாராவது துணைக்கு இருக்க வேண்டும். "பயணங்கள் முடிவதில்லை' "நான் பாடும் பாடல்', சமயங்களில் என் கூடவே இருந்தார் கவுண்டமணி. அவருக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களில் கூட படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுவார். ""உங்களை கூப்பிடவே இல்லையே'' என்றால், ""வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை'' என்பார்.

அவருக்காகவே சீன் எழுதி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். "பணம் பத்தும் செய்யும்' படத்தில் கவுண்டமணி ஹீரோவாகி விட்டார். அதன் பின் "கரகாட்டக்காரன்' வரை அவரை பிடிக்க முடியவில்லை. "குங்குமச்சிமிழ்', "அம்மன் கோவில் கிழக்காலே' படங்களில் கவுண்டமணி இல்லாத குறையை செந்திலை வைத்து நிறைவு செய்தேன். பின் அவரும் பிஸி. "ராஜாதி ராஜா' படத்தில் ஜனகராஜை கொண்டு வந்தேன். அவரும் பிஸி. "என் ஆசை மச்சான்', "திருமதி பழனிச்சாமி' படங்களில் நானே காமெடியனாக நடிக்க வேண்டிய கட்டாயம். அதை அப்படியே பின்பற்றி விட்டேன். இயக்குநராக படும் கஷ்டத்தை விட, நடித்து மற்ற இயக்குநர்களை கஷ்டப்படுத்தி விட்டேன். மற்றபடி இயக்கம்தான் எப்போதும் நம்ம ரூட்.


சுந்தர்ராஜன் - இளையராஜா கூட்டணி பாடல்கள் இப்போதும் ரசனைக்குரியதாக இருக்கிறது. இத்தனை வருடம் கழித்து அவருடன் சேர்ந்திருக்கும் அனுபவம் எப்படி...
இளையராஜா இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கோயம்புத்தூர் பக்கம் இருக்கும் நண்பர்கள்தான் இந்த படத்துக்கு தயாரிப்பாளர்கள். என் சினிமாவை நேசித்து, என்னிடம் கதை கேட்டு தயாரிக்க முன் வந்தார்கள். அப்போது அவர்களிடம் வைத்த ஒரே கோரிக்கை. ""இந்தப் படத்துக்கு நிச்சயம் இளையராஜா வேண்டும்'' என்பதுதான். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த சினிமாவை எடுக்க வந்திருக்கவே மாட்டேன். படத்துக்கான முதல் பாடலை ஒளிப்பதிவு செய்து விட்டு ராஜா என்னிடம் கேட்டார். ""எப்படிய்யா வந்திருக்கு பாட்டு...'' "ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால் கணவனாகி விடுகிறான். பின் குழந்தைக்கு அப்பாவாக, பேரனுக்கு தாத்தாவாக எத்தனையோ நிலைக்கு மனிதன் போனாலும், நீ என்றைக்கும் இளையராஜாதான்...'' என்றேன். சின்ன சிரிப்பு சிரித்து விட்டு, அடுத்த பாட்டுக்கான கம்போஸிங்க்குக்கு போய் விட்டார். அதுதான் இளையராஜா.

சினிமா மாறி விட்டது... நாளுக்கு நாள் ஸ்டார் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி கேட்குறாங்க... இந்த மாதிரி நிலையில் உங்களை மாதிரியான ரைட்டர் இயக்குநர்களுக்கு இங்கு இடம் இருக்குமா...

சிவாஜி உச்சத்தில் இருந்த நேரத்தில் பாலசந்தர் அவருக்காக எடுத்த "எதிரொலி' அத்தனை பெரிய தோல்வி படமாக மாறிப் போனது. அடுத்தக் கட்டத்திலேயே நாகேஷுக்கு பத்து ஹிட் படங்களை கொடுக்கிறார் பாலசந்தர். அவரின் திரைக்கதைகளுக்கு நாகேஷ்தான் பொருத்தம். கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டாத காலத்தில் அந்த பக்கம் கார் போனாலே அது சினிமாக்காரனின் கார்தான் என்று சொல்வார்கள்.

ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த காரை மறித்து பிச்சைக் கேட்ட கிழவிக்கு காரின் உள்ளிருந்த ஒரு கை ஐந்து ரூபாய் பிச்சை போடுகிறது. அந்த கிழவி கருணை முகத்துடன் ""எம்.ஜி.ஆர். நல்லாயிருக்கணும்''னு வானத்தை நோக்கி வேண்டுகிறது. ஆனால் ஐந்து ரூபாய் பிச்சை போட்டவர் எஸ்.எஸ்.ஆர். இப்படி நடந்தவை எல்லாம் சினிமாவில் முரண்தான். ""உங்களுக்கு வயதாகி விட்டதே... இனி சினிமா சரி வருமா'' என்று ஒருவர் கேட்டார். அத்வானி, கலைஞர், பாரதிராஜா எல்லோருக்கும்தான் வயதாகி விட்டது. தயவு செய்து என்னிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்காதீங்க. 50 வயதுக்கு மேல் பெரியார் கடுமையான உழைத்தார். ஹாலிவுட் காரன் 60 வயதில் சிறந்த சினிமாக்களை உருவாக்குகிறான்.


