எல்லா நாளும் போறோமோ இல்லையோ செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக் பக்கம் எட்டிப் பார்க்கிறது உண்டு... ஏன்னா நமக்குப் பிடித்த சிறுகதைக்கான நாள்... வாரம் ஒருவரின் கதை... இன்னைக்கு எழுதியவரின் பெயருக்குப் பதில் '?' என கேள்விக்குறி மட்டுமே. தொடர்ந்து வாசிப்பவர்களால் இது யாருடைய நடை என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதற்காகவே எழுதிய கதையாசிரியர் கேள்விக்குறிக்குள்... இதுவும் வித்தியாசமான முயற்சிதான்... தொடரட்டும்... வாழ்த்துக்கள் ஸ்ரீராம் அண்ணா.
கதையின் முதல் வரி படிக்கும் போதே இது நம்ம துரை. செல்வராஜூ ஐயால்ல... என எனக்குள் தோன்றி முகமலர்ச்சியைக் கொடுத்தது... முனியய்யாவின் ஆட்டமும்... நாலாவது வீட்டுல அவரு நின்னு வாக்குச் சொல்வாரான்னு ஏங்க வச்சித் தொடரும் போட்டதும் ஆஹா... அருமை... அடுத்த செவ்வாய் வரையெல்லாம் காத்திருக்க முடியாது... ஐயா மீதிக்கதையே எனக்கு மட்டும் தனியே அனுப்பிடுங்க... கிராமியக் கதைகளின் எழுத்துக்கள் என்னுள் எப்போதும் வழுக்கிக் கொண்டு செல்லும் அப்படித்தான் இதுவும்... வாழ்த்துக்கள் ஐயா.
அங்கு கருத்திட்டவர்களில் சிலர் இது குமாரின் கதையோ எனவும் கேட்டிருந்தார்கள்... உண்மையில் மகிழ்வாய் உணர்ந்த தருணம் அது... என் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் கவர்ந்திருக்கிறதே... அதுவும் எழுத்தை வைத்து இது குமாராக இருக்கலாம் என யோசிக்க வைக்கிறதென்றால் அது நான் பெற்ற பேறுதானே... ரொம்ப மகிழ்வாக இருந்தது.
எங்கள் பிளாக்கில் வாசிக்க களத்து மேட்டுக் காவலன் - 1.
காலையில் ஒரு தோழி போன் செய்து ஒரு படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் குறித்துப் பேசினார். ஆரம்பிக்கும் முன்னர் நான் சொல்வதால் வருந்தமாட்டீர்களே... நம் நட்புக்குள் பிரச்சினை வராதே என்றெல்லாம் சொல்லிவிட்டு இந்த இடத்தில் இப்படி எழுதியிருப்பது சரியாக இல்லையே... கொஞ்சம் பழைய பஞ்சாங்கமா இருக்கே... இப்ப உள்ள மாதிரி எழுதுய்யான்னு சொன்னாங்க... அந்த இடம் என்னைப் பொறுத்தவரை சரியாகவே இருந்தது என்றாலும் அவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்டேன்.
விமர்சனம் என்றதும் அதெப்படிச் சொல்லலாம்... அதில் என்ன பிழை வந்து விடப் போகிறது என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும்... எல்லாரும் என் எழுத்தை ஆராதிக்க வேண்டுமென எப்போதும் நினைப்பதில்லை.... விமர்சனங்களே என்னைச் செதுக்கும் உளி என்பதில் நான் எப்போதும் தெளிவாகவே இருக்கிறேன். அந்தத் தோழிதான் நட்பில் உடைப்பெடுக்குமோ என்ற உதறலுடன் போனை வைத்தார். விமர்சனம் சரியென்றால் என்னை நான் மாற்றிக் கொள்ளப் போகிறேன்... எனக்கு அது தவறென்றால் சொன்னவருடன் எதிர்த்துக் களமாடுவதைவிட வாங்கி என்னுள் வைத்துக் கொள்ளப் போகிறேன்... அவ்வளவே... தங்கள் விமர்சனத்துக்கு நன்றி தோழி.
இதேபோல்தான் பிக்பாஸ் எழுதுவதற்கு பலர் எதிர்த்த போதும் தனபாலன் அண்ணன் மட்டும் நீ எழுது என தினமும் தவறாமல் கருத்திடுவார். வெங்கட் அண்ணாவும் எழுது என்று சொன்னார். பிரதிலிபில் பல சகோதரிகள் பதிவிட தாமதமாகும் போது ஏன் ஏழுதலைன்னு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இன்று ஒரு சகோதரி நீங்க சேரனுக்கு ஆதரவாய்த்தானே எழுதுகிறீர்கள் என்றார். இருவருக்கும் இடையே நீண்ட உரையாடல்கள்... இப்படியான விமர்சனங்களும் விவாதங்களும் நம் எழுத்தை பட்டை தீட்டவே உதவும் என்பதால் நான் விரும்பியே விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்.
