எங்கள் சிவகங்கைத் தொகுதிக்கு ஒரு சாபக்கேடு எப்பவுமே... அது இந்த முறையும்... தொகுதியை ஒரு குடும்பத்துக்கு பட்டாப் போட்டுக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்... அதிமுக போட்டியிடாததால் தற்போதைய எம்.பிக்கு வாய்ப்பில்லை, கூட்டணிக்கட்சி எச்.ராஜா பற்றி எல்லாருக்கும் தெரியும்... அமமுக வேட்பாளரை இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குள்தான் தெரியும்... மநீமவின் சினேகனுக்கும் அப்படியொன்றும் வாய்ப்பில்லை... எது எப்படியோ ரெண்டு கூமுட்டைகளில் ஒரு கூமுட்டைக்குத்தான் வாய்ப்பு அதிகம்... எவன் ஜெயித்தாலும் எப்பவும் போல் சிவகங்கை மாவட்டம் அப்படியேதான் இருக்கப் போகிறது... வேலுநாச்சியார் ஆண்ட... மருதுபாண்டியர் ஆண்ட... அப்படின்னு நாங்க வரலாறுகளைப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான்... காலக் கொடுமை, வேறென்ன சொல்ல.
-----------------
பிரதிலிபியில் எழுதாதே என்பது நண்பர்களின் வேண்டுகோளாய்... பெரும்பாலும் கதைகள் பகிர்வதில்லை... எப்போதேனும் இங்கு பதியும் பதிவைப் பகிர்வதுண்டு. போட்டிகளுக்கும் தொடர்ந்து எழுதுவதில்லை. சில சமயங்களில் அவர்கள் போட்டிக்கு எழுதுங்க என மின்னஞ்சல் செய்வதும் உண்டு. எழுதுவதுடன் சரி... அதை இங்கும் முகநூலிலும் மட்டுமே பகிர்வேன்... நமக்கு ஒரு கதையோ கட்டுரையோ கூடுதல் அவ்வளவே என்பதால் அப்படியே விட்டுவிடுதல் நலம் என்றே நினைப்பதுண்டு.
அப்படியிருக்க 'காதலா... காதலா..' சிறுகதைப் போட்டியில் இருக்கும் கதை 4000 வாசகர் பார்வையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது போக 'நான் ஏன் எழுதுகிறேன்..?' என்பதாய் ஒரு போட்டி, அதற்கும் எழுதச் சொன்னார்கள். அதற்கு வரும் கருத்துக்கள் மனதிற்கு மகிழ்ச்சியாய்... நான் ஏன் எழுதுறேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும் என்றாலும் வாசிக்க நினைத்தால் வாசியுங்கள்.
இந்தக் கட்டுரையை வாசித்த தம்பி ஒருவர் போனில் அழைத்து 'என்னண்ணே காதல் தோல்விதான் காரணம்ன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா, வாழ்க்கை அது இதுன்னு வலி சார்ந்து பேசியிருக்கீங்க...' என்றார். கதை எழுதணும்ன்னா காதல் தோல்வியாத்தான் இருக்கணும் என்பதாய் நினைத்தல் என்ன மனநிலையின்னே தெரியலை... அப்படிக் காதல் தோல்வி என்றால் காதல் கதைகள்தானே வரும்... வாழ்க்கைக் கதை வருமா..?
-----------------
இன்னொரு சந்தோஷம் பிரதிலிபி மூலமாக, ஆம்... எனது 'தோஷம்','புரிந்து வாழணும்' என்ற இரண்டு கதைகளை ஒலி வடிவில் கொடுத்திருக்கிறார்கள். கதைகளை வாசித்த திரு,வசந்த் மிகச் சிறப்பாக வாசித்திருக்கிறார். அவருக்கு நன்றி. மொத்தம் 50 கதைகளில் எனது கதைகள் 2 என்பது மகிழ்ச்சி. அதுவும் முதல்முறை நம் எழுத்தை இன்னொருவரின் குரலில் கேட்பது வித்தியாச அனுபவமாய் இருந்தது. அதைக் காப்பி பண்ண முடியலை. இணைப்புத் தாரேன் முடிந்தால் கேளுங்க.
-----------------
படைப்பு குழுமத்துல ஒரு கவிதைப் போட்டி... அதுலயும் ஒரு கவிதை இருக்கு... கருத்துப் போட உங்க பேரும் மின்னஞ்சலும் கேட்க்கும் என்பதால் வாசித்து விட்டு மட்டும் வாருங்கள்..