அரசியல் பக்கம் இப்போது பார்க்க முடிவதில்லையே...

அந்த பக்கம் போனால்தானே பார்க்க முடியும். தனி ஈழம் அமைவதற்கான போராட்டக் குணத்தில் தீவிரமாக இருந்த காலம் அது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் தினமும் இரண்டு நிமிஷம் மௌனம் இருக்க சொல்லி ஒரு மாணவன் கேட்டுக் கொண்டான். அதை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்தப் படத்தில் கூட ஹீரோவுக்கு "முத்துக்குமார்' என பெயர் வைத்திருக்கிறேன். என் போராட்டம் எனக்குள் இருக்கிறது. அதை வைத்து விளம்பரங்கள் தேட நான் விரும்பவில்லை.

-நன்றி : தினமணி சினிமா எக்ஸ்பிரஸ்
-'பரிவை' சே.குமார்

திங்கள், 22 ஏப்ரல், 2013

கங்காரு எனது முதல் குடும்பப் படம்! - இயக்குநர் சாமி


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் 1-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 2-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...



'உயிர்', 'மிருகம்', சிந்துச் சமவெளி என கான்ட்ராவர்சி படங்களையே தொட்டுப் பார்த்து பரபரப்புக்குள்ளாகிய இயக்குனர் சாமியின் அடுத்த படம் கங்காரு. அமைதிப்படை 2 தயாரித்த 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி, வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, இவர்களுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்குகிறார் சாமி.

இந்தப் படம் குறித்து சமீபத்தில் சாமியிடம் பேசினோம். அந்த சந்திப்பிலிருந்து...

அது என்ன கங்காரு?

வாழ்கையில சந்தோஷம், துக்கம், அழுகை, சிரிப்பு, பாசம்னு ஏதோ ஒரு விஷயத்தை தெரிஞ்சோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ சுமந்துகிட்டுதான் திரியறோம். அப்படி மனசாலும், உடம்பாலும் ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் வாழ்நாளெல்லாம் சுமந்து திரிவதுதான் 'கங்காரு'.

எப்போதும் போல இதுவும் சர்ச்சைக் கதையா?

ரெண்டு விஷயங்களை கோடிட்டு காட்ட விரும்புகிறேன் . சிந்து சமவெளி படத்தின் புரோமோஷனுக்காக ஒரு தனியார் தொலைக்கட்சிக்கு சென்றிருந்தேன். ‘சரவணன் மீனாட்சி' புகழ், ‘கண்பேசும் வார்த்தைகள்' ஹீரோ செந்தில்தான் என்னை பேட்டி எடுத்தார்.

அப்போது அவர் என்னிடம், ஏன் சர்ச்சைக்குரிய படங்களையே எடுக்குறீங்க? ஏன் வேறு மாதிரி எடுக்கலைன்னு கேட்டார். அப்போது அவருக்கு நான் சொன்ன பதில் எனக்கு நானே வைத்துக்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சின்னுதான் சொல்லணும். எனக்கு நல்ல படம் எடுக்ககூடாதுன்னு ஒண்ணும் இல்லை. எனக்கு சர்ச்சைக்குரிய படம் பண்ணத்தான் வாய்ப்பு கிடைச்சது. அதுவுமில்லாம முந்தைய ரெண்டு சர்ச்சைக்குரிய படங்களும் ஓடினதால மூணாவது படமும் அப்படியே எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இப்போ சொல்றேன்.. தமிழ் ரசிகர்களுக்கு சொரணை இருந்தால் என் ‘சிந்து சமவெளி' படத்தை புறக்கணிக்கட்டும். பார்க்காமல் தவிர்க்கட்டும்.. அப்போ நான் என் ரூட்டை மாற்றிக்கொள்கிறேன் என்று அவரிடமும் மக்களிடமும் சவால் விட்டேன். மக்களும் அந்த படத்தை தவிர்த்தாங்க. நானும் இப்போ என் ரூட்டை மாத்திக்கிட்டேன்''.

அடுத்து அதே சிந்து சமவெளி படத்துக்காக சமூக ஆர்வலர்களும், சமுதாயக் காவலர்களும் என் வீட்டை, காரை அடித்து நொறுக்கினார்கள். அந்த சமயத்துல எங்கம்மா ஏம்பா இப்படி நடக்குது? குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுக்கக்கூடாதான்னு கேட்டாங்க. இதோ தமிழ் நாட்டுல உள்ள அம்மாக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுக்க உள்ள எல்லா அம்மாக்களுக்கும், என் அம்மாவுக்காகவும் சேர்த்து ஒரு படம் எடுக்குறேன். அது இந்த கங்காரு. தாய்ப்பாசத்துக்கு உட்சபட்ச உதாரணம் கங்காரு.