எழுத்தாளர் லதா சரவணன் புதிதாக ஆரம்பித்திருக்கும் 'மின் கைத்தடி' என்ற மின்னிதழுக்கு படைப்புக்கள் கேட்டு முகநூல் பக்கத்தில் மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தார்கள். சரி அனுப்புவோமே என ஒரு சிறுகதையைத் தட்டிவிட்டேன்.
அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள் பதில் மின்னஞ்சலில் உங்கள் கதை காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தியது... உறவுகளைச் சொல்லும் அழகான கதை... முதல் இதழிலேயே பயன்படுத்திக் கொள்கிறோம்... போட்டோவும் உங்க நம்பரும் கொடுங்க எழுத்தாளர் குழுமத்திலும் இணைத்து விடுகிறோம் என்று அனுப்பியிருந்தார்கள்.
இங்கு அழுகாச்சிக் கதை எனவும் உறவுகளைச் சொல்லி எழுதும் எழுத்தாளர்களை ரமணிச்சந்திரர்கள் எனவும் கிண்டலடிக்கும் நிலையில் நம் எழுத்துக்கு உரிய மதிப்பு ஏதோ ஒரு இடத்தில் கிடைக்கிறதே என்னும் போது மகிழ்ச்சியாய் இருக்கத்தான் செய்கிறது.
அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள் பதில் மின்னஞ்சலில் உங்கள் கதை காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தியது... உறவுகளைச் சொல்லும் அழகான கதை... முதல் இதழிலேயே பயன்படுத்திக் கொள்கிறோம்... போட்டோவும் உங்க நம்பரும் கொடுங்க எழுத்தாளர் குழுமத்திலும் இணைத்து விடுகிறோம் என்று அனுப்பியிருந்தார்கள்.
இங்கு அழுகாச்சிக் கதை எனவும் உறவுகளைச் சொல்லி எழுதும் எழுத்தாளர்களை ரமணிச்சந்திரர்கள் எனவும் கிண்டலடிக்கும் நிலையில் நம் எழுத்துக்கு உரிய மதிப்பு ஏதோ ஒரு இடத்தில் கிடைக்கிறதே என்னும் போது மகிழ்ச்சியாய் இருக்கத்தான் செய்கிறது.
விமர்சனங்களை வீசுங்கள் நண்பர்களே... அப்பத்தான் நான் இன்னும் சிறப்பாக எழுத முடியும்.
-'பரிவை' சே.குமார்.
18 எண்ணங்கள்:
யாருடைய எழுத்து என்பதை ஆய்வு செய்யும் நேரமில்லை எனக்கு... அடுத்த பயண நிறுத்தத்தில் மீண்டும் பேசுகிறேன்...
// இது யாருடைய நடை என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதற்காகவே எழுதிய கதையாசிரியர் கேள்விக்குறிக்குள்... //
இதற்குள் மூழ்கி விடாதீர்கள்... இதுவும் வெறும் கப்ஸா...
உங்களின் திறமை பற்றி எங்களுக்கு தெரியும்... எங்கள் blog மட்டும் தெரிந்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால், அது மடத்தனம்...! இதுவும் கடந்து போகும் என்பதை மட்டும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளுங்கள்...
// விமர்சனங்களே என்னைச் செதுக்கும் உளி என்பதில் நான் எப்போதும் தெளிவாகவே இருக்கிறேன்... //
இந்த உளி மேலே உள்ள பத்திகளில் குறைய கண்டேன்... அதனால் மேற்கண்ட முந்தைய கருத்துரை...
// இப்படியான விமர்சனங்களும் விவாதங்களும் நம் எழுத்தை பட்டை தீட்டவே உதவும் என்பதால் நான் விரும்பியே விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன். //
அருமை... அருமை... அம்பிகளிடம் ஜாக்கிரதை... அம்பி சூழ் உலகம்... கவனம்...
// உங்கள் கதை காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தியது... //
இது தான் உங்களின் எழுத்துக்கு உரிய மதிப்பு... அதையே தொடருங்கள்...
பிக்பாஸ்
இது ஒரு நிகழ்ச்சியா...? இதையெல்லாம் பார்ப்பதா...? இதற்கு ஒரு விமர்சனமா...? ... ... ...