-----------------
'அப்பா காண்டம்' என்ற குறும்படத்தை எடுத்த ஆரா என்பவர் யூடிப்பில் ரெட் ஸ்டுடியோ என்ற சேனல் நடத்துகிறார். அங்கு ஒரு சிச்சுவேசனுக்கு கதை சொல்லுங்க.. நல்லாயிருந்தா குறும்படமாகவோ, பெரிய திரையிலோ எடுக்கலாம் என்று சொல்லியிருந்தார். நண்பர் பரிந்துரைத்தார். அங்க போய் கிறுக்கினேன். அடுத்த நிமிடமே செல்போன் நம்பர் கேட்டார். வெளிநாட்டில் இருப்பதாய்ச் சொல்லி மின்னஞ்சல் மற்றும் வாட்ஸப் நம்பர் கொடுத்திருக்கிறேன். வெளிநாடு என்பதால் தொடர்பில் வருவார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அங்கு கருத்துக்களில் இருக்கும் சின்னக் கதையை வாசிக்க...
-----------------
நேற்று ஒரு கதை எழுத நேரம் கிடைத்தது... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வாழ்க்கைக் கதை எழுத முடிந்தது. போட்டிகளுக்கான கதை எனும் போது பெரும்பாலும் தலைப்பின் கீழ்தான் எழுத வேண்டியிருக்கும்... அப்படி எழுதியதுதான் கணேஷ்பாலா அண்ணன் கொடுத்த படத்துக்கு எழுதிய கதை... அது மூன்றாம் பரிசை வென்றது. அதேபோல்தான் 'காதலா.. காதலா..' மற்றும் சு.சமுத்திரம் நினைவுப் போட்டிக்கு எழுதிய 'திருநங்கை' கதைகள் எல்லாமே... தலைப்பின் கீழ் எழுதப்பட்டன. நம் போக்கில் எழுதும் வாழ்க்கைக் கதைகள் எப்போதும் மனநிறைவைக் கொடுக்கும். அப்படியான கதை ஒன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்த்தது.
"செலுவப்பய மவன் நட்டநடுநிசியில வந்துருகானாமப்பே... ஊரெல்லாம் டமாரமாக் கெடக்கு... ஒனக்குத் தெரியாதுன்னுதான் வெளிய இருக்கப் போனவன் சொல்லிட்டுப் போகலாம்ன்னு இங்கிட்டு வந்தேன்..."
"ஆறு மணிக்கெல்லாம் ஊரு பூராம் பரவிருச்சாக்கும்... எனக்கெங்கப்பே தெரியுது... இங்கிட்டு தோட்டத்துப் பக்கம் வந்துட்டு ஊரு வெசயம் ஒன்னய மாதிரி ஆளுக யாராச்சும் சொன்னாத்தான் தெரியுது..."
"ஆமா அவளும் வந்திருக்காளாமா....?" என்றபடி மீண்டும் 'உருட்'டினார்.
"ஆமா குடும்பத்தோடதான் வந்திருக்கானாம்.."
"நீ பாக்கலயா...?"
"இல்ல.... பார்வதியக்கா... பால் வாங்க வந்தப்போ சொல்லிட்டுப் போச்சு..."
"ம்... செலுவம் வரச்சொல்லாமயா வந்திருப்பான்... என்ன தைரியமிருந்தா அவளயும் கூட்டிக்கிட்டு வந்திருப்பான்... சும்மா விடக்கூடாது... ஊர்க்கூட்டத்தைக் கூட்டி உண்டு இல்லன்னு பண்ணாம விடக்கூடாது.."
"அட இருப்பே... இன்னும் வந்திருக்கது அவன் மட்டுந்தானா... இல்ல அவளயும் கூட்டியாந்திருக்கானா... எதுக்கு வந்திருக்கான்... என்ன வெவரம்ன்னு எதுவுமே சரியாத் தெரியல... அதுக்குள்ள நாம அருவா எடுத்து... எப்படியும் இன்னக்கி வெசயம் வெளிய வந்துதானே ஆவணும்..."
"அட கூமுட்ட... நீதானே பார்வதியக்கா சொன்னுச்சுன்னு சொன்னே...." காபி டம்ளரைக் கட்டைச் சுவற்றில் வைத்தார். காத்திருந்த ஈக்கள் காபி குடிக்க டம்ளருக்குள் சண்டை போட்டன.