ஏன் பாலியல் ரீதியான களம் பக்கம் போனீங்க?

உயிர் படத்துக்கான கதை உருவான சமயம் அந்த அண்ணி நல்லவங்களாத்தான் இருந்தாங்க. காதலுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டு சாவாதீங்க. காதலை விட உயிர் பெருசு என்பதை சொல்ற ஒரு நல்ல கதையாத்தான் அது இருந்தது. அந்தக் கதையை கேட்ட எல்லா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கதை நல்லா இருக்கு ஆனா ஏதோ ஒன்னு குறையுதுன்னு சொன்னாங்க.

அப்போ என்கிட்டே இருந்த உதவியாளர் ஒருவர் அண்ணி கேரக்டரை நெகட்டிவ்வா மாத்திடலாம்னு சொன்னார். அப்படி நான் மாத்தினதுக்கப்புறம் ஐந்து கம்பனியில அட்வான்ஸ் கொடுத்தாங்க. ஆறாவதா ஆர். பாலாஜி சார் எடுத்தார்.

அதன்பிறகு நான் பண்ண நினைச்ச படம் விளையாட்டை மையமா வைத்து சதம்னு ஒரு படம். அது இருபத்தைந்து லட்ச ரூபா செலவு பண்ணி தொடர முடியாமல் போனது. அதன்பிறகு கிடைத்த படம் மிருகம். அதை சர்ச்சைக்குரிய படம்னு சொல்ல முடியாது. எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம்கிறதால செக்ஸையும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது. அதன்பிறகு பண்ணிய படம் ராஜ்கிரணுடன் சரித்திரம். சிலம்ப விளையாட்டை மையமா வச்சி எடுத்த படம். தொண்ணூறு சதவீதம் முடிச்சும் மீதிய முடிக்க முடியல.


அந்த சமயத்துல எனக்கு கிடைச்ச வாய்ப்புதான் சிந்து சமவெளி. அந்த படத்தின் தயாரிப்பாளரும் நிர்வாகத் தயாரிப்பாளரும் சர்ச்சைக்குரிய கதைதான் வேணும்னு கேட்டாங்க. அப்போ ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கேனிவ்வோட முதல் காதல் என்கிற குறு நாவல் பற்றி சொன்னேன். அதையே தமிழுக்கேற்ப மாற்றி செய்யச் சொன்னாங்க. அப்படி உருவானதுதான் சிந்துசமவெளி.

சினிமாவுல கவனிக்கப்படணும்.. ஒரு இடத்தைப் பிடிக்கணும்கிறதுக்காக ஓடுற இயக்குனர்களில் நானும் ஒருத்தன். எனக்கு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு கதைக்கான நேர்மையோட ஒவ்வொரு படத்தையும் எடுத்திருக்கேன். நேர்மையோடான்னு நீங்க கேக்குறது புரியுது. உதாரணமா, சிந்துசமவெளி படத்தில் நிறைய செக்ஸ் காட்சிகளை வைத்திருக்க முடியும். ஹீரோயினை இன்னும் தோலுரித்துக் காட்சிப்படுத்தியிருக்க முடியும். அப்படிப்பட்ட கதை அது.

எல்லா விதத்திலும் இடம்கொடுக்கக்கூடிய அந்த படத்தில் நான் எந்த இடத்திலும் சதைக் காட்சிகள் வைக்கவில்லை. மாறாக கதையில் கவர்ச்சி இருந்தது. காட்சிகளில் அதைத் தவிர்த்திருக்கிறேன். இதிலிருந்து செக்ஸ் களத்திற்கு நானாக விரும்பிச்சென்றேனா அல்லது தள்ளப்பட்டேனா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
ஒருவேளை சிந்துச் சமவெளி வெற்றி பெற்றிருந்தால்?

எந்தவொரு இயக்குனருக்கும் ஒரே மாதிரி படமெடுப்பது சலிப்பூட்டும் விஷயமே. போதும் ரூட்டை மாத்து என்று வேறுவிதமாகத்தான் பயணப்பட்டிருப்பேன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. அதுக்கு நான் தயாராகத்தான் இருந்தேன். அதன் தொடக்கம்தான் கங்காரு.

கங்காரு டீம் பத்தி சொல்லுங்க?

அர்ஜுனா என்ற பையனை அறிமுகம் செய்கிறேன். பிரணயா, சுப்ரியா என்று இரு புதுமுக நாயகிகளும் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். கதை என் உதவியாளர் எஸ் டி சாய் பிரசாத்துடையது. நான் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறேன். கவிப்பேரரசு வைரமுத்து எல்லா பாடல்களையும் பட்டை தீட்டி தந்திருக்கிறார். பாடல்கள் உங்களை நிச்சயம் உலுப்பும். பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது. முப்பத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் காமிராவை கையாள, கலையை தோட்டாதரணி கவனிக்கிறார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்