...
...
... இன்னும் பல...
நான் ஒரு தெய்வ நம்பிக்கை உள்ளவன்... அதனால், எனக்கு எந்த குறையும் இல்லை...
கடவுளை புத்தகத்தில் கண்டவன்...(!) அதனால், யாரும் எனக்கு தூசு...
... இன்னும் பல...
இப்படி பலவற்றை சொல்பவர்கள் எல்லாம்...
பிக்காலிப் பயல்கள்...!
நன்றி குமார்...
அடுத்த ஊருக்கு சென்றவுடன், மறுமொழி நாளை காலையில்...
நண்பரே, பிளாக் என்பதே தன் கருத்தை எழுதும் கடிதம் தான். ஆகவே உங்களுக்குத் தோன்றுவதை எழுதுங்கள். மற்றவர்கள் எல்லாரும் நீங்கள் விரும்பும்படியாகவா எப்போதும் எழுதுகிறாரகள்? ஆகவே அவர்கள் விரும்புவதுபோலத்தான் நீங்கள் எழுதவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்க நியாயமில்லை. உங்களுக்கென்று நாளாவட்டத்தில் ஒரு பாணியும் கருத்து வடிவமும் அமைந்துவிடுகிறதல்லவா, அதைப் பின்பற்றி எழுதினால் போதுமே! மற்றவர்களின் கருத்த்க்கு ஓரளவுக்குமேல் முக்கியத்துவம் தரவேண்டாம். அது உங்கள் படைப்பாற்றலை மழுங்கச் செய்துவிடும். ஏதோ இந்த எளியவனின் சிற்றறிவுக்குப் பட்டதைக் கூறினேன். அவ்வளவே.
தொடர்ந்து எழுதுங்கள் குமார்.
உங்கள் எழுத்துகள் எப்போதுமே ரசிக்கக் கூடியவை தான். ஒருவருக்குப் பிடித்த விஷயம் மற்ற அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றவர்களுக்குப் பிடித்ததையே எழுத வேண்டும் என்று நினைத்தால் ஒன்றுமே எழுத முடியாது. :)
பொது வெளியில் நிறைய விருப்பு வெறுப்புகள் - சிலருக்கு வெறுப்பு மட்டுமே அதிகம் இருக்கிறது. என்ன செய்ய? தான் செய்வது மட்டுமே சரி என்று நினைக்கும் பலர் இங்கே உண்டு. எல்லாவற்றையும் பார்த்த படியே கடந்து விடுவது தான் நமக்கும் நல்லது. நம் உள்ளத்துக்கும் நல்லது.
தொடர்ந்து எழுதுங்கள் குமார். உங்கள் எழுத்து மேலும் பல தளங்களில் வெளிவர வாழ்த்துகள்.
பிக் பாஸ் பார்க்க எனக்குப் பொறுமை இல்லை. எனவே உங்கள் பிக் பாஸ் கட்டுரைகளும் அவ்வப்போது வாசிப்பேன்.
அந்தத் தோழி நாகரிகமான வார்த்தைகளில்தானே விமர்சித்தார்? பண்பட்ட விமர்சனங்கள் நல்லதுதான் குமார்.
தொடர்ந்து எழுதுங்கள். எங்கள் பிளாக்ப்பற்றி எழுதி இருந்தவைகளுக்கும் சுட்டிக்கும் நன்றி.
உங்கள் கருத்துக்கள் எப்பவும் டானிக்தான்... எழுதிய அன்றே வாசித்தேன் எல்லாக் கருத்துக்களையும்... நான் புகழ் போதைக்குள் எல்லாம் சிக்குவதில்லை... நமக்கு எப்படி வருதோ... அப்படித்தான்... உடல் நலமில்லாததால் நேற்று அலுவலகம் வரவில்லை.
நன்றி அண்ணா.
எதற்குள்ளும் மூழ்கமாட்டேன் அண்ணா.. என் போக்கில்தான் எப்போதும் எழுத்து...
நன்றி அண்ணா.
ஓகேண்ணா...
கண்டிப்பாக அண்ணா... ரொம்ப நன்றிண்ணா.
ஓகேண்ணா... ஹாஹா... இதை அதிகமாகப் பெற்றுவிட்டேன்... இருப்பினும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ரொம்ப நன்றி ஐயா...
அதையே கடைப்பிடிக்கிறேன்.
ரொம்ப நன்றிண்ணா.
ரொம்ப நன்றிண்ணா.
கருத்துரையிடுக