"அட அது ஒரு ஆக்கங்கெட்ட கூவ... ஒண்ணுக்குப் போக எந்திரிச்சி வந்துச்சாம்... அப்ப எறங்கிப் போனாவளாம்... இருட்டுல யார்யாருன்னு தெரியலன்னு சொன்னுச்சு..." என்றபடி வாயில் இருந்த போயிலை எச்சியை 'புளிச்'சின்னு தரையில் துப்பினார்.
மனசின் பக்கம் வேறு செய்திகளுடன் மீண்டும் வரும்.
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
உங்க கதைகள் ஒலி வடிவமாக வந்தது மகிழ்ச்சி.
காட்சிக்குக் கதை யுட்யூபில் பார்க்கிறோம். உங்களைத் தொடர்பு கொள்ள வாழ்த்துகள்.
கதை ஃபான்ட் ரொம்பச் சின்னதாக இருக்கிறதே. வாசித்தாயிற்ரு. நன்றாக இருக்கிறது. தொடரோ...
கீதா
சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...
மக்களின் இயல்பான மனநிலையைக் கதையாக்கியிருக்கிறீர்கள். எதார்த்தமான உரையாடல்.
//காத்திருந்த ஈக்கள் காப்பி குடிக்க டம்ளருக்குள் சண்டையிட்டன//...ரசிப்புக்குரிய நிகழ்ச்சி வர்ணனை.
ரொம்ப நன்றிக்கா...
கதையில் கொஞ்சமே பகிர்ந்தேன்... சிறுகதைதான் அக்கா..
இப்ப எழுத்தை பெரிதாக்கிட்டேன்.
நன்றி அண்ணா...
கதையில் கொஞ்சம்தான் போட்டேன்... இப்போது கதைகளை இங்கு பகிர்வதில்லை
தங்கள் கருத்துக்கு நன்றி...
முதல் முறை வருகை... அதற்கும் நன்றி தொடர்ந்து வர...
குமார் உங்கள் கதைய அங்க யூட்யூப் சேனல் கருத்துல பார்த்தேன். நல்லாருக்கு...ஆனா ஏன் இப்படிப் பப்ளிக்கா கேட்டுருக்காங்க? யுட்யூப்ல சொல்லிட்டு தனியா அவங்க மெயிலுக்கு அனுப்ப சொல்லலாமே இல்லையா? எதுக்குனா இப்பல்லாம் கதை காப்பி அடிக்கப்பட்டு பேரு கூடப் போடாம வாட்சப்ல எல்லாம் வருது அதான் கேட்டேன்...எனக்கு என்னவோ அப்படித் தோணிச்சு
கீதா
உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் பல இடங்களில் வெளியாகின்றதற்கு வாழ்த்துகள். யுட்யூப் சானலில் உங்கள் கதை நன்றாக இருக்கிறது.
நீலக்கலர் மிகவும் சிறிய ஃபான்டாக இருக்கிறதே. மொபைலில் வாசிக்கக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் வாசித்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. தொடர்கிறோம்
துளசிதரன்
வாசித்ததற்கு நன்றி அக்கா...
அவர்கள் எதற்கு கேட்டார்கள் என்பது தெரியலை...
காப்பி பண்ணி எடுக்கத்தான் செய்வார்கள்.
அதான் நான் வலைப்பூவில் கூட கதை பதிவதில்லை.
நண்பர் எழுது எழுதுன்னு சொன்னதால் எழுதியது அக்கா...
பார்க்கலாம் கதைக்காக பேசுகிறார்களா என...
வாசித்ததற்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணா...
கீதா அக்கா சொன்னதும் எழுத்தின் அளவை நார்மல் ஆக்கிட்டேன்.
ஸ்வாரஸ்யம்...
ஒலி வடிவில் உங்கள் கதை. மகிழ்ச்சி.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
மகிழ்ச்சி.. வாழ்க நலம்...
பரிவை சே.குமார் சகோ, வணக்கம். தங்கள் புலன எண் கிடைக்குமா? என் எண்:9842589571. தங்களிடம் பேச வேண்டும். நான் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், பட்டதாரி தமிழாசிரியர், தே பிரித்து மேனிலைப்பள்ளி.
கருத்துரையிடுக